நீதிமொழிகள் 1 : 1 (RCTA)
இஸ்ராயேலின் அரசனும் தாவீதின் மகனுமான சாலமோனின் பழமொழிகள்.
நீதிமொழிகள் 1 : 2 (RCTA)
ஞானத்தையும் ஒழுக்கத்தையும் அறியவும், பிரித்தறியும் ஆற்றலை அளிக்கவும், உண்மைக் கோட்பாட்டை அறியவும்,
நீதிமொழிகள் 1 : 3 (RCTA)
நீதியையும் நியாயத்தையும் நேர்மையையும் அடையவும்.
நீதிமொழிகள் 1 : 4 (RCTA)
சிறுவர்க்கு அறிவுக் கூர்மையும், வாலிபர்க்கு அறியவும் அறிவாற்றலும் தரவும் (உதவும்).
நீதிமொழிகள் 1 : 5 (RCTA)
ஞானமுள்ளவன் அவற்றைக் கேட்டு மிகுந்த ஞானியானவன். அறிவுடையோன் அவற்றைக் கையாளும் வகை தெரிவான்.
நீதிமொழிகள் 1 : 6 (RCTA)
அவன் பழமொழியையும் அதன் விளக்கத்தையும் ஞானிகளுடைய வார்த்தைகளையும் அவர்களுடைய மறைமொழிகளையும் நிதானித்து அறிவான்.
நீதிமொழிகள் 1 : 7 (RCTA)
தெய்வபயமே ஞானத்தின் தொடக்கம். மதியீனரோ ஞானத்தையும் போதனையையும் புறக்கணிக்கின்றனர்.
நீதிமொழிகள் 1 : 8 (RCTA)
என் மகனே, உன் தந்தையின் போதனையைக் கேள்; உன் தாயின் கட்டளையைக் கைநெகிழாதே.
நீதிமொழிகள் 1 : 9 (RCTA)
(அவை) உன் தலைக்கு அருளும், உன் கழுத்துக்கு அணியும்போல் இருக்கும்.
நீதிமொழிகள் 1 : 10 (RCTA)
என் மகனே, பாவிகள் உன்னைப் புகழ்ந்து ஏமாற்றப் பார்த்தாலும் நீ அவர்களுக்கு இணங்காதே.
நீதிமொழிகள் 1 : 11 (RCTA)
அவர்கள் சொல்லுவதாவது: நீ எங்களோடு வா. நாம் தந்திரமாய்க் கொலை செய்வோம். குற்றமற்றவனுக்கு விரோதமாய்க் கண்ணி வைப்போம்.
நீதிமொழிகள் 1 : 12 (RCTA)
குழியில் இறங்கினவனை நரக பாதாளம் (விழுங்குவது) போல், நாம் அவனை உயிருடன் விழுங்கி விடுவோம்.
நீதிமொழிகள் 1 : 13 (RCTA)
அவனது ஏராளமான விலைமதிக்க முடியாத சொத்தும் உடைமையும் எங்களுடையன ஆகும். அவைகளால் எங்கள் வீடுகள் நிரம்பும்.
நீதிமொழிகள் 1 : 14 (RCTA)
(ஆதலால்) நீயும் எங்களுடன் பங்குக்கு நில். நம் அனைவருடைய பையும் ஒன்றாய் இருக்கட்டும்;
நீதிமொழிகள் 1 : 15 (RCTA)
(என்றாலும்), என் மகனே நீ அவர்களோடு நடவாமல், அவர்களுடைய வழிகளில் நின்று உன் கால்களை விலக்கு.
நீதிமொழிகள் 1 : 16 (RCTA)
ஏனென்றால், அவர்களுடைய கால்கள் தீமையை நோக்கி ஓடி, இரத்தத்தைச் சிந்த விரைகின்றன.
நீதிமொழிகள் 1 : 17 (RCTA)
ஆனால், இறகுள்ள பறவைகளின் கண்முன் வலை விரிப்பது வீண்.
நீதிமொழிகள் 1 : 18 (RCTA)
அவர்கள் தங்கள் உயிருக்கே உலை வைப்பதுமன்றி, தங்கள் ஆன்மாவுக்கு விரோதமாய் வஞ்சனையையும் ஏற்படுத்துகிறார்கள்.
நீதிமொழிகள் 1 : 19 (RCTA)
பேராசைக்காரர் எல்லாருடைய வழிகளும் அவ்விதமானவை. அவை பொருளாசை கொண்டவர்களின் ஆன்மாக்களைக் கவர்கின்றன.
நீதிமொழிகள் 1 : 20 (RCTA)
ஞானம் வெளியில் முழங்குகின்றது; தெருக்களில் தன் குரலை எழுப்புகின்றது;
நீதிமொழிகள் 1 : 21 (RCTA)
மக்கட் சமுதாயத்தின் தலையில் கூவுகின்றது. நகரத்தின் வாயில்களில் அது தன் வசனங்களை எடுத்துரைப்பதாவது:
நீதிமொழிகள் 1 : 22 (RCTA)
சிறுவர்களே, எதுவரையிலும் சிறுபிள்ளைத்தனத்தை நேசிப்பீர்கள் ? அறிவிலிகள் எதுவரைக்கும் தங்களுக்குக் கேடானவைகளை நாடுவார்கள் ? விவேகமற்றவர்கள் எதுவரையிலும் அறிவைப் பகைத்து வருவார்கள் ?
நீதிமொழிகள் 1 : 23 (RCTA)
என் கண்டன வார்த்தைகளைக் கேட்டுத் திரும்புங்கள். இதோ என் (ஏவுதலை) உங்களுக்குத் தோற்றுவிப்பேன்; என் வார்த்தைகளையும் உங்களுக்குக் காண்பிப்பேன்.
நீதிமொழிகள் 1 : 24 (RCTA)
நான் கூப்பிட்டேன்; நீங்கள், கேட்க மாட்டோம் என மறுத்தீர்கள். நான் என் கையை நீட்டினேன்; அதை உற்றுப்பார்த்தவன் ஒருவனும் இல்லை.
நீதிமொழிகள் 1 : 25 (RCTA)
நீங்கள் என் ஆலோசனை அனைத்தையும் இகழ்ந்தீர்கள்; என் கண்டனங்களையும் கைவிட்டு விட்டீர்கள்.
நீதிமொழிகள் 1 : 26 (RCTA)
நீங்கள் இறக்குந்தறுவாயில் இருக்கிறபோது நான் நகைப்பேன். நீங்கள் (அதற்குப்) பயந்திருக்கிறீர்கள்; அது உங்களுக்கு நேரிடுகையில் நான் உங்களைக் கேலி செய்வேன்.
நீதிமொழிகள் 1 : 27 (RCTA)
திடீர் ஆபத்து உங்கள்மேல் விழுகையில், புயலைப்போல் சாவு தாக்குகையில், தொல்லையும் துன்பமும் உங்கள்மீது வருகையில்,
நீதிமொழிகள் 1 : 28 (RCTA)
அப்போது என்னைக் கூவி அழைப்பீர்கள்; நானோ கேளேன். அவர்கள் அதிகாலையில் எழுந்திருப்பார்கள்; ஆனால், என்னைக் காணவுமாட்டார்கள்.
நீதிமொழிகள் 1 : 29 (RCTA)
ஏனென்றால், அவர்கள் என் போதகத்தை மிகப் பகைத்ததுமன்றி, தெய்வ பயத்தையும் கைக்கொள்ளவில்லை.
நீதிமொழிகள் 1 : 30 (RCTA)
என் ஆலோசனைக்கு அமையாததுமன்றி, என் கண்டனம் அனைத்தையும் புறக்கணித்தும் விட்டார்கள்.
நீதிமொழிகள் 1 : 31 (RCTA)
அதன் நிமித்தம் அவர்கள் தங்கள் ஆலோசனைகளில் நிறைவு காண்பார்கள்.
நீதிமொழிகள் 1 : 32 (RCTA)
சிறுவரின் அருவருப்பு அவர்களைக் கொல்லும்; அறிவிலிகளின் செல்வாக்கு அவர்களை நாசமாக்கும்.
நீதிமொழிகள் 1 : 33 (RCTA)
ஆனால், எனக்குச் செவி கொடுப்பவன் அச்சமின்றி இளைப்பாறுவான்; தீமைகளிலும் அச்சமற்றவனாய்ப் பெருஞ் செல்வத்தில் திளைத்திருப்பான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33