மத்தேயு 24 : 1 (RCTA)
இயேசு கோயிலை விட்டுப் போய்க்கொண்டிருந்தார். அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து கோயில் கட்டடங்களை அவருக்குக் காட்டினார்கள்.
மத்தேயு 24 : 2 (RCTA)
அவர் அவர்களுக்கு, "இவையெல்லாம் பார்க்கிறீர்களே, உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: இங்கே கல்லின்மேல் கல் இராதபடி எல்லாம் இடிபடும்" என்று மறுமொழி கூறினார்.
மத்தேயு 24 : 3 (RCTA)
அவர் ஒலிவமலைமீது அமர்ந்தபின் அவருடைய சீடர் அவரை அணுகி, "இவை எப்பொழுது நிகழும் ? உமது வருகைக்கும் உலக முடிவுக்கும் அறிகுறி என்ன ? எங்களுக்குச் சொல்லும்" என்று தனியாகக் கேட்டனர்.
மத்தேயு 24 : 4 (RCTA)
இயேசு அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: "உங்களை யாரும் ஏமாற்றாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
மத்தேயு 24 : 5 (RCTA)
ஏனெனில், பலர் வந்து என் பெயரை வைத்துக்கொண்டு, ' நான்தான் மெசியா ' என்று சொல்லிப் பலரை ஏமாற்றுவர்.
மத்தேயு 24 : 6 (RCTA)
போர் முழக்கங்களையும் போர்ப் பேச்சுகளையும் கேட்கப்போகிறீர்கள். எச்சரிக்கையாயிருங்கள்; கலங்கவேண்டாம். ஏனெனில், இவை எல்லாம் நிகழத்தான் வேண்டும்.
மத்தேயு 24 : 7 (RCTA)
ஆனால், இன்னும் இது முடிவன்று. நாடு நாட்டையும், அரசு அரசையும் எதிர்த்து எழும். பற்பல இடங்களில் கொள்ளைநோய்களும் பஞ்சமும் நிலநடுக்கமும் உண்டாகும்.
மத்தேயு 24 : 8 (RCTA)
இவை அனைத்தும் வேதனைகளின் தொடக்கமே.
மத்தேயு 24 : 9 (RCTA)
அப்பொழுது உங்களை வேதனைக்குக் கையளிப்பார்கள்; கொலைசெய்வார்கள்; என் பெயருக்காக எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள்.
மத்தேயு 24 : 10 (RCTA)
அப்பொழுது பலர் இடறல்படுவார்கள்; ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பார்கள்; ஒருவரையொருவர் வெறுப்பார்கள்.
மத்தேயு 24 : 11 (RCTA)
போலித் தீர்க்கதரிசிகள் பலர் தோன்றிப் பலரை ஏமாற்றுவார்கள்.
மத்தேயு 24 : 12 (RCTA)
அக்கிரமம் அதிகரிப்பதனால் பலரிடம் அன்பு தணிந்துபோகும்.
மத்தேயு 24 : 13 (RCTA)
இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்.
மத்தேயு 24 : 14 (RCTA)
இறையரசைப்பற்றிய இந்நற்செய்தி எல்லா இனங்களுக்கும் சான்றாக உலக முழுவதும் அறிவிக்கப்படும். பின்னர்தான் முடிவு வரும்.
மத்தேயு 24 : 15 (RCTA)
"தானியேல் இறைவாக்கினர் குறிப்பிட்ட ' பாழாக்கும் அருவருப்பு ' பரிசுத்த இடத்தில் நிற்கக் காணும்பொழுது - இதைப் படிப்பவன் உணர்ந்துகொள்ளட்டும் -
மத்தேயு 24 : 16 (RCTA)
அப்போது யூதேயாவில் இருப்பவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகட்டும்.
மத்தேயு 24 : 17 (RCTA)
கூரைமேல் இருப்பவன் இறங்கி வீட்டில் எதையும் எடுக்காமலே ஓடட்டும்.
மத்தேயு 24 : 18 (RCTA)
வயலில் இருப்பவன் தன் போர்வையை எடுக்கவும் திரும்பி வரவேண்டாம்.
மத்தேயு 24 : 19 (RCTA)
அந்நாட்களில் கருப்பவதிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் ஐயோ பரிதாபம்!
மத்தேயு 24 : 20 (RCTA)
நீங்கள் ஓடிப்போவது குளிர் காலத்திலாவது ஓய்வுநாளிலாவது நிகழாதபடி மன்றாடுங்கள்.
மத்தேயு 24 : 21 (RCTA)
அப்பொழுது பெரிய வேதனை உண்டாகும். இத்தகைய வேதனை உலகத் தொடக்கமுதல் இதுவரை இருந்ததுமில்லை; இனி இருக்கப்போவதுமில்லை.
மத்தேயு 24 : 22 (RCTA)
அந்நாட்கள் குறைக்கப்படாவிடில் எவ்வுயிரும் தப்பித்துக்கொள்ளாது. தேர்ந்துகொண்டவர்களின் பொருட்டு அந்நாட்கள் குறைக்கப்படும்.
மத்தேயு 24 : 23 (RCTA)
அப்போது எவனாவது உங்களிடம், ' இதோ! மெசியா இங்கே இருக்கிறார் அல்லது அங்கே இருக்கிறார் ' என்று சொன்னால் நம்பாதீர்கள்.
மத்தேயு 24 : 24 (RCTA)
போலி மெசியாக்களும் போலித் தீர்க்கதரிசிகளும் தோன்றி, கூடுமானால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களையும் ஏமாற்றக்கூடிய பெரும் அருங்குறிகளும் அற்புதங்களும் செய்துகாட்டுவார்கள்.
மத்தேயு 24 : 25 (RCTA)
இதோ! உங்களுக்கு முன்னதாகவே கூறிவிட்டேன்.
மத்தேயு 24 : 26 (RCTA)
"எனவே, யாராவது உங்களிடம் ' இதோ! அவர் பாலைவனத்தில் இருக்கிறார் ' என்று கூறினால், அங்கே சொல்லாதீர்கள். ' இதோ! உள்ளறையில் இருக்கிறார் ' என்றால், நம்பாதீர்கள்.
மத்தேயு 24 : 27 (RCTA)
ஏனெனில், மின்னல் கிழக்கில் தோன்றி மேற்குவரை தெரிவதுபோலவே மனுமகன் வருகையும் இருக்கும்.
மத்தேயு 24 : 28 (RCTA)
பிணம் எங்கேயோ அங்கேயே கழுகுகள் கூடும்.
மத்தேயு 24 : 29 (RCTA)
"அந்நாட்களின் வேதனைக்குப் பின், உடனே, கதிரவன் இருண்டுவிடுவான்; நிலா தன் ஒளி கொடாது; விண்மீன்கள் வானத்தினின்று விழும்; வானத்தின் படைகள் அசைக்கப்படும்.
மத்தேயு 24 : 30 (RCTA)
அப்போது வானத்தில் மனுமகனின் அறிகுறி தோன்றும்; மண்ணுலகின் குலத்தார் எல்லாரும் புலம்பி அழுவர். மனுமகன் மிகுந்த வல்லமையோடும் மாட்சிமையோடும் வானமேகங்களின்மீது வருவதைக் காண்பார்கள்.
மத்தேயு 24 : 31 (RCTA)
எக்காளம் முழங்க அவர் தம் தூதரை அனுப்புவார். அவர்கள் உலகின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை நாற்றிசையிலுமிருந்து அவரால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைத் திரட்டுவார்கள்.
மத்தேயு 24 : 32 (RCTA)
"அத்தி மரத்திலிருந்து இந்த உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் மென்மையாகித் தளிர்விடும்போது கோடைக்காலம் அண்மையில் உள்ளது என்று உங்களுக்குத் தெரியும்.
மத்தேயு 24 : 33 (RCTA)
அவ்வாறே, நீங்களும் இவையெல்லாம் நடைபெறுவதைக் காணும்போது அவர் அண்மையில் இருக்கிறார், வாசலிலேயே இருக்கிறார் என்று அறிந்துகொள்ளுங்கள்.
மத்தேயு 24 : 34 (RCTA)
இவையாவும் நடைபெறும்வரை இத்தலைமுறை ஒழியாது என்று உங்களுக்கு உறுதியாகச் சொல்லுகிறேன்.
மத்தேயு 24 : 35 (RCTA)
விண்ணும் மண்ணும் ஒழிந்துபோம்; என் வார்த்தைகளோ ஒழியவே ஒழியா.
மத்தேயு 24 : 36 (RCTA)
அந்நாளோ நாழிகையோ ஒருவனுக்கும் தெரியாது; தந்தைக்குத் தெரியுமேயன்றி, வானதூதருக்கும் மகனுக்குங்கூடத் தெரியாது.
மத்தேயு 24 : 37 (RCTA)
"நோவாவின் காலத்தில் இருந்ததுபோல மனுமகன் வருகையும் இருக்கும்.
மத்தேயு 24 : 38 (RCTA)
பெரும் வெள்ளத்திற்கு முந்தின காலத்தில் நோவா பெட்டகத்தில் நுழைந்த நாள்வரை அவர்கள் உண்டும் குடித்தும், பெண் கொண்டும் கொடுத்தும் வந்தனர்.
மத்தேயு 24 : 39 (RCTA)
பெரும் வெள்ளம் வந்து அனைவரையும் வாரிச்செல்லும்வரை அவர்கள் ஒன்றையும் உணரவில்லை. அப்படியே மனுமகன் வருகையும் இருக்கும்.
மத்தேயு 24 : 40 (RCTA)
அப்போது வயலில் இருவர் இருப்பர். ஒருவன் எடுக்கப்படுவான்; மற்றவன் விடப்படுவான்.
மத்தேயு 24 : 41 (RCTA)
திரிகையில் இரு பெண்கள் மாவரைப்பர். ஒருத்தி எடுக்கப்படுவாள்; மற்றவள் விடப்படுவாள்.
மத்தேயு 24 : 42 (RCTA)
"விழிப்பாயிருங்கள்; ஏனெனில், எப்போது உங்கள் ஆண்டவர் வருவார் என்று உங்களுக்குத் தெரியாது.
மத்தேயு 24 : 43 (RCTA)
திருடன் இன்ன சாமத்தில் வருவான் என்று வீட்டுத்தலைவனுக்குத் தெரிந்தால் அவன் விழிப்பாயிருந்து வீட்டில் கன்னம்வைக்க விடமாட்டான் அன்றோ ?
மத்தேயு 24 : 44 (RCTA)
இதை உணர்ந்து நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்.
மத்தேயு 24 : 45 (RCTA)
"தக்க காலத்தில் தன் வீட்டாருக்கு உணவளிக்கும்படி தலைவன் ஏற்படுத்திய, நம்பிக்கையும் விவேகமும் உள்ள ஊழியன் யார் ?
மத்தேயு 24 : 46 (RCTA)
எந்த ஊழியன் அவ்வாறு செய்துகொண்டிருப்பதைத் தலைவன் வந்து காண்பானோ, அவன் பேறுபெற்றவன்.
மத்தேயு 24 : 47 (RCTA)
அவனைத் தன் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக ஏற்படுத்துவான் என உங்களுக்கு உறுதியாகச் சொல்லுகிறேன்.
மத்தேயு 24 : 48 (RCTA)
ஆனால், அவ்வூழியன் தீயவனாய் இருந்து, ' என் தலைவர் காலம் தாழ்த்துகிறார் ' என்று தனக்குள் சொல்லிக்கொண்டு
மத்தேயு 24 : 49 (RCTA)
உடன்ஊழியரை அடிக்கவும், குடிகாரருடன் கூடி உண்ணவும் குடிக்கவும் தொடங்கினால்,
மத்தேயு 24 : 50 (RCTA)
அவ்வூழியன் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் தலைவன் வந்து,
மத்தேயு 24 : 51 (RCTA)
அவனை நீக்கி, வெளி வேடக்காரர் கதிக்கு உள்ளாக்குவான். அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51

BG:

Opacity:

Color:


Size:


Font: