எண்ணாகமம் 11 : 1 (RCTA)
அப்பொழுது ஒரு நாள் வழியில் தங்களுக்கு உண்டான களைப்பைப் பற்றி மக்கள் ஆண்டவருக்கு விரோதமாய் முறையிடத் தொடங்கினர். அதைக் கேட்டு ஆண்டவர் கோபம் கொண்டார். அவரால் உண்டாக்கப்பட்ட ஒரு நெருப்பு பாளையத்தின் கடைசி முனையை எரித்து அழித்து விட்டது.
எண்ணாகமம் 11 : 2 (RCTA)
அப்போது மக்கள் மோயீசனை நோக்கிக் கூக்குரலிட்டனர். மோயீசன் ஆண்டவரை மன்றாட நெருப்பு அவிந்து போயிற்று.
எண்ணாகமம் 11 : 3 (RCTA)
ஆண்டவருடைய நெருப்பு அவர்களிடையே பற்றி எரிந்ததனால், அவ்விடத்திற்கு நெருப்புக்காடு என்று அவர் பெயரிட்டார்.
எண்ணாகமம் 11 : 4 (RCTA)
பின்பு, இஸ்ராயேலரோடு கூட வந்திருந்த பல இன மக்கள் இறைச்சி உண்ண வேண்டுமென்று பேராசை கொண்டனர். அவர்கள் தங்களுடைய கட்சியில் பல இஸ்ராயலரையும் சேர்த்துக் கொண்டு, ஒரு மிக்க உட்கார்ந்து, அழுது: ஆ! நமக்கு இறைச்சியை உண்ணக் கொடுப்பவர் யார்?
எண்ணாகமம் 11 : 5 (RCTA)
நாம் எகிப்திலே செலவில்லாமல் உண்ட மீன்களையும், வெள்ளரிக் காய்களையும், கொம்மட்டிக் காய்களையும், பெரு முள்ளிக் கீரைகளையும் வெங்காய வெள்ளுள்ளிகளையும், நினைத்துக் கொள்ளுகிறோம்.
எண்ணாகமம் 11 : 6 (RCTA)
இப்பொழுதோ நமது உயிர் வாடுகிறது. மன்னாவைத் தவிர நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறோன்றும் இல்லையே என்றார்கள்.
எண்ணாகமம் 11 : 7 (RCTA)
மன்னாவோவென்றால் கொத்தமல்லி போலவும் உலூக முத்து நிறமாகவும் இருந்தது.
எண்ணாகமம் 11 : 8 (RCTA)
மக்கள் சுற்றித் திரிந்து அதைப் பொறுக்கிக் கொண்டு வந்து, எந்திரக் கல்லில் அரைத்து அல்லது உரலில் குத்தி யிடித்துச் சட்டியில் சமைப்பார்கள். பிறகு அதை அப்பங்களாக்குவார்கள். அதன் சுவை ஒலிவ எண்ணெயில் செய்த பணியாரத்தின் சுவை போல் இருக்கும்.
எண்ணாகமம் 11 : 9 (RCTA)
இரவு தோறும் பாளையத்தின்மீது பனி பெய்யும்போது மன்னாவும் பெய்யும்.
எண்ணாகமம் 11 : 10 (RCTA)
மக்கள் தங்கள் குடும்பத்தோடு தத்தம் கூடார வாயிலிலே அழுவதை மோயீசன் கேட்டார். ஆண்டவருக்கும் கோபம் மூண்டது; மோயீசனால் அதைப் பொறுக்க முடியவில்லை.
எண்ணாகமம் 11 : 11 (RCTA)
அவர் ஆண்டவரை நோக்கி: ஆண்டவரே அடியேனை வதைத்ததேன்? உமக்கு முன்பாக எனக்குக் கருணை கிடையாததென்ன? நீர் இந்த எல்லா மக்கள் பாரத்தையும் என்மேல் சுமத்தியதென்ன?
எண்ணாகமம் 11 : 12 (RCTA)
இந்த மக்களையெல்லாம் கருத்தாங்கியவன் நானோ? நானோ அவர்களைப் பெற்றெடுத்தேன்? அப்படியிருக்க நீர் அடியேனை நோக்கி: தாய்ப்பாலை உண்ணும் குழந்தையைச் சுமப்பதுபோல் நீ அவர்களை உண் மடியிலே சுமந்து கொண்டுபோ, நாம் ஆணையிட்டு அவர்களது முன்னோருக்கு வாக்குறுதி செய்துள்ள நாட்டிற்கு அவர்களை அழைத்துக்கொண்டு போ என்று எனக்குச் சொல்வானேன்?
எண்ணாகமம் 11 : 13 (RCTA)
இத்தனை மக்களுக்குக் கொடுக்க இறைச்சி எனக்கு எங்கிருந்து கிடைக்கும்? உண்ண எங்களுக்கு இறைச்சி கொடு என்று என்னைப் பார்த்து அழுது முறையிடுகிறார்களே!
எண்ணாகமம் 11 : 14 (RCTA)
இவர்கள் எல்லாரையும் நான் ஒருவனாகத் தாங்கக் கூடுமா? இது என்னாலே இயலாது.
எண்ணாகமம் 11 : 15 (RCTA)
ஆண்டவருடைய திருவுளம் என் விருப்பத்திற்கு இணங்குவது இயலாதாயின், இப்படிப்பட்ட சகிக்கக் கூடாத தொல்லையை நான் காணாதிருக்க, இறைவா இப்பொழுதே என்னைக் கொன்று விட்டு, உம்முடைய கண்களில் எனக்குக் கருணை கிடைக்கும்படி செய்தலே நலம் என்று சொன்னார்.
எண்ணாகமம் 11 : 16 (RCTA)
ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ இஸ்ராயேலிலுள்ள முதியோரில் மக்களை ஆளத்தக்கவர்களும் வயதில் முதியோர் எனவும், உனக்குத் தெரிந்த எழுபது பேரைத் தெரிந்து கொண்டு, உடன்படிக்கைக் கூடார வாயிலில், உன்னோடு கூட வந்து நிற்கும்படி செய்.
எண்ணாகமம் 11 : 17 (RCTA)
நாம் இறங்கிவந்து உன்னோடு பேசி, நீ ஒருவனாய் மக்களின் பாரத்தைச் சுமக்காமல், அவர்கள் அதைச் சுமக்க உனக்கு உதவிசெய்ய உன்மேல் இருக்கிற ஆவியில் வேண்டியமட்டும் நாம் எடுத்து அவர்கள்மேல் வைப்போம்.
எண்ணாகமம் 11 : 18 (RCTA)
இதுவும் தவிர, நீ மக்களை நோக்கி: உங்களைப் புனிதப் படுத்திக் கொள்ளுங்கள். நாளைக்கு இறைச்சி உண்பீர்கள். எங்களுக்கு இறைச்சியை உண்ணக் கொடுப்பவர் யார்? என்றும், எகிப்திலே எங்களுக்கு வசதியாய் இருந்தது என்றும் சொன்னதைக் கேட்டிருக்கிறேன். ஆதலால், நீங்கள் உண்ணும் பொருட்டு ஆண்டவர் உங்களுக்கு இறைச்சியைக் கொடுப்பார்.
எண்ணாகமம் 11 : 19 (RCTA)
நீங்கள் ஒரு நாள், இரண்டு நாள், ஐந்து, பத்து இருபது நாட்கள் மட்டுமல்ல, ஒரு மாதம் வரையிலும் உண்பீர்கள்.
எண்ணாகமம் 11 : 20 (RCTA)
உங்கள் மூக்கு வழியே வெளிப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப் போகு மட்டும் உண்பீர்கள். ஏனென்றால், நீங்கள் ஆண்டவரை நிந்தித்து: நாங்கள் எகிப்தை விட்டு ஏன் புறப்பட்டோம்? என்று அவருடைய முன்னிலையில் அழுதீர்களே என்று சொல் என்றார்.
எண்ணாகமம் 11 : 21 (RCTA)
அதற்கு மோயீசன் ஆண்டவரை நோக்கி: அவர்கள் ஆறிலட்சம் பேர் காலாட்படையினராயிருக்க, ஒரு மாதம் முழுவதும் அவர்களுக்கு இறைச்சியை உண்ணத் தருவோம் என்று நீர் சொல்கிறீரே;
எண்ணாகமம் 11 : 22 (RCTA)
அவர்களுக்குப் போதுமாயிருக்கும்படி ஆடுமாடுகளை யெல்லாம் அடிக்க வேண்டுமோ? அல்லது, கடல் மீன்களையெல்லாம் சேர்த்துப் பிடித்தாலும் அவர்களுக்குத் திருப்தி கொடுக்கப் போதுமாயிருக்குமோ? என்று கேட்டார்.
எண்ணாகமம் 11 : 23 (RCTA)
ஆண்டவர்: ஆண்டவருடைய கை பலவீனமாய்ப் போயிற்றோ? இதோ நம்முடைய வாக்குப்படி நடக்குமோ நடவாதோவென்று நீ இப்பொழுதே காண்பாய் என்றார்.
எண்ணாகமம் 11 : 24 (RCTA)
ஆகையால் மோயீசன் போய், ஆண்டவருடைய வார்த்தைகளை மக்களுக்குச் சொல்லி, இஸ்ராயேல் முதியோரில் எழுபது பேரைக் கூட்டி வந்து, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினார்.
எண்ணாகமம் 11 : 25 (RCTA)
ஆண்டவரோ மேகத்தினின்று இறங்கி வந்து மோயீசனோடு உரையாடிய பின்பு மோயீசனிடத்திலிருந்த ஆவியை அவ்வெழுபது பேருக்கும் பிரித்துக் கொடுத்தார். ஆவி தங்கள் மேல் வந்த தங்கினவுடனே அவர்கள் இறைவாக்குரைக்கத் தொடங்கினார்கள். அந்நாள் முதல் அவர்கள் இடைவிடாது இறைவாக்குரைத்தார்கள்.
எண்ணாகமம் 11 : 26 (RCTA)
அப்பொழுது எல்தாத், மேதாத் என்று அழைக்கப்படும் இரண்டு ஆடவர்மேல் ஆவி இறங்கியிருந்தும், அவர்கள் (எழுபது முதியோருடைய) பெயர்ப்பட்டியலில் எழுதப்பட்டிருந்தும், சாட்சியக் கூடாரத்திற்கு எழுந்து வராமல் பாளையத்திலே இருந்து கொண்டார்கள்.
எண்ணாகமம் 11 : 27 (RCTA)
அவர்கள் பாளையத்திலே இறைவாக்குரைக்கும் போது சிறுவன் ஒருவன் மோயீசனிடம் ஓடி வந்து: இதோ எல்தாத், மேதாத் என்பவர்கள் பாளையத்திலே இறைவாக்குரைக்கிறார்கள் என அறிவித்தான்.
எண்ணாகமம் 11 : 28 (RCTA)
உடனே, நூனின் புதல்வனும் மோயீசனுடைய ஊழியர்களில் சிறந்தவனுமாகிய ஜோசுவா மோயீசனை நோக்கி: தலைவா! அதைத் தடை செய்யும் என்றான்.
எண்ணாகமம் 11 : 29 (RCTA)
அதற்கு மோயீசன்: என் காரியத்தில் நீ எரிச்சலாய் இருப்பானேன்? (மக்கள்) எல்லாருமே இறைவாக்கினர் ஆக ஆண்டவர் அவர்கள் மேல் தம்முடைய ஆவியைத் தந்தால் நலமாயிருக்குமே என்றார்.
எண்ணாகமம் 11 : 30 (RCTA)
பின்னும் மோயீசன் இஸ்ராயேல் முதியவரோடு கூடப் பாளையத்திற்குத் திரும்பி வந்தார்.
எண்ணாகமம் 11 : 31 (RCTA)
நிற்க, ஆண்டவர் வீசச் செய்த ஒரு காற்று கடலுக்கு அப்பாலுள்ள நாட்டிலிருந்து காடைகளைத் (திரளாக) அடித்துக் கொண்டு வர, பாளையத்தில் மட்டு மல்ல - பாளையத்தைச் சுற்றிலும், ஒரு நாள் பயணம் எவ்வளவோ அவ்வளவு தொலை வரையிலும், காடைக் கூட்டம் பறந்து, தரையின் மேலே இரண்டு முழ உயரத்திலே பறந்து கொண்டிருந்தது.
எண்ணாகமம் 11 : 32 (RCTA)
அதைக் கண்டு மக்கள் எழுந்து, அன்று பகல் முழுவதும் இரவு முழுவதும் மறு நாளிலும் காடைகளைப் பிடித்துச் சேர்த்தார்கள். கொஞ்சமாய்ச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்திருந்தான். அவர்கள் அவற்றைப் பாளையத்தைச் சுற்றிலும் காயவிட்டார்கள்.
எண்ணாகமம் 11 : 33 (RCTA)
பற்களிடையே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்று கொண்டிருக்கையில் இதோ அவர்கள் மேல் ஆண்டவருடைய கோபம் மூண்டு, மாபெரும் வாதையாக அவர்களை வதைத்தது.
எண்ணாகமம் 11 : 34 (RCTA)
அதனை முன்னிட்டு அந்த இடத்திற்கு இச்சைக் கோரி என்று பெயரிடப்பட்டது. ஏனென்றால், எவரெவர் இறைச்சி மீது இச்சை கொண்டிருந்தார்களோ அவர்களை அவ்விடத்தில் அடக்கம் செய்தார்கள்.
எண்ணாகமம் 11 : 35 (RCTA)
(34b) பிறகு அவர்கள் அவ்விடம் விட்டு, ஆசெரோத்திலே வந்து தங்கினார்கள்.
❮
❯