எண்ணாகமம் 12 : 1 (RCTA)
எத்தியோப்பியப் பெண்ணை மோயீசன் மணந்தபடியால் மரியாளும் ஆரோனும் அவனுக்கு விரோதமாய்ப் பேசி:
எண்ணாகமம் 12 : 2 (RCTA)
ஆண்டவர் மோயீசனைக் கொண்டு மட்டுமா பேசினார்? எங்களைக் கொண்டும் அவர் பேசவில்லையா? என்றார்கள். ஆண்டவர் அதைக் கேட்டார்.
எண்ணாகமம் 12 : 3 (RCTA)
மோயீசனோ பூமியிலுள்ள எல்லா மனிதர்களைக் காட்டிலும் மிக்க சாந்தமுள்ளவராய் இருந்தார்.
எண்ணாகமம் 12 : 4 (RCTA)
திடீரென (ஆண்டவர்) அவரையும், ஆரோன், மரியாள் என்பவர்களையும் நோக்கி: நீங்கள் மூவருமே உடன்படிக்கைக் கூடாரத்திற்குப் புறப்பட்டு வாருங்கள் என்றார். அவர்கள் புறப்பட்டு வந்த பிறகு
எண்ணாகமம் 12 : 5 (RCTA)
ஆண்டவர் மேகத்தூணில் இறங்கி ஆலயப் புகுமுகத்தில் நின்றவராய், ஆரோனையும் மரியாளையும் அழைத்தார். இவர்கள் இருவரும் போனார்கள்.
எண்ணாகமம் 12 : 6 (RCTA)
அப்பொழுது அவர்: நம்முடைய வார்த்தைகளை உற்றுக் கேளுங்கள். உங்களுக்குள்ளே ஒருவன் ஆண்டவருடைய இறைவாக்கினனாய் இருந்தால், அவனுக்குத் தரிசனத்தில் நம்மைக் காண்பிப்போம்: அல்லது கனவிலே அவனோடு பேசுவோம்.
எண்ணாகமம் 12 : 7 (RCTA)
நம்முடைய ஊழியனாகிய மோயீசனோ அப்படிப்பட்டவனல்லவே. அவன் நம்முடைய வீட்டிலெங்கும் மிக்க விசுவாச முள்ளவனாய் இருக்கிறான்.
எண்ணாகமம் 12 : 8 (RCTA)
நாம் அவனோடு நேரிலே பேசுகிறோம். நம்மை அவன் மறைவிலேனும் போலியாயேனும் காணாமல், கண்கூடாகவே நம்மைக் காண்கிறான். ஆதலால், நீங்கள் நம் ஊழியனாகிய மோயீசனை விரோதித்துப் பேச அஞ்சாதிருப்பதேன்? என்று சொல்லி,
எண்ணாகமம் 12 : 9 (RCTA)
கோபத்துடன் அவர்களை விட்டு மறைந்தார்.
எண்ணாகமம் 12 : 10 (RCTA)
அவர் மறைந்தபோது கூடாரத்தின் மீதிருந்த மேகம் நீங்கிப் போயிற்று. நீங்கவே, மரியாள் உறைந்த பனிபோல் வெண் தொழுநோள் பிடித்த உடலுள்ளவளாய்க் காணப்பட்டாள். ஆரோன் அவளைப் பார்த்து, தொழுநோய் அவளை மூடினதென்று கண்டவுடனே,
எண்ணாகமம் 12 : 11 (RCTA)
மோயீசனை நோக்கி: தலைவா, நாங்கள் அறிவில்லாமல் செய்த இந்தப் பாவத்தை எங்கள் மேல் சுமத்த வேண்டாமென்று வேண்டுகிறேன்.
எண்ணாகமம் 12 : 12 (RCTA)
இவள் செத்தவளைப் போலவும், தாயின் கருவிலிருந்து செத்து விழுந்த பிள்ளைப் போலவும் ஆகாதிருப்பாளாக. இதோ ஏற்ககெனவே அவள் உடலில் பாதித்தசை தொழுநோயால் தின்னப்பட்டிருக்கிறதே! என்றான்.
எண்ணாகமம் 12 : 13 (RCTA)
அப்பொழுது மோயீசன் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டு: என் கடவுளே, உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். அவளைக் குணப்படுத்தியருளும் என்றார்.
எண்ணாகமம் 12 : 14 (RCTA)
அதற்கு ஆண்டவர்: அவள் தந்தை அவள் முகத்திலே காறி உமிழ்ந்திருந்தால், அவள் வெட்கப்பட்டு ஏழு நாளேனும் வெளிவராமல் இருக்க வேண்டுமன்றோ? அதுபோல், அவள் ஏழுநாள் பாளையத்திற்குப்புறம்பே விலக்கப்பட்டிருக்கட்டும். பிறகு திரும்ப அவளைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றார்.
எண்ணாகமம் 12 : 15 (RCTA)
அப்படியே மரியாள் ஏழு நாளும் பாளையத்திற்குப் புறம்பே விலக்கமாயினாள். அவள் சேர்த்துக் கொள்ளப்படும் வரையிலும் மக்கள் பயணப்படாமல் அங்கேயே இருந்தார்கள்.
எண்ணாகமம் 12 : 16 (RCTA)
(13:1) அப்பால் மக்கள் ஆசெரோத்தினின்று புறப்பட்டுப் போய், பாரான் என்னும் பாலைவனத்திலே கூடாரங்களை அடித்தார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16