நீதிமொழிகள் 2 : 1 (RCTA)
என் மகனே, நீ என் வாக்கியங்களை ஏற்றுக் கொண்டு, என் கட்டளைகளை உன்னகத்து மறைத்து வைப்பாயானால் (பயனடைவாய்).
நீதிமொழிகள் 2 : 2 (RCTA)
ஞானத்திற்குச் செவிசாய்த்து, விவேகத்தின்பால் உன் இதயத்தைத் திருப்புவாயாக.
நீதிமொழிகள் 2 : 3 (RCTA)
ஏனென்றால், ஞானத்தைக் கெஞ்சி மன்றாடி, உன் இதயத்தின் விவேகத்தின் வழி திருப்புவாயானால்,
நீதிமொழிகள் 2 : 4 (RCTA)
பணத்தைப்போல அதைத் தேடி புதையலைப்போல அதைத் தோண்டி எடுப்பாயானால், நீ தெய்வ பயத்தை உணர்வாய்;
நீதிமொழிகள் 2 : 5 (RCTA)
கடவுளுடைய போதகத்தையும் கண்டுபிடிப்பாய். ஏனென்றால், ஞானத்தைத் தருகிறவர் ஆண்டவரே.
நீதிமொழிகள் 2 : 6 (RCTA)
அவருடைய வாயினின்றே விவேகமும் அறிவும் புறப்படுகின்றன.
நீதிமொழிகள் 2 : 7 (RCTA)
அவர் நேர்மையுடையோரைக் காப்பாற்றுகிறார்.
நீதிமொழிகள் 2 : 8 (RCTA)
நீதியின் வழிகளிலும், மாசற்றவரின் நெறிகளிலும் அவர்களை நிலைப்பெறச் செய்வார்.
நீதிமொழிகள் 2 : 9 (RCTA)
அப்போதன்றோ நீதியையும் நியாயத்தையும் நேர்மையையும் நன்னெறி அனைத்தையும் நீ கண்டு பிடிப்பாய் ?
நீதிமொழிகள் 2 : 10 (RCTA)
ஞானம் உன் மனத்திற்குள் நுழைந்து, தெய்வ போதகத்தை உன் ஆன்மா விரும்பினால்,
நீதிமொழிகள் 2 : 11 (RCTA)
அறிவுரை உன்னை ஆதரிக்கும்; விவேகம் உன்னைக் காக்கும்.
நீதிமொழிகள் 2 : 12 (RCTA)
அதனால், தீய வழியினின்றும், அக்கிரமங்களைப் பேசுகிற மனிதர்களினின்றும், நீ காப்பாற்றப்படுவாய்.
நீதிமொழிகள் 2 : 13 (RCTA)
இவர்கள் செவ்வழியை விட்டு, இருள் நெறிகளில் உலாவுகிறார்கள்.
நீதிமொழிகள் 2 : 14 (RCTA)
தீமை செய்யுங்கால் மகிழ்கின்றார்கள்; மிகத் தீய செயல்களில் அக்களிக்கிறார்கள்.
நீதிமொழிகள் 2 : 15 (RCTA)
இவர்களுடைய வழிகள் தீயவையும், இவர்களுடைய அடிச்சுவடுகள் அவமானத்துக்குரியனவுமாய் இருக்கின்றன.
நீதிமொழிகள் 2 : 16 (RCTA)
நீயோ (ஞானத்தைப் பெற்று) பிற பெண்ணினின்றும், இனிய சொற்களைப் பகரும் அன்னிய பெண்ணினின்றும் உன்னைத் தப்புவித்துக் கொள்வாய்.
நீதிமொழிகள் 2 : 17 (RCTA)
அவ்வித மாதர் தங்கள் இளமையின் காவலனைக் கைநெகிழ்ந்தார்கள்;
நீதிமொழிகள் 2 : 18 (RCTA)
தாங்கள் கடவுளுடன் செய்துகொண்ட உடன்படிக்கையையும் மறந்து விட்டார்கள். ஆகையால், அவர்களுடைய வீடு சாவைத் தரும். அவர்களுடைய காலடிகள் பாதாளங்களுக்குக் கூட்டிக் கொண்டு போகும்.
நீதிமொழிகள் 2 : 19 (RCTA)
அவர்களிடம் செல்கின்ற அனைவரும் திரும்பமாட்டார்கள் என்பது மட்டுமின்றி, வாழ்வுப் பாதைகளையும் கண்டுபிடியார்கள்.
நீதிமொழிகள் 2 : 20 (RCTA)
நீ நன்னெறியில் நடந்து, நீதிமான்களுடைய நெறிகளைக் காக்கக் கடவாய்.
நீதிமொழிகள் 2 : 21 (RCTA)
ஏனென்றால், நேர்மையுள்ளோர் பூமியில் வாழ்வார்கள். உண்மையுள்ளோர் அதில் நிலையாய் இருப்பார்கள்.
நீதிமொழிகள் 2 : 22 (RCTA)
பாவிகளோ பூமியினின்று அழிக்கப்படுவார்கள். அநீதி செய்வோரும் அதினின்று அகற்றப்படுவார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22