எண்ணாகமம் 29 : 1 (RCTA)
அப்படியே ஏழாம் மாதம் முதல் நாள் உங்களுக்குப் புனிதமும் வணக்கத்துக்குரியதுமான நாளாய் இருக்கும். அது எக்காளம் முழங்கும் நாளாகையால், அன்று எந்தச் சாதாரண வேலையையும் செய்யாதிருப்பீர்கள்.
எண்ணாகமம் 29 : 2 (RCTA)
அப்பொழுது நீங்கள் ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள தகனப்பலியாக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஓர் இளங் காளையையும், ஓர் ஆட்டுக்கிடாயையும், ஒரு வயதான மாசற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக் கடவீர்கள்.
எண்ணாகமம் 29 : 3 (RCTA)
அந்தந்தப் பலிகளுடன் எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கிடாய்க்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
எண்ணாகமம் 29 : 4 (RCTA)
ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றுக்காகவும் பத்தில் ஒரு பங்கையும்,
எண்ணாகமம் 29 : 5 (RCTA)
மக்களின் பாவத்துக்குப் பரிகாரப்பலியாக ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் ஒப்புக் கொடுப்பீர்கள்.
எண்ணாகமம் 29 : 6 (RCTA)
அன்றியும், மாதப் பிறப்புக்குச் செலுத்தவேண்டிய முழுத்தகனப் பலியையும், அதற்கடுத்த போசனப்பலியையும், அன்றாட முழுத்தகனப் பலியையும், அதற்கடுத்த வழக்கமான பானப்பலியையும் ஒப்புக்கொடுப்பதுமன்றி, சாதாரண முறைக்கு ஏற்றபடி நறுமணமுள்ள ஒரு முழுத்தகனப்பலியையும் ஆண்டவருக்குச் செலுத்தக்கடவீர்கள்.
எண்ணாகமம் 29 : 7 (RCTA)
இந்த ஏழாம் மாதத்தின் பத்தாம்நாளும் உங்களுக்குப் புனிதமானதும் வணக்கத்துக்குரியதுமான நாளாய் இருக்கும். அதிலே நீங்கள் உங்களை வருத்துவது மட்டுமன்றி, அன்று யாதொரு சாதாரண வேலையும் செய்யாதிருத்தலும் வேண்டும்.
எண்ணாகமம் 29 : 8 (RCTA)
அன்று ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள முழுத்தகனப்பலியாக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஓர் இளங்காளையும், ஓர் ஆட்டுக் கிடாயையும், ஒரு வயதான மாசற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்துவீர்கள்.
எண்ணாகமம் 29 : 9 (RCTA)
அந்தந்தப் பலிகளுடன் எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவில் ஒவ்வொரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஒவ்வோர் ஆட்டுக் கிடாய்க்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
எண்ணாகமம் 29 : 10 (RCTA)
ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றுக்குமாகப் பத்துப் பாகத்தின் பத்தில் ஒரு பங்கையும், பாவத்துக்குப் பரிகாரமாக ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் செலுத்துவதுமன்றி,
எண்ணாகமம் 29 : 11 (RCTA)
பாவ நிவர்த்தியைப்பற்றியும் அன்றாட முழுத் தகனப்பலியைப்பற்றியும் வழக்கமாய்க் கொடுக்கப்படுகிற காணிக்கைகளையும், அந்தந்தப் பலிக்கடுத்த போசன பானப்பலிகளையும் (படைக்கவேண்டும்).
எண்ணாகமம் 29 : 12 (RCTA)
ஏழாம் மாதம் பதினைந்தாம் நாள் உங்களுக்குப் புனிதமானதும் வணக்கத்துக்குரியதுமான நாளாய் இருக்கும். அதில் நீங்கள் சாதாரண வேலை ஒன்றும் செய்யலாகாது. அன்று தொடங்கி ஏழுநாள் ஆண்டவருடைய பண்டிகையைக் கொண்டாடக்கடவீர்.
எண்ணாகமம் 29 : 13 (RCTA)
முதல் நாளாகிய அந்நாளிலே ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள முழுத் தகனப்பலியாக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட பதின்மூன்று இளங்களைகளையும் இரண்டு ஆட்டுக்கிடாய்களையும், ஒருவயதான மாசற்ற பதினாலு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக் கடவீர்கள்.
எண்ணாகமம் 29 : 14 (RCTA)
அவைகளுக்கடுத்த பான போசனக் காணிக்கையாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவிலே அந்தப் பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றுக்காகவும், பத்தில் மூன்று பங்கையும், இரண்டு ஆட்டுக் கிடாய்களில் ஒவ்வொன்றுக்காகவும் பத்தில் இரண்டு பங்கையும்,
எண்ணாகமம் 29 : 15 (RCTA)
பதினாலு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்காகவும் பத்துப்பாகத்தின் பத்தில் ஒரு பங்கையும்,
எண்ணாகமம் 29 : 16 (RCTA)
அன்றாடத் தகனப்பலியையும் அதற்கடுத்த பானபோசனக் காணிக்கையையுமன்றிப் பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் ஒப்புக்கொடுக்க வேண்டும்.
எண்ணாகமம் 29 : 17 (RCTA)
இரண்டாம் நாளிலே மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும் ஒரு வயதான மாசற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டு வரவேண்டும்.
எண்ணாகமம் 29 : 18 (RCTA)
சடங்கு முறைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கிடாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பான போசனப் பலிகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,
எண்ணாகமம் 29 : 19 (RCTA)
அன்றாட முழுத் தகனப்பலியும் அதற்கடுத்த பானபோசனக் காணிக்கையுமன்றி, பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.
எண்ணாகமம் 29 : 20 (RCTA)
மூன்றாம் நாளிலே பதினொரு இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும் ஒருவயதான மாசற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டு வரவேண்டும்.
எண்ணாகமம் 29 : 21 (RCTA)
சடங்கு முறைப்படி காளை, ஆட்டுக்கிடாய், ஆட்டுக்குட்டி இவை ஒவ்வொன்றுக்கும் அடுத்த பான போசனக் காணிக்கைகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,
எண்ணாகமம் 29 : 22 (RCTA)
அன்றாட முழுத் தகனப்பலியையும் அதற்கடுத்த பானபோசனக் காணிக்கையுமன்றி, பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக்கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.
எண்ணாகமம் 29 : 23 (RCTA)
நான்காம் நாளிலே பத்து இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும் ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டு வரவேண்டும்.
எண்ணாகமம் 29 : 24 (RCTA)
சடங்கு முறைப்படி ஒவ்வொரு ஆட்டுக்கிடாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பான போசனக் காணிக்கைகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,
எண்ணாகமம் 29 : 25 (RCTA)
அன்றாட முழுத் தகனப்பலியையும் அதற்கடுத்த பானபோசனக் காணிக்கையையுமன்றி, பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.
எண்ணாகமம் 29 : 26 (RCTA)
ஐந்தாம் நாளிலே ஒன்பது இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டு வர வேண்டும்.
எண்ணாகமம் 29 : 27 (RCTA)
சடங்கு முறைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கிடாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பான போசனக் காணிக்கைகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,
எண்ணாகமம் 29 : 28 (RCTA)
அன்றாட முழுத் தகனப்பலியையும், அதற்கடுத்த பான போசனக் காணிக்கையையுமன்றி, பாவ நிவாரணப் பலிக்கு ஒரு வெள்ளாட்டு கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.
எண்ணாகமம் 29 : 29 (RCTA)
ஆறாம் நாளிலே எட்டு இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும், ஒரு வயதான மாசற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், கொண்டு வரரேண்டும்.
எண்ணாகமம் 29 : 30 (RCTA)
சடங்கு முறைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கிடாய்க்கும் அடுத்த பான போசனக் காணிக்கைகளையும் ஒப்புக் கொடுப்பதோடு,
எண்ணாகமம் 29 : 31 (RCTA)
அன்றாட முழுத் தகனப் பலியையும் அதற்கடுத்த பான போசனக் காணிக்கையையுமன்றி, பாவப்பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் செலுத்தக் கடவீர்கள்.
எண்ணாகமம் 29 : 32 (RCTA)
ஏழாம் நாளிலே ஏழு இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக் கிடாய்களையும், ஒரு வயதான மாசற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டு வரவேண்டும்.
எண்ணாகமம் 29 : 33 (RCTA)
சடங்கு முறைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கிடாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பான போசனக் காணிக்கைகளையும் ஒப்புக் கொடுப்பதோடு,
எண்ணாகமம் 29 : 34 (RCTA)
அன்றாட முழுத் தகனப்பலியையும் அதற்கடுத்த பான போசனப் பலியையும் அதற்கடுத்த பான போசனப் பலிகளையுமன்றி, பாவ பரிகாரப்பலிக்கு ஒரு வெள்ளாட்டு கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.
எண்ணாகமம் 29 : 35 (RCTA)
மிகுந்த சிறப்புள்ள எட்டாம் நாளிலே எந்தக் கூலி வேலையையும் செய்யாமல்,
எண்ணாகமம் 29 : 36 (RCTA)
ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள முழுத் தகனப்பலிக்கு ஓர் இளங்காளையையும், ஓர் ஆட்டுக்கிடாயையும், ஒருவயதான மாசற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,
எண்ணாகமம் 29 : 37 (RCTA)
சடங்கு முறைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கிடாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பான போசனக் காணிக்கையையும் ஒப்புக்கொடுத்து,
எண்ணாகமம் 29 : 38 (RCTA)
அன்றாட முழுத் தகனப் பலியையும் அதற்கடுத்த பான போசனப் பலிகளையுமன்றிப் பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக்கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.
எண்ணாகமம் 29 : 39 (RCTA)
நீங்கள் உங்கள் திருவிழாக்களில் செலுத்த வேண்டிய பலிகள் இவையேயாம். அன்றியும் நீங்கள் நேர்ச்சைகளையும், தகனப்பலிக்காகக் கொண்டு வரும் மனமொத்த காணிக்கைகளையும், மற்றுமுள்ள பான போசனப் பலிகளையும் (வழக்கப்படி) செலுத்துவீர்கள் என்று திருவுளம்பற்றினார்.
எண்ணாகமம் 29 : 40 (RCTA)
(30:1) மோயீசன் ஆண்டவர் கட்டளையிட்டயாவையும் இஸ்ராயேல் மக்களுக்கு அறிவிக்கலானார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40

BG:

Opacity:

Color:


Size:


Font: