மீகா 6 : 1 (RCTA)
ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: நீ எழுந்து மலைகளின் முன்னிலையில் உன் வழக்கைச் சொல், குன்றுகள் உன் சொற்களைக் கேட்கட்டும்.
மீகா 6 : 2 (RCTA)
மலைகளே, பூமியின் நிலையான அடிப்படைகளே, ஆண்டவருடைய வழக்கைக் கேளுங்கள்; ஏனெனில் தம் மக்கள் மேல் ஆண்டவர் வழக்குத் தொடுக்கிறார், இஸ்ராயேல் மீது குற்றம் சாட்டுகிறார்:
மீகா 6 : 3 (RCTA)
எம் மக்களே, உங்களுக்கு நாம் என்ன செய்தோம்? எதில் நாம் உங்களுக்குத் துயர் தந்தோம்? சொல்லுங்கள்!
மீகா 6 : 4 (RCTA)
எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டிவந்தோம், அடிமைத்தன வீட்டிலிருந்து உங்களை மீட்டுவந்தோம்; உங்களுக்கு முன்பாக மோயீசனையும் ஆரோனையும் மீரியாளையும் அனுப்பினோமே.
மீகா 6 : 5 (RCTA)
எம் மக்களே, மோவாப் அரசன் பாலாக் செய்த திட்டத்தையும், பேயோரின் மகன் பாலாம் அவனுக்குச் சொன்ன பதிலையும், சேத்தீமுக்கும் கல்கலாவுக்கும் இடையில் நடந்ததையும் எண்ணிப்பார்; அப்போது ஆண்டவருடைய மீட்புச் செயல்களை உணர்வாய்."
மீகா 6 : 6 (RCTA)
எதைக் கொணர்ந்து நான் ஆண்டவரின் முன் வந்து, உன்னதரான கடவுள் முன் பணிந்து நிற்பேன்? தகனப் பலிகளோடும், ஒரு வயது கன்றுகளோடும் அவர் முன்னிலையில் வந்து நிற்பேனோ?
மீகா 6 : 7 (RCTA)
ஆயிரக்கணக்கான ஆட்டுக்கடாக்கள் மேலும், எண்ணெய் பெருக்கெடுத்தோடும் பத்தாயிரம் ஆறுகள் மேலும் ஆண்டவர் விருப்பங் கொள்வாரோ? என் அக்கிரமத்தைப் போக்க என் தலைப் பேறான பிள்ளையையும், என் ஆன்மாவின் பாவத்துக்காக என் வயிற்றுக்கனியான குழந்தையையும் கொடுப்பேனோ?"
மீகா 6 : 8 (RCTA)
மனிதா, நல்லது எது என உனக்கு அவர் காட்டியிருக்கிறாரே! நீதியோடு நடத்தல், அன்பு கூர்தல், உன் கடவுள் முன்னிலையில் தாழ்ச்சியோடிருத்தல், இவையன்றி வேறெதை ஆண்டவர் உன்னிடம் கேட்கிறார்?
மீகா 6 : 9 (RCTA)
ஆண்டவரின் குரல் நகரத்தை நோக்கிக் கூவுகிறது: (உமது திருப்பெயருக்கு அஞ்சி நடத்தலே உண்மையான ஞானம்) "இஸ்ராயேல் இனமே, நகரத்தின் சபையே நாம் சொல்வதைக் கேள்:
மீகா 6 : 10 (RCTA)
கொடியவர்களின் வீட்டில் குவிந்திருக்கும் அக்கிரமங்களையும், சபிக்கப்பட்ட அந்தக் கள்ள மரக்காலையும் நாம் மறப்போமோ?
மீகா 6 : 11 (RCTA)
கள்ளத் தராசையும், கள்ள எடைக்கற்களுள்ள பையையும் வைத்திருப்பவனை நேர்மையானவன் என விட்டு விடுவோமோ?
மீகா 6 : 12 (RCTA)
நகரத்தின் பணக்காரர்கள் கொடுமை நிறைந்தவர்கள், அங்கே வாழ்கிறவர்கள் பொய் பேசுகிறார்கள், அவர்கள் வாயிலுள்ள நாக்கு வஞ்சகம் நிறைந்தது.
மீகா 6 : 13 (RCTA)
ஆதலால் உன் பாவங்களுக்காக உன்னை அடித்து நொறுக்கத் தொடங்கினோம்.
மீகா 6 : 14 (RCTA)
நீ சாப்பிட்டாலும் உனக்குப் பசியடங்காது, பசி உன் வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருக்கும்; நீ எதைப் பத்திரப்படுத்தினாலும், இழந்து விடுவாய்; இழக்காமல் இருப்பதையும் நாம் வாளுக்கு இரையாக்குவோம்.
மீகா 6 : 15 (RCTA)
நீ விதைப்பாய், ஆனால் அறுவடை செய்யமாட்டாய்; ஒலீவ கொட்டைகளை ஆட்டுவாய், ஆனால் எண்ணெய் தடவிப் பார்க்க மாட்டாய்; திராட்சைப் பழம் பிழிவாய், ஆனால் இரசம் குடித்துப் பார்க்க மாட்டாய்.
மீகா 6 : 16 (RCTA)
அம்ரியின் கட்டளைகளைக் கடைப்பிடித்தாய், ஆக்காபு வீட்டார் செயல்களனைத்தையும் பின்பற்றினாய்; அவர்களுடைய போக்கின்படி நீயும் நடந்தாய்; ஆதலின் உன்னை அழிவுக்குக் கையளிப்போம், உன்னில் வாழ்கிறவர்கள் ஏளனத்துக்கு ஆளாவார்கள், மக்களினங்களின் நிந்தையைத் தாங்குவீர்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16