எண்ணாகமம் 26 : 1 (RCTA)
குற்றவாளிகள் கொல்லப்பட்ட பின்பு ஆண்டவர் மோயீசனையும், ஆரோனின் புதல்வனும் குருவுமாகிய எலெயஸாரையும் நோக்கி:
எண்ணாகமம் 26 : 2 (RCTA)
நீங்கள் இஸ்ராயேல்மக்களின் சபையார் எல்லாரையும் எண்ணக்கடவீர்கள். அவர்களைத் தத்தம் வீடுகளின்படியும் குடும்பத்தின்படியும், இருபதுவயதும் அதற்கு மேற்பட்டும் உள்ளவர்களில் எவரெவர் போருக்குப் புறப்பட்டுப் போகலாமென்று கணக்கிட்டுப் பாருங்கள் என்றார்.
எண்ணாகமம் 26 : 3 (RCTA)
அவ்வாறு மோயீசனும் குருவாகிய எலெயஸாரும் எரிக்கோ நகரத்திற்கு எதிரெயுள்ள யோர்தான் நதிக்கு அருகிலிருக்கும் மோவாபின் வெளிகளிலே,
எண்ணாகமம் 26 : 4 (RCTA)
ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி இருபதும் அதற்கு மேற்பட்ட வயதுமாய் இருந்தவர்களோடு பேசிக்கொண்டார்கள். எண்ணிக்கையின் தொகையாவது:
எண்ணாகமம் 26 : 5 (RCTA)
இஸ்ராயேலின் மூத்த புதல்வன் ரூபன். அவனுடைய புதல்வர்களோ ஏனோக்கிய வம்சத் தலைவனான ஏனோக்கும், பலுய வம்சத்தலைவனான பலுவும்,
எண்ணாகமம் 26 : 6 (RCTA)
ஏஸ்ரோனிய வம்சத்தலைவானான ஏஸ்ரோனும், கார்மிய வம்சத்தலைவனான கார்மியுமாவர்.
எண்ணாகமம் 26 : 7 (RCTA)
இவைகளே ரூபன் கோத்திரத்தின் குடும்பங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பதுபேர்.
எண்ணாகமம் 26 : 8 (RCTA)
பலுவின் புதல்வன் எலியாப்.
எண்ணாகமம் 26 : 9 (RCTA)
இவன் புதல்வர்களோ நமுயேல், தாத்தான், அபிரோன் என்பவர்கள். அந்தத் தாத்தான், அபிரோன் என்பவர்களே சபையின் தலைவர்களாய் இருந்து, கொறேயுடைய குழப்பத்தின்போது மோயீசனுக்கும் ஆரோனுக்கும் விரோதமாய் நின்று, ஆண்டவருக்குத் துரோகம் செய்தார்கள்.
எண்ணாகமம் 26 : 10 (RCTA)
அப்பொழுது நிலம் தன் வாயைத் திறந்து கொறே என்பவனை விழுங்கிற்று. அவனோடு கூட நெருப்பு இருநூற்றைம்பது பேர்களை விழுங்கிய வேளையில், வேறு பலரும் இறந்தார்கள். அவ்வேளை நிகழ்ந்த ஒரு பெரிய புதுமை என்னவென்றால்,
எண்ணாகமம் 26 : 11 (RCTA)
கொறே இறந்தும், அவன் புதல்வர்கள் இறக்கவில்லை.
எண்ணாகமம் 26 : 12 (RCTA)
தங்கள் வம்சப்படி சிமியோனின் புதல்வர்கள்: நமுயேலிய வம்சத்தலைவனான நமுயேலும், ஜமினிய வம்சத்தலைவனான ஜமினும், ஜக்கினிய வம்சத்தலைவனான ஜக்கினும்,
எண்ணாகமம் 26 : 13 (RCTA)
சரேய வம்சத்தலைவனான சரேயும், சவூல் வம்சத்தலைவனான சவூலுமாவர்.
எண்ணாகமம் 26 : 14 (RCTA)
இவ்வம்சங்களே சிமியோனின் வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் இருபத்தீராயிரத்து இருநூறுபேர்.
எண்ணாகமம் 26 : 15 (RCTA)
தங்கள் வம்சப்படி காத்தின் புதல்வர்கள்: செப்போனிய வம்சத்தலைவனான செப்போனும், அக்கிய வம்சத்தலைவனான அக்கியும்,
எண்ணாகமம் 26 : 16 (RCTA)
சூனிய வம்சத்தலைவனான சூனியும், ஓஸ்னிய வம்சத்தலைவனான ஓஸ்னியும், ஏர் வம்சத்தலைவனான ஏரும்,
எண்ணாகமம் 26 : 17 (RCTA)
அரோத்திய வம்சத்தலைவனான அரோத்தும், அரியேலிய வம்சத்தலைவனான அரியேலுமாவர்.
எண்ணாகமம் 26 : 18 (RCTA)
இவைகளே காத்தின் வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதினாயிரத்து ஐநூறுபேர்.
எண்ணாகமம் 26 : 19 (RCTA)
யூதாவின் புதல்வர்கள்: ஏரும், ஓனானுமாவர். இவ்விருவரும் கானான் நாட்டில் இறந்தனர்.
எண்ணாகமம் 26 : 20 (RCTA)
தங்கள் வம்சங்களின்படி யூதாவின் புதல்வர்கள்: சேலாய வம்சத்தலைவனான சேலாவும், பரேசிய வம்சத்தலைவனான பரேசும், சாரேய வம்சத்தலைவனான சாரேயுமாவர்.
எண்ணாகமம் 26 : 21 (RCTA)
பரேசின் புதல்வர்கள்: ஏஸ்றோனிய வம்சத்தலைவனான ஏஸ்றோனும், ஆமூலிய வம்சத்தலைவனான ஆமூலுமாவர்.
எண்ணாகமம் 26 : 22 (RCTA)
இவைகளே யூதாவின் வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐநூறு பேர்.
எண்ணாகமம் 26 : 23 (RCTA)
தங்கள் வம்சத்தின்படி இஸக்காருடைய புதல்வர்கள்: தோலாய வம்சத்தலைவனான தோலாவும், புவாய வம்சத்தலைவனான புவாவும்,
எண்ணாகமம் 26 : 24 (RCTA)
ஜாசுபிய வம்சத்தலைவனான ஜாசுபும், செம்ரானிய வம்சத்தலைவனான செம்ரானுமாவர்.
எண்ணாகமம் 26 : 25 (RCTA)
இவைகளே இஸக்காரின் வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்து நாலாயிரத்து முந்நூறு பேர்.
எண்ணாகமம் 26 : 26 (RCTA)
தங்கள் வம்சங்களின்படி சபுலோனுடைய புதல்வர்கள்: ஸரேதிய வம்சத்தலைவனான ஸரேதும், எலோனிய வம்சத்தலைவனான எலோனும், ஜலேலிய வம்சத்தலைவனான ஜலேலுமாவர்.
எண்ணாகமம் 26 : 27 (RCTA)
இவைகளே சபுலோனின் வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் அறுபதாயிரத்து ஐநூறு பேர்.
எண்ணாகமம் 26 : 28 (RCTA)
சூசையுடைய புதல்வர்கள்: மனாஸேயும் எபிராயீமும் ஆவர்.
எண்ணாகமம் 26 : 29 (RCTA)
மனாஸேயுக்கு மக்கீரிய வம்சத்தலைவனான மக்கீர் பிறந்தான். மக்கீருக்குக் கலாத்திய வம்சத்தலைவனான கலாத் பிறந்தான்.
எண்ணாகமம் 26 : 30 (RCTA)
கலாத்துக்குப் பிறந்த புதல்வர்கள்: ஜெஸேரிய வம்சத்தலைவனான ஜெஸேரும், ஏலேக்கிய வம்சத்தலைவனான ஏலெக்கும்,
எண்ணாகமம் 26 : 31 (RCTA)
அஸரியேலிய வம்சத்தலைவனான அஸரியேலும், செக்கேமிய வம்சத்தலைவனான செக்கேமும்,
எண்ணாகமம் 26 : 32 (RCTA)
செமிதாய வம்சத்தலைவனான செமிதாவும், ஏப்பேரிய வம்சத்தலைவனான ஏப்பேருமாவர்.
எண்ணாகமம் 26 : 33 (RCTA)
ஏப்பேர் ஸல்பாதைப் பெற்றான். இவனுக்குப் புதல்வர் இல்லை; புதல்வியர் மட்டும் இருந்தனர். இவர்கள்: மாலா, நோவா, ஏகிலா, மேற்கா, தேற்சா என்பவர்கள்.
எண்ணாகமம் 26 : 34 (RCTA)
இவைகளே மனாஸேயின் குடும்பங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தீராயிரத்து எழுநூறு பேர்.
எண்ணாகமம் 26 : 35 (RCTA)
தங்கள் வம்சங்களின்படி எபிராயீமுடைய புதல்வர்கள்: சுத்தலாய வம்சத்தலைவனான சுத்தலாவும், பெக்கேரிய வம்சத்தலைவனான பெக்கேரும், தேயெனிய வம்சத்தலைவனான தேயெனுமாவர்.
எண்ணாகமம் 26 : 36 (RCTA)
சுத்தலாவின் புதல்வனோ ஏரானிய வம்சத்தலைவனான ஏரான்.
எண்ணாகமம் 26 : 37 (RCTA)
இவைகளே எபிராயீம் புதல்வர்களின் குடும்பங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர் முப்பத்தீராயிரத்து ஐநூறு பேர்.
எண்ணாகமம் 26 : 38 (RCTA)
அவரவர்களுடைய குடும்பங்களின்படி சூசையுடைய புதல்வர்கள் இவர்களேயாவர். தங்கள் வம்சங்களின்படி பெஞ்சமின் புதல்வர்கள்: பெலாய வம்சத்தலைவனான பெலாவும், அஸ்பேலிய வம்சத்தலைவனான அஸ்பேலும், அகிராமிய வம்சத்தலைவனான அகிராமும்,
எண்ணாகமம் 26 : 39 (RCTA)
சுப்பாமிய வம்சத்தலைவனான சுப்பாமும், உப்பாம் வம்சத்தலைவனான உப்பாமுமாவர்.
எண்ணாகமம் 26 : 40 (RCTA)
பெலாவின் புதல்வர்கள்: ஏரேதும், நொயெமானும்; ஏரேதிய வம்சத் தலைவனான ஏரேதும், நொயெமானிய வம்சத்தலைவனான நொயெமானுமாவர்.
எண்ணாகமம் 26 : 41 (RCTA)
தங்கள் குடும்பங்களின்படி பெஞ்சமினுடைய சந்ததியார்கள் இவர்களேயாம். அவர்களில் எண்ணப்பட்டவர்கள்: நாற்பத்தையாயிரத்து அறுநூறு பேர்.
எண்ணாகமம் 26 : 42 (RCTA)
தங்கள் குடும்பங்களின்படி தானுடைய புதல்வர்கள்: சுகாமிய வம்சத்தலைவன் சுகாம்; அவன் குடும்பங்களின்படி தானுடைய சுற்றம் அதுவேயாம்.
எண்ணாகமம் 26 : 43 (RCTA)
அவர்கள் எல்லாரும் சுகாமியர். அவர்களில் எண்ணப்பட்டவர்கள்: அறுபத்து நாலாயிரத்து நானூறு பேர்.
எண்ணாகமம் 26 : 44 (RCTA)
தங்கள் குடும்பங்களின்படி ஆஸேருடைய புதல்வர்கள்: ஜெம்னாய வம்சத்தலைவனான ஜெம்னாவும், ஜெசுவிய வம்சத்தலைவனான பிரியேயுமாவர்.
எண்ணாகமம் 26 : 45 (RCTA)
பிரியேயின் புதல்வர்கள்: ஏபேரிய வம்சத்தலைவனான ஏபேரும், மெற்கியேலிய வம்சத்தலைவனான மெற்கியேலுமாவர்.
எண்ணாகமம் 26 : 46 (RCTA)
ஆஸேருடைய புதல்வியின் பெயர் சாரா.
எண்ணாகமம் 26 : 47 (RCTA)
இவைகளே ஆஸேர் புதல்வர்களுடைய வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள்: ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர்.
எண்ணாகமம் 26 : 48 (RCTA)
தங்கள் குடும்பங்களின்படி நெப்தலியுடைய புதல்வர்கள்: ஜெஸியேலிய வம்சத்தலைவனான ஜெஸியேலும், குனிய வம்சத்தலைவனான குனியும்,
எண்ணாகமம் 26 : 49 (RCTA)
ஜெஸேரிய வம்சத்தலைவனான ஜெஸேரும், செல்லெமிய வம்சத்தலைவனான செல்லேமுமாவர்.
எண்ணாகமம் 26 : 50 (RCTA)
தத்தம் குடும்பங்களின்படி நெப்தலியின் வம்சங்கள் இவைகளேயாம். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து நானூறு பேர்.
எண்ணாகமம் 26 : 51 (RCTA)
இஸ்ராயேல் மக்களில் எண்ணப்பட்டவர்களுடைய மொத்தத் தொகை ஆறுலட்சத்து ஓராயிரத்து எழுநூற்று முப்பது.
எண்ணாகமம் 26 : 52 (RCTA)
பின்னும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
எண்ணாகமம் 26 : 53 (RCTA)
ஆட்களின் கணக்குக்குத் தக்கதாகவே நாடு அவர்களுக்கு உரிமையாகப் பங்கிடப்படும்.
எண்ணாகமம் 26 : 54 (RCTA)
அதிகம் பேருக்கு அதிகமாகவும், கொஞ்சம் பேருக்குக் கொஞ்சமாகவும், அவர்கள் இப்பொழுது எண்ணிக்கையிடப்பட்ட எண்ணிக்கைக்குத் தக்கபடியே அவரவருக்கு உரிமை கொடுக்கப்படும்.
எண்ணாகமம் 26 : 55 (RCTA)
ஆனாலும், திருவுளச் சீட்டுப் போட்டு, சீட்டு விழுந்தபடியே கோத்திரங்களுக்கும் குடும்பங்களுக்கும் நாடு பங்கிடப்படும்.
எண்ணாகமம் 26 : 56 (RCTA)
அதிகம் பேராயினும் கொஞ்சம் பேராயினும் திருவுளச் சீட்டினால் எவ்வளவு வந்ததோ அவ்வளவே அவரவர்கள் பொறுவார்கள் என்றருளினார்.
எண்ணாகமம் 26 : 57 (RCTA)
அவரவர்களுடைய குடும்பங்களின்படி எண்ணப்பட்ட லேவியரின் புதல்வர்களுடைய எண்ணிக்கை: ஜெற்சோனிய வம்சத்தலைவனான ஜெற்சோனும், ககாதிய வம்சத்தலைவனான ககாதும், மெறாரிய வம்சத்தலைவனான மெறாரியுமாவர்.
எண்ணாகமம் 26 : 58 (RCTA)
லேவியருடைய குடும்பங்கள்: லோப்னி குடும்பம், ஏபிரோன் குடும்பம், மொகோனி குடும்பம், மூஸி குடும்பம், கோறே குடும்பம் ஆகிய இவைகளாம். ககாது அபிராமைப் பெற்றான்.
எண்ணாகமம் 26 : 59 (RCTA)
இவனுடைய மனைவியின் பெயர் ஜோக்கப்பேத். இவள் லேவிக்கு எகிப்திலே பிறந்த புதல்வி. அவள் தன் கணவனாகிய அம்ராமுக்கு ஆரோனையும், மோயீசனையும், இவர்களின் சகோதரியாகிய மரியாளையும், பெற்றாள்.
எண்ணாகமம் 26 : 60 (RCTA)
ஆரோனுக்கு நதாப், அபியூ, எலெயஸார், ஈத்தமார் என்பவர்கள் பிறந்தனர்.
எண்ணாகமம் 26 : 61 (RCTA)
இவர்களில் நதாப், அபியூ, எலெயஸார், ஈத்தமார் என்பவர்கள் ஆண்டவர் முன்னிலையில் அந்நிய நெருப்பைச் சமர்ப்பித்தமையால் இறந்தனர்.
எண்ணாகமம் 26 : 62 (RCTA)
ஆண் குழந்தைகளில் ஒரு மாதத்துப்பிள்ளை முதல் எண்ணப்பட்டவர்களின் தொகை: இருபத்து மூவாயிரம். இவர்கள் இஸ்ராயேல் மக்களின் கணக்கிலே சேர்க்கப்பட்டதுமில்லை; அவர்களுக்கு உரிமை கொடுக்கப்பட்டதுமில்லை.
எண்ணாகமம் 26 : 63 (RCTA)
மோயீசனாலும் குருவாகிய எலெயஸாராலும் யோர்தான் கரையில் எரிக்கோ நகரத்துக்கு எதிரேயுள்ள மோவாப் வெளிகளிலே எண்ணி எழுதப்பட்ட இஸ்ராயேல் மக்களின் தொகை அதுவே.
எண்ணாகமம் 26 : 64 (RCTA)
முன்பே மோயீசனும் ஆரோனும் சீனாய்ப் பாலைவனத்திலே எண்ணி எழுதியவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை.
எண்ணாகமம் 26 : 65 (RCTA)
ஏனென்றால், அவர்கள் எல்லாரும் பாலைவனத்தில் சாவார்களென்று ஆண்டவர் திருவுளம்பற்றியிருந்தார். அப்படியே, ஜெப்போனேயின் புதல்வன் காலேவையும், நூனின் புதல்வன் ஜோசுவாவையும் தவிர, அவர்களில் வேறொருவரும் மீதி இருக்கவில்லை.
❮
❯