நீதிமொழிகள் 21 : 1 (RCTA)
நீரோடைகள் எவ்வாறோ அவ்வாறே ஆண்டவர் கையில் அரசனின் இதயம். அவர் தம் விருப்பப்படி அதைச் சாய்ப்பார்.
நீதிமொழிகள் 21 : 2 (RCTA)
மனிதனுடைய நெறியெல்லாம் அவனுக்கு முறையானவையாய்த் தோன்றுகின்றன. ஆனால், ஆண்டவர் இதயங்களை எடைபோடுகிறார்.
நீதிமொழிகள் 21 : 3 (RCTA)
இரக்கத்தையும் நீதியையும் கடைப்பிடித்தல் பலிகளைவிட ஆண்டவருக்கு அதிக விருப்பமாம்.
நீதிமொழிகள் 21 : 4 (RCTA)
பார்வையின் பெருமிதமே மனத்தின் அகந்தையாம். அக்கிரமிகளிடம் பிறக்கிறதெல்லாம் பாவமாம்.
நீதிமொழிகள் 21 : 5 (RCTA)
சுறுசுறுப்புள்ளவனின் சிந்தைகள் எப்போதும் சுகத்தைத் தரும். ஆனால், சோம்பேறி எவனும் எப்போதும் வறுமையால் வருத்தப்படுவான்.
நீதிமொழிகள் 21 : 6 (RCTA)
பொய் சொல்வதின் மூலம் செல்வத்தைச் சேகரிக்கிறவன் வீணனும் மூடனுமாம். அவன் சாவுக் கண்ணிகளில் சிக்கிக்கொள்வான்.
நீதிமொழிகள் 21 : 7 (RCTA)
நீதியின்படி நடக்க மனமில்லாத அக்கிரமிகள் பறித்துக்கொண்ட பொருட்கள் அவர்களுக்கே இழப்பாய் முடியும்.
நீதிமொழிகள் 21 : 8 (RCTA)
தீயவன் தீய நெறியில் செல்கிறான். தூயவனாய் இருக்கிறவனோ நேர்மையான செயலைச் செய்கிறான்.
நீதிமொழிகள் 21 : 9 (RCTA)
சண்டைக்காரியுடன் பொதுவீட்டில் இருப்பதைவிட மொட்டை மாடியின் மூலையில் இருப்பது அதிக நல்லதாம்.
நீதிமொழிகள் 21 : 10 (RCTA)
அக்கிரமியின் ஆன்மா தீமையை நாடுகின்றது. தன் அயலானுக்கும் அவன் இரங்கமாட்டான்.
நீதிமொழிகள் 21 : 11 (RCTA)
தீயவன் தண்டிக்கப்படுவதன்மூலம் நேர்மையாளன் அதிக ஞானமுள்ளவனாவான். ஞானியை அவன் பின்தொடர்வானானால் அறிவையும் பெறுவான்.
நீதிமொழிகள் 21 : 12 (RCTA)
அக்கிரமிகளைத் தீமையினின்று அகற்றும் பொருட்டு நீதிமான் அக்கிரமியின் வீட்டைத் (திருத்த) முயல்கிறான்.
நீதிமொழிகள் 21 : 13 (RCTA)
ஏழையின் கூக்குரலுக்குத் தன் காதை இறுக மூடுகிறவன் தானும் கூக்குரலிட்டுக் கூப்பிடுவான்; கேட்கப்படவும் மாட்டான்.
நீதிமொழிகள் 21 : 14 (RCTA)
இரகசியமாய்ச் செய்த நன்கொடை கோபத்தையும், மடியில் இடப்பட்ட கொடை மிகுந்த கோப வெறியையும் தணிக்கின்றன.
நீதிமொழிகள் 21 : 15 (RCTA)
புண்ணியத்தைக் கடைப்பிடிப்பதே நீதிமானுக்கு மகிழ்ச்சி. அநீதத்தைச் செய்கின்றவர்களுக்குத் திகிலேயாம்.
நீதிமொழிகள் 21 : 16 (RCTA)
போதகத்தின் நெறியினின்று தவறி நடந்த மனிதன் இறந்தவரின் கூட்டத்தில் குடியிருப்பான்.
நீதிமொழிகள் 21 : 17 (RCTA)
பேருண்டியை நாடுகிறவன் எளிமையில் இருப்பான். மதுபானத்தையும் கொழுத்தவற்றையும் நாடுகிறவன் செல்வனாகமாட்டான்.
நீதிமொழிகள் 21 : 18 (RCTA)
நீதிமானுக்குப் பதிலாய் அநீதனும், நேர்மையாளனுக்குப் பதிலாய்த் தீயவனும் விடுவிக்கப்படுகின்றான்.
நீதிமொழிகள் 21 : 19 (RCTA)
வாதாடியும் கோபியுமான மனைவியோடு வாழ்வதைவிடப் பாலைவனத்தில் (வாழ்வதே) அதிக நல்லதாம்.
நீதிமொழிகள் 21 : 20 (RCTA)
விரும்பத் தக்க செல்வமும் எண்ணெயும் நீதிமானின் உறைவிடத்தில் இருக்கும். மதிகெட்ட மனிதன் அவற்றைச் சிதறடிப்பான்.
நீதிமொழிகள் 21 : 21 (RCTA)
நீதியையும் இரக்கத்தையும் பின்பற்றுகிறவன் வாழ்வையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.
நீதிமொழிகள் 21 : 22 (RCTA)
ஞானமுள்ளவன் வல்லவர்களின் நகருக்குள் நுழைந்து, அவர்கள் நம்பியிருந்த மதிற்சுவரை அழித்தான்.
நீதிமொழிகள் 21 : 23 (RCTA)
தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் இடுக்கணில் நின்று தன் ஆன்மாவையே காப்பாற்றுகிறான்.
நீதிமொழிகள் 21 : 24 (RCTA)
தன் கோபத்தில் அகந்தையைக் காட்டுகிறவன் மூடனும் அகங்காரியும் எனப் பெயர் பெறுவான்.
நீதிமொழிகள் 21 : 25 (RCTA)
சோம்பேறி தன் ஆசைகளால் வருத்தப்படுவான். ஏனென்றால், அவன் கைகள் எந்த வேலைக்கும் உதவமாட்டா.
நீதிமொழிகள் 21 : 26 (RCTA)
அவன் நாள் முழுதும் ஆவலோடு இச்சிக்கிறான். ஆனால், நீதிமானாய் இருக்கிறவன் கொடுப்பான்; ஓயாமல் கொடுப்பான்.
நீதிமொழிகள் 21 : 27 (RCTA)
தீமையின் மூலமாய் ஒப்புக்கொடுக்கிற தீயவருடைய பலிகள் அருவருப்புக்குரியன.
நீதிமொழிகள் 21 : 28 (RCTA)
பொய்ச்சாட்சி சொல்பவன் அழிவான். கீழ்ப்படிகின்ற மனிதன் வெற்றி அடைவான்.
நீதிமொழிகள் 21 : 29 (RCTA)
அக்கிரமி வெட்கமின்றியே தன் முகத்தைக் காட்டுகிறான். நேர்மையானவனோ தன் நெறியைத் திருத்துகிறான்.
நீதிமொழிகள் 21 : 30 (RCTA)
ஆண்டவருக்கு விரோதமாய் ஞானமுமில்லை; விவேகமுமில்லை; அறிவுரையும் இல்லையாம்.
நீதிமொழிகள் 21 : 31 (RCTA)
போர்நாளுக்காகக் குதிரை பழக்கப்படுகின்றது. ஆனால் பாதுகாப்பைத் தருகிறவர் ஆண்டவரே.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31

BG:

Opacity:

Color:


Size:


Font: