மத்தேயு 26 : 1 (RCTA)
இயேசு இவ்வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தபின் தம் சீடரை நோக்கி,
மத்தேயு 26 : 2 (RCTA)
"இரண்டு நாள் கழித்துப் பாஸ்கா விழா வரும் என்று உங்களுக்குத் தெரியும். அப்போது மனுமகன் சிலுவையில் அறையப்படக் கையளிக்கப்படுவார்" என்று சொன்னார்.
மத்தேயு 26 : 3 (RCTA)
அப்பொழுது தலைமைக்குருக்களும், மக்களுள் மூப்பரும் கைப்பாஸ் என்னும் தலைமைக்குருவின் மாளிகையில் கூடினர்.
மத்தேயு 26 : 4 (RCTA)
இயேசுவைச் சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலைசெய்ய ஆலோசனை செய்தனர்.
மத்தேயு 26 : 5 (RCTA)
ஆனால், "மக்களிடையே கலகம் உண்டாகாதிருக்கத் திருவிழாவிலே வேண்டாம்" என்றனர்.
மத்தேயு 26 : 6 (RCTA)
பெத்தானியாவில் தொழுநோய்ச் சீமோன் வீட்டில் இயேசு இருக்கையில்,
மத்தேயு 26 : 7 (RCTA)
பெண் ஒருத்தி விலையுயர்ந்த பரிமளத்தைலம் உள்ள படிகச் சிமிழுடன் அவரை அணுகினாள். பந்தியிருக்கையில் அவர்தலையில் அதை ஊற்றினாள்.
மத்தேயு 26 : 8 (RCTA)
இதைப் பார்த்த சீடர்கள் சினங்கொண்டு,
மத்தேயு 26 : 9 (RCTA)
"இதை வீணாக்குவானேன் ? இதை நல்ல விலைக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே" என்றனர்.
மத்தேயு 26 : 10 (RCTA)
இதையறிந்த இயேசு, "ஏன் இப்பெண்ணைத் தொந்தரை செய்கிறீர்கள் ? இவள் எனக்குச் செய்தது நேர்த்தியான செயல்தான்.
மத்தேயு 26 : 11 (RCTA)
ஏனெனில், ஏழைகள் உங்களோடு என்றும் உள்ளனர்; நானோ உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை.
மத்தேயு 26 : 12 (RCTA)
இவள் பரிமளத்தைலத்தை என் உடல்மீது ஊற்றுகையில் என் அடக்கத்தைக்குறித்தே செய்தாள்.
மத்தேயு 26 : 13 (RCTA)
உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: உலக முழுவதிலும் எங்கெங்கு இந்நற்செய்தி அறிவிக்கப்படுமோ, அங்கெல்லாம் இவள் செய்ததும் இவள்நினைவாகக் கூறப்படும்" என்றார்.
மத்தேயு 26 : 14 (RCTA)
அப்பொழுது பன்னிருவருள் ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத்து என்பவன் தலைமைக்குருக்களிடம் சென்று அவர்களிடம், "எனக்கு என்ன தருவீர்கள் ?
மத்தேயு 26 : 15 (RCTA)
நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுப்பேன்" என்று கூறினான். அவர்களோ முப்பது வெள்ளிக்காசு அவனுக்குக் கொடுத்தனர்.
மத்தேயு 26 : 16 (RCTA)
அதுமுதல் அவரைக் காட்டிக்கொடுக்க வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.
மத்தேயு 26 : 17 (RCTA)
புளியாத அப்பத் திருவிழாவின் முதல்நாள் சீடர் இயேசுவை அணுகி, "நீர் பாஸ்கா உணவை உண்ண உமக்கு நாங்கள் எங்கே ஏற்பாடு செய்யவேண்டும் என்கிறீர் ?" எனக் கேட்டனர்.
மத்தேயு 26 : 18 (RCTA)
இயேசு கூறியது: "நகரத்தில் இன்னாரிடம் போய், ' என் நேரம் அருகிலுள்ளது; என் சீடருடன் உன் வீட்டில் பாஸ்கா கொண்டாடுவேன் ' எனப் போதகர் கூறுகிறார் என்று சொல்லுங்கள்."
மத்தேயு 26 : 19 (RCTA)
சீடரும் இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்து பாஸ்கா உணவுக்கு ஏற்பாடு செய்தனர்.
மத்தேயு 26 : 20 (RCTA)
மாலையானதும், தம் பன்னிரு சீடருடன் பந்தி அமர்ந்தார்.
மத்தேயு 26 : 21 (RCTA)
அவர்கள் உண்ணும்பொழுது, "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்" என்றார்.
மத்தேயு 26 : 22 (RCTA)
அவர்கள் மிகவும் வருந்தி, "நானோ ஆண்டவரே ?" என்று ஒவ்வொருவரும் கேட்கத் தொடங்கினர்.
மத்தேயு 26 : 23 (RCTA)
அதற்கு அவர், "என்னுடன் பாத்திரத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்.
மத்தேயு 26 : 24 (RCTA)
மனுமகன் தம்மைப்பற்றி எழுதியிருக்கிறபடியே போகிறார். மனுமகனைக் காட்டிக்கொடுப்பவனுக்கோ ஐயோ கேடு! அவன் பிறவாது இருந்திருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்" என்றார்.
மத்தேயு 26 : 25 (RCTA)
அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், "நானோ, ராபி ?" என்று கேட்க, அவரும், "நீயே சொல்லிவிட்டாய்" என்றார்.
மத்தேயு 26 : 26 (RCTA)
அவர்கள் உண்ணும்பொழுது, இயேசு அப்பத்தை எடுத்து இறைபுகழ் கூறி, பிட்டு, தம் சீடருக்கு அளித்து, "இதை வாங்கி உண்ணுங்கள், இஃது என் உடல்" என்றார்.
மத்தேயு 26 : 27 (RCTA)
பின்னர், கிண்ணத்தை எடுத்து, நன்றிகூறி, அவர்களுக்கு அளித்து, "இதிலே அனைவரும் பருகுங்கள்.
மத்தேயு 26 : 28 (RCTA)
ஏனெனில், உடன்படிக்கைக்கான என் இரத்தம் இது; பாவமன்னிப்புக்கென்று பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்.
மத்தேயு 26 : 29 (RCTA)
உங்களுக்குச் சொல்லுகிறேன்: இதுமுதல் என் தந்தையின் அரசில் புதிய இரசம் உங்களோடு பருகும் நாள்வரை இந்தத் திராட்சைப்பழ இரசத்தைக் குடிக்கமாட்டேன்" என்றார்.
மத்தேயு 26 : 30 (RCTA)
புகழ்ப்பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றனர்.
மத்தேயு 26 : 31 (RCTA)
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி, "இன்றிரவே என்னைக்குறித்து நீங்கள் அனைவரும் இடறல்படுவீர்கள். ஏனெனில், ' மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறிப்போம் ' என எழுதியிருக்கிறது.
மத்தேயு 26 : 32 (RCTA)
ஆனால், நான் உயிர்த்தபின் கலிலேயாவிற்கு உங்களுக்குமுன் போவேன்" என்று சொன்னார்.
மத்தேயு 26 : 33 (RCTA)
அதற்கு இராயப்பர், "எல்லாரும் உம்மைக் குறித்து இடறல்பட்டாலும், நான் ஒருபோதும் இடறல்படேன்" என்றார்.
மத்தேயு 26 : 34 (RCTA)
இயேசு அவரிடம், "உறுதியாக உனக்குச் சொல்லுகிறேன்: இன்றிரவே கோழி கூவுமுன் என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்றார்.
மத்தேயு 26 : 35 (RCTA)
இராயப்பர், "உம்மோடு இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை மறுதலியேன்" என்றார். அப்படியே சீடர் அனைவரும் கூறினர்.
மத்தேயு 26 : 36 (RCTA)
பின்னர், இயேசு அவர்களுடன் கெத்சேமனி என்னும் தோட்டத்திற்கு வந்தார். வந்து சீடர்களிடம், "நான் அங்கே சென்று செபிக்குமளவும் இங்கே இருங்கள்" என்று சொல்லி, ஃ
மத்தேயு 26 : 37 (RCTA)
இராயப்பரையும் செபெதேயுவின் மக்கள் இருவரையும் தம்மோடு அழைத்துச்சென்றார். அப்போது வருத்தமும் மனக்கலக்கமும் அவரை ஆட்கொள்ளவே,
மத்தேயு 26 : 38 (RCTA)
அவர் அவர்களை நோக்கி, "என் ஆன்மா சாவுக்கு ஏதுவான வருத்தமுற்றிருக்கிறது. இங்கே தங்கி என்னுடன் விழித்திருங்கள்" என்றார்.
மத்தேயு 26 : 39 (RCTA)
சற்று அப்பால்போய், குப்புறவிழுந்து, "என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும். எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்" என்று செபித்தார்.
மத்தேயு 26 : 40 (RCTA)
தம் சீடரிடம் வந்து அவர்கள் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு இராயப்பரை நோக்கி, "என்ன, ஒரு மணி நேரம் என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா ?
மத்தேயு 26 : 41 (RCTA)
சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து செபியுங்கள். ஆவி ஊக்கமுள்ளதுதான், ஊன் உடலோ வலுவற்றது" என்றார்.
மத்தேயு 26 : 42 (RCTA)
இரண்டாம் முறையும் சென்று, "என் தந்தையே, நான் குடித்தாலொழிய இத்துன்பக் கலம் அகல முடியாதெனில் உமது விருப்பப்படியே ஆகட்டும்" என்று செபித்தார்.
மத்தேயு 26 : 43 (RCTA)
மீண்டும் வந்து அவர்கள் தூங்குவதைக் கண்டார். ஏனெனில், அவர்கள் கண்கள் தூக்க மயக்கமுற்றிருந்தன.
மத்தேயு 26 : 44 (RCTA)
அவர்களை விட்டு மீண்டும் சென்று மூன்றாம் முறையாக அவ்வார்த்தைகளையே சொல்லிச் செபித்தார்.
மத்தேயு 26 : 45 (RCTA)
பின் தம் சீடரிடம் வந்து, "இன்னும் தூங்கி இளைப்பாறுகிறீர்களா ? இதோ! நேரம் நெருங்கிவிட்டது. மனுமகன் பாவிகளிடம் கையளிக்கப்படப் போகிறார்.
மத்தேயு 26 : 46 (RCTA)
எழுந்திருங்கள், போவோம். இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கிவிட்டான்" என்றார்.
மத்தேயு 26 : 47 (RCTA)
அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே இதோ! பன்னிருவருள் ஒருவனாகிய யூதாஸ் வந்தான். தலைமைக்குருக்களும் மக்களின் மூப்பரும் அனுப்பிய பெருங்கூட்டம் ஒன்று வாள்களோடும் தடிகளோடும் அவனுடன் வந்தது.
மத்தேயு 26 : 48 (RCTA)
அவரைக் காட்டிக்கொடுக்கிறவன், "எவரை நான் முத்தமிடுவேனோ அவர்தாம்; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள்" என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.
மத்தேயு 26 : 49 (RCTA)
உடனே இயேசுவை அணுகி, "ராபி, வாழ்க! " என்று அவரை முத்தமிட்டான்.
மத்தேயு 26 : 50 (RCTA)
இயேசுவோ, "நண்பா! எதற்காக வந்தாய் ?" என்று அவனைக் கேட்டார். அப்பொழுது அவர்கள் நெருங்கி வந்து இயேசுவின்மேல் கைபோட்டுப் பிடித்தனர்.
மத்தேயு 26 : 51 (RCTA)
இதோ! இயேசுவோடு இருந்தவருள் ஒருவன் கையை நீட்டி வாளை உருவித் தலைமைக்குருவின் ஊழியனைத் தாக்கி, அவன் காதைத் துண்டித்தான்.
மத்தேயு 26 : 52 (RCTA)
இயேசுவோ அவனிடம், "உன் வாளை உறையில் போடு. ஏனெனில், வாள் எடுப்போர் எல்லாரும் வாளால் மடிவர்.
மத்தேயு 26 : 53 (RCTA)
நான் என் தந்தையைக் கேட்டால் பன்னிரு படைகளுக்கு மிகுதியான தூதரை அவர் இப்பொழுது எனக்கு அளிக்கமாட்டார் என்று நினைக்கிறாயா ?
மத்தேயு 26 : 54 (RCTA)
அப்படிச் செய்தால் இவ்வாறு நடைபெற வேண்டும் என்னும் மறைநூல் வாக்கு எவ்வாறு நினைவேறும் ?" என்றார்.
மத்தேயு 26 : 55 (RCTA)
அவ்வேளையில் இயேசு, மக்கள்திரளை நோக்கி, "நீங்கள் கள்ளனைப் பிடிக்க வருவதுபோல வாளோடும் தடியோடும் என்னைப் பிடிக்க வந்தீர்களோ ? நாள்தோறும் கோவிலில் அமர்ந்து போதித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை" என்று சொன்னார்.
மத்தேயு 26 : 56 (RCTA)
இறைவாக்கினர்கள் எழுதியது நிறைவேறும் பொருட்டே இவையனைத்தும் நடைபெற்றன. அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போயினர்.
மத்தேயு 26 : 57 (RCTA)
இயேசுவைப் பிடித்தவர்களோ கைப்பாஸ் என்ற தலைமைக்குருவிடம் அவரைக் கூட்டிச் சென்றார்கள்.
மத்தேயு 26 : 58 (RCTA)
இராயப்பரோ தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக்குருவின் வீட்டுமுற்றம்வரை வந்து, உள்ளே நுழைந்து முடிவைக் காணும்படி காவலருடன் உட்கார்ந்திருந்தார்.
மத்தேயு 26 : 59 (RCTA)
தலைமைக்குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவைச் சாவுக்குக் கையளிக்கும்படி அவருக்கு எதிராகப் பொய்ச்சான்று தேடலாயினர்.
மத்தேயு 26 : 60 (RCTA)
பல பொய்ச்சாட்சிகள் முன்வந்தும் அவர்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. இறுதியாக இரண்டு பொய்ச் சாட்சிகள் வந்து,
மத்தேயு 26 : 61 (RCTA)
"இவன் ' கடவுளுடைய ஆலயத்தை இடித்து மூன்று நாட்களில் மீண்டும் கட்ட என்னால் முடியும் ' என்றான்" எனக் கூறினர்.
மத்தேயு 26 : 62 (RCTA)
தலைமைக்குரு எழுந்து, "உனக்கு எதிராக இவர்கள் சாட்சி சொல்லுகின்றனரே. மறுமொழியாக ஒன்றும் சொல்வதற்கில்லையா ?" என்று கேட்டார்.
மத்தேயு 26 : 63 (RCTA)
இயேசுவோ பேசாதிருந்தார். தலைமைக் குரு அவரை நோக்கி, உயிர் உள்ள கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னைக் கேட்கிறேன்: "நீ கடவுளின் மகனான மெசியாவோ ?" என்றார்.
மத்தேயு 26 : 64 (RCTA)
இயேசு, "நீரே சொன்னீர். மேலும் மனுமகன் வல்லமையுள்ள இறைவனின் வலப்பக்கத்தில் அமர்ந்து, வான மேகங்கள்மீது வருவதை நீங்கள் இனிக் காண்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
மத்தேயு 26 : 65 (RCTA)
அப்போது தலைமைக்குரு தம்முடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, "இவன் தேவ தூஷணம் சொன்னான். நமக்கு இன்னும் சாட்சிகள் எதற்கு ? இதோ! இப்பொழுது தேவ தூஷணம் கேட்டீர்களே.
மத்தேயு 26 : 66 (RCTA)
உங்கள் கருத்து என்ன ?" என்று கேட்டார். அவர்களோ மறுமொழியாக, "இவன் சாவுக்குரியவன்" என்றார்கள்.
மத்தேயு 26 : 67 (RCTA)
அப்பொழுது அவர்கள் அவருடைய முகத்தில் துப்பி அவரை அடித்தார்கள். சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து,
மத்தேயு 26 : 68 (RCTA)
"மெசியாவே, உன்னை அறைந்தவன் யாரென்று எங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்" என்று கேட்டனர்.
மத்தேயு 26 : 69 (RCTA)
இராயப்பர் வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். ஓர் ஊழியக்காரி அவரிடம் வந்து, "நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தாய்" என்றாள்.
மத்தேயு 26 : 70 (RCTA)
அவரோ எல்லார் முன்னிலையிலும், "நீ சொல்வது எனக்குத் தெரியாது" என்று மறுத்தார்.
மத்தேயு 26 : 71 (RCTA)
அவர் அங்கிருந்து வாயிலருகே வந்தபொழுது வேறோர் ஊழியக்காரி அவரைப் பார்த்துவிட்டு அங்கிருந்தவர்களிடம், "இவனும் நாசரேத்தூர் இயேசுவோடு இருந்தான்" என்று கூறினாள்.
மத்தேயு 26 : 72 (RCTA)
அவர், "அந்த ஆளை எனக்குத் தெரியாது" என்று ஆணையிட்டு மீண்டும் மறுத்தார்.
மத்தேயு 26 : 73 (RCTA)
சிறிது நேரத்திற்குப் பின்பு, அங்கிருந்தவர்கள் அணுகி, "உண்மையாகவே நீயும் அவர்களுள் ஒருவன்தான்; ஏனெனில், உன் பேச்சே உன்னைக் காட்டிவிடுகிறது" என்று இராயப்பரிடம் கூறினார்கள்.
மத்தேயு 26 : 74 (RCTA)
அப்பொழுது அவர், "அந்த ஆளை எனக்குத் தெரியவே தெரியாது" என்று சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே கோழி கூவிற்று.
மத்தேயு 26 : 75 (RCTA)
இராயப்பரோ, "கோழி கூவுமுன்னர் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று இயேசு சொன்னதை நினைவுகூர்ந்தார். வெளியே போய் மனம் வெதும்பி அழுதார்.
❮
❯