எண்ணாகமம் 3 : 1 (RCTA)
ஆண்டவர் சீனாய் மலையில் மோயீசனுக்குத் திருவாக்கருளின் காலத்திலே, ஆரோன், மோயீசன் என்பவர்களுடைய வம்சவரலாறாவது:
எண்ணாகமம் 3 : 2 (RCTA)
ஆரோனுடைய புதல்வர்கள்: முதலில் பிறந்தவன் நாதாப், பின்பு அபியூ, எலேயசார், இத்தமார் என்பவர்கள்.
எண்ணாகமம் 3 : 3 (RCTA)
குருத்துவப் பணி செய்யும் பொருட்டு அபிசேகம் செய்யப்பட்டு கைகள் நிறைக்கப்பெற்று அர்ச்சிக்கப்பட்ட ஆரோனின் புதல்வராகிய குருக்களின் பெயர்கள் இவைகளே.
எண்ணாகமம் 3 : 4 (RCTA)
ஆனால், நாதாப் அபியூ என்பவர்கள் சீனாய்ப் பாலைவனத்திலே ஆண்டவர் திருமுன் அந்நிய நெருப்பைச் சமர்ப்பித்தமையால் மகப்பேறின்றி மாண்டனர். எலேயசாரும் இத்தமாரும் தங்கள் தந்தையாகிய ஆரோனின் முன்னிலையில் குருத்துவ ஊழியம் செய்து வந்தார்கள்.
எண்ணாகமம் 3 : 5 (RCTA)
ஆண்டவரோவென்றால் மோயீசனை நோக்கி:
எண்ணாகமம் 3 : 6 (RCTA)
நீ லேவியின் கோத்திரத்தாரை வரச்சொல்லி, அவர்கள் தலைமைக் குருவாகிய ஆரோனுக்குப் பணிவிடை செய்யும்படிக்கும், சாட்சியாகக் கூடாரத்தைக் காக்கும்படிக்கும், கடவுளின் உறைவிடத்துக்கு முன்பாகச் சபையார் செய்யும்.
எண்ணாகமம் 3 : 7 (RCTA)
சடங்குமுறை முதலியவற்றைக் கவனித்து வரும்படிக்கும்,
எண்ணாகமம் 3 : 8 (RCTA)
கூடாரத்தின் தட்டுமுட்டுக்களைக் காத்துக்கொண்டு ஆரோனுக்கு உதவியாயிருக்கும்படிக்கும் அவன் முன்னிலையில் நிறுத்தக்கடவாய்.
எண்ணாகமம் 3 : 9 (RCTA)
லேவி கோத்திரத்தாரை நன்கொடையாக, ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் கொடுப்பாய்.
எண்ணாகமம் 3 : 10 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் இவர்களுக்கு அவர்களைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், ஆரோனையும் அவன் புதல்வர்களையும் குருத்துவ அலுவலில் நியமனம் செய்வாய். யாரேனும் ஓர் அந்நியன் அந்த அலுவலைச் செய்யத் துணிவானாயின், அவன் கொலை செய்யப்படுவான் என்றார்.
எண்ணாகமம் 3 : 11 (RCTA)
மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
எண்ணாகமம் 3 : 12 (RCTA)
இஸ்ராயேல் மக்களில் தாயின் வயிற்றைத் திறந்து பிறக்கிற தலைப்பேறான எல்லாப் பிள்ளைகளுக்கும் பதிலாய் நாம் லேவிய வம்சத்தாரை இஸ்ராயேல் மக்களிலிருந்து எடுத்துக் கொண்டோமாகையால், இந்த வம்சத்தார் நம்முடையவர்களாம்.
எண்ணாகமம் 3 : 13 (RCTA)
ஏனென்றால், முதற்பேறானவையெல்லாம் நம் முடையவை. நாம் எகிப்து நாட்டிலே முதற்பேறானவையெல்லாம் அழித்தது முதற் கொண்டு இஸ்ராயேலில் மனிதன் முதல் மிருகவுயிர் வரையிலும் தலைப்பேறானவையெல்லாம் நம்முடையவை. நாம் ஆண்டவர் என்றார்.
எண்ணாகமம் 3 : 14 (RCTA)
மறுபடியும் ஆண்டவர் சீனாய்ப் பாலைவனத்திலே மோயீசனை நோக்கி:
எண்ணாகமம் 3 : 15 (RCTA)
நீ லேவியின் புதல்வர்களை அவர்களுடைய முன்னோரின் வம்சங்களின்படியும், குடும்பத்தின்படியும் எண்ணக்கடவாய். ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்களை எல்லாம் எண்ணிப்பார் என்றார்.
எண்ணாகமம் 3 : 16 (RCTA)
ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி மோயீசன் அவர்களை எண்ணினார்.
எண்ணாகமம் 3 : 17 (RCTA)
லேவியின் புதல்வர்களாய்க் காணப்பட்டவர்களின் பெயர்கள் ஜேற்சோன், காத், மேறாரி.
எண்ணாகமம் 3 : 18 (RCTA)
ஜேற்சோனின் மக்கள்: லெப்னியும் சேமையும்.
எண்ணாகமம் 3 : 19 (RCTA)
காத்தின் மக்கள்: அம்ராம், ஜெஸார், எபிரோன், ஓசியேல் என்பவர்கள்.
எண்ணாகமம் 3 : 20 (RCTA)
மேறாரியின் மக்கள்: மொகோலியும் மூசியும் ஆவர்.
எண்ணாகமம் 3 : 21 (RCTA)
ஜேற்சோனினின்று லெப்னியாலும் சேமையாலும் இரண்டு வம்சங்கள் உண்டாயின.
எண்ணாகமம் 3 : 22 (RCTA)
இவைகளின் குடிக்கணக்காவது: ஒரு மாதம் முதற்கொண்டுள்ள ஆண்கள் ஏழாயிரத்து ஐந்நூறு பேர்.
எண்ணாகமம் 3 : 23 (RCTA)
இவர்கள் கூடாரத்திற்குப் பின் மேற்புறத்தில் பாளையம் இறங்குவார்கள்.
எண்ணாகமம் 3 : 24 (RCTA)
அவர்களுக்கு லேலின் புதல்வனாகிய எலியஸாபே தலைவன்.
எண்ணாகமம் 3 : 25 (RCTA)
அவர்கள் உடன்படிக்கைக் கூடாரத்தினுள்ளே காவல் காத்து, உறைவிடத்தையும்,
எண்ணாகமம் 3 : 26 (RCTA)
அதன் மூடியையும், உடன்படிக்கைக் கூடாரவாயிலின் முன்தொங்கும் திரையையும், மண்டபத்தின் சுற்றிலுமுள்ள திரைகளையும், கூடார மண்டபத்தின் நுழைவிடத்திலே தொங்கும் திரையையும், பலிபீடத்தைச் சார்ந்த வேலைகளுக்குரிய கயிறுகளையும், தட்டு முட்டுப் பொருட்களையும் கவனித்து வருவார்கள்.
எண்ணாகமம் 3 : 27 (RCTA)
காத்தினின்று அம்ராம், ஜெஸார், எப்ரோன், ஓசியேல் என்னும் பெயர்களைக் கொண்டே வம்சங்கள் உண்டாயின. இவைகளே தத்தம் பெயர்களின்படி எண்ணப்பட்ட காத்தின் வம்சங்கள்.
எண்ணாகமம் 3 : 28 (RCTA)
ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட ஆண்டுகளெல்லாம் எண்ணாயிரத்து அறுநூறு பேர் அவற்றில் காணப்பட்டனர்.
எண்ணாகமம் 3 : 29 (RCTA)
இவர்கள் புனித இடத்தைக் காவல் காத்துக்கொண்டு, தென்புறத்திலே பாளையம் இறங்குவார்கள்.
எண்ணாகமம் 3 : 30 (RCTA)
அவர்களுக்குள்ளே ஓசியேலின் மகனான எலிஸபானே தலைவன்.
எண்ணாகமம் 3 : 31 (RCTA)
அவர்கள் பெட்டகத்தையும் மேசையையும், கிளை விளக்கையும் பீடங்களோடு இறைபணிக்குரிய புனித இடத்துப் பாத்திரங்களையும், திரையையும், இவைபோன்ற தட்டு முட்டுக்கள் அனைத்தையும் காத்துக் கொள்வார்கள்.
எண்ணாகமம் 3 : 32 (RCTA)
லேவியருடைய தலைவர்களுக்குத் தலைவரும் தலைமைக் குருவாகிய ஆரோனின் புதல்வனுமாகிய எலேயஸாரோ புனித இடத்தைக் காவல் காப்பவர்களுக்குத் தலைவனாய் இருப்பான்.
எண்ணாகமம் 3 : 33 (RCTA)
மேறாரியினின்று மெகோலி, மூசி என்னும் பெயர்களைக் கொண்ட வம்சங்களும் தத்தம் பெயர்களின்படி எண்ணப்பட,
எண்ணாகமம் 3 : 34 (RCTA)
ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்கள் ஆறாயிரத்து இருநூறு பேர்.
எண்ணாகமம் 3 : 35 (RCTA)
இவர்களுக்கு அபிகயேலின் புதல்வனாகிய சுரியேல் தலைவன். இவர்கள் வடபுறத்தில் பாளையம் இறங்குவார்கள்.
எண்ணாகமம் 3 : 36 (RCTA)
கூடாரப் பலகைகளும். அவற்றின் தண்டுகளும், பாதங்கள் தூண்கள் இவைபோன்ற வழிபாட்டுப் பொருட்களும் அவர்களுடைய காவலிலே வைக்கப்பட்டன.
எண்ணாகமம் 3 : 37 (RCTA)
அவர்கள் மண்டபத்தைச் சுற்றிலுமுள்ள தூண்களையும், அவற்றின் பாதங்களையும், முளைகளையும் கயிறுகளையும் கவனித்து வருவார்கள்.
எண்ணாகமம் 3 : 38 (RCTA)
கீழ்ப்புறத்தில் - அதாவது உடன்படிக்கைக் கூடார முன்னிலையில் - மோயீசனும், ஆரோனும் இவர் புதல்வர்களும் பாளையம் இறங்குவார்கள். இவர்கள் இஸ்ராயேல் மக்கள் நடுவிலே புனித இடத்தைக் காத்து வருவார்கள். யாரேனும் ஓர் அந்நியன் நெருங்கி வந்தால், அவன் கொல்லப்படுவான்.
எண்ணாகமம் 3 : 39 (RCTA)
மோயீசனும், ஆரோனும் ஆண்டவருடைய கட்டளைப்படி லேவி வம்சத்தில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்களையெல்லாம் தங்கள் குடும்பங்களின்படி எண்ணினார்கள். அவர்கள் இருபத்தீராயிரம் பேர்.
எண்ணாகமம் 3 : 40 (RCTA)
மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: இஸ்ராயேல் மக்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள தலைப்பேறான ஆண்களையெல்லாம் எண்ணித் தொகைப்படுத்துவாயாக.
எண்ணாகமம் 3 : 41 (RCTA)
இஸ்ராயேல் மக்களின் தலைப்பேறான எல்லாப் பிள்ளைகளுக்கும் பதிலாய் லேவிய வம்சத்தாரையும், இஸ்ராயேல் மக்களின் மந்தைகளிலுள்ள தலையீற்றான மிருகவுயிர்களுக்குப் பதிலாய் லேவியரின் மந்தைகளையும் நம் பெயராலே நீ பிரித்தெடுப்பாய்.
எண்ணாகமம் 3 : 42 (RCTA)
நாம் ஆண்டவர் என்றார். மோயீசன் ஆண்டவருடைய கட்டளைப்படி இஸ்ராயேலருடைய தலைப்பேறான புதல்வர்களை எண்ணிப் பார்க்கையில்,
எண்ணாகமம் 3 : 43 (RCTA)
ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்களையெல்லாம் பெயர் பெயராக எழுதினார். அவர்கள் இருபத்தீராயிரத்து இருநூற்று எழுபத்து மூன்று பேர்.
எண்ணாகமம் 3 : 44 (RCTA)
அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி:
எண்ணாகமம் 3 : 45 (RCTA)
இஸ்ராயேல் மக்களின் முதல் பேறான எல்லாப் புதல்வர்களுக்கும் பதிலாய் லேவியர்களையும், அவர்களுடைய மந்தையின் தலையீற்றுக்களுக்குப் பதிலாய் லேவியருடைய மந்தைகளையும் பிரித்தெடு. லேவியர் நம்முடையவர்கள். நாம் ஆண்டவர்.
எண்ணாகமம் 3 : 46 (RCTA)
அன்றியும், இஸ்ராயேல் மக்களின் முதல் பேறான புதல்வர்களில் லேவியரின் தொகைக்கு அதிகமாயிருந்து மீட்கப்பட வேண்டிய இருநூற்றெழுபத்து மூன்று பேர் இருக்கிறார்கள்.
எண்ணாகமம் 3 : 47 (RCTA)
அவர்களுக்கென்று புனித இடத்து அளவின்படி தலைக்கு ஐந்து சீக்கல்களை வாங்கிக் கொள்வாய். (ஒரு சீக்கலுக்கு இருபது ஒபோல்).
எண்ணாகமம் 3 : 48 (RCTA)
அதிகப்பட்டவர்களின் மீட்பு விலையாகிய அந்தப் பணத்தை நீ சேர்த்து, ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் கொடுப்பாய் என்றார்.
எண்ணாகமம் 3 : 49 (RCTA)
அவ்வாறு அதிகமாயிருந்து லேவியர்களால் மீட்கப்பட்டவர்களின் மீட்புப் பணத்தை மோயீசன் சேர்த்து,
எண்ணாகமம் 3 : 50 (RCTA)
அந்தத் தொகையால் இஸ்ராயேல் மக்களிரடயேயுள்ள முதல் பேறான பிள்ளைகளுக்காகப் புனித இடத்துச் சீக்கலால் ஆயிரத்து முந்நூற்றறுபத்தைந்து சீக்கல்களை எடுத்து,
எண்ணாகமம் 3 : 51 (RCTA)
ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டிருந்தபடி, அதை ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் கொடுத்தார்.
❮
❯