எண்ணாகமம் 33 : 1 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் மோயீசன் ஆரோன் என்பவர்களுடைய தலைமையின்கீழ் எகிப்தினின்று அணியணியாய்ப் புறப்பட்ட பின்னர், அவர்கள் வழியிலே தங்கிய இடங்களின் விவராமவது:
எண்ணாகமம் 33 : 2 (RCTA)
ஆண்டவர் கட்டளைபடியே இஸ்ராயேலர் ஓரிடத்தைவிட்டு வேறிடத்திற்குப் போய்ப் பாளையம் இறங்குவார்கள். அந்த இடங்களின் வரிசைப்படியே மோயீசன் அவற்றை எழுதிவைத்தார்.
எண்ணாகமம் 33 : 3 (RCTA)
எவ்வாறென்றால்: முதல் மாதத்தின் பதினைந்தாம்நாள் பாஸ்காவுக்கு மறுநாள் (ஆண்டவருடைய) வலுத்த கையாலே அவர்கள் இராமசேஸை விட்டுப் புறப்பட்டார்கள். எகிப்தியர் எல்லாரும் அதைப்பார்த்துக்கொண்டு,
எண்ணாகமம் 33 : 4 (RCTA)
ஆண்டவர் அழித்திருந்த தங்கள் தலைப்பிள்ளைகளை அடக்கம் செய்து கொண்டு இருந்தனர். (உள்ளபடி அவர்களுடைய தேவர்கள் மீதும் ஆண்டவர் தம்முடைய நீதியைச் செலுத்திப் பழிவாங்கியிருந்தார்).
எண்ணாகமம் 33 : 5 (RCTA)
இஸ்ராயேலர் சொக்கோட்டிலே பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 33 : 6 (RCTA)
சொக்கோட்டிலிருந்து பாலைவனக் கடை யெல்லைகளிலுள்ள எத்தாமைச் சேர்ந்தனர்.
எண்ணாகமம் 33 : 7 (RCTA)
அங்கிருந்து புறப்பட்டுப் பேர்செபோனை நோக்கிய பியயிரோட் பக்கத்தில் வந்து, மக்தலோமுக்கு முன்பாகப் பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 33 : 8 (RCTA)
பியயிரோட்டிலேயிருந்து புறப்பட்டுக் கடல்வழியாய்ப் பாலைவனத்திற்குப் போய், எத்தாம் என்னும் பாலைவனத்திலே மூன்று நாள் நடந்து, மாராவிலே பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 33 : 9 (RCTA)
மாராவிலே புறப்பட்டுப் பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பனைமரங்களும் இருந்த எலீமில் பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 33 : 10 (RCTA)
அங்கேயிருந்து புறப்பட்டுச் செங்கடல் அருகே கூடாரம் அடித்தனர். செங்கடற் கரையிலிருந்து புறப்பட்டுப் போய்,
எண்ணாகமம் 33 : 11 (RCTA)
சின் பாலைவனத்திலே பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 33 : 12 (RCTA)
அங்கேயிருந்து புறப்பட்டுத் தப்கா சேர்ந்தனர்.
எண்ணாகமம் 33 : 13 (RCTA)
தப்காவிலிருந்து புறப்பட்டு அலூஸிலே பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 33 : 14 (RCTA)
அலூஸிலிருந்து புறப்பட்டு இரப்பீதிமிலே தங்கள் கூடாரங்களை அடித்தனர். அங்கே மக்களுக்குக் குடிதண்ணீர் இல்லாது போயிற்று.
எண்ணாகமம் 33 : 15 (RCTA)
இரப்பீதிமிலேயிருந்து புறப்பட்டு அவர்கள் சீனாய் பாலைவனத்திலே பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 33 : 16 (RCTA)
சீனாய்ப் பாலைவனத்திலிருந்து புறப்பட்டு இச்சைகோரி போய்ச்சேர்ந்தனர்.
எண்ணாகமம் 33 : 17 (RCTA)
இச்சை கோரியை விட்டுப்புறப்பட்டு ஆசெரோட்டிலே பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 33 : 18 (RCTA)
ஆசெரோட்டிலேயிருந்து ரெத்மா போய்ச் சேர்ந்தனர்.
எண்ணாகமம் 33 : 19 (RCTA)
ரெத்மாவிலெயிருந்து புறப்பட்டு ரெம்மோம் பாரேஸிலே பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 33 : 20 (RCTA)
அங்கேயிருந்து புறப்பட்டு லெப்னாவிலே போய்ச் சேர்ந்தனர்.
எண்ணாகமம் 33 : 21 (RCTA)
லெப்னாவிலேயிருந்தோ ரேஸாவிலே பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 33 : 22 (RCTA)
ரேஸாவிலேயிருந்து புறப்பட்டுக் கேலத்தா போய்ச் சேர்ந்தனர்.
எண்ணாகமம் 33 : 23 (RCTA)
அங்கேயிருந்து செப்பேர் மலையின் அண்மையில் பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 33 : 24 (RCTA)
செப்பேர் மலையை விட்டுப் புறப்பட்டு அரதா போய்ச் சேர்ந்தனர்.
எண்ணாகமம் 33 : 25 (RCTA)
அங்கேயிருந்து புறப்பட்டு மக்கெலோத்திலே பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 33 : 26 (RCTA)
மக்கெலோத்திலிருந்து புறப்பட்டுத் தாகாத் போய்ச்சேர்ந்தனர்.
எண்ணாகமம் 33 : 27 (RCTA)
தாகாத்திலேயிருந்து தாரேயிலே பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 33 : 28 (RCTA)
அங்கேயிருந்து புறப்பட்டு மெத்காவிலே கூடாரங்களை அடித்தனர்.
எண்ணாகமம் 33 : 29 (RCTA)
மெத்காவிலேயிருந்தோ எஸ்மொனாவிலே பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 33 : 30 (RCTA)
எஸ்மொனாவிலிருந்து புறப்பட்டு மொசெரோத் போய்ச் சேர்ந்தனர்.
எண்ணாகமம் 33 : 31 (RCTA)
மொசெரோத்திலேயிருந்து பெனஜாக்கனிலே பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 33 : 32 (RCTA)
பெனஜாகனிலேயிருந்து புறப்பட்டுக் காத்காத் மலை போய்ச் சேர்ந்தனர்.
எண்ணாகமம் 33 : 33 (RCTA)
அங்கேயிருந்து புறப்பட்டு ஜெத்தேபத்தாவிலே பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 33 : 34 (RCTA)
ஜெத்தேபத்தாவிலிருந்து எபிரோனா போய்ச் சேர்ந்தனர்.
எண்ணாகமம் 33 : 35 (RCTA)
எபிரோனாவிலிருந்து புறப்பட்டு அஸியோங்கபேரிலே பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 33 : 36 (RCTA)
அங்யேயிருந்து புறப்பட்டு காதேஸ் என்னப்பட்ட சின் பாலைவனம் போய்ச்சேர்ந்தனர்.
எண்ணாகமம் 33 : 37 (RCTA)
காதேஸிலிருந்து புறப்பட்டு ஏதோமின் கடையெல்லைகளிலுள்ள ஓர் என்னும் மலையடியிலே பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 33 : 38 (RCTA)
தலைமைக் குருவாகிய ஆரோன் ஆண்டவருடைய கட்டளையின் படி ஓர் என்னும் மலையில் ஏறி அங்கேயே இறந்தார். இஸ்ராயேல் மக்கள் எகிப்தினின்று புறப்பட்ட நாற்பதாம் ஆண்டு ஐந்தாம் மாதம் முதல் நாளிலே அவர் இறந்தார்.
எண்ணாகமம் 33 : 39 (RCTA)
அப்பொழுது அவருக்கு வயது நூற்றிருபத்துமூன்று.
எண்ணாகமம் 33 : 40 (RCTA)
அப்பொழுது தென்னாட்டிலே குடியிருந்த கானானையனான அராத் என்னும் அரசன் இஸ்ராயேல் மக்கள் கானான் நாட்டில் புகுந்துள்ளதைக் கேள்விப்பட்டான்.
எண்ணாகமம் 33 : 41 (RCTA)
நிற்க, இஸ்ராயேலர் ஓர் என்னும் மலையிலிருந்து புறப்பட்டுச் சல்மோனாவிலே பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 33 : 42 (RCTA)
அங்கேயிருந்து புறப்பட்டுப் புனோன் போய்ச் சேர்ந்தனர்.
எண்ணாகமம் 33 : 43 (RCTA)
புனோனை விட்டுப் புறப்பட்டு ஒதோத்திலே பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 33 : 44 (RCTA)
ஒதோத்திலேயிருந்து மோவாபியரின் எல்லையாகிய இயபாரிம் போய்ச் சேர்ந்தனர்.
எண்ணாகமம் 33 : 45 (RCTA)
இயபாரிமிலேயிருந்து புறப்பட்டுத் திபொங்காதிலே தங்கள் கூடாரங்களை அடித்தனர்.
எண்ணாகமம் 33 : 46 (RCTA)
அங்கேயிருந்து புறப்பட்டு எல்மொண்டெப்லத்தாயீமிலே பாளையம் இறங்கினர்.
எண்ணாகமம் 33 : 47 (RCTA)
எல்மொண்டெப்லத்தாயீமிலிருந்து புறப்பட்டு நபோவுக்கு எதிரேயுள்ள அபரீம் மலைகளுக்குப் போனார்கள்.
எண்ணாகமம் 33 : 48 (RCTA)
அபரீம் மலைகளிலிருந்து புறப்பட்டு அவர்கள் எரிக்கோ நகரத்ருக்கு எதிரே யோர்தானுக்கு அண்மையிலுள்ள மோவாபிய வெளிகளில் போய்ச் சேர்ந்தனர்.
எண்ணாகமம் 33 : 49 (RCTA)
அங்கு மோவாபியருடைய சமவெளிகளிலே பெத்ஸிமோத்திலிருந்து ஆபேற்சத்தீம் வரையிலும் பாளையம் இறங்களினர்.
எண்ணாகமம் 33 : 50 (RCTA)
அவ்விடத்திலே ஆண்டவர் மோயீசனை நோக்கி:
எண்ணாகமம் 33 : 51 (RCTA)
நீ இஸ்ராயேல் மக்களிடம் கட்டளையாய்ச் சொல்லவேண்டியது ஏதென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து கானான் நாடு சேரும் போது,
எண்ணாகமம் 33 : 52 (RCTA)
அந்நாட்டுக் குடிகளையெல்லாம் அழித்து, அவர்களுடைய ஆலயங்களை அழித்து, அவர்களுடைய விக்கிரகங்களை உடைத்து, மேட்டுக் கோவில்களையெல்லாம் பாழாக்கி விடுங்கள்.
எண்ணாகமம் 33 : 53 (RCTA)
இப்படி அந்நாட்டைப் புனிதப்படுத்தி அதில் குடியேறக்கடவீர்கள். அந்த நாட்டை உங்களுக்கு நாமே உடைமையாகக் கொடுத்தோம்.
எண்ணாகமம் 33 : 54 (RCTA)
திருவுளச்சீட்டுப் போட்டு நாட்டைப் பங்கிட்டு, அதிகமான மக்களுக்கு அதிக உரிமையும், கொஞ்சமான மக்களுக்கு கொஞ்சம் உரிமையும் கொடுப்பீர்கள். அவரவர்க்குச் சீட்டு எப்படி விழுமோ அப்படி அவரவர்க்கு அவ்விடம் உரியதாகும். உங்கள் கோத்திரங்களின்படியும் குடும்பங்களின்படியும் உரிமை பெற்றுக்கொள்வீர்கள்.
எண்ணாகமம் 33 : 55 (RCTA)
நீங்கள் நாட்டின் குடிகளைக் கொலைசெய்யாது விடுவீர்களாயின், மீதியாய் இருப்பவர்கள் உங்கள் கண்களில் ஆணிகளைப் போலவும் விலாக்களில் வேல்களைப் போலவும் இருப்பார்கள்; நீங்கள் குடியிருக்கும் நாட்டிலே உங்களைத் துண்புறுத்திவருவார்கள்.
எண்ணாகமம் 33 : 56 (RCTA)
அப்படி விட்டால் நாம் எவ்விதப் பீடை அவர்களுக்குச் செய்ய இருந்தோமோ அவையெல்லாம் உங்களுக்கே செய்வோம் என்றருளினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56

BG:

Opacity:

Color:


Size:


Font: