எண்ணாகமம் 10 : 1 (RCTA)
மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
எண்ணாகமம் 10 : 2 (RCTA)
பாளையம் பெயரும்படி சபையை வரவழைப்பதற்கு உபயோகிக்க இரண்டு வெள்ளி எக்காளங்களைச் செய்து கொள்வாய். அவை சுத்தியால் அடித்துச் செய்யப்பட்டதாய் இருக்க வேண்டும்.
எண்ணாகமம் 10 : 3 (RCTA)
நீ எக்காளம் ஊதும்போது சபையார் எல்லாரும் உடன்படிக்கைக் கூடாரவாயிலின் முன் உன்னிடம் வந்து கூட வேண்டும்.
எண்ணாகமம் 10 : 4 (RCTA)
நீ ஒரே தடவை ஊதினால் தலைவர்களும் இஸ்ராயேல் கோத்திரங்களின் தலைவர்களும் உன்னிடம் வந்து கூடக்கடவார்கள்.
எண்ணாகமம் 10 : 5 (RCTA)
எக்காளம் பெருந்தொனியாய் முழங்க நிறுத்தி நிறுத்தி ஊதினால், கிழக்கில் இருக்கிற பாளையங்கள் முதலில் புறப்படக்கடவன.
எண்ணாகமம் 10 : 6 (RCTA)
எக்காளத்தின் இரண்டாவது தொனி, முதல் தொனியைப்போல் இருந்தால், தெற்கே இறங்கியிருக்கிறவர்கள் தங்கள் கூடாரங்களைப் பெயர்ப்பார்கள். இப்படி எக்காளங்கள் முழங்க முழங்க மற்றுமுள்ள பாளையங்களும் ஒன்றன்பின் ஒன்றாகப் புறப்படக்கடவன.
எண்ணாகமம் 10 : 7 (RCTA)
மக்களைக் கூட்டுவதற்கு நீங்கள் சாதாரணமாய் ஊத வேண்டுமேயல்லாது முழங்க வேண்டாம்.
எண்ணாகமம் 10 : 8 (RCTA)
ஆரோனின் புதல்வராகிய குருக்களே எக்காளம் ஊதக்கடவார்கள். இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய முறைமையாக இருக்கும்.
எண்ணாகமம் 10 : 9 (RCTA)
உங்களை விரோதிக்கிற பகைவர்களோடு போராட உங்கள் நாட்டினின்று புறப்படுகையில், நீங்கள் எக்காளத்தைப் பெருந்தொனியாய் ஊதுவீர்கள். அப்போது உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைப் பகைவரிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென்று நினைப்பார்.
எண்ணாகமம் 10 : 10 (RCTA)
உங்கள் விருந்துகளிலும், திருநாட்களிலும், மாதத்தின் முதல் நாள் என்றும் நீங்கள் சமாதானப் பலி, முழுத் தகனப் பலிகள் முதலியன செலுத்தும்போது கடவுள் உங்களை நினைவுகூரும்படியாய் எக்காளங்களை முழக்கக்கடவீர்கள். நாமே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்று திருவுளம்பற்றினார்.
எண்ணாகமம் 10 : 11 (RCTA)
அப்படியிருக்க, இரண்டாம் ஆண்டிலே இரண்டாம் மாதம் இருபதாம் நாளன்று உடன்படிக்கைக் கூடாரத்தினின்று மேகம் எழுந்துவிடவே,
எண்ணாகமம் 10 : 12 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் தத்தம் அணி வரிசையின்படி சீனாய்ப் பாலைவனத்திலிருந்து புறப்பட்டார்கள். மேகம் பாரான் என்னும் பாலையில் தங்கிற்று.
எண்ணாகமம் 10 : 13 (RCTA)
மோயீசன் மூலமாய் ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி, அப்போது முதன் முதல் பிரயாணமானவர்கள்,
எண்ணாகமம் 10 : 14 (RCTA)
அமினதாபின் புதல்வனாகிய நகஸோனைத் தலைவனாய்க் கொண்டிருந்த யூதா புதல்வர்களின் சேனையாம். அவர்கள் தங்கள் அணி வரிசையின்படி புறப்பட்டார்கள்.
எண்ணாகமம் 10 : 15 (RCTA)
சுவாரின் புதல்வனாகிய நத்தானியேலைத் தலைவனாகக் கொண்டிருந்த இசாக்கார் கோத்திரத்தார் பிறகு பயணமானார்கள்.
எண்ணாகமம் 10 : 16 (RCTA)
ஏலோனின் புதல்வனாகிய எலியாபைத் தலைவனாகக் கொண்டிருந்த சபுலோன் கோத்திரத்தார் பிறகு புறப்பட்டார்கள்.
எண்ணாகமம் 10 : 17 (RCTA)
அப்போது கடவுளின் உறைவிடத்தை இறக்கி வைத்து ஜேற்சோனின் புதல்வர்களும் மேறாரின் புதல்வர்களும் அதைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டார்கள்.
எண்ணாகமம் 10 : 18 (RCTA)
அப்பொழுது ரூபனின் புதல்வர் தங்கள் தங்கள் அணி வரிசைகளின்படி புறப்பட்டார்கள். அவர்களுக்குச் செதேயூரின் புதல்வனாகிய எலிசூர் தலைவனாய் இருந்தான்.
எண்ணாகமம் 10 : 19 (RCTA)
பின்பு சுரிஸதையின் புதல்வனாகிய சலமியேலைத் தலைவனாகக் கொண்டிருந்த சிமையோனின் கோத்திரத்தார் (பின் தொடர்ந்தார்கள்).
எண்ணாகமம் 10 : 20 (RCTA)
அதன் பிறகு துயேலின் புதல்வனாகிய எலியசாப் தலைவனாயிருந்த காத் கோத்திரத்தார் (புறப்பட்டனர்).
எண்ணாகமம் 10 : 21 (RCTA)
அப்போது ககாத்தியர் புனித மூலத்தானத்தைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள். புனித கூடாரம் எவ்விடத்தில் நிறுவப்படுமோ அவ்விடம் சேருமட்டும் அவர்கள் அதைச் சுமந்து போவார்கள்.
எண்ணாகமம் 10 : 22 (RCTA)
பின்னர் எபிராயிம் கோத்திரத்தார் தங்கள் தங்கள் அணி வரிசையின்படி புறப்பட்டார்கள். அவர்களுக்கு அமியூதின் புதல்வனாகிய எலிஸமா தலைவனாய் இருந்தான்.
எண்ணாகமம் 10 : 23 (RCTA)
மனாசே கோத்திரத்தாருக்குப் பதசூரின் புதல்வனாகிய கமாலியேல் தலைவனாய் இருந்தான்.
எண்ணாகமம் 10 : 24 (RCTA)
(இவர்கள் பிறகு வழி நடந்தார்கள்). பெஞ்சமின் கோத்திரத்தாருக்குச் செதெயோன் புதல்வனாகிய அபிதான் தலைவனாய் இருந்தான். (இவர்கள் பின் தொடர்ந்து போனார்கள்).
எண்ணாகமம் 10 : 25 (RCTA)
எல்லாப் படைகளுக்கும் கடைசிப் படையாகிய தான் கோத்திரத்தார் மற்றவர்களுக்குப் பின் தத்தம்அணி வரிசைப்படி பயணமானார்கள். அவர்களுக்கு அமிசதாய் புதல்வன் ஐயேசர் தலைவனாய் இருந்தான்.
எண்ணாகமம் 10 : 26 (RCTA)
ஆசேர் கோத்திரத்தாருக்கு ஒக்கிரானின் புதல்வனாகிய பெகியேல் தலைவனாய் இருந்தான்.
எண்ணாகமம் 10 : 27 (RCTA)
நெப்தலி கோத்திரத்தாருக்கு ஏனானின் புதல்வன் ஐரா தலைவனாய் இருந்தான்.
எண்ணாகமம் 10 : 28 (RCTA)
இஸ்ராயேல் மக்களை பாளையத்திலிருந்து புறப்படும்போது இவ்விதமாய் தத்தம் அணி வரிசையின்படி செல்வார்கள்.
எண்ணாகமம் 10 : 29 (RCTA)
அப்பொழுது மோயீசன் தம் மாமனாகிய இராகுவேல் என்னும் மதியானியனுடைய புதல்வனான ஓபாப் என்பவனை நோக்கி: கடவுள் எங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டிற்குப் போகிறோம். நீயும் எங்களோடு கூட வந்தால் உனக்கு நன்மை செய்வோம். ஆண்டவர் இஸ்ராயேலருக்கு நல்ல வாக்குறுதி தந்திருக்கிறார் என்று சொன்னார்.
எண்ணாகமம் 10 : 30 (RCTA)
அதற்கு அவன்: உம்மோடு நான் வர மாட்டேன். நான் பிறந்த நாட்டிற்குத் திரும்பிப் போவேன் என்று பதில் கூற,
எண்ணாகமம் 10 : 31 (RCTA)
மோயீசன், நீ எங்களை விட்டுப் போக வேண்டாம். பாலைவனத்தில் நாங்கள் பாளையம் இறங்கத் தக்க இடங்களை நீ அறிந்திருப்பதினால் எங்களுக்கு வழிகாட்டியாய் இருப்பாய்.
எண்ணாகமம் 10 : 32 (RCTA)
அப்படி எங்களோடு அந்நாட்டில் போய்ச் சேரும்போது ஆண்டவர் எங்களுக்குத் தந்தருளும் நன்மைகளிலே எது சிறந்ததோ அதை உனக்குக் கொடுப்போம் என்றார்.
எண்ணாகமம் 10 : 33 (RCTA)
ஆகையால், அவர்கள் ஆண்டவருடைய மலையை விட்டு மூன்று நாளும் நடந்து போகையில் ஆண்டவருடைய பெட்டகம் முன்னே சென்று, அவர்கள் அம் மூன்று நாளிலும் பாளையம் இறங்கவேண்டிய இடங்களைக் காண்பித்து வந்தது.
எண்ணாகமம் 10 : 34 (RCTA)
போகும் போது, ஆண்டவருடைய மேகம் பகலிலே அவர்களுக்கு மேலே தங்கிக் கொண்டிருந்தது.
எண்ணாகமம் 10 : 35 (RCTA)
பெட்டகம் தூக்கப்படும்போது, மோயீசன்: ஆண்டவரே! எழுந்தருளும். உமது பகைவர் சிதறுண்டு போகவும், உம்மைப் பழிக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போகவும் கடவார்களாக என்பார்.
எண்ணாகமம் 10 : 36 (RCTA)
அது இறக்கப்படும் போதோ: நீர் இஸ்ராயேல் என்னும் பெரும் படையிடம் திரும்பிவீராக என்பார்.
❮
❯