நீதிமொழிகள் 12 : 1 (RCTA)
போதனையை நேசிக்கிறவன் அறிவை நேசிக்கிறான். கண்டனங்களைப் புறக்கணிக்கிறவனே ஞானமற்றவனும்.
நீதிமொழிகள் 12 : 2 (RCTA)
நல்லவன் ஆண்டவரிடமிருந்து அருளைப் பெறுவான். தன் சொந்த எண்ணங்களில் ஊன்றியிருக்கிறவனோ அக்கிரமாய் நடக்கிறான்.
நீதிமொழிகள் 12 : 3 (RCTA)
அக்கிரமத்தால் மனிதன் திடம் பெற மாட்டான். நீதிமான்களுடைய வேரும் அசைக்கப்படாது.
நீதிமொழிகள் 12 : 4 (RCTA)
சுறுசுறுப்புள்ள மனைவி தன் கணவனுக்கு ஒரு முடியாம். அவமானத்துக்குரிய காரியங்களைச் செய்கிறவளோ அவனுடைய எலும்புகள் அழுகிப்போகும்படி செய்வாள்.
நீதிமொழிகள் 12 : 5 (RCTA)
நீதிமானின் சிந்தனைகள் நீதியுள்ளன. அக்கிரமிகளின் ஆலோசனைகளோ வஞ்சனையுள்ளனவாம்.
நீதிமொழிகள் 12 : 6 (RCTA)
அக்கிரமிகளின் வார்த்தைகள் பிறர் இரத்தத்தைச் சிந்துகின்றன. நீதிமான்களுடைய வாக்கியமோ அவர்களை விடுவிக்கும்.
நீதிமொழிகள் 12 : 7 (RCTA)
அக்கிரமிகளைப் புரட்டி விட்டால் அவர்கள் இரார்கள். நீதிமான்களுடைய வீடோ நிலைபெற்றிருக்கும்.
நீதிமொழிகள் 12 : 8 (RCTA)
மனிதன் தன் போதகத்தால் அறியப்படுவான். வீணனாகவும் மூடனாகவும் இருக்கிறவனோ அவமானத்துக்கு உட்படுவான்.
நீதிமொழிகள் 12 : 9 (RCTA)
தனக்குத் தேவையானவைகளைத் தேடிக் கொள்கிற ஏழை, பெருமைக்காரனான உணவில்லாதவனைவிட மிகவும் நல்லவன்.
நீதிமொழிகள் 12 : 10 (RCTA)
நீதிமான் தன் மிருகங்களுடைய உயிரைக் காப்பாற்றுகிறான். அக்கிரமிகளுடைய குடல்கள் கொடுமையுள்ளன.
நீதிமொழிகள் 12 : 11 (RCTA)
தன் நிலத்தை உழுபவன் அப்பத்தால் நிறைவு காண்பான். இளைப்பாற்றியைத் தேடுகிறவன் மிகவும் மதி கெட்டவன். மதுபானம் குடிப்பதில் காலம் கழித்து மகிழ்கிறவன் நிந்தையைத் தன் கொத்தளங்களில் மீத்து வைக்கிறான்.
நீதிமொழிகள் 12 : 12 (RCTA)
அக்கிரமியின் ஆசையே மிகக் கொடியவருடைய ஆதரவாம். நீதிமான்களுடையவரோ தழைத்து வரும்.
நீதிமொழிகள் 12 : 13 (RCTA)
வாய்ப் பாவங்கள் நிமித்தமே தீயோனுக்கு நாசம் அணுகுகின்றது. நீதிமானோ இக்கட்டினின்று தப்பித்துக்கொள்வான்.
நீதிமொழிகள் 12 : 14 (RCTA)
அவனவன் தன் சொந்த வாக்கின் கனியாகிய நலத்தால் றிரப்பப்படுவான். தன் கைகளின் செய்கைகளுக்கு ஏற்ப அவனவனுக்குத் திருப்பித் தரப்படும்.
நீதிமொழிகள் 12 : 15 (RCTA)
மதியீனன் கண்களுக்குத் தன் வழியே நல்ல வழியாகத் (தோன்றும்). ஞானமுள்ளவனோ ஆலோசனைகளைக் கேட்கிறேன்.
நீதிமொழிகள் 12 : 16 (RCTA)
மதிகெட்டவன் தன் கோபத்தை உடனே காட்டுகிறான். பொல்லாப்பைப் பொருட்படுத்தாதவன் ஞானியாம்.
நீதிமொழிகள் 12 : 17 (RCTA)
தான் அறிந்ததைப் பேசுகிறவன் நியாயத்துக்குச் சாட்சியாய் இருக்கின்றான். பொய் சொல்கிறவனோ வஞ்சகத்திற்கு சாட்சியாயிருக்கிறான்.
நீதிமொழிகள் 12 : 18 (RCTA)
வாக்குறுதியை கொடுக்கிறவன் தன் மனசாட்சியால் கத்திபோல் குத்தப்படுகிறான். விவேகிகளின் நாவோ சுகமாய் இருக்கின்றது.
நீதிமொழிகள் 12 : 19 (RCTA)
உண்மையை உரைக்கும் உதடு என்றென்றும் நிலையாய் இருக்கும். படபடத்த சாட்சியோ பொய்க்கு (தன்) நாவை இசைக்கிறான்.
நீதிமொழிகள் 12 : 20 (RCTA)
தீங்கு நினைப்போரின் இதயம் வஞ்சனையானது. ஆனால், சமாதான ஆலோசனைகள் செய்கிறவர்களை மகிழ்ச்சி பின்தொடர்கின்றது.
நீதிமொழிகள் 12 : 21 (RCTA)
நீதிமானுக்கு யாது நேரிட்டாலும் அது அவனைத் துன்புறுத்தாது. அக்கிரமிகளோ தீமையால் நிரப்பப்படுவார்கள்.
நீதிமொழிகள் 12 : 22 (RCTA)
பொய்யர்களை ஆண்டவர் வெறுக்கின்றார். உண்மையாய் நடக்கிறவர்களை அவர் விரும்புகின்றார்.
நீதிமொழிகள் 12 : 23 (RCTA)
கற்றவன் தன் அறிவைப் பாராட்டாமல் மறைக்கிறான். மதியீனரின் இதயமோ அறிவீனத்தை வெளிகாட்டுகின்றது.
நீதிமொழிகள் 12 : 24 (RCTA)
வல்லவர்களின் கை ஆட்சி செலுத்தும். சோம்பலுள்ள கையோ கப்பங் கட்டிப் பணிவிடை புரியும்.
நீதிமொழிகள் 12 : 25 (RCTA)
மனிதன் இதயத்தில் (உள்ள) துயரம் அவனைத் தாழ்த்தும். நல்ல வார்த்தையால் அவன் மகிழ்ச்சி அடைவான்.
நீதிமொழிகள் 12 : 26 (RCTA)
தன் நண்பனைப்பற்றி நட்டத்தைக் கவனியாதவன் நீதிமானாய் இருக்கிறான். தீயவரின் பாதையோ அவர்களையே வஞ்சிக்கும்.
நீதிமொழிகள் 12 : 27 (RCTA)
வஞ்சகன் இலாபத்தைக் காணான். (நீதிமானான) மனிதனின் பொருள் பொன்போல் விலைபெறும்.
நீதிமொழிகள் 12 : 28 (RCTA)
நீதிநெறியில் வாழ்வு (உண்டு). முறையற்ற வழியோ சாவிற்குக் கூட்டிச்செல்கின்றது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

BG:

Opacity:

Color:


Size:


Font: