எண்ணாகமம் 1 : 1 (RCTA)
மீண்டும் இஸ்ராயேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட மறு ஆண்டில் இரண்டாம் மாதம் முதல் நாள், ஆண்டவர் சீனாய்ப் பாலைவனத்தில் இருந்த உடன்படிக்கைக் கூடாரத்திலே மோயீசனை நோக்கி:
எண்ணாகமம் 1 : 2 (RCTA)
நீங்கள் இஸ்ராயேல் மக்களுடைய முழுச்சபையையும் அவரவர் வீடு, வம்சம்படி எண்ணுவீர்களாக. ஆடவர் எல்லாரையும் பெயர் குறித்து எழுதுவீர்களாக.
எண்ணாகமம் 1 : 3 (RCTA)
நீயும் ஆரோனும் இஸ்ராயேலரிலே இருபது வயது முதற்கொண்டு வலிமை மிக்கவர் எல்லாரையும் அணி அணியாய் எண்ணுவீர்களாக.
எண்ணாகமம் 1 : 4 (RCTA)
ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும், தங்கள் வம்சத்திலும் குடும்பத்திலும் தலைவர்களாய் இருப்பவர்கள் உங்களோடு இருப்பார்களாக.
எண்ணாகமம் 1 : 5 (RCTA)
இவர்களுடைய பெயர்களாவன: ரூபனின் கோத்திரத்திலே செதெயூருடைய புதல்வனான எலிசூர்,
எண்ணாகமம் 1 : 6 (RCTA)
சிமையோனின் கோத்திரத்தில் சுரிஸதையுடைய புதல்வனான சலமியேல்;
எண்ணாகமம் 1 : 7 (RCTA)
யூதாவின் கோத்திரத்தில்அமினதாபுடைய புதல்வனான நகஸோன்;
எண்ணாகமம் 1 : 8 (RCTA)
இசாக்காரின் கோத்திரத்தில் சுயாருடைய புதல்வனான நத்தானியேல்;
எண்ணாகமம் 1 : 9 (RCTA)
சாபுலோன் கோத்திரத்தில் ஏலோனுடைய புதல்வனான எலியாப்.
எண்ணாகமம் 1 : 10 (RCTA)
சூசையின் புதல்வருக்குள் எபிராயீம் கோத்திரத்தில் அமியூனின் புதல்வனான எலிஸமா; மனாசே கோத்திரத்தில் பதசூருடைய புதல்வனான கமலீயேல்.
எண்ணாகமம் 1 : 11 (RCTA)
பெஞ்சமின் கோத்திரத்தில் செதேயோனின் புதல்வனான அபிதான்;
எண்ணாகமம் 1 : 12 (RCTA)
தான் கோத்திரத்தில் அமிசதாயின் புதல்வனான ஐயேசர்.
எண்ணாகமம் 1 : 13 (RCTA)
ஆசேர் கோத்திரத்தில் ஒக்கிரானுடைய புதல்வனான பெகியேல்;
எண்ணாகமம் 1 : 14 (RCTA)
காத் கோத்திரத்தில் துயேலுடைய புதல்வனான எலியஸாப்;
எண்ணாகமம் 1 : 15 (RCTA)
நெப்தலி கோத்திரத்தில் ஏனானுடைய புதல்வனான ஐரா.
எண்ணாகமம் 1 : 16 (RCTA)
இவர்களே தம்தம் கோத்திரங்களிலும் வம்சங்களிலும் மிகப் புகழ் பெற்ற சபைப் பிரபுக்களும், இஸ்ராயேலரில் படைத் தலைவர்களுமாய் இருப்பார்கள் என்றருளினார்.
எண்ணாகமம் 1 : 17 (RCTA)
அப்படியே மோயீசனும் ஆரோனும் மேற்கூறப்பட்ட பிரபுக்களையும் இஸ்ராயேலின் முழுச் சபையையும் வரச்சொல்லி,
எண்ணாகமம் 1 : 18 (RCTA)
இரண்டாம் மாதம் முதல் நாள் (பொதுக்) கூட்டங் கூட்டி, ஆடவரெல்லாரையும் அவரவருடைய வம்சம் வீடு, குடும்பம், ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி எழுதி, இருபதும் அதற்கு மேற்பட்ட வயதுள்ளவர்களையும் எண்ணிப் பார்த்தனர்.
எண்ணாகமம் 1 : 19 (RCTA)
அப்படிச் செய்யும்படி ஆண்டவர் கட்டளையிட்டிருந்தார். அவர்கள் சீனாய்ப் பாலைவனத்திலே எண்ணப்பட்டனர்.
எண்ணாகமம் 1 : 20 (RCTA)
இஸ்ராயேலுடைய மூத்த புதல்வனான ரூபனின் கோத்திரத்தில், அவரவருடைய வம்சம், குடும்பம், வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க ஆடவரின் எண்ணிக்கை,
எண்ணாகமம் 1 : 21 (RCTA)
நாற்பத்தாறயிரத்து ஐந்நூறு.
எண்ணாகமம் 1 : 22 (RCTA)
சிமையோனின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க ஆடவரின் எண்ணிக்கை,
எண்ணாகமம் 1 : 23 (RCTA)
ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறு.
எண்ணாகமம் 1 : 24 (RCTA)
காத்தின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க வீரரின் எண்ணிக்கை,
எண்ணாகமம் 1 : 25 (RCTA)
நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது.
எண்ணாகமம் 1 : 26 (RCTA)
யூதாவின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க வீரரின் எண்ணிக்கை,
எண்ணாகமம் 1 : 27 (RCTA)
எழுபத்து நாலாயிரத்து அறுநூறு.
எண்ணாகமம் 1 : 28 (RCTA)
இசாக்காரின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க வீரரின் எண்ணிக்கை,
எண்ணாகமம் 1 : 29 (RCTA)
ஐம்பத்து நாலாயிரத்து நானூறு.
எண்ணாகமம் 1 : 30 (RCTA)
சாபுலோனின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க வீரரின் எண்ணிக்கை,
எண்ணாகமம் 1 : 31 (RCTA)
ஐம்பத்தேழாயிரத்து நானூறு.
எண்ணாகமம் 1 : 32 (RCTA)
சூசையுடைய புதல்வருக்குள் எபிராயீமின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயது முதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,
எண்ணாகமம் 1 : 33 (RCTA)
நாற்பதினாயிரத்து ஐந்நூறு.
எண்ணாகமம் 1 : 34 (RCTA)
மனாசேயுடைய புதல்வரின், அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்கப்படி, இருபது வயது முதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,
எண்ணாகமம் 1 : 35 (RCTA)
முப்பத்திரண்டாயிரத்து இருநூறு.
எண்ணாகமம் 1 : 36 (RCTA)
பெஞ்சமினுடைய புதல்வரிலே, அவரவரருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயதுமுதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,
எண்ணாகமம் 1 : 37 (RCTA)
முப்பத்தையாயிரத்து நானூறு.
எண்ணாகமம் 1 : 38 (RCTA)
தானுடைய புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,
எண்ணாகமம் 1 : 39 (RCTA)
அறுபத்திரண்டாயிரத்து எழுநூறு.
எண்ணாகமம் 1 : 40 (RCTA)
ஆசேருடைய புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயதுமுதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,
எண்ணாகமம் 1 : 41 (RCTA)
நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு.
எண்ணாகமம் 1 : 42 (RCTA)
நெப்தலியுடைய புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயதுமுதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,
எண்ணாகமம் 1 : 43 (RCTA)
ஐம்பத்து மூன்றாயிரத்து நானூறு
எண்ணாகமம் 1 : 44 (RCTA)
மோயீசனலேயும், ஆரோனாலேயும், பன்னிரண்டு பிரபுக்களாலேயும் எண்ணப்பட்டவர்கள் இவர்களேயாம். ஒவ்வொருவரும் அவரவர் வம்சத்து வீட்டின் ஒழுங்குப்படி (எண்ணப்பட்டனர்.).
எண்ணாகமம் 1 : 45 (RCTA)
ஆகையால், இருபது வயதுமுதல் தத்தம் வம்சப்படியும் குடும்பப்படியும் எண்ணப்பட்ட இஸ்ராயேல் மக்களுக்குள்ளே போருக்குப் போகத்தக்க வீரர்களின் மொத்தத் தொகை,
எண்ணாகமம் 1 : 46 (RCTA)
ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது.
எண்ணாகமம் 1 : 47 (RCTA)
லேவியரோ தங்கள் குடும்பக் கோத்திரத்திலே எண்ணப்படவில்லை.
எண்ணாகமம் 1 : 48 (RCTA)
ஏனென்றால், ஆண்டவர் மோயீசனை நோக்கி:
எண்ணாகமம் 1 : 49 (RCTA)
நீ லேவியரின் கோத்திரத்தை எண்ணவும் வேண்டாம்; அவர்களின் தொகையை இஸ்ராயேல் மக்களின் கணக்கிலே சேர்க்கவும் வேண்டாம்.
எண்ணாகமம் 1 : 50 (RCTA)
அவர்களைச் சாட்சியக் கூடாரத்தையும், அதனில் பயன்படும் எல்லாத் தட்டுமுட்டுகளையும், சடங்கு முறைகளுக்கு அடுத்தவைகளையும் கவனிக்கும்படி ஏற்படுத்து. அவர்களே கூடாரத்தையும் அதன் எல்லாப் பொருட்களையும் சுமந்து போகவும், ஊழியம் புரியவும் கடவார்கள். அவர்கள் கூடாரத்தைச் சுற்றிலும் பாளையம் இறங்குவார்கள்.
எண்ணாகமம் 1 : 51 (RCTA)
புறப்பட வேண்டிய போது லேவியரே கூடாரத்தைப் பிரித்து வைப்பார்கள். பாளையம் இறங்க வேண்டியிருக்குங்கால், அதை அவர்களே நிறுவி வைப்பார்கள். அந்நியன் எவனேனும் அதன் அருகே வந்தால் அவன் கொல்லப்படுவான்.
எண்ணாகமம் 1 : 52 (RCTA)
இஸ்ராயேல் மக்களோ தங்கள் தங்கள் அணிவகுப்பு, கொடி, படை ஆகியவற்றின்படி பாளையம் இறங்குவார்கள்.
எண்ணாகமம் 1 : 53 (RCTA)
லேவியரோ இஸ்ராயேல் மக்கட்சபை (கடவுளின்) கோபத்திற்கு உள்ளாகாதபடிக்குத் (திருக்) கூடாரத் தண்டையில் தங்கள் கூடாரங்களை விரித்துக் கட்டி, சாட்சியக் கூடாரத்தைக் காக்கும் அலுவலை மேற்கொள்வார்கள் என்றருளினார்.
எண்ணாகமம் 1 : 54 (RCTA)
ஆகையால், இஸ்ராயேல் மக்கள் ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் செய்து வந்தார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54

BG:

Opacity:

Color:


Size:


Font: