எண்ணாகமம் 7 : 1 (RCTA)
வேலையெல்லாம் முடிந்து மோயீசன் திருஉறைவிடத்தை நிறுவியபோது, அதையும், அதன் எல்லாப் பொருட்களையும், பலி பீடத்தையும், அதைச் சார்ந்த எல்லாவற்றையும் எண்ணெய் பூசி அபிசேகம் செய்து புனிதப்படுத்தினார்.
எண்ணாகமம் 7 : 2 (RCTA)
இஸ்ராயேலின் தலைவர்களும், அந்ததந்தக் கோத்திரத்திலிருந்த வம்சத் தலைவர்களும், எண்ணப்பட்டவர்களை மேற்பார்ப்பதற்கு நியமிக்கப்பட்டவர்களும்,
எண்ணாகமம் 7 : 3 (RCTA)
ஆறு கூண்டு வண்டிகளையும் பன்னிரண்டு மாடுகளையும் ஆண்டவர் முன்னிலையில் காணிக்கையாய் வைத்தார்கள். இரு பிரபுக்களுக்கு ஒரு வண்டியும், ஒரு பிரபுவுக்கு ஒரு மாடுமாகக் கொடுத்தார்கள். அவர்கள் அவற்றை உறைவிடத்துக்கு முன்பாகக் கொண்டு வந்தபோது,
எண்ணாகமம் 7 : 4 (RCTA)
ஆண்டவர் மோயீசனை நோக்கி:
எண்ணாகமம் 7 : 5 (RCTA)
உறைவிடத்தின் உபயோகத்திற்காக நீ அவற்றை அவர்களிடமிருந்து வாங்கி, லேவியருக்கு அவரவருடைய வேலைக்குத் தக்கபடி பங்கிட்டுக் கொடு என்றார்.
எண்ணாகமம் 7 : 6 (RCTA)
ஆகையால் மோயீசன் வண்டிகளையும் மாடுகளையும் வாங்கி லேவியரிடம் ஒப்புவித்தார்.
எண்ணாகமம் 7 : 7 (RCTA)
இரண்டு வண்டிகளையும் நான்கு மாடுகளையும் ஜேற்சோன் புதல்வருக்கு அவர்கள் தேவைக்குத் தக்கபடி கொடுத்தார்.
எண்ணாகமம் 7 : 8 (RCTA)
குருவாகிய ஆரோனின் புதல்வன் இத்தமாருக்குக் கீழ்ப்பட்டிரந்த மேறாரியின் புதல்வருக்கு அவர்கள் தொழிலுக்கும் சேவைக்கும் தக்கபடி நான்கு வண்டிகளையும் எட்டு மாடுகளையும் கொடுத்தார்.
எண்ணாகமம் 7 : 9 (RCTA)
ககாத்தின் புதல்வர்களுக்கு வண்டியோ மாடோ ஒன்றும் கொடுக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் கூடாரத்துக்குள்ளேயே வேலை செய்து, சுமக்க வேண்டிய சுமையைத் தோள் மேலே சுமப்பார்கள்.
எண்ணாகமம் 7 : 10 (RCTA)
பலிபீடம் அபிசேகம் செய்யப்பட்ட நாளிலே பிரபுக்கள் அதன் முன்பாகத் தங்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.
எண்ணாகமம் 7 : 11 (RCTA)
அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி: பலிபீடத்தின் நேர்ச்சைக்காக ஒவ்வொரு பிரபுவும் தனக்குக் குறிக்கப்பட்ட நாளில் காணிக்கை செலுத்தக்கடவான் என்றார்.
எண்ணாகமம் 7 : 12 (RCTA)
(அவர்கள் அவ்வாறே செய்தார்கள்). முதல் நாளில் யூதா கோத்திரத்தானாகிய அமினதாபின் புதல்வன் நகஸோன் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
எண்ணாகமம் 7 : 13 (RCTA)
அவன் காணிக்கையாவது: புனித இடத்துக்குச் சீக்கல் கணக்குப் படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், மேற்படி சீக்கல் கணக்கில் எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித்தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்திருந்தான்).
எண்ணாகமம் 7 : 14 (RCTA)
பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னால் செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அதில் தூபவகைகள் நிறைந்திருந்தன).
எண்ணாகமம் 7 : 15 (RCTA)
முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக்கிடாய்,
எண்ணாகமம் 7 : 16 (RCTA)
ஒரு வயதுள்ள ஓர் ஆட்டுக்குட்டி, பாவநிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,
எண்ணாகமம் 7 : 17 (RCTA)
சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதுள்ள ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை அமினதாபின் புதல்வனாகிய நகஸோனுடைய காணிக்கையாம்.
எண்ணாகமம் 7 : 18 (RCTA)
இரண்டாம் நாள் இசக்கார் கோத்திரத்தின் தலைவனும் சூவாரின் புதல்வனுமான நத்தானியேல் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
எண்ணாகமம் 7 : 19 (RCTA)
அதாவது, புனித இடத்துச் சீக்கல் கணக்குப்படி நூற்று முப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித் தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்திருந்தன).
எண்ணாகமம் 7 : 20 (RCTA)
பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னால் செய்யப்பட்டதுமான ஒரு தூபக்கலசம் - (அது தூப வகைகளினாலே நிறைந்திருந்தது).
எண்ணாகமம் 7 : 21 (RCTA)
முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக் கிடாய், ஒரு வயதான ஓர் ஆட்டுக் குட்டி,
எண்ணாகமம் 7 : 22 (RCTA)
பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய், சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக் கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள்,
எண்ணாகமம் 7 : 23 (RCTA)
ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை சூவாரின் புதல்வனாகிய நத்தானியேலுடைய காணிக்கையாம்.
எண்ணாகமம் 7 : 24 (RCTA)
மூன்றாம் நாளிலே சாபுலோன் கோத்திரத்தின் தலைவனும் ஏலோனின் புதல்வனுமான எலியாப் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
எண்ணாகமம் 7 : 25 (RCTA)
அதாவது புனித இடத்துச் சீக்கல் கணக்குப்படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித்தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்திருந்தன).
எண்ணாகமம் 7 : 26 (RCTA)
பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னால் செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).
எண்ணாகமம் 7 : 27 (RCTA)
முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக்கிடாய், ஒரு வயதான ஓர் ஆட்டுக் குட்டி,
எண்ணாகமம் 7 : 28 (RCTA)
பாவநிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,
எண்ணாகமம் 7 : 29 (RCTA)
சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக் கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை ஏலோனின் புதல்வனாகிய எலியாபுடைய காணிக்கையாம்.
எண்ணாகமம் 7 : 30 (RCTA)
நான்காம் நாளிலே ரூபன் கோத்திரத்தின் தலைவனும் செதெயூரின் புதல்வனுமான எலிசூர் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
எண்ணாகமம் 7 : 31 (RCTA)
அதாவது: புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித் தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்திருந்தன).
எண்ணாகமம் 7 : 32 (RCTA)
பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னால் செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).
எண்ணாகமம் 7 : 33 (RCTA)
முழுத் தகனப்பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக்கிடாய்,
எண்ணாகமம் 7 : 34 (RCTA)
ஒரு வயதான ஓர் ஆட்டுக்குட்டி, பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,
எண்ணாகமம் 7 : 35 (RCTA)
சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக் கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை செதெயூரின் புதல்வனாகிய எலிசூருடைய காணிக்கையாம்.
எண்ணாகமம் 7 : 36 (RCTA)
ஐந்தாம் நாளிலே சிமையோன் கோத்திரத்தின் தலைவனும் சுரிஸதையின் புதல்வனுமான சலமியேல் என்பவன தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
எண்ணாகமம் 7 : 37 (RCTA)
அதாவது, புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்று முப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித்தட்டு- (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்திருந்தன).
எண்ணாகமம் 7 : 38 (RCTA)
பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக்கலசம்- (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).
எண்ணாகமம் 7 : 39 (RCTA)
முழத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக்கிடாய், ஒரு வயதான ஓர் ஆட்டுக் குட்டி,
எண்ணாகமம் 7 : 40 (RCTA)
பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,
எண்ணாகமம் 7 : 41 (RCTA)
சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை சூரிஸதையின் புதல்வனாகிய சலமியேலுடைய காணிக்கை.
எண்ணாகமம் 7 : 42 (RCTA)
ஆறாம் நாளிலே காத் கோத்திரத்தின் தலைவனும் துயேலின் புதல்வனுமான எலியஸாப் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
எண்ணாகமம் 7 : 43 (RCTA)
அதாவது: புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்று முப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித்தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்திருந்தன).
எண்ணாகமம் 7 : 44 (RCTA)
பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக்கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).
எண்ணாகமம் 7 : 45 (RCTA)
முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக் கிடாய்,
எண்ணாகமம் 7 : 46 (RCTA)
ஒரு வயதான ஆட்டுக்குட்டி, பாவநிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,
எண்ணாகமம் 7 : 47 (RCTA)
சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக் கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை துயேலின் புதல்வனாகிய எலியஸாபுடைய காணிக்கையாம்.
எண்ணாகமம் 7 : 48 (RCTA)
ஏழாம் நாளிலே எபிராயீம் கோத்திரத்தின் தலைவனும் அமியூதின் புதல்வனுமான எலிஸ்மா தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
எண்ணாகமம் 7 : 49 (RCTA)
அதாவது புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கிண்ணம், ஏழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித்தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்திருந்தன).
எண்ணாகமம் 7 : 50 (RCTA)
பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).
எண்ணாகமம் 7 : 51 (RCTA)
முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக்கிடாய், ஒரு வயதான ஓர் ஆட்டுக்குட்டி,
எண்ணாகமம் 7 : 52 (RCTA)
பாவநிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக்கிடாய்,
எண்ணாகமம் 7 : 53 (RCTA)
சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை அமியூதின் புதல்வனாகிய எலிஸ்மாவுடைய காணிக்கையாம்.
எண்ணாகமம் 7 : 54 (RCTA)
எட்டாம் நாளிலே மனஸே கோத்திரத்தின் தலைவனும் பதசூரின் புதல்வனுமான கமலியேல், தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
எண்ணாகமம் 7 : 55 (RCTA)
அதாவது: புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித் தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தன).
எண்ணாகமம் 7 : 56 (RCTA)
பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).
எண்ணாகமம் 7 : 57 (RCTA)
முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக்கிடாய், ஒரு வயதான ஓர் ஆட்டுக் குட்டி,
எண்ணாகமம் 7 : 58 (RCTA)
பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,
எண்ணாகமம் 7 : 59 (RCTA)
சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை பதசூரின் புதல்வனாகிய கமலியேலுடைய காணிக்கையாம்.
எண்ணாகமம் 7 : 60 (RCTA)
ஒன்பதாம் நாளிலே பெஞ்சமின் கோத்திரத்தின் தலைவனும் செதேயோனின் புதல்வனுமான அபிதான் தலைவன் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
எண்ணாகமம் 7 : 61 (RCTA)
அதாவது: புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித் தட்டு (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தன).
எண்ணாகமம் 7 : 62 (RCTA)
பத்துச் சீக்கல் நிறையுள்ளதம் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது ).
எண்ணாகமம் 7 : 63 (RCTA)
முழுத்தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக் கிடாய், ஒரு வயதாள ஓர் ஆட்டுக்குட்டி,
எண்ணாகமம் 7 : 64 (RCTA)
பாவ நிவாரணப்பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,
எண்ணாகமம் 7 : 65 (RCTA)
சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய்கள். ஐந்து வெள்ளாட்டுக்கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக் குட்டிகள். இவை செதெயோனின் புதல்வனாகிய அபிதானுடைய காணிக்கையாம்.
எண்ணாகமம் 7 : 66 (RCTA)
பத்தாம் நாளிலே தான் கோத்திரத்தின் தலைவனும், அமிசதாயின் புதல்வனுமான ஐயேசர் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
எண்ணாகமம் 7 : 67 (RCTA)
அதாவது: புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித் தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தன).
எண்ணாகமம் 7 : 68 (RCTA)
பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).
எண்ணாகமம் 7 : 69 (RCTA)
முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக் கிடாய், ஒரு வயதான ஓர் ஆட்டுக்குட்டி,
எண்ணாகமம் 7 : 70 (RCTA)
பாவநிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,
எண்ணாகமம் 7 : 71 (RCTA)
சமாதானப்பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக் குட்டிகள் - இவை அமிசதாயின் புதல்வனாகிய ஐயேசருடைய காணிக்கையாம்.
எண்ணாகமம் 7 : 72 (RCTA)
பதினோராம் நாளிலே ஆசேர் கோத்திரத்தின் தலைவனும் ஒக்கிரானின் புதல்வனுமாகிய பெகியேல் தலைவன் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
எண்ணாகமம் 7 : 73 (RCTA)
அதாவது: புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்று முப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித்தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தன).
எண்ணாகமம் 7 : 74 (RCTA)
பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).
எண்ணாகமம் 7 : 75 (RCTA)
முழுத்தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக்கிடாய், ஒரு வயதான ஓர் ஆட்டுக் குட்டி,
எண்ணாகமம் 7 : 76 (RCTA)
பாவநிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கிடாய்,
எண்ணாகமம் 7 : 77 (RCTA)
சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக்கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகள். இவை ஒக்கிரானின் புதல்வனாகிய பெகியேலுடைய காணிக்கையாம்.
எண்ணாகமம் 7 : 78 (RCTA)
பன்னிரண்டாம் நாளிலே நெப்தலி கோத்திரத்தின் தலைவனும் ஏனானின் புதல்வனுமான ஐரா தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
எண்ணாகமம் 7 : 79 (RCTA)
அதாவது: புனித இடத்துச் சீக்கலின் கணக்குப்படி நூற்றுமுப்பது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம், எழுபது சீக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளித் தட்டு - (இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தன).
எண்ணாகமம் 7 : 80 (RCTA)
பத்துச் சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப்பட்டதுமான ஒரு தூபக் கலசம் - (அது தூப வகைகளால் நிறைந்திருந்தது).
எண்ணாகமம் 7 : 81 (RCTA)
முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காளை, ஓர் ஆட்டுக் கிடாய்,
எண்ணாகமம் 7 : 82 (RCTA)
ஒரு வயதான ஓர் ஆட்டுக்குட்டி, பாவநிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக்கிடாய்,
எண்ணாகமம் 7 : 83 (RCTA)
சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகள், ஐந்து ஆட்டுக்கிடாய்கள், ஐந்து வெள்ளாட்டுக் கிடாய்கள், ஒரு வயதான ஐந்து ஆட்டுக் குட்டிகள். இவை ஏனானின் புதல்வனாகிய ஐராவுடைய காணிக்கையாம்.
எண்ணாகமம் 7 : 84 (RCTA)
பலிபீடத்தின் நேர்ச்சைக்காக அபிசேகம் செய்யப்பட்டபோது, இஸ்ராயேல் தலைவர்களால் ஒப்புக்கொடுக்கப்பட்டவையாவன: வெள்ளிக் கிண்ணங்கள் பன்னிரண்டு, வெள்ளித் தட்டுகள் பன்னிரண்டு, பொன்னால் செய்யப்பட்ட தூபக் கலசங்கள் பன்னிரண்டு.
எண்ணாகமம் 7 : 85 (RCTA)
ஒவ்வொரு வெள்ளிக் கிண்ணமும் நூற்றுமுப்பது சீக்கல் நிறையும், ஒவ்வொரு தட்டும் எழுபது சீக்கல் நிறையுமாக இந்தப் பாத்திரங்களின் வெள்ளியெல்லாம் புனித இடத்து நிறைக் கணக்குப்படி இரண்டாயிரத்து நானூறு சீக்கல்.
எண்ணாகமம் 7 : 86 (RCTA)
தூபவகைகளால் நிறைந்த, பொன்னால் செய்யப்பட்ட பன்னிரண்டு தூபக்கலசங்கள். ஒவ்வொரு பொற்கலசமும் புனித இடத்தின் நிறைக்கணக்குப் படி பத்துச் சீக்கலும், கலசங்களின் பொன்னெல்லாம் நூற்றிருபது சீக்கலும் இருக்கும்.
எண்ணாகமம் 7 : 87 (RCTA)
முழுத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட மாடுகள் பன்னிரண்டு, ஆட்டுக்கிடாய்கள் பன்னிரண்டு, ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் பன்னிரண்டு, அவைகளுக்கான உணவு தானியங்கள், பாவ நிவாரணப்பலிக்காகப் பன்னிரண்டு, வெள்ளாட்டுக்கிடாய்கள்,
எண்ணாகமம் 7 : 88 (RCTA)
சமாதானப் பலிக்காக மாடுகள் இருபத்து நான்கு, ஆட்டுக்கிடாய்கள் அறுபது, வெள்ளாட்டுக் கிடாய்கள் அறுபது, ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் அறுபது. இவைகளெல்லாம் பலிபீடத்தின் நேர்ச்சைக்காக அபிசேக நாளின்போது ஒப்புக்கொடுக்கப்பட்டன.
எண்ணாகமம் 7 : 89 (RCTA)
மோயீசன் கடவுளின் ஆலோசனை கேட்கும் பொருட்டு எப்பொழுது உடன்படிக்கையின் கூடாரத்திற்குள் புகுவாரோ அப்பொழுது இரக்கத்தின் இருப்பிடத்தினின்று தனக்கு விடை கொடுக்கிறவருடைய குரலைக் கேட்டுக் கொண்டிருப்பார். இரக்கத்தின் இருப்பிடம் சாட்சியப் பெட்டியின்மேல் இரண்டு கெருபீம்கள் நடுவே இருந்தது. அதனின்றே குரல்வரும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89

BG:

Opacity:

Color:


Size:


Font: