எண்ணாகமம் 34 : 1 (RCTA)
மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
எண்ணாகமம் 34 : 2 (RCTA)
நீ இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: நீங்கள் கானான் நாட்டில் புகப்போகிறீர்கள். அது உங்களுக்குத் திருவுளச் சீட்டுப்படி உரிமையாய்க் கொடுக்கப்பட்ட பின்பு அதன் எல்லைகள் பின் வருமாறு:
எண்ணாகமம் 34 : 3 (RCTA)
உங்கள் தென்புறம் ஏதோமுக்கு அண்மையில் இருக்கிற சின் என்னும் பாலைவனம் தொடங்கிக் கிழக்கில் இருக்கிற உவர்க்கடல் வரையிலுமாம்.
எண்ணாகமம் 34 : 4 (RCTA)
அந்த எல்லைகள் தெற்கிலுள்ள தேள் என்னும் மேட்டைச்சுற்றிச் சென்னாவழியே போய்க் காதேஸ்பர்னே வரையிலும் பரந்து சென்ற பிற்பாடு, அங்கிருந்து எல்லையூர்களின் வழியாய் ஆதாருக்குப்போய், அங்கிருந்து அசேமொனா வரையிலும் சென்று, தென்புறத்தை முழுவதும் சூழும்.
எண்ணாகமம் 34 : 5 (RCTA)
அசேமொனாவிலிருந்து எகிப்தின் நதிவரையிலும் சுற்றிப்போய்ப் பெருங்கடலின் கரையைச் சேரும்.
எண்ணாகமம் 34 : 6 (RCTA)
மேற்றிசையில் பெருங்கடலே உங்களுக்கு எல்லையாம். அது பெருங்கடலோடு தொடங்கி, பெருங்கடலோடு முடியும்.
எண்ணாகமம் 34 : 7 (RCTA)
வட திசையிலோ எல்லைகள் பெருங்கடல் தொடங்கி மிக உயரமான மலைகள் வரையிலும் போய்,
எண்ணாகமம் 34 : 8 (RCTA)
அங்கிருந்து ஏமாத்தைத் தொட்டுச் சேதாதாவில் போய்ச்சேரும்.
எண்ணாகமம் 34 : 9 (RCTA)
அவ்விடத்திலிருந்து எல்லைவழியாக ஜெப்பிறோனாவுக்கும் ஏனானுக்கும் போய்ச்சேரும்.
எண்ணாகமம் 34 : 10 (RCTA)
கீழ்த்திசையில் எல்லை, ஏனான் தொடங்கிச் சேப்பமா வரைக்கும் பரவும்.
எண்ணாகமம் 34 : 11 (RCTA)
சேப்பமாவிலிருந்து எல்லை தப்னீம் ஊருணிக்கு எதிரிலிருக்கும் ரெபிலாவுக்குப் போய்க் கீழ்ப்புறத்திற்கு எதிர்முகமாயுள்ள கெனெரேத் கடலை அணுகி,
எண்ணாகமம் 34 : 12 (RCTA)
யோர்தான் வரையில் பரவி உவர்க்கடலில் முடியும். இந்தச் சுற்றெல்லைகளுக்கு உள்ளடங்கிய நாடே உங்களுக்கு உரியது என்றருளினார்.
எண்ணாகமம் 34 : 13 (RCTA)
ஆகையால் மோயீசன் இஸ்ராயேல் மக்களை நோக்கி: நீங்கள் திருவுளச் சீட்டுப்போட்டு தத்தமக்கு விழுந்தபடி உரிமையாக்கிக் கொள்ள வேண்டிய நாடும், ஆண்டவருடைய கட்டளையின்படியே ஒன்பது கோத்திரத்தாருக்கும் பாதிக் கோத்திரத்தாருக்கும் பங்கிட வேண்டிய நாடும் அதுவே.
எண்ணாகமம் 34 : 14 (RCTA)
ஏனென்றால் தங்கள் தங்கள் தந்தையருடைய கோத்திரங்களின்படி ரூபன் கோத்திரத்தாரும் காத்தின் கோத்திரத்தாரும் மனாசேயின் கோத்திரத்தாரில் பாதிப்பேரும் ஆக,
எண்ணாகமம் 34 : 15 (RCTA)
இரண்டரைக் கோத்திரத்தார் எரிக்கோவின் அருகே கீழ்த்திசையிலுள்ள யோர்தான் நதிக்கு இப்புறத்திலே தங்கள் தங்கள் உரிமையைப் பெற்றுக் கொண்டார்கள் என்றார்.
எண்ணாகமம் 34 : 16 (RCTA)
பின்னும் ஆண்டவர் மோயிசனை நோக்கி:
எண்ணாகமம் 34 : 17 (RCTA)
உங்களுக்கு நாட்டைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டியவர்களின் பெயர்களாவன: குருவாகிய எலெயஸாரும், நூனின் புதல்வனாகிய யோசுவாவும் இவ்விருவரோடு
எண்ணாகமம் 34 : 18 (RCTA)
ஒவ்வொரு கோத்திரத்தின் தலைவனும், அதாவது:
எண்ணாகமம் 34 : 19 (RCTA)
யூதா கோத்திரத்திலே ஜெப்போனேயின் புதல்வனாகிய காலேப்,
எண்ணாகமம் 34 : 20 (RCTA)
சிமியோன் கோத்திரத்திலே அமியூதின் புதல்வனாகிய சாமுவெல்,
எண்ணாகமம் 34 : 21 (RCTA)
பெஞ்சமின் கோத்திரத்திலே காஸெலோனின் புதல்வனாகிய எலிதாத்,
எண்ணாகமம் 34 : 22 (RCTA)
தான் கோத்திரத்திலே ஜொகிலியின் புதல்வனாகிய பொக்சி,
எண்ணாகமம் 34 : 23 (RCTA)
சூசையின் புதல்வருக்குள்ளே மனாஸேயின் கோத்திரத்திலே எப்போதுடைய புதல்வன் ஆனியேல்,
எண்ணாகமம் 34 : 24 (RCTA)
எபிராயிம் கோத்திரத்திலே செப்தானுடைய புதல்வனாகிய கமுவேல்,
எண்ணாகமம் 34 : 25 (RCTA)
ஜபுலோன் கோத்திரத்திலே பர்னாக்குடைய புதல்வனாகிய எலிஸப்பான்,
எண்ணாகமம் 34 : 26 (RCTA)
இஸக்கர் கோத்திரத்திலே ஓஸானுடைய புதல்வனாகிய பால்தியேல்,
எண்ணாகமம் 34 : 27 (RCTA)
ஆஸேர் கோத்திரத்திலே ஸலோமியுடைய புதல்வனாகிய அகியூத்,
எண்ணாகமம் 34 : 28 (RCTA)
நேப்தலி கோத்திரத்திலே அமியூதுடைய புதல்வனாகிய பேதெல் என்பவர்களாம் என்றருளினார்.
எண்ணாகமம் 34 : 29 (RCTA)
கானான் நாட்டை இஸ்ராயேல் மக்களுக்குப் பங்கிட்டுக்கொடுக்க ஆண்டவரால் நியமிக்கப்பட்டவர்கள் இவர்களே.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29