நெகேமியா 11 : 1 (RCTA)
மக்கள் தலைவர்கள் யெருசலேமில் குடியிருந்தனர். ஏனைய மக்களில் பத்தில் ஒரு பகுதியினர் யெருசலேமிலும், ஏனையோர் மற்ற நகரங்களிலும் வாழ வேண்டியிருந்தது. இதற்காகச் சீட்டுப்போட்டனர்.
நெகேமியா 11 : 2 (RCTA)
யெருசலேமில் வாழ மனமுவந்து முன்வந்தவர்களை மக்கள் வாழ்த்திப் போற்றினர்.
நெகேமியா 11 : 3 (RCTA)
பின் கூறப்படும் மக்கள் தலைவர்கள் யெருசலேமில் வாழ்ந்து வந்தார்கள். யூதாவின் நகரங்களில் இஸ்ராயேலரும் குருக்களும் லேவியரும் ஆலய ஊழியரும் சாலமோனுடைய ஊழியர்களின் புதல்வர்களும் தத்தம் சொந்த நகரிலும் மனையிலும் வாழ்ந்து வந்தார்கள்.
நெகேமியா 11 : 4 (RCTA)
யூதா புதல்வரில் சிலரும் பென்யமீன் புதல்வரில் சிலரும் யெருசலேமில் வாழ்ந்து வந்தனர். யூதாவின் புதல்வர்களில் அசியாவின் மகன் அத்தாயாஸ்- அசியாம் சக்காரியாவின் மகன்; இவன் அமாரியாவின் மகன்; இவன் ஜப்பாத்தியாவின் மகன்; இவன் பாரேசின் புதல்வர் வழியில் வந்த மலலேயலின் மகன்.
நெகேமியா 11 : 5 (RCTA)
பாரூக்கின் மகன் மாசியா- பாரூக் கொலோஜாவின் மகன்; இவன் கசியாவின் மகன்; இவன் அதாயாவின் மகன்; இவன் யோயாரீபின் மகன்; இவன் சக்கரியாசின் மகன்;
நெகேமியா 11 : 6 (RCTA)
இவன் சிலோனித்தானின் மகன். யெருசலேமில் குடியிருந்த பாரேசின் புதல்வர் எல்லாரும் நானூற்று அறுபத்தெட்டுப் பேர். இவர்கள் மாபெரும் வீரர்கள்.
நெகேமியா 11 : 7 (RCTA)
பென்யமீன் புதல்வருள்: (முதலில்) செல்லும்- இவன் மொசொல்லாமுக்கும், இவன் யோவேத்துக்கும், இவன் பதாயியாவுக்கும், இவன் கொலாயியாவுக்கும், இவன் மாசியாவுக்கும், இவன் ஈத்தேயலுக்கும், இவன் இசாயியாவுக்கும் பிறந்தவர்கள்.
நெகேமியா 11 : 8 (RCTA)
செல்லோமுக்குப் பிறகு கெப்பாய், செல்லாயி என்போர்; இவர்கள் மொத்தம் தொளாயிரத்தெட்டுப் பேர்.
நெகேமியா 11 : 9 (RCTA)
சிக்கிரியின் மகன் யோவேல் இவர்களுக்குத் தலைவனாய் இருந்து வந்தான்; அவனுக்கு அடுத்த நிலையில் செனுவாயின் மகன் யூதா விளங்கினான்.
நெகேமியா 11 : 10 (RCTA)
குருக்களில்: யோயாரீபின் மகன் இதாயாவும் யாக்கீனும்,
நெகேமியா 11 : 11 (RCTA)
இல்கியாசின் மகன் சாராயியாவுமாம்- இல்கியாஸ் மொசொல்லாமுக்கும், மொசொல்லாம் சாதோக்குக்கும், சாதோக் மேராயோத்துக்கும், மேராயோத் கடவுளின் ஆலய மேற்பார்வையாளனான அக்கித்தோபுக்கும் பிறந்த புதல்வர்கள்.
நெகேமியா 11 : 12 (RCTA)
ஆலயத்திலே திருப்பணி செய்து வந்த அவர்களின் சகோதரர் எண்ணுற்று இருபத்திரண்டு பேர். இன்னும் எரோகாமின் மகன் ஆதாயா- எரோகாம் பெலேலியாவுக்கும், பெலேலியா அம்சிக்கும், அம்சி சக்கரியாசுக்கும், சக்கரியாஸ் பெசூருக்கும், பெசூர் மேல்கியாசுக்கும் பிறந்த புதல்வர்கள்.
நெகேமியா 11 : 13 (RCTA)
குலத் தலைவர்களான மெல்கியாசின் சகோதரர் இருநூற்று நாற்பத்திரண்டு பேர். மேலும் ஆஸ்ராயேலின் மகன் அமசாயீ- ஆஸ்ராயேல் அகாசியிக்கும், அகாசியி மொசொல்லா மோத்துக்கும், மொசொல்லாமோத் எம்மேருக்கும் பிறந்த புதல்வர்.
நெகேமியா 11 : 14 (RCTA)
அவர்களின் சகோதரரான வலிமை வாய்ந்த மனிதர் நூற்றிருபத்தெட்டுப் பேர். அகெதோலிமின் மகன் சப்தியேல் இவர்களுக்குத் தலைவனாய் இருந்தான்.
நெகேமியா 11 : 15 (RCTA)
லேவியர்களிலே: கசூபின் மகன் செமேயா- கசூபு அசாரிக்காமுக்கும், அசாரிக்காம் கசாபியாவுக்கும், கசாபியா பொனீயிக்கும் பிறந்த புதல்வர்கள்.
நெகேமியா 11 : 16 (RCTA)
மேலும் ஆலய வெளிவேலைகளைக் கவனித்து வந்த லேவியர்களுக்கு தலைவர்களாய் இருந்த சபெதாயும், யொசபேதும்,
நெகேமியா 11 : 17 (RCTA)
ஆண்டவருக்கு நன்றிப்பண் இசைப்போருக்குத் தலைவனும், அசாபின் மகனான செபெதேயீயின் புதல்வன் மிக்காவுடைய மகனான மத்தானியாவும், இவனுடைய சகோதரர்களில் இவனுக்கு அடுத்த இடம் வகித்து வந்த பெக்பேசியாவும், இதித்தூனின் மகனான கலாதின் புதல்வன் சமுவாபுக்குப் பிறந்த ஆப்தாவும் ஆக,
நெகேமியா 11 : 18 (RCTA)
புனித நகரிலுள்ள லேவியர் மொத்தம் இருநூற்றெண்பத்து நான்கு பேர்.
நெகேமியா 11 : 19 (RCTA)
வாயிற் காவலரிலே: கதவுகளைக் காக்கிறவர்களாகிய அக்கூபும் தேல்மோனும் அவர்களின் சகோதரர்களுமாக நூற்றெழுபத்திரண்டு பேர்.
நெகேமியா 11 : 20 (RCTA)
ஏனைய இஸ்ராயேலின் குருக்களும் லேவியர்களும் யூதாவின் எல்லா நகர்களிலும் தத்தம் காணியாட்சியில் குடியிருந்தனர்.
நெகேமியா 11 : 21 (RCTA)
ஆலய ஊழியர்களோ ஓப்பேலில் குடியிருந்தனர். ஆலய ஊழியர்களுக்குத் தலைவர்களாகச் சியகாவும் காஸ்பாவும் விளங்கினர்.
நெகேமியா 11 : 22 (RCTA)
யெருசலேமில் வாழ்ந்து வந்த லேவியருக்குப் பானியின் மகன் அசசீ தலைவனாக இருந்தான்- பானி கசாபியாவின் மகன்; இவன் மத்தானியாவின் மகன்; இவன் ஆலயப் பாடகர்களான ஆசாபின் புதல்வர்கள் வழியில் வந்த மிக்காவின் மகன்.
நெகேமியா 11 : 23 (RCTA)
பாடகரைப் பற்றிய அரச கட்டளை ஒன்று இருந்தது. அதன்படி பாடகர்களாகிய இவர்களுக்கு அன்றாடப் படி கொடுக்கும்படி திட்டமான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நெகேமியா 11 : 24 (RCTA)
அன்றியும் யூதாவின் மகனான ஜாராவின் புதல்வர்கள் வழியில் வந்த மெசெசபலின் மகன் பாத்தாகியா மக்களுடைய எல்லாக் காரியங்களின் பொறுப்பும் ஏற்று அரசருக்கு உதவி செய்து வந்தான்.
நெகேமியா 11 : 25 (RCTA)
நாடெங்கணும் வாழ்ந்து வந்த யூதாவின் மக்களில் பலர் காரியத்தார்பெயிலும் அதை அடுத்த சிற்றூர்களிலும், திபோனிலும் இதைச் சேர்ந்த ஊர்களிலும், கப்சயேலிலும் இதன் ஊர்களிலும்,
நெகேமியா 11 : 26 (RCTA)
யோசுவாவிலும் மொலதாவிலும் பேத்பலேத்திலும்,
நெகேமியா 11 : 27 (RCTA)
காசர்சுவாவிலும் பெர்சபேயிலும் இதைச் சார்ந்த ஊர்களிலும்,
நெகேமியா 11 : 28 (RCTA)
சீசலேகிலும் மொக்கோனாவிலும் இதைச் சார்ந்த ஊர்களிலும்,
நெகேமியா 11 : 29 (RCTA)
ரெம்மோனிலும் சராவிலும் எரிமூத்திலும்,
நெகேமியா 11 : 30 (RCTA)
ஜனோவாயிலும் ஒதொல்லாமிலும் இவற்றைச் சேர்ந்த ஊர்களிலும், லாக்கீசிலும் இதன் வயல்களிலும், அசேக்காவிலும் இதைச் சேர்ந்த ஊர்களிலும் பெர்சபே முதல் என்னோம் பள்ளத்தாக்கு வரை குடியிருந்தனர்.
நெகேமியா 11 : 31 (RCTA)
பென்யமீன் புதல்வர்களோ கெபா தொடங்கி மெக்மாஸ், காயு, பேத்தேல், இதைச் சேர்ந்த ஊர்களான
நெகேமியா 11 : 32 (RCTA)
அநத்தோத், நோப், அனானியா,
நெகேமியா 11 : 33 (RCTA)
அசோர், ராமா, கெத்தயீம்,
நெகேமியா 11 : 34 (RCTA)
காகீத், செபோயீம்,
நெகேமியா 11 : 35 (RCTA)
நேபெல்லாத், லோத், ஓனோ என்ற ஊர்களிலும் தொழிலாளர் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தனர்.
நெகேமியா 11 : 36 (RCTA)
லேவியருள் சில பிரிவினர் யூதாவிலும் பென்யமீனிலும் குடியேறினர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36