எண்ணாகமம் 2 : 1 (RCTA)
மீண்டும் ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கிச் சொன்னதாவது:
எண்ணாகமம் 2 : 2 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் அவரவருடைய அணி வகுப்பு, விருது, கொடி, இனத்தாருடைய வீடு (முதலிய) ஒழுங்குப்படி தங்கள் தங்கள் கூடாரங்களை அடித்து சாட்சியக் கூடாரத்துக்குச் சுற்றிலும் பாளைய மிறங்குவார்கள்.
எண்ணாகமம் 2 : 3 (RCTA)
(எப்படியென்றால்) யூதா தன் படையின் அணிவகுப்புக் கீழ்ப்புறத்திலே கூடாரம் அடிக்கக் கடவான். அமினதாபுடைய புதல்வன் நகஸோன் யூதா கோத்திரத்தாருக்குத் தலைவனாய் இருப்பான்.
எண்ணாகமம் 2 : 4 (RCTA)
அவனுடைய கோத்திரத்திலுள்ள வீரர்களின் மொத்த எண்ணிக்கை, எழுபத்து நாலாயிரத்து அறுநூறு.
எண்ணாகமம் 2 : 5 (RCTA)
இவனருகில் சூவார் புதல்வனான நத்தானியேலைத் தலைவனாகக் கொண்டிருக்கும் இசாக்கார் கோத்திரத்தார் பாளையம் இறங்குவார்கள்.
எண்ணாகமம் 2 : 6 (RCTA)
இவனுடைய வீரர்களின் மொத்த எண்ணிக்கை, ஐம்பத்து நாலாயிரத்து நானூறு.
எண்ணாகமம் 2 : 7 (RCTA)
சாபுலோன் கோத்திரத்தின் தலைவன் எலோன் புதல்வன் எலியாப்.
எண்ணாகமம் 2 : 8 (RCTA)
இக்கோத்திரத்தைச் சேர்ந்த படைவீரர்கள் ஐம்பத்தேழாயிரத்து நானூறு பேர்.
எண்ணாகமம் 2 : 9 (RCTA)
யூதாவின் பாளையத்தில் எண்ணப்பட்டவர்கள் ஒரிலட்சத்து எண்பத்தாறாயிரத்து நானூறு பேர். புறப்படும்போது இவர்களே தங்கள் அணிகளின் ஒழுங்குப்படி முதலில் போகக்கடவார்கள்.
எண்ணாகமம் 2 : 10 (RCTA)
ரூபன் கோத்திரத்தார் தென்புறத்திலே பாளையமிறங்குவார்கள். செதெயூர் புதல்வனாகிய எலிசூர் அவர்களுக்குத் தலைவனாய் இருப்பான்.
எண்ணாகமம் 2 : 11 (RCTA)
அவனுடைய படையில் எண்ணப்பட்ட வீரர்கள் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறு பேர்.
எண்ணாகமம் 2 : 12 (RCTA)
இவனருகில் சுரிஸதையின் புதல்வன் சலமியேலைத் தலைவனாய்க் கொண்டிருக்கும் சிமையோனின் கோத்திரத்தார் பாளையம் இறங்குவார்கள்.
எண்ணாகமம் 2 : 13 (RCTA)
அவனுடைய படையில் எண்ணப்பட்ட வீரர்கள் ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறு பேர்.
எண்ணாகமம் 2 : 14 (RCTA)
காத் என்பவனின் கோத்திரத்தின் தலைவன், துயேலினுடைய புதல்வன் எலியஸாப்.
எண்ணாகமம் 2 : 15 (RCTA)
அவனுடைய படையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது பேர்.
எண்ணாகமம் 2 : 16 (RCTA)
ரூபனின் பளையத்தில் எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் ஒரிலட்சத்து ஐம்பத்தோராயிரத்து நானூற்றைம்பது பேர். பயணத்தின் போது இவர்களே தங்கள் தங்கள் அணிவகுப்பின் ஒழுங்குப்படி இரண்டாவதாய்ச் செல்லக்கடவார்கள்.
எண்ணாகமம் 2 : 17 (RCTA)
பின்பு சாட்சியக் கூடாரம் லேவியராலும் அவர்களைச் சேர்ந்தவர்களாலும் எடுத்துச் செல்லப்படும். அது எப்படிக் கட்டி நிறுவப்பட்டதோ அப்படியே பிரிக்கப்படும். அவர்கள் தத்தம் இடத்தில் வரிசைப்படி நடந்து செல்லக்கடவார்கள்.
எண்ணாகமம் 2 : 18 (RCTA)
எபிராயீம் புதல்வருடைய பாளையம் மேற்புறத்தில் இருக்கும். அமியூதின் புதல்வன் எலிஸமா அவர்களுக்குத் தலைவன்.
எண்ணாகமம் 2 : 19 (RCTA)
அவனுடைய படையில் எண்ணப்பட்ட வீரர்கள் நாற்பதினாயிரத்து ஐந்நூறு பேர்.
எண்ணாகமம் 2 : 20 (RCTA)
அவனருகே பதசூரின் புதல்வனாகிய கமலியேலைத் தலைவனாகக் கொண்ட மனாசேயின் புதல்வராகிய கோத்திரத்தார் (பாளையம் இறங்குவார்கள்).
எண்ணாகமம் 2 : 21 (RCTA)
அவனுடைய படையில் எண்ணப்பட்ட வீரர்கள் முப்பத்திரண்டாயிரத்து இருநூறு பேர்.
எண்ணாகமம் 2 : 22 (RCTA)
பெஞ்சமின் கோத்திரத்திற்குச் செதேயோனின் புதல்வனாகிய அபிதான் தலைவன்.
எண்ணாகமம் 2 : 23 (RCTA)
இவனுடைய படையில் எண்ணப்பட்ட வீரர்கள் முப்பத்தையாயிரத்து நானூறு பேர்.
எண்ணாகமம் 2 : 24 (RCTA)
எபிராயீம் பாளையத்திலே தங்கள் அணிவகுப்புப்படி எண்ணப்பட்ட வீரர்கள் ஒரிலட்சத்து எண்ணாயிரத்து நூறுபேர். இவர்கள் மூன்றாவதாய்ச் செல்வார்கள்.
எண்ணாகமம் 2 : 25 (RCTA)
தானின் புதல்வர்கள் வடக்கே பாளையம் இறங்குவார்கள். அவர்களுக்கு அமிசதாயின் புதல்வனான ஐயேசர் தலைவன்.
எண்ணாகமம் 2 : 26 (RCTA)
இவனுடைய படையில் எண்ணப்பட்டவர்கள் தொகை அறுபத்திரண்டாயிரத்து எழுநூறு.
எண்ணாகமம் 2 : 27 (RCTA)
அவனருகே ஆசேருடைய கோத்திரத்தார் பாளையம் இறங்குவார்கள். அவர்களுக்கு ஒக்கிரான் புதல்வன் பெகியேல் தலைவன்.
எண்ணாகமம் 2 : 28 (RCTA)
இவனுடைய சேனையில் எண்ணப்பட்ட வீரர்கள் நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு பேர்.
எண்ணாகமம் 2 : 29 (RCTA)
நெப்தலி கோத்திரத்தாருக்கு ஏனானின் புதல்வனான ஐரா தலைவன்.
எண்ணாகமம் 2 : 30 (RCTA)
இவனுடைய படையில் உட்பட்ட வீரர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர்.
எண்ணாகமம் 2 : 31 (RCTA)
தானின் பாளையத்திலே எண்ணப்பட்ட வீரர்களின் மொத்த எண்ணிக்கை, ஒரிலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறு. இவர்கள் கடைசியாய்ச் செல்வார்கள் என்றார்.
எண்ணாகமம் 2 : 32 (RCTA)
தங்கள் தங்கள் இனத்தாரின் வீடுகளின் படியும், படைப்பிரிவுகளின் அணிவகுப்பின் படியும் எண்ணப்பட்ட இஸ்ராயேல் மக்களின் தொகை ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது.
எண்ணாகமம் 2 : 33 (RCTA)
லேவியரோ ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே, இஸ்ராயேல் மக்களுக்குள் எண்ணப்படவில்லை.
எண்ணாகமம் 2 : 34 (RCTA)
ஆண்டவர் கட்டளையிட்டபடி இஸ்ராயேல் மக்கள் எல்லாவற்றையும் செய்து வந்தார்கள். அவர்கள் தங்கள் தங்கள் அணிவகுப்பின்படி பாளையம் இறங்கி, தங்கள் வம்ச, குடும்பங்களின் ஒழுங்குப்படி புறப்பட்டனர்.
❮
❯