எண்ணாகமம் 30 : 1 (RCTA)
(2) பின்னும் அவர் இஸ்ராயேல் மக்களிடையே கோத்திரத் தலைவர்களாய் இருந்தவர்களை நோக்கி: ஆண்டவர் கொடுத்துள்ள கட்டளை என்னவென்றால்:
எண்ணாகமம் 30 : 2 (RCTA)
(3) ஒரு மனிதன் ஆண்டவருக்கு ஏதாவது ஒரு நேர்ச்சை செய்து அல்லது ஏதாவது ஒரு செயல் செய்வதாக ஆணையிட்டுத் தன்னை நிபந்தனைக்கு உட்படுத்தியிருப்பானாயின், அவன் தன்சொல் தவறாமல், வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படி எல்லாம் செய்து முடிக்கக்கடவான்.
எண்ணாகமம் 30 : 3 (RCTA)
(4) தன் தந்தையின் வீட்டிலிருக்கிற ஒரு இளம் பெண் ஆண்டவருக்கு ஏதாவது ஒரு நேர்ச்சை செய்து அல்லது ஏதாவது ஒரு செயல் செய்வதாக ஆணையிட்டுத் தன்னை நிபந்தனைக்கு உட்படுத்தியிருப்பாளாயின், அவள் செய்த நேர்ச்சையையும் அவள் தன்னைக் கட்டுப்படுத்திய நிபந்தனையையும் அவள் தந்தை கேட்டும் ஒன்றும் சொல்லாதிருந்தால், அவள் தன் நேர்ச்சையை நிறைவேற்றக்கடவாள்.
எண்ணாகமம் 30 : 4 (RCTA)
(5) தான் கொடுத்த வாக்கின்படியும், தான் இட்ட ஆணையின்படியும் எல்லாம் அவள் செய்து முடிகக்கக்கடவாள்.
எண்ணாகமம் 30 : 5 (RCTA)
(6) ஆனால், தந்தை கேள்விப்பட்டவுடன்: வேண்டாம் என்று தடுப்பானாயின், அவள் செய்த நேர்ச்சையும், ஆணைகளும் தள்ளுபடி ஆகிவிடும். தன் தந்தை வேண்டாமென்று தடுத்ததினாலே, அவள் தன்னைக்கட்டுப்படுத்திக் கொண்ட நிபந்தனைப்படி நிறைவேற்ற வேண்டியதில்லை.
எண்ணாகமம் 30 : 6 (RCTA)
(7) அவள் மணமானவளாய் இருந்து நேர்ச்சை செய்தால் அல்லது வாயைத்திறந்து ஆணையிட்டுத் தன் ஆன்மாவை நிபந்தனைக்கு உட்படுத்தினால்,
எண்ணாகமம் 30 : 7 (RCTA)
(8) அவள் கணவன் அதைக் கேட்டறிந்த நாளிலே ஒன்றும் சொல்லாமல் இருப்பானாயின், அவள் தன் நேர்ச்சையைச் செலுத்தவும், தான் கொடுத்த வாக்கின்படியெல்லாம் செய்து முடிக்கவுங்கடவாள்.
எண்ணாகமம் 30 : 8 (RCTA)
(9) ஆனால், கேள்விப்பட்டவுடனே கணவன்: வேண்டாம் என்று அவளைத்தடுத்து, அவளுடைய ஆணையையும் அவள் தன் ஆன்மாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்ட சொற்களையும் தள்ளி விடுவானாயின், ஆண்டவர் அவளுக்கு அருள்செய்வார்.
எண்ணாகமம் 30 : 9 (RCTA)
(10) விதவையும் கணவனால் தள்ளப்பட்ட பெண்ணும் தாங்கள் என்னென்ன நேர்ச்சை நேர்ந்திருப்பார்களோ அவையெல்லாம் நிறைவேற்றக்கடவார்கள்.
எண்ணாகமம் 30 : 10 (RCTA)
(11) கணவன் வீட்டிலிருக்கிற மணமான பெண் யாதொரு செயலைச் செய்வதாக ஆணையிட்டு வாக்குறுதி கொடுத்தபோது,
எண்ணாகமம் 30 : 11 (RCTA)
(12) கணவன் அதைக் கேள்வியுற்று: வேண்டாம் என்று தடுக்காமல் மௌனமாய் இருப்பானாயின், அவள் தான் செய்த வாக்குறுதிப்படி எல்லாம் செய்து முடிக்கக்கடவாள்.
எண்ணாகமம் 30 : 12 (RCTA)
(13) மாறாக, கணவன் உடனே மறுத்திருந்தாலோ அவள் தன் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியதில்லை. கணவன், வேண்டாமென்று சொன்னமையால் ஆண்டவர் அவள்மேல் தயவாய் இருப்பார்.
எண்ணாகமம் 30 : 13 (RCTA)
(14) அவள் நோன்பாலாவது சுத்த போசனம் முதலியவைகளாலாவது தன் ஆண்மாவை வருத்தும்படி நேர்ந்துகொண்டு ஆணையிட்டுத் தன்னை நிபந்தனைக்கு உட்படுத்தியிருப்பாளாயின், கணவன் அதை உறுதிப்படுத்தவும் கூடும். அது செல்லாதபடி செய்யவும் கூடும்.
எண்ணாகமம் 30 : 14 (RCTA)
(15) எப்படியென்றால், கணவன் அதைக் கேட்டறிந்தபொழுது ஒன்றும் சொல்லாமல்: பிறகு பார்க்கலாம் என்று இருந்தால், அவள் செய்த நேர்ச்சையையும் கொடுத்தவாக்குறுதியையும் நிறைவேற்றக் கடவாள். ஏனென்றால், கணவன் அதைக் கேட்டறிந்தவுடனே ஒன்றும் சொல்லாமல் போனான்.
எண்ணாகமம் 30 : 15 (RCTA)
(16) அவள் அதைப் பின்பு: வேண்டாம் என்று தடுத்தால், தன் மனைவியின் பாவத்தைத்தானே சுமப்பான் என்றருளினார்.
எண்ணாகமம் 30 : 16 (RCTA)
(17) கணவன் மனைவி ஆகியவர்களைக் குறித்தும், தந்தையையும் அவன் வீட்டிலிருக்கிற சிறு வயதுப்பெண்ணையும் குறித்தும் ஆண்டவர் மோயீசன் வழியாக் கட்டளையிட்ட சட்டங்கள் இவைகளேயாம்.
❮
❯