எண்ணாகமம் 31 : 1 (RCTA)
பின்னும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
எண்ணாகமம் 31 : 2 (RCTA)
இஸ்ராயேல் மக்கள்நிமித்தம் மதியானியரிடம் பழி வாங்குவாய். அதன் பின்னரே நீ உன் மக்களோடு சேர்க்கப்படுவாய் என்றார்.
எண்ணாகமம் 31 : 3 (RCTA)
மோயீசன் தாமதம் செய்யாமல் மக்களை நோக்கி: ஆண்டவர் பெயராலே மதியானியரிடம் பழிவாங்கத்தக்க போர்வீரர்களைப் பிரித்தெடுத்துப் போருக்கு ஆயத்தம் செய்யுங்கள்.
எண்ணாகமம் 31 : 4 (RCTA)
இஸ்ராயேலின் எல்லாப் புதல்வரிடையேயும் ஒவ்வொரு கோத்திரத்திலும் ஆயிரம்பேர் போருக்குப் போகும்பொருட்டுத் தயார் செய்யுங்கள் என்றார்.
எண்ணாகமம் 31 : 5 (RCTA)
அவர்கள் (அவ்வாறே செய்து) ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஆயிரம் பேராகப் பன்னீராயிரம் வீரர்களைப் போருக்கு ஆயத்தமாக்கினார்கள்.
எண்ணாகமம் 31 : 6 (RCTA)
மோயீசன் அவர்களைத் தலைமைக் குருவான எலெயஸாரின் புதல்வன் பினேயஸ் என்பவனோடு அனுப்புகையில், அவன் கையிலே புனித தட்டுமுட்டுகளையும் எக்காளங்களையும் கொடுத்தனுப்பிவிட்டான்.
எண்ணாகமம் 31 : 7 (RCTA)
அவர்கள் போய் மதியானியரோடு போராடி வெற்றிபெற்று, ஆண் மக்களனைவரையும்,
எண்ணாகமம் 31 : 8 (RCTA)
அவர்களுடைய அரசர்களாகிய ஏவி, ரேஸேம், சூர், ஊர், ரேபே என்னும் அந்நாட்டுத் தலைவர்கள் ஐவரையும், பேயோரின் புதல்வனான பாலாம் என்பவனையும் வாளால் வெட்டினார்கள்.
எண்ணாகமம் 31 : 9 (RCTA)
அன்றியும், இஸ்ராயேலர் அவர்களுடைய பெண்களையும் சிறுவர்களையும் சிறைப்பிடித்து, எல்லா மந்தைகளையும் தட்டுமுட்டுகளையும் மற்றுமுள்ள சொத்துக்கள் யாவையும் கொள்ளையிட்டு,
எண்ணாகமம் 31 : 10 (RCTA)
அவர்களுடைய நகரங்களையும் ஊர்களையும் அரண்மனைகளையும் நெருப்பிட்டுப் பாழாக்கினார்கள்.
எண்ணாகமம் 31 : 11 (RCTA)
தாங்கள் கொள்ளையிட்ட பொருட்களையும், தாங்கள் பிடித்திருந்த மனிதவுயிர், மிருகவுயிர் அனைத்தையும் சேர்த்துக்கொண்டு,
எண்ணாகமம் 31 : 12 (RCTA)
இவைகளை யெல்லாம் மோயீசனுக்கும், தலைமைக் குருவாகிய எலெயஸாருக்கும், இஸ்ராயேல் மக்களாகிய சபையார் அனைவருக்கும் முன்பாகக் கொண்டு வந்தார்கள். ஆனால், தங்களுக்கு உபயோகமாயிருக்கக்கூடிய மற்றப் பொருட்களையெல்லாம் எரிக்கோவுக்கு எதிரேயுள்ள யோர்தானுக்கு அண்மையிலே மோவாபிய வெளிகளில் இருந்த பாளையத்திற்குக் கொண்டு போனார்கள்.
எண்ணாகமம் 31 : 13 (RCTA)
மோயீசனும் தலைமைக் குருவாகிய எலெயஸாரும் சபையின் எல்லாத் தலைவர்களும் பாளையத்திற்கு வெளியே அவர்களை எதிர்கொண்டு போனார்கள்.
எண்ணாகமம் 31 : 14 (RCTA)
அப்பொழுது மோயீசன் போர்களத்திலிருந்து திரும்பி வந்த ஆயிரவர்க்குத் தலைவரும் நூற்றுவர்க்குத் தலைவருமாகிய படைத்தலைவர் மீது கோபம்கொண்டு,
எண்ணாகமம் 31 : 15 (RCTA)
அவர்களை நோக்கி: பெண்களை ஏன் காப்பாற்றினீர்கள்?
எண்ணாகமம் 31 : 16 (RCTA)
பொகோர் வழிபாட்டுப் பாவச் செயலிலே பாலாமின் அறிவுரையைக் கேட்டு இஸ்ராயேல் மக்களை வஞ்சித்து, ஆண்டவருக்கு விரோதமாய் நீங்கள் துரோகம் செய்ய, ஏதுவாய் இருந்தவர்கள் அவர்கள் அல்லவா? அந்த அக்கிரமத்தைப்பற்றித்தானே சபையார் ஆண்டவரால் வதைக்கப்பட்டார்கள்?
எண்ணாகமம் 31 : 17 (RCTA)
ஆதலால், நீங்கள் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், பெண்களில் ஆண் தொடர்பு கண்டுள்ள எல்லாப் பெண்களையும் கொன்றுவிடுங்கள்.
எண்ணாகமம் 31 : 18 (RCTA)
பெண் குழந்தைகளையும் கன்னிப்பெண்களையும் மட்டும் உங்களுக்காகக் காப்பாற்றுங்கள்.
எண்ணாகமம் 31 : 19 (RCTA)
பின்பு நீங்கள் பாளையத்திற்கு வெளியே ஏழுநாள் தங்கவேண்டும். உங்களில் எவன் மனிதனைக் கொன்றானோ அல்லது கொல்லப்பட்டவனைத் தொட்டானோ அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் துய்மைப்படுத்தப்படுவான்.
எண்ணாகமம் 31 : 20 (RCTA)
அவ்வாறே கொள்ளையிடப்பட்டவைகளில் எல்லா ஆடைகளையும் தட்டுமுட்டுகளையும், வெள்ளாட்டுத் தோலாலேனும் மயிராலேனும் மரத்தாலேனும் செய்யப்பட்ட கருவி முதலிய பொருட்களையும் தூய்மைப்படுத்தக் கடவீர்கள் என்றார்.
எண்ணாகமம் 31 : 21 (RCTA)
தலைமைக் குருவாகிய எலெயஸாரும் போர்புரிந்த படைவீரரை நோக்கி: ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்ட சட்டத்தைக் கேளுங்கள்:
எண்ணாகமம் 31 : 22 (RCTA)
பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, ஈயம், தகரம் ஆகிய இவைகளையும்,
எண்ணாகமம் 31 : 23 (RCTA)
நெருப்பிலே அழியாத (கருவி முதலிய) எவ்விதப் பொருட்களையும் நெருப்பிலே போட்டுத் தூய்மைப்படுத்தவும், நெருப்பிலே அழியும் எல்லாவற்றையுமோ தீட்டுக்கழிக்கும் தீர்த்தத்தினாலே தூய்மைப்படுத்தவும் கடவீர்கள்.
எண்ணாகமம் 31 : 24 (RCTA)
நீங்கள் ஏழாம் நாளிலே உங்கள் ஆடைகளைக் கழுவித் தூய்மைப்படுத்துவீர்கள். பின்பு நீங்கள் பளையத்திற்குள் வரலாம் என்றார்.
எண்ணாகமம் 31 : 25 (RCTA)
பின்னும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
எண்ணாகமம் 31 : 26 (RCTA)
பிடித்துக்கொண்டு வரப்பட்ட மனிதர்களையும் மிருகங்களையும் நீயும் தலைமைக் குருவாகிய எலெயஸாரும் மக்கள் தலைவர்களும் கணக்கிட்டு,
எண்ணாகமம் 31 : 27 (RCTA)
கொள்ளையிடப்பட்டதை இரண்டு சரி பங்காகப் பங்கிட்டு, போருக்குப் போனவர்களுக்கு ஒருபங்கும், சாதாரண மக்களுக்கு ஒருபங்கும் கொடுப்பாய்.
எண்ணாகமம் 31 : 28 (RCTA)
அன்றியும், போருக்குச் சென்ற படைவீரர்களின் பங்கிலே ஆண்டவருடைய பங்கை எடுக்கக்கடவாய். அது மனிதரிலும் மாடுகளிலும் ஆடுகளிலும் கழுதைகளிலும் ஐநூற்றுக்கு ஒன்றாம்.
எண்ணாகமம் 31 : 29 (RCTA)
அதைத் தலைமைக் குருவாகிய எலெயஸாருக்குக் கொடுப்பாய். ஏனென்றால், அது ஆண்டவருக்குச் செய்யவேண்டிய காணிக்கை.
எண்ணாகமம் 31 : 30 (RCTA)
இஸ்ராயேல் மக்களைச் சேர்ந்த பங்கிலோ மனிதரிலும் மாடுகளிலும் ஆடுகளிலும் கழுதைகளிலும் ஐம்பதுக்கு ஒன்று வீதமாக வாங்கி, அவைகளை ஆண்டவரின் உறைவிடத்தில் காவல் காக்கும் லேவியருக்குக் கொடுப்பாய் என்றருளினார்.
எண்ணாகமம் 31 : 31 (RCTA)
மோயீசனும் எலெயஸாரும் ஆண்டவர் கட்டளையிட்டபடி செய்தார்கள்.
எண்ணாகமம் 31 : 32 (RCTA)
படைவீரர் கொள்ளையிட்ட பொருட்களில் ஆறுலட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகளும்,
எண்ணாகமம் 31 : 33 (RCTA)
எழுபத்தீராயிரம்மாடுகளும்,
எண்ணாகமம் 31 : 34 (RCTA)
அறுபத்தோராயிரம் கழுதைகளும்,
எண்ணாகமம் 31 : 35 (RCTA)
முப்பத்தீராயிரம் ஆண் தொடர்பு அறியாத பெண்களும் இருந்தார்கள்.
எண்ணாகமம் 31 : 36 (RCTA)
போருக்குப் போன வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட பாதிப் பங்கின் தொகை: மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு ஆடுகள்.
எண்ணாகமம் 31 : 37 (RCTA)
இவைகளில் ஆண்டவருக்குப் பகுதியாக வந்தவை அறுநூற்றெழுபத்தைந்து.
எண்ணாகமம் 31 : 38 (RCTA)
முப்பத்தாறாயிரம் மாடுகளில் ஆண்டவருக்குப் பகுதியாக வந்தவை எழுபத்திரண்டு.
எண்ணாகமம் 31 : 39 (RCTA)
முப்பதினாயிரத்து ஐந்நூறு கழுதைகளில் ஆண்டவருக்குப் பகுதியாக வந்தவை அறுபத்தொன்று.
எண்ணாகமம் 31 : 40 (RCTA)
பதினாறாயிரம் பெண்களில் ஆண்டவருக்குப் பகுதியாக வந்தவர்கள் முப்பத்திரண்டு பேர்.
எண்ணாகமம் 31 : 41 (RCTA)
பின்பு மோயீசன் தமக்குக் கட்டளையிடப்பட்டிருந்தபடி, ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட பகுதியைக் குருவாகிய எலெயஸாரிடம் கொடுத்தார்.
எண்ணாகமம் 31 : 42 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் கொள்ளையிட்ட எல்லாப் பொருட்களையும் மோயீசன் இரண்டு பங்காகப் பங்கிட்டார். எலெயஸாருக்கு அவர் கொடுத்த பகுதி போர் வீரர்களைச் சேர்ந்த சரிபாதியில்தான் எடுக்கப்பட்டது.
எண்ணாகமம் 31 : 43 (RCTA)
சாதாரண மக்களுக்குக் கிடைத்த பாதிப் பங்கின் தொகையாவது: மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு ஆடுகளும்,
எண்ணாகமம் 31 : 44 (RCTA)
முப்பத்தாறாயிரம் மாடுகளும்,
எண்ணாகமம் 31 : 45 (RCTA)
முப்பதினாயிரத்து ஐந்நூறு கழுதைகளும்,
எண்ணாகமம் 31 : 46 (RCTA)
பதினாறாயிரம் பெண்களுமாவர்.
எண்ணாகமம் 31 : 47 (RCTA)
மோயீசன் அவற்றில் ஐம்பதுக்கு ஒன்று வீதம் எடுத்து, ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி, ஆண்டவருடைய உறைவிடத்தில் காவல் காத்துக் கொண்டிருந்த லேவியர்களுக்குக் கொடுத்தான்.
எண்ணாகமம் 31 : 48 (RCTA)
அப்பொழுது ஆயிரவர்க்குத் தலைவரும் நூற்றுவர்க்குத் தலைவருமாகிய படைத்
எண்ணாகமம் 31 : 49 (RCTA)
தலைவர்கள் மோயீசனிடம் வந்து: அடியார்கள் எங்கள் அதிகாரத்திற்குட்பட்ட படைவீரரின் தொகையை எண்ணிப் பார்த்தோம்.
எண்ணாகமம் 31 : 50 (RCTA)
அவர்களில் ஒருவனும் குறைவில்லை. எனவே, நீர் எங்களுக்காக ஆண்டவரை வேண்டி கொள்ளும் பொருட்டு, எங்களில் அவரவருக்குக் கொள்ளையில் அகப்பட்ட காலணிகளும் கையணிகளும் கணையாழிகளும் காதணிகளும் முத்துமாலைகளும் போன்ற பொன்னணிகளையெல்லாம் ஆண்டவருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தோம் என்றார்கள்.
எண்ணாகமம் 31 : 51 (RCTA)
மோயீசனும் குருவாகிய எலெயஸாரும் இந்தப் பலவிதப் பொன்னணிகளையும் அவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டார்கள்.
எண்ணாகமம் 31 : 52 (RCTA)
இவ்வாறு ஆயிரவர்க்கும் நூற்றுவர்க்கும் தலைவர்களாய் இருந்தவர்களால் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட பொன் பதினாறாயிரத்து எழுநூற்றைம்பது சீக்கல் நிறை இருந்தது.
எண்ணாகமம் 31 : 53 (RCTA)
போருக்குப் போன வீரர்களில் அவனவன் கைப்பற்றியது எதுவோ அது அவனவனுக்குச் சொந்தமாய் இருந்தது.
எண்ணாகமம் 31 : 54 (RCTA)
மோயீசனும் குருவாகிய எலெயஸாரும் அந்தப் பொன்னைச் சாட்சியக் கூடாரத்திலே ஆண்டவருடைய முன்னிலையில் இஸ்ராயேல் மக்களின் நினைவுச் சின்னமாகக் கொண்டு வந்து வைத்தார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54