எண்ணாகமம் 20 : 1 (RCTA)
பின்னர் இஸ்ராயேல் மக்களாகிய சபையாரெல்லாம் முதல் மாதத்திலே சின் என்னும் பாலைனத்தை அடைந்தபோது, அவர்கள் காதேஸில் தங்கிக்கொண்டு இருக்கையிலே மரியாள் இறந்து அவ்விடத்தில் அடக்கம் செய்யப்பட்டாள்.
எண்ணாகமம் 20 : 2 (RCTA)
அப்போது மக்களுக்குத் தண்ணீர் இல்லாததைப்பற்றி மோயீசனுக்கும் ஆரோனுக்கும் விரோதமாய் மக்கள் கூட்டம் கூடி,
எண்ணாகமம் 20 : 3 (RCTA)
குழப்பஞ்செய்து கொண்டு: எங்கள் சகோதரர்கள் ஆண்டவருடைய முன்னிலையில் மாண்ட போது நாங்களும் மாண்டு போயிருந்தால் நலமாயிருந்திருக்குமே.
எண்ணாகமம் 20 : 4 (RCTA)
நீங்கள் ஆண்டவருடைய சபையைப் பாலைவனத்திற்கு அழைத்துக்கொண்டு வருவானேன்? நாங்களும் எங்கள் மிருகங்களும் சாகும்படிதானோ?
எண்ணாகமம் 20 : 5 (RCTA)
இங்கே விதைப்புமில்லை; அத்திமரமும் இல்லை; கொடிமுந்திரியும் இல்லை; மாதுளஞ் செடியும் இல்லை; குடிக்கத் தண்ணீர் முதலாய் இல்லை. நீங்கள் எங்களை எகிப்து நாட்டினின்று இந்த வறண்ட இடத்திற்குக் கொண்டு வந்ததென்ன? என்றார்கள்.
எண்ணாகமம் 20 : 6 (RCTA)
அப்பொழுது மோயீசனும் ஆரோனும் மக்களை அனுப்பிவிட்டு, உடன்படிக்கைக் கூடாரத்தினுள் போய்த் தரையில் குப்புற விழுந்து, ஆண்டவரை நோக்கி ஆண்டவராகிய கடவுளே! இந்த மக்களின் கூக்குரலைக் கேட்டருள்வீர். அவர்கள் திருப்தியடைந்து முறுமுறுக்காதபடி உமது செல்வமாகிய நல்ல நீரூற்றைத் தந்தருள்வீர் என்றார்கள். அந்நேரமே ஆண்டவருடைய மாட்சி அவர்களுக்குக் காணப்பட்டது.
எண்ணாகமம் 20 : 7 (RCTA)
ஆண்டவர் மோயீசனை நோக்கி:
எண்ணாகமம் 20 : 8 (RCTA)
நீ உன் கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரன் ஆரோனும் மக்களை கூடி வரச் செய்யுங்கள். அவர்கள் கண்களுக்கு முன்னே நீங்கள் கற்பாறையைப் பார்த்துப்பேசினால் அதிலிருந்து தண்ணீர் புறப்படும். அவ்விதமாய் நீ கற்பாறையிலிருந்து அவர்களுக்குத் தண்ணீர் சுரக்கச் செய்த பிற்பாடு அவர்கள் எல்லாரும் குடிப்பார்கள்; அவர்களுடைய மிருகங்களும் குடிக்கும் என்றார்.
எண்ணாகமம் 20 : 9 (RCTA)
ஆகையால், மோயீசன் ஆண்டவருடைய கட்டளைப்படி ஆண்டவருடைய முன்னிலையிலிருந்த கோலை எடுத்துக்கொண்டார்.
எண்ணாகமம் 20 : 10 (RCTA)
சபையெல்லாம் கற்பாறைக்கு முன்பாகக் கூடியபோது, மோயீசன் அவர்களை நோக்கி: விசுவாசமில்லாத குழப்பக்காரர்களே, கேளுங்கள்! இப்பாறையினின்று உங்களுக்குத் தண்ணீர் சுரக்கச் செய்வது எங்களால் கூடுமானதோ? என்று சொல்லி,
எண்ணாகமம் 20 : 11 (RCTA)
தன் கையை ஓங்கிக் கற்பாறையைக் கோலினால் இருமுறை அடித்தார். அதிலிருந்து தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது. மக்களெல்லாம் குடித்தார்கள்; மிருகங்களும் குடிக்கத் தொடங்கின.
எண்ணாகமம் 20 : 12 (RCTA)
பின்பு ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி: நீங்கள் நம்மை நம்பாமலும் இஸ்ராயேல் மக்கள் கண்களுக்கு முன்பாக நம் புனிதத் தன்மையைப் பேணாமலும் நடந்தீர்களாதலால், நாம் அவர்களுக்குக் கொடுக்கவிருக்கிற நாட்டிற்கு நீங்கள் அவர்களைக் கொண்டு போவதில்லை என்றார்.
எண்ணாகமம் 20 : 13 (RCTA)
இவ்விடத்தில் இஸ்ராயேல் மக்கள் ஆண்டவருக்கு விரோதமாய் வாக்குவாதம் செய்தும் அவருடைய புனிதத்தன்மை அவர்களிடையே விளங்கினதனாலே அந்தத் தண்ணீர் வாக்குவாதத் தண்ணீர் எனப்பட்டது.
எண்ணாகமம் 20 : 14 (RCTA)
பின்பு மோயீசன் காதேஸிலிருந்து ஏதோமின் அரசனிடம் தூதர்களை அனுப்பி: உம்முடைய சகோதரராகிய இஸ்ராயேல் உமக்குச் சொல்லும் செய்தி என்னவென்றால்: நாங்கள் பட்ட தொல்லையெல்லாம் உமக்குத் தெரியும்.
எண்ணாகமம் 20 : 15 (RCTA)
எங்கள் முன்னோர் எகிப்துக்குப் போனது, நாங்கள் எகிப்திலே நெடுநாள் வாழ்ந்திருந்தது, எகிப்தியர் எங்களையும் எங்கள் முன்னோர்களையும் துன்புறுத்தியது,
எண்ணாகமம் 20 : 16 (RCTA)
நாங்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடவே, அவர் எங்களைக் கேட்டருளி, எங்களை எகிப்திலிருந்து விடுதலையாக்கும்படி ஒரு தூதரை அனுப்பியது ஆகிய இவையெல்லாம் நீர் அறிவீர். இப்பொழுது நாங்கள் உமது கடையெல்லைக்கு அண்மையிலுள்ள காதேஸ் ஊரில் வந்திருக்கிறோம்.
எண்ணாகமம் 20 : 17 (RCTA)
நாங்கள் உமது நாட்டின் வழியாய்க் கடந்து போகும்படி உத்தரவு கொடுக்க மன்றாடுகிறோம். வயல்வெளிகள் வழியாகவும் கொடிமுந்திரித் தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும், உமது கிணற்றுத் தண்ணீரைக் குடியாமலும், நெடுஞ்சாலை வழி நடந்து, உமது எல்லைகளைத் தாண்டிப் போகுமட்டும் வலப்புறம் இடப்புறம் சாயாமல் நேராய்ச் செல்வோம் என்று சொல்லச் சொன்னார்.
எண்ணாகமம் 20 : 18 (RCTA)
அதற்கு ஏதோம்: நீ என் நாட்டின் வழியாய்க் கடந்து போகக் கூடாது; போனால், நான் படைகளோடு உன்னை எதிர்க்க வருவேன் என்று பதி சொல்ல,
எண்ணாகமம் 20 : 19 (RCTA)
இஸ்ராயேல் மக்கள்: நடப்பிலுள்ள பாதையில் செல்வோமேயன்றி, நாங்களும் எங்கள் மிருகங்களும் சிலவேளை உம்முடைய தண்ணீரைக் குடித்தால் அதற்குத் தகுந்த விலை கொடுப்போம். இதைப் பொறுத்தமட்டில் தடையொன்றும் இல்லை. நாங்கள் விரைவாய்க் கடந்து போவதே எங்களுக்குப் போதும் என்றனர்.
எண்ணாகமம் 20 : 20 (RCTA)
அதற்கு அவன்: இல்லை, போகக்கூடாது என்று கூறி, உடனே கணக்கற்ற மக்களோடும் பலத்தத படையோடும் எதிர் நிற்கப் புறப்பட்டான்.
எண்ணாகமம் 20 : 21 (RCTA)
இப்படி ஏதோம் தன் எல்லை வழியாகக் கடந்து போகும்படி கேட்டுக் கொண்ட இஸ்ராயேலுக்கு உத்தரவு கொடுக்கவில்லை. ஆதலால் இஸ்ராயேலர் சுற்று வழியாகப் போனார்கள்.
எண்ணாகமம் 20 : 22 (RCTA)
அவர்கள் காதேஸிலிருந்து புறப்பட்டு, ஓர் என்னும் மலையை அடைந்தார்கள். அந்த மலை ஏதோமின் எல்லைக்கு அண்மையில் உள்ளது.
எண்ணாகமம் 20 : 23 (RCTA)
அவ்விடத்திலே ஆண்டவர் மோயீசனை நோக்கி:
எண்ணாகமம் 20 : 24 (RCTA)
ஆரோன் தன் மக்களோடு சேர்க்கப்படக் கடவான். அவன் வாக்குவாதத் தண்ணீர் என்னப்பட்ட இடத்திலே நமது வார்த்தையை நம்பாததைப்பற்றி, நாம் இஸ்ராயேல் மக்களுக்குக் கொடுக்கும் நாட்டில் அவன் புகுவதில்லை.
எண்ணாகமம் 20 : 25 (RCTA)
ஆரோனையும், அவனோடு அவன் புதல்வனையும் நீ அழைத்துக் கொண்டு ஓர் என்னும் மலையின்மேல் ஏறி,
எண்ணாகமம் 20 : 26 (RCTA)
ஆரோன் அணிந்திருக்கிற ஆடைகளைக் கழற்றி, அவற்றை அவன் புதல்வனாகிய எலெயஸாருக்கு அணிவிக்கக்கடவாய். ஆரோன் அங்கே இறந்து, (தன் முன்னோரோடு) சேர்க்கப்படுவான் என்றார்.
எண்ணாகமம் 20 : 27 (RCTA)
மோயீசன் ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி செய்தார். மக்கள் எல்லாரும் பார்க்க அவர்கள் ஓர் என்னும் மலையில் ஏறினார்கள்.
எண்ணாகமம் 20 : 28 (RCTA)
அங்கே மோயீசன் ஆரோனுடைய ஆடைகளைக் கழற்றியெடுத்து, அவற்றை அவன் புதல்வனாகிய எலெயஸாருக்கு அணிவித்தான். (29) ஆரோன் மலையின் உச்சியில் இறந்து போனான். அப்போது மோயீசனும் எலெயஸாரும் இறங்கி வந்தார்கள்:
எண்ணாகமம் 20 : 29 (RCTA)
(30) ஆரோன் இறந்து போனான் என்று அறிந்து, எல்லா மக்களும் தத்தம் குடும்பத்தில் ஏழுநாள் துக்கம் கொண்டாடினார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29