எண்ணாகமம் 21 : 1 (RCTA)
தெற்குப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த கானானைய அரசனாகிய ஆரோத் என்பவன் இஸ்ராயேலிய ஒற்றர்கள் வழியில் வந்திருப்பதைக் கேள்விப்பட்டபோது, அவன் அவர்களோடு போராடிச் சூறையாடி வெற்றி பெற்றான்.
எண்ணாகமம் 21 : 2 (RCTA)
இஸ்ராயேலரோ ஆண்டவரை நோக்கி: ஆண்டவரே இந்த மக்களை எங்கள் கையில் ஒப்புவித்தால், அவர்களுடைய நகரங்களைப் பாழாக்கி விடுவோம் என்று நேர்ந்துகொள்ள,ள
எண்ணாகமம் 21 : 3 (RCTA)
ஆண்டவர் இஸ்ராயேலரின் மன்றாட்டைக் கேட்டருளி, கானானையரை அவர்களுடைய கையிலே ஒப்புவித்தார். அப்பொழுது இஸ்ராயேலர் அவர்களையும் அவர்களுடைய நகரங்களையும் அழித்து, அவ்விடத்திற்கு ஓர்மா, அதாவது: சபிக்கப்பட்ட ஊர் என்று பெயரிட்டார்கள்.
எண்ணாகமம் 21 : 4 (RCTA)
பின்னர் இஸ்ராயேலர் ஓர் என்ற மலையிலிருந்து புறப்பட்டு, ஏதோம் நாட்டைச் சுற்றிப் போகத்தக்கதாகச் செங்கடல் வழியாகப் பயணம் செய்தார்கள். வழியின் வருத்தத்தினாலே மக்கள் மனம் சலிக்கத் தொடங்கி,
எண்ணாகமம் 21 : 5 (RCTA)
அவர்கள் கடவுளுக்கும் மோயீசனுக்கும் விரோதமாய்ப் பேசி: நீ எங்களை எகிப்திலிருந்து வெளியேறச் செய்ததென்ன? நாங்கள் பாலைவனத்தில் சாகும்படிதானோ? இவ்விடத்தில் அப்பமுமில்லை, தண்ணீருமில்லை. இந்த அற்ப உணவு எங்கள் மனத்துக்கு வெறுப்பைத் தருகிறது என்றார்கள்.
எண்ணாகமம் 21 : 6 (RCTA)
அப்பொழுது ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை அவர்களிடையே அனுப்பினார்.
எண்ணாகமம் 21 : 7 (RCTA)
பலர் கடியுண்டு சாவதைக்கண்டு, மக்கள் மோயீசனிடம் போய்: நாங்கள் கடவுளுக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதனால் பாவிகளானோம். பாம்புகள் எங்களை விட்டு நீங்கும்படி மன்றாட வேண்டும் என்றார்கள். மோயீசன் அவர்களுக்காக வேண்டிக்கொள்ள,
எண்ணாகமம் 21 : 8 (RCTA)
ஆண்டவர் அவரை நோக்கி: வெண்கலத்தால் ஒரு பாம்பின் உருவம் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கி வை. கடியுண்டவன் அதை உற்று நோக்கினால் உயிர் பிழைப்பான் என்று திருவுளம்பற்றினார்.
எண்ணாகமம் 21 : 9 (RCTA)
அவ்வாறே மோயீசன் வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் கட்டித் தூக்க, கடியுண்டவர்கள் அதைப் பார்த்து நலமடைந்தார்கள்.
எண்ணாகமம் 21 : 10 (RCTA)
பின்பு இஸ்ராயேல் மக்கள் புறப்பட்டுப் போய் ஒபோத்தில் பாளையம் இறங்கினார்கள்.
எண்ணாகமம் 21 : 11 (RCTA)
அங்கிருந்து பயணம் செய்து, கீழ்த்திசைக்கு நேராய் மோவாபுக்கு எதிரிலுள்ள பாலைவனத்தில் இருக்கும் ஜெயபாரிம் என்னும் இடத்திலே பாளையம் இறங்கினார்கள்.
எண்ணாகமம் 21 : 12 (RCTA)
அங்கிருந்து போய் ஜாரத் என்னும் ஓடையை அடைந்தார்கள்.
எண்ணாகமம் 21 : 13 (RCTA)
ஜாரத்தை விட்டு, அர்னோன் என்னும் ஆற்றுக்கு இப்புறம் பாளையம் இறங்கினார்கள். அது பாலைவனத்திலே அமோறையர் எல்லையை நெருங்கியதாய், மோவாப் நாட்டுக்கு எல்லையாகவும் இருக்கிறது. அது மோவாபியருக்கும் அமோறையருக்கும் மத்தியில் இருக்கிற மோவாபின் எல்லை.
எண்ணாகமம் 21 : 14 (RCTA)
ஆதலால், 'ஆண்டவருடைய போர்கள்' என்னும் நூலில் எழுதியிருக்கிறதாவது: ஆண்டவர் செங்கடலில் செய்தபடியே அர்னோன் ஆற்றிலும் செய்வார்.
எண்ணாகமம் 21 : 15 (RCTA)
ஆர் என்னும் இடத்திலே இளைப்பாறத் தக்கனவாகவும், மோவாபியருடைய எல்லைகளில் விழுத்தக்கனவாகவும் வெள்ளங்களில் கற்பாறைகள் சாய்ந்து போயினவாம்.
எண்ணாகமம் 21 : 16 (RCTA)
இஸ்ராயேலர் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போகையில், ஒரு கிணற்றைக் கண்டார்கள். அதைக் குறித்து ஆண்டவர் மோயீசனை நோக்கி: மக்களைக் கூடிவரச் செய். நாம் அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்போம் என்று சொல்லியிருந்தார்.
எண்ணாகமம் 21 : 17 (RCTA)
அப்பொழுது இஸ்ராயேலர் எல்லாரும் கூடி ஒரே குரலாய்ப் பாடல் இசைத்து:
எண்ணாகமம் 21 : 18 (RCTA)
கிணற்று நீரே, பொங்கிவா. ஓ கிணறே, சட்டம் வகுப்பவரான (ஆண்டவர்) ஏவலால் தலைவர்களை உன்னைத் தோண்டினர். மேன் மக்கள் தண்டாயுதங்களைக் கொண்டு உன்னைத் தோண்டினர் என்று பாடினார்கள். இஸ்ராயேலர் பாலைவனத்தை விட்டு மத்தனா என்ற இடத்திற்கும்,
எண்ணாகமம் 21 : 19 (RCTA)
மத்தனாவிலிருந்து நகலியேலுக்கும், நகலியேலிலிருந்து பாமோட்டுக்கும் (வந்தார்கள்).
எண்ணாகமம் 21 : 20 (RCTA)
பாமோட்டுக்கு அப்பக்கம் மோவாப் நாட்டினுள்ளே ஒரு பள்ளத்தாக்கும், அதன் அருகே பாலைவனத்திற்கு எதிரே பஸ்கா என்ற ஒரு மலையும் உள்ளன.
எண்ணாகமம் 21 : 21 (RCTA)
அங்கிருந்து இஸ்ராயேலர் அமோறையரின் அரசனாகிய செனோனிடம் தூதரை அனுப்பி:
எண்ணாகமம் 21 : 22 (RCTA)
உமது நாட்டின் வழியாயக் கடந்துபோக எங்களுக்கு உத்தரவு கொடுக்க வேண்டும். நாங்கள் வயல் வெளிகளிலும்கொடிமுந்திரித் தோட்டங்களிலும் போகாமல், கிணற்றுத் தண்ணீரைக் குடியாமல் உமது எல்லையைக் கடந்து போகுமட்டும் நெடுஞ்சாலை வழி செல்வோம் என்று சொல்லச் சொன்னார்கள்.
எண்ணாகமம் 21 : 23 (RCTA)
செகோன் தன் எல்லை வழியாகக் கடந்து போக இஸ்ராயேலருக்கு உத்தரவு கொடாமல், படையெடுத்துப் பாலைவனத்தில் அவர்களை எதிர்க்கப் புறப்பட்டு யாசாவுக்கு வந்து போர் தொடுத்தான்.
எண்ணாகமம் 21 : 24 (RCTA)
ஆனால், இஸ்ராயேலர் அவனைக் கருக்கு வாளால் வெட்டி, அர்னோன் தொடங்கி அம்மோன் புதல்வரின் நாட்டுக்கடுத்த செபோக் நாடு வரையிலும் அவன் நாட்டைப் பிடித்துக்கொண்டார்கள். அம்மோனியரின் எல்லைகள் அரண்களைக் கொண்டிருந்தமையால் (அவர்கள் செபோக் என்னும் ஊருக்கு அப்பால் போகவில்லை).
எண்ணாகமம் 21 : 25 (RCTA)
இவ்வாறு இஸ்ராயேலர் செகோனின் நகர்களையெல்லாம் பிடித்துக்கொண்டு, அமோறையருடைய நகர்களாகிய எசெபோனிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குடியேறினர். எசேபோன் செகோனின் நகர்.
எண்ணாகமம் 21 : 26 (RCTA)
இவன் மோவாபின் அரசனோடு போர்புரிந்து, அர்னோன் வரையிலுமிருந்த அவன் நாட்டையெல்லாம் பிடித்து ஆண்டுகொண்டிருந்தான்.
எண்ணாகமம் 21 : 27 (RCTA)
எனவேதான், எசெபோனுக்கு வாருங்கள். செகோனின் நகர் கட்டி நிறுவப்படுவதாக.
எண்ணாகமம் 21 : 28 (RCTA)
எசெபோனிலிருந்து நெருப்பும், செகோனிலிருந்து சுவாலையும் புறப்பட்டு மோவாபியருடைய அர்னோன் என்னும் நகரத்தையும் அர்னோனின் மலைகளில் வாழ்ந்தோரையும் எரித்தது.
எண்ணாகமம் 21 : 29 (RCTA)
மோவாபே, உனக்குக் கேடாம்! காமோஸ் மக்களே, நீவிர் மடிந்தீர். காமோஸ் தன் புதல்வரைப் புறமுதுகு காட்டி ஓடச்சொல்லி, தன் புதல்வியரைப் அமாறையரின் அரசனான செகோனுக்கு ஒப்புக்கொடுத்தான்.
எண்ணாகமம் 21 : 30 (RCTA)
எசெபோன் தொடங்கித் திபோன் வரையிலும் அவர்களுடைய கொடுங்கோன்மை அழிந்தொழிந்தது. அவர்கள் ஓட்டம் பிடித்துக்களைத்ததனாலே, நொப்பே நகரத்திலும் மெதபா நகரத்திலும் போய்ச் சேர்ந்தார்கள் என்று பழமொழியாகச் சொல்லப்படும்.
எண்ணாகமம் 21 : 31 (RCTA)
நிற்க, இஸ்ராயேல் அமோறையரின் நாட்டில் குடியிருந்தார்கள்.
எண்ணாகமம் 21 : 32 (RCTA)
மோயீசன் யாசேரைப் பார்த்துவர ஒற்றரை அனுப்பினார். பிறகு அவர்கள் அதன் ஊர்களையும் பிடித்து, அங்கு வாழ்ந்தோரையும் முறியடித்தார்கள்.
எண்ணாகமம் 21 : 33 (RCTA)
அதற்குப் பிறகு அவர்கள் பாசானுக்குப் போகும் வழியாய்த் திரும்புகையில், பாசான் அரசனான ஓக் என்பவன் அவர்களை எதிர்த்துப் போர் செய்ய எத்ராய்க்குப் புறப்பட்டு வந்தான்.
எண்ணாகமம் 21 : 34 (RCTA)
அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி: நாம் அவனையும், அவன் குடிகள் எல்லாரையும், அவன் நாட்டையும் உன் கையில் ஒப்புவித்தோம். நீ அவனுக்கு அஞ்சாதே; உசெபோனில் குடியிருந்த அமோறையரின் அரசனான செகோனுக்கு நீ செய்ததுபோல இவனுக்கும் செய்வாய் என்றருளினார்.
எண்ணாகமம் 21 : 35 (RCTA)
அவ்வாறே அவர்கள் அவனையும், அதன் புதல்வரையும், அவனுடைய மக்களனைவரையும், ஒருவரும் உயிருடன் இராதபடிக்கு வெட்டிப் போட்டு, அவனுடைய நாட்டைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35