எண்ணாகமம் 28 : 1 (RCTA)
பின்னும் ஆண்டவர் மோயீசனிடம்: நீ இஸ்ராயேல் மக்களை நோக்கிக் கட்டளையாக அறிவிக்க வேண்டியதாவது:
எண்ணாகமம் 28 : 2 (RCTA)
நீங்கள் நமக்குரிய காணிக்கையையும், அப்பங்களையும், மிக்க நறுமணமுள்ள தகனப்பலிகளையும் குறித்த காலத்தில் நமக்குச் செலுத்துவீர்கள்.
எண்ணாகமம் 28 : 3 (RCTA)
நீங்கள் செலுத்த வேண்டிய பலிகள் என்னவென்றால்: நித்திய தகனப்பலியாக நாள்தோறும் ஒருவயதான மாசற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைக் (கொண்டு வந்து),
எண்ணாகமம் 28 : 4 (RCTA)
காலையில் ஓர் ஆட்டுக்குட்டியையும், மாலையில் ஓர் ஆட்டுக்குட்டியையும் பலியிட்டு,
எண்ணாகமம் 28 : 5 (RCTA)
ஏப்பி என்னும் (மரக்காலிலே) பத்தில் ஒரு பங்கு மெல்லிய மாவில் கின் என்னும் படியியே நாலில் ஒரு பங்கு மிகத் தெளிந்த எண்ணெயை வார்த்துப் (போசனக் காணிக்கையாக) ஒப்புக்கொடுப்பீர்கள்.
எண்ணாகமம் 28 : 6 (RCTA)
இது நீங்கள் சீனாய் மலையில் ஆண்டவருக்கு மிக்க நறுமணமாக ஒப்புக்கொடுத்து வந்த நித்திய தகனப்பலியாம்.
எண்ணாகமம் 28 : 7 (RCTA)
அன்றியும், ஆண்டவருடைய புனித இடத்திலே ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்கும் கின் என்னும் படியில் ஒருகாற்படி கொடிமுந்திரிப் பழச்சாற்றையும் பானப்பலியாக ஒப்புக்கொடுப்பீர்கள்.
எண்ணாகமம் 28 : 8 (RCTA)
காலையில் படைத்த தகனப்பலிக்கும் போசன பானப் பலிகளுக்கும் ஒப்பாகவே மாலையிலும் மேற்சொல்லிய சடங்கு முறைகளுடன் மற்ற ஆட்டுக்குட்டியையும் பலியிடக்கடவீர்கள்.
எண்ணாகமம் 28 : 9 (RCTA)
ஓய்வு நாளிலோவென்றால் ஒரு வயதான மாசற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், எண்ணெய் வார்த்த பத்தில் இரண்டு பங்கு மெல்லிய மாவைப் போசனப் பலியாகவும் கொண்டுவருவீர்கள்.
எண்ணாகமம் 28 : 10 (RCTA)
இந்த போசனப் பலியைச் சடங்கு முறைப்படியே ஒவ்வோர் ஓய்வு நாளிலும்நித்தியமாய்ச் செலுத்த வேண்டும்.
எண்ணாகமம் 28 : 11 (RCTA)
மாதத்தின் முதல் நாளிலோ ஆண்டவருக்குத் தகனப்பலியாக மந்தையிலிருந்து இரண்டு கன்றுக்குட்டிகளையும், ஓர்ஆட்டுக்கிடாயையும், ஒருவயதான மாசற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் ஒப்புக்கொடுக்க வேண்டும்.
எண்ணாகமம் 28 : 12 (RCTA)
போசனப் பலியாக ஒவ்வொரு கன்றுக்குட்டிக்கும் பத்தில் மூன்று பங்கானதும் எண்ணெயில் பிசைந்ததுமான மெல்லிய மாவையும், ஒவ்வோர் ஆட்டுக் கிடாய்க்கும் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும்,
எண்ணாகமம் 28 : 13 (RCTA)
ஒவ்வோர் ஆட்டுக்குட்டிக்கும் பத்துப் பாகத்தின் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயில் பிசைந்ததுமான மெல்லிய மாவையும் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தல் வேண்டும். அது ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள முழுத் தகனப் பலியாய் இருக்கும்.
எண்ணாகமம் 28 : 14 (RCTA)
அன்றியும், ஒவ்வொரு பலி மிருகத்துக்கும் செய்ய வேண்டிய பானப்பலி என்னவென்றால்: ஒவ்வொரு கன்றுக்குட்டிக்கு கின் (படியில்) அரைப்படியும், ஒவ்வோர்ஆட்டுக்கிடாய்க்கு மூன்றிலொரு பங்கும், ஒவ்வோர் ஆட்டுக் குட்டிக்கு நாலில் ஒரு பங்கும், கொடி முந்திரிப் பழச்சாறு சிந்தக் கடவீர்கள். இது ஆண்டு முழுவதும் மாத மாதமாய்ச் செலுத்த வேண்டிய முழுத்தகனப் பலியாம்.
எண்ணாகமம் 28 : 15 (RCTA)
மேலும், பாவ நிவாரணப் பலியாக ஒரு வெள்ளாட்டுக்கிடாயையும், அதற்கடுத்த பானச் சிந்து தலையும் ஆண்டவருக்குச் செலுத்தவும் வேண்டும்.
எண்ணாகமம் 28 : 16 (RCTA)
முதல் மாதத்தின் பதினாலாம் நாள் ஆண்டவருடைய பாஸ்கா.
எண்ணாகமம் 28 : 17 (RCTA)
பதினைந்தாம் நாள் திருவிழா. ஏழு நாள் வரையிலும் புளிப்பில்லாத அப்பங்களை உண்ண வேண்டும்.
எண்ணாகமம் 28 : 18 (RCTA)
அவற்றில் முதல் நாள் புனிதமானதும் வணக்கத்துக்குறியதுமாகையால், அன்று விலக்கப்பட்ட வேலையும் செய்யலாகாது.
எண்ணாகமம் 28 : 19 (RCTA)
அப்பொழுது நீங்கள் ஆண்டவருக்கு முழுத்தகனப் பலிக்காக மந்தையிலிருந்து இரண்டு கன்றுக்குட்டிகளையும், ஓர் ஆட்டுக்கிடாயையும், ஒரு வயதான மாசற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
எண்ணாகமம் 28 : 20 (RCTA)
அவைகளுக்கேற்ற காணிக்கையாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவிலே ஒவ்வொரு கன்றுக்குட்டிக்கும் பத்தில் மூன்று பங்கையும் வெள்ளாட்டுக்கிடாய்க்குப் பத்தில் இரண்டு பங்கையும்,
எண்ணாகமம் 28 : 21 (RCTA)
ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வோர் ஆட்டுக்குட்டிக்கும் பத்துப் பாகத்தின் பத்தில் ஒரு பங்கையும்,
எண்ணாகமம் 28 : 22 (RCTA)
உங்கள் பாவ நிவர்த்திக்குப் பாவ நிவாரணப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் செலுத்தக் கடவீர்கள்.
எண்ணாகமம் 28 : 23 (RCTA)
காலையிலே அன்றாடம் செலுத்தும் முழுத் தகனப் பலியையும் அன்று சேர்த்துச் செலுத்தக்கடவீர்கள்.
எண்ணாகமம் 28 : 24 (RCTA)
இவ்விதமாகவே அந்த ஏழு நாளும் நாள்தோறும் நெருப்பை வளர்த்து, ஆண்டவருக்கு மிக்க நறுமணமாகத் தகனப் பலியைச் செலுத்துவீர்கள். அந்த மணம் தகனப் பலியிலிருந்தும், ஒவ்வொரு பலிக்கும் அடுத்த பானப் பலியிலிருந்தும் எழும்பும்.
எண்ணாகமம் 28 : 25 (RCTA)
ஏழாம் நாளும் உங்களுக்கு மிக ஆடம்பரமுள்ளதும் புனிதமுள்ளதுமாய் இருக்கும். அதில் யாதொரு சாதரணமான வேலையும் செய்யலாகாது.
எண்ணாகமம் 28 : 26 (RCTA)
வாரம் கடந்த பின்பு நீங்கள் ஆண்டவருக்குப் புதிய போசனப் பலியாக முதற் கனிகளைச் செலுத்தும் நாளும் அவ்விதமே புனிதமும் வணக்கத்துக்குரியதுமாய் இருக்கும். அதில் யாதொரு சாதாரண வேலையும் செய்யலாகாது.
எண்ணாகமம் 28 : 27 (RCTA)
மேலும், ஆண்டவருக்கு நறுமணமுள்ள முழுத் தகனப்பலியாக ஒரு மந்தையில் எடுக்கப்பட்ட இரண்டு இளங்காளைகளையும் ஓர் ஆட்டுக் கிடாயையும், ஒரு வயதான மாசற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக்கடவீர்கள்.
எண்ணாகமம் 28 : 28 (RCTA)
அந்தப் பலிகளுக்கடுத்த போசனப்பலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒவ்வொரு காளைக்கும் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஆட்டுக் கிடாய்க்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
எண்ணாகமம் 28 : 29 (RCTA)
ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வோர் ஆட்டுக்குட்டிக்கும் பத்துப் பாகத்தின் பத்தில் ஒரு பங்கையும் ஒப்புக்கொடுப்பதோடு,
எண்ணாகமம் 28 : 30 (RCTA)
பாவம் நிவாரணமாகும்படிக்குப் பலியிடப்படும் ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் கொண்டு வரவேண்டும். அன்றியும், (வழக்கப்படி) நித்திய முழுத்தகனப் பலியையும் அதைச் சேர்ந்த பானப்பலியையும் படைக்கக்கடவீர்கள்.
எண்ணாகமம் 28 : 31 (RCTA)
இந்த பலிமிருகங்களும் அவைகளுக்கடுத்த பானப்பலிகளும் மாசற்றவைகளாய் இருக்கவேண்டும்.
❮
❯