எண்ணாகமம் 35 : 1 (RCTA)
மீண்டும் மோவாப் சமவெளிகளில் எரிக்கோவுக்கு எதிர்ப்புறத்தில் யோர்தானின் இக்கரையிலே ஆண்டவர் மோயீசனுக்குத் திருவாக்கருளினதாவது:
எண்ணாகமம் 35 : 2 (RCTA)
நீ இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளையிட வேண்டியது என்னவென்றால்: அவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் லேவியருக்கு இடம் தரவேண்டும்.
எண்ணாகமம் 35 : 3 (RCTA)
குடியிருக்கத்தக்க நகரங்களையும், அவற்றின் சுற்றிலுமுள்ள வெளிகளையும் அவர்களுக்குக் கொடுக்கக்கடவார்கள். மேற்படி நகரங்களில் லேவியர் வாழ்ந்திருந்து, அந்த நகரங்களை அடுத்த சுற்றுவெளிகளில் தங்கள் ஆடுமாடு முதலியவற்றை வைத்துக் கொள்வார்கள்.
எண்ணாகமம் 35 : 4 (RCTA)
இந்தச் சுற்றுவெளிகள் மதில்களுக்கு வெளியே இருக்கும். மதில் தொடங்கி வெளியே சுற்றிலும் ஆயிரம் கெஜ தூரத்துக்கு எட்ட வேண்டும்.
எண்ணாகமம் 35 : 5 (RCTA)
நகரங்கள் நடுவில் இருக்க, நகரங்களைச் சேர்ந்த வெளிகள் அவற்றைச் சுற்றி இருக்கும். இவைகளுக்கும் அவைகளுக்கும் கீழ்ப்புறத்தில் இரண்டாயிரம் முழமும், தென்புறத்தில் இரண்டாயிரம் முழமும், மேற்புறத்தில் இரண்டாயிரம் முழமும், வடபுறத்தில் இரண்டாயிரம் முழமும் (இடைவெளி இருக்கும்படி அளந்துவிடுவீர்கள்).
எண்ணாகமம் 35 : 6 (RCTA)
நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் நகரங்களில், கொலைசெய்தவன் ஓடி ஒழியத்தக்க ஆறு நகரங்களை அடைக்கல நகரங்கள் என்று குறிக்கக்கடவீர்கள். இந்த ஆறும் தவிர வேறு நாற்பத்திரண்டு நகரங்கள் லேவியருக்கு உரியவைகளாய் இருக்கவேண்டும்.
எண்ணாகமம் 35 : 7 (RCTA)
எல்லாம் சேர்ந்து லேவியருக்குக் கொடுக்க வேண்டியவை நாற்பத்தெட்டு நகரங்களும் அவைகளுக்கடுத்த வெளிகளுமேயாம்.
எண்ணாகமம் 35 : 8 (RCTA)
நீங்கள் இஸ்ராயேல் மக்களுடைய உரிமையிலிருந்து அந்த நகரங்களைக் குறிக்கும்போது, அதிகமுள்ளவர்களிடமிருந்து அதிகமும், கொஞ்சமுள்ளவர்களிடமிருந்து கொஞ்சமும் பிரித்தெடுக்க வேண்டும். அவரவருடைய உரிமையின் தரப்படியே அவரவர் லேவியருக்குக் கொடுக்கக் கடவார்கள் என்று திருவுளம்பற்றினார்.
எண்ணாகமம் 35 : 9 (RCTA)
பின்னும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
எண்ணாகமம் 35 : 10 (RCTA)
நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்லவேண்டியதாவது: நீங்கள் யோர்தானைக் கடந்து கானான் நாடு சேர்ந்த பின்பு,
எண்ணாகமம் 35 : 11 (RCTA)
இந்நகரங்களில் தன்னறிவின்றிக் கொலை செய்தவன் ஓடி ஒழியத்தக்க அடைக்கல நகரங்கள் எவையென்று நீங்கள் தீர்மானித்துக் குறிக்கக் கடவீர்கள்.
எண்ணாகமம் 35 : 12 (RCTA)
கொலை செய்து அவைகளில் அடைக்கலம் புகுந்தவன் சபையிலே நியாயம் விசாரிக்கப்படுவதற்குமுன் கொலை செய்யப்பட்டவனுடைய உறவினர் கையாலே அவன் சாகாமல் தப்பித்துக்கொள்வான்.
எண்ணாகமம் 35 : 13 (RCTA)
ஆதலால், அடைக்கலம் என்று குறிக்கப்படும் நகரங்களில்,
எண்ணாகமம் 35 : 14 (RCTA)
யோர்தானுக்கு இப்பால் மூன்றும் கானான் இருக்க வேண்டும்
எண்ணாகமம் 35 : 15 (RCTA)
தன்னறிவின்றி கொலை செய்தவன் இஸ்ராயேல் மகனானாலும், உங்கள் நடுவே இருக்கும் அகதியானாலும், அந்நியனானாலும் அங்கே அடைக்கலம் புகலாம்.
எண்ணாகமம் 35 : 16 (RCTA)
ஒருவன் இருப்பாயுதத்தால் மற்றொருவனை அடித்திருக்க அடியுண்டவன் இறந்தால், அடித்தவன் கொலைபாதகன் என்று கொலை செய்யப்படவேண்டும்.
எண்ணாகமம் 35 : 17 (RCTA)
ஒருவன் மற்றொருவன் மேலே கல்லெறிந்திருக்க எறிபட்டவன் இறந்தால், கல்லெறிந்தவன் அவ்விதமே கொலை செய்யப்பட்டவேண்டும்.
எண்ணாகமம் 35 : 18 (RCTA)
ஒருவன் மர ஆயுதத்தாலே அடிபட்டு இறந்தால், அடித்தவன் கொலை செய்யப்படுவதாலே அந்தப் பழி தீரும்.
எண்ணாகமம் 35 : 19 (RCTA)
கொலை செய்யப்பட்டவனுடைய உறவினர் கொலைபாதகனைக் கொல்ல வேண்டும். அவனைக் கண்டவுடனே அவர்கள் அவனைக் கொண்று விடுவார்கள்.
எண்ணாகமம் 35 : 20 (RCTA)
ஒருவன் பகையால் மற்றொருவனை விழத் தள்ளினான்; அல்லது பதுங்கியிருந்து அவன் மேல் ஏதேனும் எறிந்தான்; அல்லது அவனை விரோதித்துக் கையால் அடித்தான்:
எண்ணாகமம் 35 : 21 (RCTA)
அவ்வாறு செய்யப்பட்டவன் இறந்தானாயின் அதைச் செய்தவன் கொலை பாதகனாகையால் கொலை செய்யப்படுவான். இறந்தவனுடைய உறவினர் அவனைக் கண்டவுடனே கொன்றுவிடுவார்கள்.
எண்ணாகமம் 35 : 22 (RCTA)
ஆனால், அவன் எதிர்பாராத விதமாய்ப் பகையொன்றுமில்லாமலும்,
எண்ணாகமம் 35 : 23 (RCTA)
கடுப்பில்லாமலும் அவ்விதச் செயலைச் செய்திருப்பானாயின்,
எண்ணாகமம் 35 : 24 (RCTA)
அப்பொழுது, கொலை செய்தவனும் பழி வாங்க வேண்டிய உறவினனும் சபையார் முன்பாக நியாயம் பேசி, (அது எதிர்பாராதவிதமாய் நிகழ்ந்ததேயன்றி வேறொன்றினால் அல்லவென்று) தெளிவானால்,
எண்ணாகமம் 35 : 25 (RCTA)
குற்றமற்றவனென்று அவனைப் பழிவாங்குபவனுடைய கைக்குத் தப்புவித்து, அவன் அடைக்கலம் புகத்தக்க நகரத்திற்கு நீதித் தீர்ப்பின்படி கொண்டு வரப்படுவான். பிறகு அவன், புனித தைலத்தைப் பூசி அபிஷுகம் செய்யப்பட்ட தலைமைக் குருவின் மரணம் வரையிலும் அவ்விடத்திலேயே இருக்கக்கடவான்.
எண்ணாகமம் 35 : 26 (RCTA)
ஆனால், கொலை செய்தவன் தான் ஓடிப்போய்த் தங்கிய அடைக்கல நகரத்தின் எல்லைகளை விட்டு வெளிப்பட்டிருக்கும்போது,
எண்ணாகமம் 35 : 27 (RCTA)
அவனைக் கண்டுபிடித்துக் கொன்று பழிவாங்குவோனுக்குக் குற்றம் இல்லை.
எண்ணாகமம் 35 : 28 (RCTA)
ஏனென்றால், ஓடிப்போனவன் தலைமைக் குருவின் மரணம் வரையிலும் அடைக்கல நகரத்தில் இருந்திருக்கவேண்டும். தலைமைக்குரு இறந்த பின்னரோ, கொலை செய்தவன் தன் சொந்த ஊருக்குத் திரும்பிப் போகத் தடையில்லை.
எண்ணாகமம் 35 : 29 (RCTA)
இவை உங்கள் உறைவிடங்களெங்கும் நித்திய சட்டமாய் வழங்கி வரக்கடவன.
எண்ணாகமம் 35 : 30 (RCTA)
கொலை செய்தவன் சாட்சிகளுடைய வாக்கு மூலத்தின்படியே தண்டிக்கப்படுவான். மேலும், ஒரே சாட்சியைக் கொண்டு ஒரு மனிதன் சாகும்படி தீர்ப்புச் செய்யலாகாது.
எண்ணாகமம் 35 : 31 (RCTA)
இரத்தம் சிந்திய மனிதன் தன் உயிருக்காக பணத்தைக் கொடுத்தாலும் நீங்கள் வாங்கலாகாது. அவன் செத்தே தீர வேண்டும்.
எண்ணாகமம் 35 : 32 (RCTA)
அடைக்கலம் புகுந்தவர்கள் அடைக்கல நகரத்திலிருந்து குருவின் மரணத்திற்கு முன் தங்கள் ஊருக்குக் கண்டிப்பாய்த் திரும்பிப் போகலாகாது.
எண்ணாகமம் 35 : 33 (RCTA)
நீங்கள் குடியேறின நாடு குற்றமில்லாதவருடைய இரத்தத்தினால் தீட்டுள்ளதாகி விட்டதே! அந்த தீட்டு இரத்தம் சிந்திய பாதகனுடைய இரத்தத்தாலன்றி மற்ற எதனாலும் கழுவப்படாதென்று (நீங்கள் மறவாதபடிக்கு அதைச் சொன்னோம்).
எண்ணாகமம் 35 : 34 (RCTA)
அவ்வாறு உங்கள் நாடு தூய்மை பெறும். நாமும் அப்பொழுது உங்களோடு வாழ்ந்திருப்போம். ஏனென்றால், ஆண்டவராகிய நாம் இஸ்ராயேல் மக்கள் நடுவே வாழ்ந்திருக்கிறோம் என்று திருவுளம்பற்றினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34