நீதிமொழிகள் 16 : 1 (RCTA)
ஆன்மாவில் கருத்துக் கொள்தல் மனிதனுடையது. அவனது நாவை ஆள்வது கடவுளுடையது.
நீதிமொழிகள் 16 : 2 (RCTA)
மனிதனுடைய செயல்கள் யாவும் அவன்தன் கண்களுக்கு நன்றாயிருக்கின்றன. (ஆனால்) அவன் உள்ளத்தைப் (பரிசோதித்து) நிறுக்கிறவர் ஆண்டவரே.
நீதிமொழிகள் 16 : 3 (RCTA)
உன் செயல்களை ஆண்டவருக்குத் திறந்து காட்டினால் உன் சிந்தனைகள் சீர்ப்படுத்தப்படும்.
நீதிமொழிகள் 16 : 4 (RCTA)
ஆண்டவர் எல்லாவற்றையும் தமக்காகவே செய்திருக்கிறார். அக்கிரமையையுங்கூடத் தண்டனை நாளுக்காகத்தான்.
நீதிமொழிகள் 16 : 5 (RCTA)
அகங்காரிகள் அனைவரையும் ஆண்டவர் வெறுக்கிறார். அவர் உதவியாக அவன் கைக்குள் (தம்) கையை வைத்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பிக்கொள்ளான். அறநெறியின் தொடக்கம் நீதியைச் செய்தலாம். அதுவே பலிகளைப் படைப்பதைவிடக் கடவுளுக்கு அதிக விருப்பமானது.
நீதிமொழிகள் 16 : 6 (RCTA)
இரக்கமும் உண்மையும் அக்கிரமத்தை நிவர்த்தி செய்யும். ஆண்டவர்பால் பயம் இருந்தால் பாவத்தை விட்டு விலக முடியும்.
நீதிமொழிகள் 16 : 7 (RCTA)
ஒரு மனிதனின் வழிகள் ஆண்டவருக்கு விருப்பமாய் இருக்குமாயின், இம்மனிதன் தன் பகைவர்களையுஙள்கூடச் சமாதானப் படுத்துவான்.
நீதிமொழிகள் 16 : 8 (RCTA)
அக்கிரமத்தோடு நிறைவு கொண்டிருப்பதைவிட நீதியோடு வறுமையுற்றிருப்பது நன்று.
நீதிமொழிகள் 16 : 9 (RCTA)
மனிதனுடைய இதயம் தன் வழியைச் சீர்ப்படுத்துகின்றது. ஆனால், கடவுள்தாமே அவனுடைய அடிச் சுவடுகளை நடத்துகிறவர்.
நீதிமொழிகள் 16 : 10 (RCTA)
அரசனின் வார்த்தை கடவுளின் வார்த்தையாம். அவனுடைய வாயும் நீதித் தீர்வையில் தவறாது.
நீதிமொழிகள் 16 : 11 (RCTA)
ஆண்டவருடைய தீர்ப்புகள் நியாயமான நிறையும் தராசுமாம். அவருடைய செயல்களெல்லாம் சாக்கிலுள்ள நிறைகற்களாம்.
நீதிமொழிகள் 16 : 12 (RCTA)
அக்கிரமஞ் செய்வோரை அரசன் வெறுக்கிறான். ஏனென்றால், நீதியாலே (அவன்) அரியணை நிலைப்பெறுகின்றது.
நீதிமொழிகள் 16 : 13 (RCTA)
உண்மையை உரைக்கும் உதடுகளே அரசனுக்கு விருப்பமானவை. நேர்மையானவற்றைப் பேசுகிறவன் நேசிக்கப்படுவான்.
நீதிமொழிகள் 16 : 14 (RCTA)
அரசனின் கோபமே சாவின் தூதன். ஞானமுள்ள மனிதன் இக் கோபத்தை அமர்த்துவான்.
நீதிமொழிகள் 16 : 15 (RCTA)
அரசனுடைய முக மலர்ச்சியில் வாழ்வு. அவனுடைய சாந்தம் வசந்த காலத்து மழை போலாம்.
நீதிமொழிகள் 16 : 16 (RCTA)
பொன்னைவிட மேலானதாய் இருக்கிற ஞானத்தைக் கொண்டிரு. வெள்ளியிலும் விலையுயர்ந்ததாய் இருக்கிற விவேகத்தை அடைந்துகொள்.
நீதிமொழிகள் 16 : 17 (RCTA)
நீதிமான்களுடைய பாதை தீமையை விலக்குகின்றது. தன் ஆன்மாவை எவன் காக்கிறானோ அவன் தன் வழியைக் காக்கிறான்.
நீதிமொழிகள் 16 : 18 (RCTA)
அகங்காரம் முன்னும் அழிவு பின்னும் வருமுன்னே மனம் செருக்குறும்.
நீதிமொழிகள் 16 : 19 (RCTA)
அகங்காரிகளுடன் கொள்ளைப் பொருட்களைப் பங்கிடுவதைவிடச் சாந்தமுள்ளவர்களுடன் சிறுமைப்படுவது அதிக நல்லது.
நீதிமொழிகள் 16 : 20 (RCTA)
வார்த்தையில் கவனமுள்ளவன் நன்மையைக் கடைப்பிடிப்பான். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைப்பவனே பெறு பெற்றோன்.
நீதிமொழிகள் 16 : 21 (RCTA)
இதயத்தில் ஞானமுடையோன் விவேகியென்று அழைக்கப்படுவான். வாய்ப்பேச்சில் இனிமை உள்ளவனோ மேலானவற்றைப் பெறுவான்.
நீதிமொழிகள் 16 : 22 (RCTA)
ஞானத்தைக் கற்று அறிகிறவனுக்கு (அது) வாழ்வின் ஊற்றாம். மதிகெட்டோரின் படிப்பினை பைத்தியமாம்.
நீதிமொழிகள் 16 : 23 (RCTA)
ஞானியின் இதயம் அவன் வாயைப் படிப்பிக்கும். அவன் வாயின் வார்த்தையால் ஞானம் பெருகிவரும்.
நீதிமொழிகள் 16 : 24 (RCTA)
நல்ல வார்த்தைகள் தேனைப்போல் (இன்பமாய் இருக்கும்). உடல் நலமும் ஆன்மாவின் இனிமையாய் இருக்கும்.
நீதிமொழிகள் 16 : 25 (RCTA)
நேர்மையானதென்று மனிதனுக்குத் தோன்றுகிற நெறி உண்டு. ஆனால், அதன் கடைசி எல்லைகள் சாவிற்குக் கூட்டிச் செல்கின்றன.
நீதிமொழிகள் 16 : 26 (RCTA)
உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான். ஏனென்றால், அவன் வாயே அவனைக் கட்டாயப் படுத்துகின்றது.
நீதிமொழிகள் 16 : 27 (RCTA)
தீய மனிதன் தீமையைச் செய்ய முயற்சி செய்கிறான். அவனுடைய உதடுகளிலும் நெருப்பு பற்றி எரியும்.
நீதிமொழிகள் 16 : 28 (RCTA)
கெட்டுப்போன மனிதன் சச்சரவை மூட்டுகிறான். வாயாடி அரசர்களைப் பிரிக்கிறான்.
நீதிமொழிகள் 16 : 29 (RCTA)
அநீதனான மனிதன் தன் அயலானை ஏமாற்றி, அவனைத் தீய வழியில் கூட்டிச் செல்கிறான்.
நீதிமொழிகள் 16 : 30 (RCTA)
தன் கண்களை மூடிக்கொண்டு உதடுகளைக் கடித்துக்கோண்டு தீங்கு நினைப்பவன் அதையே செய்வான்.
நீதிமொழிகள் 16 : 31 (RCTA)
நீதி நெறிகளில் காணப்படும் முதுமையே மகிமையின் முடியாம்.
நீதிமொழிகள் 16 : 32 (RCTA)
வல்லவனைவிடப் பொறுமைசாலி உத்தமன். நகரங்களை முற்றுகையிட்டவனைவிடத் தன் மனத்தை ஆள்பவன் உத்தமன்.
நீதிமொழிகள் 16 : 33 (RCTA)
மடியில் திருவுளச்சீட்டு போடப்படும். ஆனால், திருவுளம் கடவுளால் வெளிப்படுத்தப்படும்.
❮
❯