எண்ணாகமம் 9 : 1 (RCTA)
மீண்டும் இஸ்ராயேர் எகிப்து நாட்டினின்று புறப்பட்டு வந்த இரண்டாம் ஆண்டின் முதல் மாதத்திலே, சீனாய்ப் பாலைவனத்தில் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
எண்ணாகமம் 9 : 2 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் பாஸ்காத் திருவிழாவைக் குறித்த காலத்தில்,
எண்ணாகமம் 9 : 3 (RCTA)
அதாவது இம்மாதத்தின் பதினான்காம் நாள் மாலை வேளையிலே - அதற்கடுத்த எல்லாச் சடங்கு முறைகளின்படி கொண்டாடக்கடவார்கள் என்றார்.
எண்ணாகமம் 9 : 4 (RCTA)
ஆகையால், மோயீசன் இஸ்ராயேல் மக்கள் பாஸ்காவைக் கொண்டாடும்படி கட்டளையிட்டார்.
எண்ணாகமம் 9 : 5 (RCTA)
அவர்கள் அதைச் சீனாய் மலையில் குறித்த காலமாகிய அம்மாதம் பதினான்காம் நாள் மாலை வேளையில் கொண்டாடினார்கள். இஸ்ராயேல் மக்கள் ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே எல்லாவற்றையும் செய்தார்கள்.
எண்ணாகமம் 9 : 6 (RCTA)
ஆனால், ஒருவன் இறந்து போனதை முன்னிட்டுச் சிலர் தீட்டுப்பட்டாவர்களாயிருந்து, பாஸ்காத் திருவிழாவைக் கொண்டாடக் கூடாதவர்களாய் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் முன்பாக வந்து,
எண்ணாகமம் 9 : 7 (RCTA)
அவர்களை நோக்கி: நாங்கள் ஒரு மனிதன் இறந்ததனாலே தீட்டுப்பட்டவர்கள். குறித்த காலத்தில் இஸ்ராயேல் மக்களோடுகூட ஆண்டவருக்குக் காணிக்கை செலுத்தாதபடிக்கு நாங்கள் விலக்கப்பட வேண்டியதென்ன? என்று முறையிட்டார்கள்.
எண்ணாகமம் 9 : 8 (RCTA)
மோயீசனோ, பொறுங்கள், உங்களைப் பொறுத்தமட்டில் ஆண்டவர் என்ன கட்டளை கொடுப்பாரென்று கேட்கப் போகிறேன் என்று பதில் கூறினார்.
எண்ணாகமம் 9 : 9 (RCTA)
அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி:
எண்ணாகமம் 9 : 10 (RCTA)
நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: உங்கள் சந்ததியாரிலே எவனும் சாவை முன்னிட்டுத் தீட்டுப்பட்டிருந்தாலும், அல்லது பிரயாணத்தை முன்னிட்டு உங்களை விட்டுத் தூர இருந்தாலும் அவன் ஆண்டவருடைய பாஸ்காத் திருவிழாவை
எண்ணாகமம் 9 : 11 (RCTA)
இரண்டாம் மாதம் பதினான்காம் நாள் மாலை நேரத்திலே கொண்டாடக்கடவான். புளியாத அப்பத்தோடும் காட்டுக் கீரைகளோடும் அதை உண்பான்.
எண்ணாகமம் 9 : 12 (RCTA)
விடியற்காலை வரையிலும் அதில் எதையும் மீதியாக வைக்காமலும், எலும்புகளிலொன்றையும் முறிக்காமலும், பாஸ்காவைக் குறித்துக் கட்டளையிடப்பட்ட எல்லாச் சடங்கு முறைகளின்படியும் அதை அனுசரிக்கக்கடவான்.
எண்ணாகமம் 9 : 13 (RCTA)
ஆனால், தூய்மையாயிருக்கிறவர்களிலும், அல்லது தூரப் பிரயாணம் போகாதவர்களிலும், எவன் பாஸ்காவை அனுசரியாதிருப்பானோ அவன் தன் மக்களிடையே இராதபடிக்குக் கொலை செய்யப்படுவான்.
எண்ணாகமம் 9 : 14 (RCTA)
அகதி அல்லது அந்நியன் ஒருவன் உங்களிடத்தில் தங்கியிருந்தால், அவனும் சட்ட முறைப்படி பாஸ்காவை அனுசரிப்பான். இது அகதியைக் குறித்தும் அந்நியனைக் குறித்தும் உங்களுக்கு ஒரு கட்டளை என்றருளினார்.
எண்ணாகமம் 9 : 15 (RCTA)
தவிர, கூடாரம் நிறுவப்பட்ட நாளில் மேகம் அதை மூடிற்று. மாலையான போது உறைவிடத்தின் மேல் நெருப்பு மயமான ஒரு தோற்றம் உண்டாகி விடியற்காலை வரையிலும் அது காணப்பட்டது.
எண்ணாகமம் 9 : 16 (RCTA)
இவ்வாறு நாள்தோறும் நிகழும். (எவ்வாவென்றால்:) பகலில் ஒரு மேகமும், இரவில் நெருப்புத் தோற்றமும் உறைவிடத்தை மூடிக் கொண்டிருக்கும்.
எண்ணாகமம் 9 : 17 (RCTA)
கூடாரத்தை மூடும் நெருப்பு எப்போது மறையுமோ அப்போது இஸ்ராயேல் மக்கள் புறப்பட்டுப் போவார்கள். மேகம் எவ்விடத்தில் தங்கக் காண்பார்களோ அவ்விடத்தில் பாளையமிறங்குவார்கள்.
எண்ணாகமம் 9 : 18 (RCTA)
இப்படி ஆண்டவருடைய கட்டளைப்படி பயணம் செய்வார்கள்; அவருடைய கட்டளைப்படி கூடாரத்தைத நிறுவுவார்கள். உறைவிடத்தின் மேல் மேகம் தங்கியிருக்கும் நாளெல்லாம் அவர்கள் அவ்விடத்திலேயே தங்கியிருப்பார்கள்.
எண்ணாகமம் 9 : 19 (RCTA)
மேகம் நெடுநாள் உறைவிடத்தின் மேல் தங்கியிருக்கும்போது இஸ்ராயேல் மக்கள் புறப்படாமல், ஆண்டவருடைய திருவுளத்துக்குக் காத்திருப்பார்கள்.
எண்ணாகமம் 9 : 20 (RCTA)
எத்தனை நாள் மேகம் கூடாரத்தை மூடுமோ அத்தனை நாளும்அவர்கள் அந்த இடத்திலே இருப்பார்கள். ஆண்டவருடைய கட்டளைப்படி பாளையமிறங்குவார்கள்; ஆண்டவருடைய கட்டளைப்படி பாளையம் பெயர்வார்கள்.
எண்ணாகமம் 9 : 21 (RCTA)
மேகம் மாலை முதல் விடியற்காலை வரையில் நின்று கொண்டு, விடியற்காலத்தில் உயர எழும்பும் போது அவர்கள் புறப்படுவார்கள். ஒரு பகலும் ஓர் இரவும் தங்கின பின்பு அது நீங்குமாயின், அவர்களை பாளையம் பெயர்வார்கள்.
எண்ணாகமம் 9 : 22 (RCTA)
ஆனால், மேகம் இரண்டு நாளேனும், ஒரு மாதமேனும், அதற்கு மேலேனும் கூடாரத்தின் மேலே தங்கினால், இஸ்ராயேல் மக்கள் புறப்படாமல், அங்கேயே தங்கிவிடுவார்கள். அது உயர எழும்பியவுடனே புறப்படுவார்கள்.
எண்ணாகமம் 9 : 23 (RCTA)
ஆதலால், ஆண்டவருடைய வாக்குப்படி கூடாரம் அடிப்பார்கள்; அவருடைய வாக்குப்படியே வழி நடப்பார்கள். ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் அவருடைய திருவுளத்திற்குக் காத்திருப்பார்கள்.
❮
❯