எண்ணாகமம் 36 : 1 (RCTA)
இவ்வாறிருக்க, சூசையின் வம்ச வழியைச் சேர்ந்த மனாஸேயின் மகனான மக்கீரின் புதல்வர்களும், கலாத் வம்சங்களின் அதிபதிகளும் வந்து, இஸ்ராயேல் தலைவர்களின் முன்னிலையில் மோயீசனிடம் சொன்னதாவது:
எண்ணாகமம் 36 : 2 (RCTA)
சீட்டுப் போட்டு இஸ்ராயேல் மக்களுக்கு நாட்டைச் சீட்டு விழுந்தபடி பிரித்துக் கொடுக்குமாறு எங்கள் தலைவராகிய உமக்குத் தானே ஆண்டவர் கட்டளை கொடுத்து, எங்கள் சகோதரனாகிய சல்பாதுக்கு வர வேண்டிய உரிமைப் பாகத்தை அவன் புதல்வியருக்குத் தரக் கட்டளையிட்டார்?
எண்ணாகமம் 36 : 3 (RCTA)
ஆனால், வேறொரு கோத்திரத்து ஆடவர்கள் அவர்களை மணந்து கொள்வார்களாயின், அந்தப் புதல்வியருடைய உரிமைப் பாகம் அவர்களோடு போகும். அப்பொழுது அவர்களுடைய உரிமை நீங்கி அவர்கள் உட்படுகிற கோத்திரத்தின் உரிமையோடு சேர்ந்து போகும்.
எண்ணாகமம் 36 : 4 (RCTA)
அப்படியிருக்க, ஐம்பதாம் ஆண்டாகிய ஜுபிலி ஆண்டு வந்தாலும், முந்திச் சீட்டுப் போட்டுப் பங்கிட்டுக் கொடுத்த உடைமைகள் ஒன்றோடொன்று சிக்குண்டு போகும். ஓருவனுடைய உரிமை நீங்கிப் போய் மற்றொருவனுடைய உரிமையோடு சேர்ந்துபோகும். (அதற்கு நியாயம் என்ன) என்று கேட்டார்கள்.
எண்ணாகமம் 36 : 5 (RCTA)
அதற்கு மோயீசன் ஆண்டவருடைய கட்டளையின்படி இஸ்ராயேல் மக்களை நோக்கி: சூசையின் கேத்திரத்தார் சொன்னது முறையே.
எண்ணாகமம் 36 : 6 (RCTA)
ஆதலால் ஆண்டவர் சல்பாதின் புதல்வியாரைக் குறித்து விதிக்கிற கட்டளை என்னவென்றால்: அவர்கள் தங்களுக்கு விருப்பமான ஆடவரை மணந்து கொள்ளலாம். ஆனால், தஙகள் கோத்திரத்தாரோடு மட்டுமே அவர்கள் மணம் செய்து கொள்ள வேண்டும்.
எண்ணாகமம் 36 : 7 (RCTA)
இல்லாவிட்டால், இஸ்ராயேல் மக்களுடைய உரிமைப் பாகம் ஒரு கோத்திரத்தைவிட்டு மற்றொரு கோத்திரத்துக்குப் போய்விடும்.
எண்ணாகமம் 36 : 8 (RCTA)
ஆதலால், ஆடவர் யாவரும் தங்கள் தங்கள் கோத்திரத்திலும் தங்கள் தங்கள் வம்சத்திலும் மட்டுமே மணம் செய்து கொள்ளவும், அவரவருடைய உரிமைப்பாகம் அவருடைய கோத்திரத்திலே நிலைகொண்டிருக்கும்படியாய்ப் பெண்கள் யாவரும் தங்கள் தங்கள் கோத்திரத்திலே மட்டும் வாழ்க்கைப்படவும் கடவார்கள்.
எண்ணாகமம் 36 : 9 (RCTA)
இவ்வாறு கோத்திரங்கள் ஒன்றோடொன்று கலவாமல் இப்போதிருக்கிற முறையிலே நிலைபெறும்.
எண்ணாகமம் 36 : 10 (RCTA)
அந்தக் கோத்திரங்கள் ஆண்டவராலேயே வேறுவேறாகப் பிரிக்கப்பட்டன அல்லவா என்று சொன்னார். சல்பாதின் புதல்வியர் மோயீசன் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
எண்ணாகமம் 36 : 11 (RCTA)
மாலா, தேற்சா, ஏகிலா, மெல்கா நோவா ஆகியவர்கள் தங்கள் தந்தையின் சகோதரருடைய புதல்வர்களை மணந்து கொண்டார்கள்.
எண்ணாகமம் 36 : 12 (RCTA)
இவர்கள் சூசையின் புதல்வனான மனாஸேயின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாகையால், அவர்களுக்குக் கிடைத்த உரிமைப் பாகம் அவர்களுடைய தந்தையின் கோத்திரத்திலும் உறவின் முறையிலும் நிலை கொண்டது.
எண்ணாகமம் 36 : 13 (RCTA)
எரிக்கோவின் அருகே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள மோவாபின் சமவெளிகளிலே ஆண்டவர் மோயீசன் வழியாய் இஸ்ராயேல் மக்களுக்கு விதித்த கட்டளைகளும் சட்டங்களும் இவைகளேயாம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

BG:

Opacity:

Color:


Size:


Font: