நீதிமொழிகள் 13 : 1 (RCTA)
ஞானமுள்ள மகன் தன் தந்தையின் போதகத்தைக் (கைக்கொண்டு நடக்கிறான்). கேலி செய்பவனோ கண்டிக்கப்படுகையில் செவிகொடான்.
நீதிமொழிகள் 13 : 2 (RCTA)
தன் வாயின் கனியால் மனிதன் திருப்தி அடைவான். துரோகிகளுடைய ஆன்மாவோ தீயதாம்.
நீதிமொழிகள் 13 : 3 (RCTA)
தன் நாவைக் காக்கிறவன் தன் ஆன்மாவையே காப்பாற்றுகிறான். ஆனால், பேச்சில் கவனமில்லாதிருப்பவன் தீமையைச் சுமக்கிறான்.
நீதிமொழிகள் 13 : 4 (RCTA)
வேண்டும், வேண்டாம் என்கிறவன் சோம்பேறி. உழைப்போரின் ஆன்மாவோ நிறைவுபெறும்.
நீதிமொழிகள் 13 : 5 (RCTA)
நீதிமான் பொய் வார்த்தையை வெறுக்கிறான். அக்கிரமியோ அதை ஆதரிக்கிறான்; தானும் அவமானப்படுவான்.
நீதிமொழிகள் 13 : 6 (RCTA)
நீதி மாசற்றவனின் வழியைக் காக்கும். அக்கிரமமோ பாவியை விழத்தாட்டுகின்றது.
நீதிமொழிகள் 13 : 7 (RCTA)
இல்லாதவன் ஒருவன் (ஒரு சமயம்) செல்வன்போல் இருக்கிறான். செல்வன் ஒரு சமயம் வறியவன்போல் இருக்கிறான்.
நீதிமொழிகள் 13 : 8 (RCTA)
மனிதனின் செல்வம் அவனுடைய உயிரின் மீட்பாம். ஏழையாயிருக்கிறவனோ துன்பத்தைச் சகிப்பதில்லை.
நீதிமொழிகள் 13 : 9 (RCTA)
நீதிமான்களின் ஒளி மகிழ்ச்சிக்குரியது. தீயோரின் விளக்கோ அவிந்துபோகும்.
நீதிமொழிகள் 13 : 10 (RCTA)
அகங்காரிகளுக்குள் எப்போதும் சச்சரவுகள் இருக்கின்றன. ஆனால், ஆலோசனையோடு எல்லாவற்றையும் செய்கிறவர்கள் ஞானத்தால் நடத்தப்படுகிறார்கள்.
நீதிமொழிகள் 13 : 11 (RCTA)
திடீரென்று சேர்த்த செல்வம் குறைந்துபோகும். மெதுவாய்க் கையில் சேர்ந்ததோ மிகுந்து வரும்.
நீதிமொழிகள் 13 : 12 (RCTA)
தாமதிக்கப்படுகிற நம்பிக்கை ஆன்மாவை வருத்துகிறது. நிறைவேறுகிற ஆசை வாழ்வு தரும் மரமாம்.
நீதிமொழிகள் 13 : 13 (RCTA)
ஒரு காரியத்தைப் புறக்கணிக்கிறவன் எதிர் காலத்திற்குத் தன்னைக் கடமைக்கு உட்படுத்துகிறவன். கட்டளைக்குப் பயப்படுகிறவனோ சமாதானத்தில் நிலைத்திருப்பான். வஞ்சனையுள்ள ஆன்மாக்கள் பாவங்களில் உழல்கின்றன. நீதிமான்களோ இரக்கமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்; இரக்கமும் புரிகிறார்கள்.
நீதிமொழிகள் 13 : 14 (RCTA)
மரண நாசத்தினின்று விலகுவதற்குரிய வாழ்வுச் சுனையாக ஞானியின் கட்டளை அமைகின்றது.
நீதிமொழிகள் 13 : 15 (RCTA)
நற்போதகம் நற்புகழைத் தரும். அதனைப் புறக்கணிக்கிறவர்களின் பாதையிலோ கேடு விளையும்.
நீதிமொழிகள் 13 : 16 (RCTA)
விவேகமுடையோன் ஆலோசனையோடு அனைத்தையும் செய்கிறான். பேதையோ தன் பேதமையைத் திறந்து காட்டுகிறான்.
நீதிமொழிகள் 13 : 17 (RCTA)
தீய தூதன் தீமையில் விழுவான். பிரமாணிக்கமுள்ள பிரதிநிதிக்கோ நலம் கிட்டும்.
நீதிமொழிகள் 13 : 18 (RCTA)
படிப்பினையைக் கைநெகிழ்பவனுக்கு வறுமையும் சிறுமையும் நேரிடும். தன்னைக் கண்டிக்கிறவனுக்கு இணங்குகிறவனோ மகிமை அடைவான்.
நீதிமொழிகள் 13 : 19 (RCTA)
ஆசை நிறைவேறும் பொழுது ஆன்மா அக்களிக்கின்றது. ஆதலால், தீமையை விட்டொழிக்கின்றவர்களைப் பேதைகள் வெறுக்கிறார்கள்.
நீதிமொழிகள் 13 : 20 (RCTA)
ஞானிகளுடன் நடக்கிறவன் ஞானியாவான். மதியீனரின் நண்பன் (அவர்களைப் போலாவான்).
நீதிமொழிகள் 13 : 21 (RCTA)
பொல்லாப்பு பாவிகளைப் பின்தொடர்கிறது. நீதிமான்களுக்கு நன்மையே நித்திய வாழ்வு.
நீதிமொழிகள் 13 : 22 (RCTA)
நல்லவன் தன் மக்களையும் பேரப்பிள்ளைகளையும் உரிமைக்காரராக விடுகிறான். பாவியின் செல்வமும் நீதிமானுக்காகக் காப்பாற்றி வைக்கப்படுகிறது.
நீதிமொழிகள் 13 : 23 (RCTA)
தந்தையரின் நிலங்களில் ஏராளமான உணவு (உண்டு). அவையும் தீர்வையின்றியே மற்றவர்களுக்காகச் சேகரிக்கப்படுகின்றன.
நீதிமொழிகள் 13 : 24 (RCTA)
பிரம்பால் அடிக்கத் தயங்குகிறவன் தன் பிள்ளையைப் பகைக்கிறான். அவனை நேசிக்கிறவனோ கட்டாயமாய்க் கற்பிக்கிறான்.
நீதிமொழிகள் 13 : 25 (RCTA)
நீதிமான் தன் ஆன்மாவை நிறைவு கொள்ளச் செய்கிறான். அக்கிரமிகளின் வயிறோ நிறையாதாம்.
❮
❯