நெகேமியா 12 : 1 (RCTA)
சலாத்தியேலின் மகன் ஜொரோபாபேலுடனும் யோசுவாவுடனும் வந்த குருக்களும் லேவியர்களும் வருமாறு: சராயியா, எரெமியாஸ்,
நெகேமியா 12 : 2 (RCTA)
எஸ்ரா, அமாரியா, மெல்லூக், காத்தூஸ்,
நெகேமியா 12 : 3 (RCTA)
செபேனியாஸ், ரெகூம், மெரிமோத்,
நெகேமியா 12 : 4 (RCTA)
அத்தோ, கிநெதோன்,
நெகேமியா 12 : 5 (RCTA)
ஆபியா, மீயாமின்,
நெகேமியா 12 : 6 (RCTA)
மாதியா, பேல்கா, செமேயியா, யோயியாரீப், இதாயியா, செல்லும், ஆமோக், கெல்கியாஸ், இதாயியா ஆகியோரே.
நெகேமியா 12 : 7 (RCTA)
இவர்கள் யோசுவாவின் நாட்களில் குருக்களுக்கும் தங்கள் சகோதரர்களுக்கும் தலைவராய் விளங்கி வந்தனர்.
நெகேமியா 12 : 8 (RCTA)
லேவியர்களில் யோசுவா, பென்னுயீ, கேத்மியேல், சரேபியா, யூதா, மத்தானியாஸ் ஆகியோரே. மத்தானியாசும் அவன் சகோதரர்களும் நன்றிப் பாடல்கள் பாடுவோர்க்குத் தலைவர்களாய் இருந்தனர்.
நெகேமியா 12 : 9 (RCTA)
பெக்பேகியாவும், உன்னி என்ற அவர் சகோதரரும் திருப்பணி வேளையில் அவர்களுக்கு எதிரே நின்றனர்.
நெகேமியா 12 : 10 (RCTA)
யோசுவா யோவாக்கீமைப் பெற்றான்; யோவாக்கீம் எலியாசிப்பைப் பெற்றான்;
நெகேமியா 12 : 11 (RCTA)
எலியாசிப் யோயியாதாவைப் பெற்றான்; யோயியாதா யோனத்தானைப் பெற்றான்; யோனத்தானோ யெதோவாவைப் பெற்றான்;
நெகேமியா 12 : 12 (RCTA)
யோவாக்கீமின் நாட்களிலே குலத் தலைவர்களாய் இருந்த குருக்கள் வருமாறு: சராயியா வம்சத்தில் மராயியா, எரெமியா வம்சத்தில் கானானியா;
நெகேமியா 12 : 13 (RCTA)
எஸ்ரா வம்சத்தில் மொசொல்லாம், அமாரியா வம்சத்தில் யோகனான்;
நெகேமியா 12 : 14 (RCTA)
மில்லிக்கோ வம்சத்தில் யோனத்தான், செபேனியா வம்சத்தில் யோசேப்;
நெகேமியா 12 : 15 (RCTA)
காரிம் வம்சத்தில் எத்னா, மராயியோத் வம்சத்தில் கெல்சீ;
நெகேமியா 12 : 16 (RCTA)
அதாயியா வம்சத்தில் சக்கரியா, கிநெதோன் வம்சத்தில் மொசொல்லாம்;
நெகேமியா 12 : 17 (RCTA)
ஆபியா வம்சத்தில் செக்ரீ, மீயாமின், மொவாதியா என்போர் வம்சங்களில் பேல்தி;
நெகேமியா 12 : 18 (RCTA)
பெல்கா வம்சத்தில் செம்முவா,
நெகேமியா 12 : 19 (RCTA)
செமாயியா வம்சத்தில் யோனத்தான்; யோயியாரீப் வம்சத்தில் மத்தானாயீ, யொதாயா வம்சத்தில் அஜசீ;
நெகேமியா 12 : 20 (RCTA)
செல்லாயி வம்சத்தில் கேலாயீ, அமோக்கு வம்சத்தில் ஏபேர்;
நெகேமியா 12 : 21 (RCTA)
தெல்கியா வம்சத்தில் கசபியா, இதாயியா வம்சத்தில் நத்தானியேல் ஆகிய இவர்களாம்.
நெகேமியா 12 : 22 (RCTA)
எலியாசிப், யோயியாதா, யோகனான், யெதோவா ஆகியோரின் காலத்தில் லேவியர்களும், பாரசீகனான தாரியுசின் ஆட்சிக் காலத்தில் குருக்களும் குலத் தலைவர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
நெகேமியா 12 : 23 (RCTA)
லேவி புதல்வரான குலத் தலைவர் எலியாசிபின் மகன் யோனத்தானின் நாட்கள் வரை நாளாகமத்தில் எழுதப்பட்டிருந்தனர்.
நெகேமியா 12 : 24 (RCTA)
லேவியர்களுக்குத் தலைவர்களான கசபியா, செரேபியா, கேத்மியேலின் மகன் யோசுவா ஆகியோரும் இவர்களின் சகோதரரும் கடவுளின் ஊழியர் தாவீது கட்டளையிட்டவாறு புகழ்ந்து நன்றிப்பண் இசைத்தனர்; தங்கள் பிரிவின் முறைப்படி தங்கள் பணியைச் செய்து வந்தனர்.
நெகேமியா 12 : 25 (RCTA)
மத்தானியா, பெக்பேகியா, ஒபதியா, மொசொல்லாம், தெல்மோன், அக்கூப் ஆகியோர் வாயில்களையும், அவற்றின் அருகே இருந்த கருவூலங்களையும் காவல் செய்து வந்தனர்.
நெகேமியா 12 : 26 (RCTA)
இவர்கள் யோசேதேக்கிற்குப் பிறந்த யோசுவாவின் மகனான யோவாக்கீமின் காலத்திலும், திருச்சட்ட வல்லுநரும் குருவுமான எஸ்ராவின் காலத்திலும், ஆளுநர் நெகேமியாவின் காலத்திலும் அலுவலராய் இருந்தனர்.
நெகேமியா 12 : 27 (RCTA)
யெருசலேமின் மதிலை அர்ப்பணிக்கும் நாள் வந்த போது எல்லா இடங்களிலும் இருந்து லேவியர் யெருசலேமுக்கு வரவழைக்கப்பட்டனர்; ஏனெனில் மதில் அர்ப்பணிப்போ மகிழ்ச்சியோடும் நன்றிப்பாடல்களுடனும், கைத்தாளம், வீணை, கிண்ணாரம் ஒலிக்க கொண்டாடப்பட வேண்டியிருந்தது.
நெகேமியா 12 : 28 (RCTA)
அதன்படி லேவியரான பாடகர் யெருசலேமின் சுற்றுப்புறங்களிலிருந்தும், நெத்தோபாத்தியரின் ஊர்களிலிருந்தும்,
நெகேமியா 12 : 29 (RCTA)
பேத்கில்காலிலிருந்தும், கேபா, அஸ்மவேத் மாநிலங்களிலிருந்தும் அழைத்து வரப்பட்டனர். ஏனெனில் அவர்கள் யெருசலேமின் சுற்றுப்புறங்களிலேயே வாழ்ந்து வந்தனர்.
நெகேமியா 12 : 30 (RCTA)
அப்பொழுது குருக்களும் லேவியர்களும் தங்களைத் தூய்மை செய்து கொண்டு மக்களையும் வாயில்களையும் மதில்களையும் தூய்மைப்படுத்தினர்.
நெகேமியா 12 : 31 (RCTA)
அப்பொழுது நான் யூதாவின் தலைவர்களை மதிலின்மேல் ஏறச் சொல்லி, துதிபாட இரண்டு பெரிய பாடகர் குழுக்களை நிறுத்தினேன். அவர்களில் ஒரு குழுவினர் வலப்பக்கம் இருந்த குப்பை மேட்டு வாயிலை நோக்கிப் போனார்கள்.
நெகேமியா 12 : 32 (RCTA)
அவர்களுக்குப் பிறகே ஓசாயியாசும் யூதாத் தலைவர்களில் பாதிப்பேரும் சென்றனர்.
நெகேமியா 12 : 33 (RCTA)
அசாரியாஸ், எஸ்ரா, மொசொல்லாம்,
நெகேமியா 12 : 34 (RCTA)
(33b) யூதாஸ், பென்யமீன், செமேயியா, எரெமியாஸ் ஆகியோர் அவர்களுக்கும் பின்னால் சென்றனர்.
நெகேமியா 12 : 35 (RCTA)
(34) எக்காளம் ஊதும் குரு யோனத்தானின் மகன் சக்கரியாஸ் அவர்களுக்கும் பின்னால் சென்றார். யோனத்தான் செமேயாவுக்கும், செமேயா மத்தானியாவுக்கும், மத்தானியா மிக்காயாவுக்கும், மிக்காயா செக்கூருக்கும், செக்கூர் ஆசாப்புக்கும் பிறந்த புதல்வர்களாம்.
நெகேமியா 12 : 36 (RCTA)
(35) சக்கரியாசோடு அவர் சகோதரரான செமேயியா, அசாரெயேல், மலலாய், கலலாய், மாகாய், நத்தானேயேல், யூதாஸ், கனானி என்பவர்கள் கடவுளின் மனிதர் தாவீதின் இசைக்கருவிகளுடன் நடந்து சென்றனர். மறைநூல் அறிஞரான எஸ்ரா ஊருணி வாயிலில் அவர்களுக்கு முன்பாக நடந்து சென்றார்.
நெகேமியா 12 : 37 (RCTA)
(36) அவர்கள் ஊருணி வாயில் வழியே சென்று தங்களுக்கு எதிரேயிருந்த மதிலின் மேல் ஏறி அங்கிருந்து தாவீதின் வீட்டுப் படிகளின் மேலே போய்க் கிழக்கேயிருந்த தண்ணீர் வாயில் வரை சென்றனர்.
நெகேமியா 12 : 38 (RCTA)
(37) மற்றப் பாடகர் குழுவினர் இடது பக்கமாய் நடந்து போனார்கள். நானும் மக்களில் பாதிப் பேரும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, மதிலின் மேல் ஏறி அங்கிருந்து சூளைகளின் கோபுரத்தின் மேலே போய் அதிக அகலமான மதில் வரை ஏறி,
நெகேமியா 12 : 39 (RCTA)
(38) எப்பிராயீம் வாயிலையும் பழைய வாயிலையும் மீன் வாயிலையும் கனானெயேல் கோபுரத்தையும், ஏமாத் கோபுரத்தையும் கடந்து மந்தை வாயில் வரை நடந்து, காவலர் வாயிலிலே நின்று கொண்டோம்.
நெகேமியா 12 : 40 (RCTA)
(39) துதிபாடும் பாடகரின் இரு குழுவினரும், அவர்களோடு நானும், என்னுடன் இருந்த ஊர்த் தலைவர்களில் பாதிப்பேரும் கடவுளின் ஆலயத்தில் நின்றுகொண்டோம்.
நெகேமியா 12 : 41 (RCTA)
(40) எக்காளங்களைக் கையிலேந்திக் கொண்டு எலியாக்கீம், மாசியா, மீயாமின், மிக்கெயா, எலியோவெனாயி, சக்கரியா, கனானியா என்ற குருக்களும்,
நெகேமியா 12 : 42 (RCTA)
(41) மாசியா, செமேயியா, எலியெசார், அசசீ, யோகனான், மெல்கியா, ஏலாம், ஏசேர் ஆகியோரும் நின்றனர். பாடகரும், அவர்களின் தலைவன் எஸ்ராயாவும் உரக்கப் பாடினர்.
நெகேமியா 12 : 43 (RCTA)
(42) அவர்கள் அன்று மிகுதியான பலிகளைச் செலுத்தினர். கடவுள் தங்களுக்குச் செய்திருந்தவற்றையெல்லாம் நினைத்துப் பெரு மகிழ்ச்சி கொண்டாடினர். அவர்களோடு, அவர்களின் மனைவியரும் பிள்ளைகளும் மகிழ்ச்சி கொண்டாடினர். யெருசலேமில் ஏற்பட்ட இம்மகிழ்ச்சிக் குரல் வெகு தூரம் வரை கேட்டது.
நெகேமியா 12 : 44 (RCTA)
(43) அன்று கருவூல அறைகளையும் பானப் பலிகளையும் முதற்பலன்களையும் பத்திலொரு பாகங்களையும் கண்காணிக்கச் சிலரை நியமித்தனர். நகர்புறங்களினின்று குருக்களுக்கும் லேவியர்களுக்கும் திருச்சட்டப்படி கொடுக்க வேண்டிய வருமானத்தை வசூலிப்பதே இவர்களது அலுவலாகும். ஏனெனில் திருப்பணி புரிந்து வந்த குருக்களையும் லேவியர்களையும் குறித்து யூதா மக்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
நெகேமியா 12 : 45 (RCTA)
(44) இவர்களும் பாடகரும் வாயில் காவலரும் தாவீதின் கட்டளைப்படியும்; தாவீதின் மகன் சாலமோனின் கட்டளைப்படியும் தம் கடவுளுக்குத் திருப்பணி புரிந்தனர்; சுத்திகரச் சடங்குகளையும் நிறைவேற்றி வந்தனர்.
நெகேமியா 12 : 46 (RCTA)
(45) ஏனெனில் தொடக்கத்திலிருந்தே, அதாவது தாவீது, ஆசாப் காலம் முதல் கடவுளுக்குப் புகழ்பாடவும் நன்றிப்பண் எழுப்பவும் பாடகர்கள் நியமிக்கப் பெற்றிருந்தனர்.
நெகேமியா 12 : 47 (RCTA)
(46) மேலும் ஜெரோபாபேலின் காலத்திலும் நெகேமியாவின் காலத்திலும் இஸ்ராயேலர் யாவரும் பாடகருக்கும் வாயிற் காவலருக்கும் கொடுக்க வேண்டிய குறித்த பங்குகளை நாள்தோறும் கொடுத்து வந்தனர்; அவ்வாறே லேவியருக்கும் கொடுக்க வேண்டிய பங்குகளைக் கொடுத்து வைத்தனர். அதுபோல் லேவியர்கள் ஆரோனின் புதல்வர்களுக்குக் கொடுக்கவேண்டிய பங்குகளைக் கொடுத்து வைத்தனர்.
❮
❯