நீதிமொழிகள் 19 : 1 (RCTA)
தன் உதடுகளைப் புரட்டுகிற மதிகெட்ட செல்வனைக்காட்டிலும், தன் நேர்மையில் நிலை பெறுகிற வறியவன் அதிக நல்லவனாம்.
நீதிமொழிகள் 19 : 2 (RCTA)
ஞான அறிவில்லாத இடத்தில் நன்மை இல்லை. வேகமாய் நடக்கிறவனுடைய கால்கள் இடறும்.
நீதிமொழிகள் 19 : 3 (RCTA)
மனிதனுடைய அறியாமை அவனைத் தடுமாறச் செய்கிறது. அவன் கடவுளுக்கு விரோதமாயும் வெறுப்பிற்குரியவனாயும் இருக்கிறான்.
நீதிமொழிகள் 19 : 4 (RCTA)
செல்வம் மிகுதியான நண்பர்களைச் சேர்க்கும். ஏழையின் சுற்றத்தாரோ அவனைவிட்டுப் பிரிந்து போகிறார்கள்.
நீதிமொழிகள் 19 : 5 (RCTA)
பொய்ச் சாட்சி சொல்லுகிறவன் தண்டனை அடையாமல் இரான். தவறுகளைப் பேசுகிறவனும் தப்பிக்கொள்ளான்.
நீதிமொழிகள் 19 : 6 (RCTA)
வல்லவனை வணங்குபவர் பலர். நன்கொடை கொடுப்பவனுக்கு நண்பர் உண்டு.
நீதிமொழிகள் 19 : 7 (RCTA)
வறியவனை அவன் சகோதரரே பகைக்கிறார்கள். அதுவுமின்றி, அவன் நண்பரும் அவனை விட்டுத் தூர அகன்று செல்வார்கள். அவன் ஆறுதலான வார்த்தையைத் தேடுவான்; ஆனால், ஒன்றும் அகப்படாது.
நீதிமொழிகள் 19 : 8 (RCTA)
அறிவாளி தன் ஆன்மாவை நேசிக்கிறான். விவேகத்தைக் காக்கிறவனும் நன்மையைக் கண்டடைவான்.
நீதிமொழிகள் 19 : 9 (RCTA)
பொய்ச்சாட்சிக்காரன் தண்டனை அடையாமல் இரான். தவறுகளைப் பேசுகிறவனும் அழிவான்.
நீதிமொழிகள் 19 : 10 (RCTA)
மதிகெட்டவன் இன்பம் அடைதலும், அடிமை அரசரை நடத்துதலும் பொருந்தா.
நீதிமொழிகள் 19 : 11 (RCTA)
மனிதனின் அறிவு அவன் பொறுமையால் விளங்கும். அக்கிரமங்களை விட்டொழிப்பதே அவனுடைய மகிமையாகும்.
நீதிமொழிகள் 19 : 12 (RCTA)
சிங்கத்தின் முழக்கம் எப்படியோ அப்படியே அரசனின் கோபம். புல்லின்மேல் பனி நீர் எப்படியோ அப்படியே அவனுடைய இரக்கம்.
நீதிமொழிகள் 19 : 13 (RCTA)
தந்தையின் துன்பமாம் மதிகெட்ட மக்கள். இடைவிடாமல் ஒழுகுகின்ற கூரை போலாம் சச்சரவுக்காரியான மனைவி.
நீதிமொழிகள் 19 : 14 (RCTA)
வீடும் செல்வமும் தாய் தந்தையரால் தரப்படுகின்றன. ஆனால், தக்க விவேகமுள்ள மனைவி ஆண்டவராலேயே (தரப்படுகிறாள்).
நீதிமொழிகள் 19 : 15 (RCTA)
சோம்பல் ஆழ்ந்த தூக்கத்தை உண்டாக்குகிறது. உரோசமற்ற மனிதன் பசியால் வருந்துவான்.
நீதிமொழிகள் 19 : 16 (RCTA)
கட்டளையைக் காக்கிறவன் தன் ஆன்மாவைக் காக்கிறான். ஆனால், தன் வழியை அசட்டை செய்கிறவன் வதைக்கப்படுவான்.
நீதிமொழிகள் 19 : 17 (RCTA)
ஏழைக்கு இரங்குகிறவன் ஆண்டவருக்கு வட்டிக்குக் கொடுக்கிறான். அவரும் அவனுக்குக் கைம்மாறளிப்பார்.
நீதிமொழிகள் 19 : 18 (RCTA)
உன் மகன் (திருந்துவான்) என்னும் நம்பிக்கையுடன் அவனைப் படிப்பி. ஆனால், அவனுக்குச் சாவு வரும்படி எதையும் செய்யத் தீர்மானியாதே.
நீதிமொழிகள் 19 : 19 (RCTA)
பொறுமையற்றவன் நட்டமடைவான். அவனை நீ ஒரு முறை மீட்டுக் காத்தாலும் மீண்டும் அவன் நட்டமடைவான்.
நீதிமொழிகள் 19 : 20 (RCTA)
உன் கடைசி நாள் வரையிலும் ஞானியாய் இருக்கும்படியாக ஆலோசனை கேள்; அறிவுரையையும் கைக்கொள்.
நீதிமொழிகள் 19 : 21 (RCTA)
மனிதனின் இதயத்தில் சிந்தனைகள் பலவாம். ஆண்டவர் திருவுளமோ நிலைபெற்றிருக்கும்.
நீதிமொழிகள் 19 : 22 (RCTA)
எளிய மனிதன் இரக்கமுள்ளவனாம். பொய்யனைவிட வறியவன் உத்தமனாம்.
நீதிமொழிகள் 19 : 23 (RCTA)
தெய்வ பயம் வாழ்வின் வழி. அது யாதொரு தீமையும் நேரிடாமற் காத்து எப்பொழுதும் நிறைவுகொள்ளச் செய்யும்.
நீதிமொழிகள் 19 : 24 (RCTA)
சோம்பேறி தன் கையை உண்கலத்தில் மறைக்கிறான்; அதைத் தன் வாய்க்குங்கூடக் கொண்டுபோகான்.
நீதிமொழிகள் 19 : 25 (RCTA)
தீயவன் கசையடி படுகையில் மதியீனன் அதிக அறிவாளியாவான். ஞானியைக் கண்டித்தாலோ போதனையைக் கண்டுபிடிப்பான்.
நீதிமொழிகள் 19 : 26 (RCTA)
தன் தந்தையை வருத்தித் தன் தாயைத் துரத்துகிறவன் நிபந்தனைக்குரியவனும் கேடுற்றவனுமாய் இருக்கிறான்.
நீதிமொழிகள் 19 : 27 (RCTA)
போதகத்தைக் கேட்க, மகனே, நீ பின்வாங்காதே; ஞானத்தின் வார்த்தைகளையும் அறியாமல் இராதே.
நீதிமொழிகள் 19 : 28 (RCTA)
அநியாயச் சாட்சிக்காரன் நீதியைப் புறக்கணிக்கிறான். அக்கிரமிகளின் வாயோ அநீதத்தை விழுங்குகின்றது.
நீதிமொழிகள் 19 : 29 (RCTA)
கேலி செய்வோருக்கு நீதித் தீர்வைகளும், மதிகெட்டோரின் உடம்புகளுக்கு அடிக்கிற சம்மட்டிகளும் தயாராக்கப்பட்டிருக்கின்றன.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29

BG:

Opacity:

Color:


Size:


Font: