எண்ணாகமம் 5 : 1 (RCTA)
மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
எண்ணாகமம் 5 : 2 (RCTA)
தொழு நோய் கொண்டவர்கள் யாவரையும், மேகவெட்டையுள்ளவனையும், பிணத்தினாலே தீட்டுப்பட்டவனையும் பாளையத்தினின்று நீக்கிவிட இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளையிடு.
எண்ணாகமம் 5 : 3 (RCTA)
நாம் உங்களோடு வாழ்கின்றமையால், அப்படிப்பட்டவர்கள் ஆணானாலும் பெண்ணானாலும் - பாளையத்தைத் தீட்டுப்படுத்தாத படிக்கு அதிலிருந்து புறம்பாக்கப்படுவார்கள் என்றார்.
எண்ணாகமம் 5 : 4 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் அவ்விதமே செய்து, ஆண்டவர் மோயீசனுக்குச் சொன்னபடியே, அப்படிப்பட்டவர்களைப் பாளையத்தினின்று புறம்பாக்கி விட்டனர்.
எண்ணாகமம் 5 : 5 (RCTA)
மறுபடியும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
எண்ணாகமம் 5 : 6 (RCTA)
நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: ஓர் ஆடவனாவது ஒரு பெண்ணாவது கவனக்குறைவால் ஆண்டவருடைய கட்டளையைமீறி மனிதர் வழக்கமாய்ச் செய்யும் பாவங்களில் எதையாவது செய்து குற்றவாளியானால்,
எண்ணாகமம் 5 : 7 (RCTA)
அவர்கள் தங்கள் பாவத்தை அறிக்கையிட வேண்டியது மன்றி, எவனுக்கு அநீதி செய்தார்களோ அவனுக்கு முதலோடு ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுத்து ஈடுசெய்யக் கடவார்கள்.
எண்ணாகமம் 5 : 8 (RCTA)
அதை வாங்குவோர் ஒருவரும் இல்லையென்றால், அது ஆண்டவருக்குச் செலுத்தப்படும். அது ஆண்டவரைச் சமாதானப் படத்தப் பாவ நிவர்த்திக்கென்று கொடுக்கப் படும் ஆட்டுக்கிடாய் நீங்கலாக மற்றவை குருவைச் சேரவேண்டும்.
எண்ணாகமம் 5 : 9 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் எவ்விதப் புதுப்பலன்களை ஒப்புக்கொடுத்தாலும், அவை குருவுக்குச் சொந்தமாகும்.
எண்ணாகமம் 5 : 10 (RCTA)
மேலும் சாதாரணமாய்ப் புனித இடத்தில் எவ்வித காணிக்கை ஒப்புக்கொடுக்கப்பட்டாலும், அதுவும் அவருடையதாய் இருக்கும் என்றருளினார்.
எண்ணாகமம் 5 : 11 (RCTA)
பின்னும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
எண்ணாகமம் 5 : 12 (RCTA)
நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால்: ஒருவனுடைய மனைவி அறிவு கெட்டுக் கணவனுக்குத் துரோகம் செய்து,
எண்ணாகமம் 5 : 13 (RCTA)
மற்றொருவனோடு சயனித்து விபசாரம் செய்தது உண்மையாயினும், கணவன் அதைக் கண்டதில்லை என்பதானும், அவள் கையுங்களவுமாய்ப் பிடிப்பட்டதில்லை என்பதானும் அவளுடைய விபசாரம் வெளிப்பட்டுச் சாட்சிகள் மூலமாய்த் தெளிவு படுத்தக் கூடாத வேளையில்,
எண்ணாகமம் 5 : 14 (RCTA)
அவள் உண்மையாகவே தீட்டுப்பட்டவளோ அல்லது பொய்யாகக் குற்றவாளியென்னும் எண்ணப்பட்டவளோ என்னும் எரிச்சலாகிய பேய் கணவனைத் தன்மனைவிக்கு விரோதமாய்த் தூண்டி விடுமாயின்,
எண்ணாகமம் 5 : 15 (RCTA)
அவன் தன் மனைவியைக் குருவினிடம் அழைத்து வந்து, அவளுக்காக ஒருபடி வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கு படைக்கக்கடவான். ஆனால் அது எரிச்சலின் காணிக்கையும், அவள் விபசாரம் செய்தாளோ இல்லையோ என்பதைக் காண்பிக்கக் கூடிய காணிக்கையும் ஆனபடியினாலே, அந்த மாவின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவகைகள் இடாமலும் இருப்பான்.
எண்ணாகமம் 5 : 16 (RCTA)
குரு இதனை ஆண்டவருடைய முன்னிலையில் ஒப்புக்கொடுப்பார்.
எண்ணாகமம் 5 : 17 (RCTA)
ஒரு மட்பாண்டத்திலே தண்ணீர் வார்த்து, சாட்சியக் கூடாரத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் எடுத்து மேற்படித் தண்ணீரில் போட்டு,
எண்ணாகமம் 5 : 18 (RCTA)
ஆண்டவர் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிற அந்தப் பெண்ணின் முக்காட்டை நீக்கி, நினைவூட்டும் பலியையும் எரிச்சலின் காணிக்கையையும் அவள் கையின் மேல் வைப்பார். பிறகு குரு தம்மால் வெறுப்புடன் சபிக்கப்பட்ட மிகக் கசப்பான தண்ணீரைக் கையில் ஏந்தி,
எண்ணாகமம் 5 : 19 (RCTA)
அந்தப் பெண்ணை ஆணையிட்டு, நீ கேள்: யாரேனும் ஒரு கள்ளக் கணவன் உன்னோடு படுக்காமலும், உன் கணவனுககு நீ துரோகம் செய்யாமலும், தீட்டுப்படாமலும் இருந்தாயானால், நான் வெறுத்தச் சபித்த இந்தத் தண்ணீரால் உனக்குத் தீமைவராது.
எண்ணாகமம் 5 : 20 (RCTA)
ஆனால், நீ உன் கணவனோடேயன்றி வேறு ஆடவனோடு படுத்து தீட்டுப்பட்டியிருந்தாயாயின், இந்தச் சாபமெல்லாம் உன்மேல் வரும்.
எண்ணாகமம் 5 : 21 (RCTA)
சபையிலுள்ள அனைவரும் கண்டு அஞ்சும்படி ஆண்டவர் உன்னை எல்லாருடைய சாபங்களுக்கும் உள்ளாகாச் செய்வாராக. (மேலும்) அவர் உன் கால்கள் அழுகிப் போகவும் உன் வயிறு வீங்கி வெடித்துப் போகவும் செய்வாராக.
எண்ணாகமம் 5 : 22 (RCTA)
சபிக்கப்பட்ட இந்தத் தண்ணீர் உன் வயிற்றில் விழவே உன் கருப்பை வீங்கவும், உன் தொடைகள் அழுகவும் கடவன என்று குரு சொல்லும்போது, அந்தப் பெண்: ஆமென், ஆமென் என்று சொல்லக் கடவாள்.
எண்ணாகமம் 5 : 23 (RCTA)
பின்பு குரு இந்தச் சாப வார்த்தைகளை ஒரு புத்தகத்தில் எழுதி, தம்மாலே சபிக்கப்பட்ட மிகக் கசப்பான தண்ணீரால் அவ்வெழுத்தைக் கழுவிக் கலைத்து,
எண்ணாகமம் 5 : 24 (RCTA)
அதை அவளுக்குக் குடிக்கக் கொடுப்பார். அவள் அதைக் குடித்த பின்பு,
எண்ணாகமம் 5 : 25 (RCTA)
குரு எரிச்சலின் காணிக்கையை அந்தப் பெண்ணின் கையிலிருந்து வாங்கி, அதை ஆண்டவருடைய முன்னிலையில் உயர்த்திக் காட்டிப் பீடத்தின் மேல் வைக்கப் போகும் போது,
எண்ணாகமம் 5 : 26 (RCTA)
முதலில் பலிபீடத்தின் மேல் தகனிப்பதற்காக அதனின்று ஒரு கைப்பிடி மாவை எடுத்து வைக்கக் கடவார். அதன்பிறகு மிகக் கசப்பான தண்ணீரை அந்தப் பெண் குடிக்கும்படி கொடுப்பார்.
எண்ணாகமம் 5 : 27 (RCTA)
அதை அவள் குடித்த பின்பு, தான் உண்மையாகவே தீட்டுப்பட்டுக் கணவனுக்குத் துரோகம் செய்து விபசாரியானவளென்றால், சபிக்கப்பட்ட தண்ணீர் உள்ளே புகுந்தவுடனே அவளுடைய வயிறு வீங்கி, தொடைகள் அழுகி விடும். அந்தப் பெண்மக்களுக்குள்ளே சபிக்கப்பட்டவளாகி, எல்லாருக்கும் மாதிரியாக இருப்பாள்.
எண்ணாகமம் 5 : 28 (RCTA)
அவள் குற்றமில்லாவளாய் இருந்தால் அவளுக்கு ஒரு கேடும் வராது. கருத்தரிக்கத் தக்கவளாகவும் இருப்பாள்.
எண்ணாகமம் 5 : 29 (RCTA)
எரிச்சலைப் பற்றிய சட்டம் பின்வருமாறு: பெண் தன் கணவனை விட்டு அவனக்குத் துரோகம் செய்தவிடத்து,
எண்ணாகமம் 5 : 30 (RCTA)
கணவன் சந்தகேத்தால் ஏவப்பட்டு, அவளை ஆண்டவர் முன்னிலையில் அழைத்துக்கொண்டு வருவான். குருவும் மேலே குறிப்பிட்டபடி எல்லாம் அவளுக்குச் செய்யக்கடவார்.
எண்ணாகமம் 5 : 31 (RCTA)
கணவன் குற்றத்திற்கு நீங்கலாகியிருப்பான். பெண்ணோதன் அக்கிரமத்தின் சுமையைச் சுமப்பாள் என்று ஆண்டவர் திருவுளம்பற்றினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31