மத்தேயு 21 : 1 (RCTA)
அவர்கள் யெருசலேமை நெருங்கி ஒலிவ மலையருகில் இருந்த பெத்பகேக்கு வந்தபொழுது இயேசு சீடர் இருவரை அழைத்து, ஃ
மத்தேயு 21 : 2 (RCTA)
"உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குச் செல்லுங்கள். சென்றதும் அங்கே ஒரு கழுதை கட்டியிருப்பதையும், அதனுடன் குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டுவாருங்கள்.
மத்தேயு 21 : 3 (RCTA)
யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், அவை ஆண்டவருக்குத் தேவை. விரைவில் அவற்றைத் திருப்பி அனுப்பிவிடுவார் எனக் கூறுங்கள்" என்று சொல்லியனுப்பினார்.
மத்தேயு 21 : 4 (RCTA)
'இதோ, உன்னுடைய அரசர் கழுதையின்மேலும் பொதிமிருகக் குட்டியின்மேலும் அமர்ந்து சாந்தமாக உன்னிடம் வருகிறார்
மத்தேயு 21 : 5 (RCTA)
எனச் சீயோன் மகளுக்குச் சொல்லுங்கள் ' என்று இறைவாக்கினர் கூறியது நிறைவேறுவதற்கே இதெல்லாம் நிகழ்ந்தது.
மத்தேயு 21 : 6 (RCTA)
சீடர் சென்று இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தனர்.
மத்தேயு 21 : 7 (RCTA)
கழுதையையும் குட்டியையும் ஓட்டிவந்து தம் போர்வைகளை அவற்றின்மேல் விரித்து, அவரை மேலே அமரச் செய்தனர்.
மத்தேயு 21 : 8 (RCTA)
பெருங்கூட்டமான மக்கள் தங்கள் போர்வைகளை வழியில் விரித்தனர். சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர்.
மத்தேயு 21 : 9 (RCTA)
கூட்டமாக முன்னே சென்றவர்களும், பின்னே வந்தவர்களும், "தாவீதின் மகனுக்கு ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி! உன்னதங்களில் ஓசான்னா! " என்று ஆர்ப்பரித்தனர்.
மத்தேயு 21 : 10 (RCTA)
யெருசலேமுக்குள் வந்தபொழுது நகர் முழுவதும் பரபரப்புற்று, "இவர் யார் ?" என்று கேட்டது.
மத்தேயு 21 : 11 (RCTA)
மக்களோ, "இவர்தாம் கலிலேயாவின் நாசரேத்தூரிலிருந்து வந்த இயேசு என்னும் இறைவாக்கினர்" என்றனர்.
மத்தேயு 21 : 12 (RCTA)
இயேசு கோயிலுக்குள் சென்று, அங்கே விற்பவர்களையும் வாங்குபவர்களையும் துரத்தி, நாணயம் மாற்றுபவர்களின் பலகைகளையும், புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துவிட்டார்.
மத்தேயு 21 : 13 (RCTA)
அவர்களிடம், " 'என்வீடு செப வீடு எனப்படும்' என்று எழுதியிருக்கிறது. நீங்களோ அதைக் கள்வர்குகையாக்கிவிட்டீர்கள்" என்று சொன்னார்.
மத்தேயு 21 : 14 (RCTA)
கோயிலில் குருடரும் முடவரும் அவரிடம் வந்தனர். அவர் அவர்களைக் குணப்படுத்தினார்.
மத்தேயு 21 : 15 (RCTA)
தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் அவர் செய்த வியத்தகு செயல்களையும், சிறுவர்கள் கோயிலில், "தாவீதின் மகனுக்கு ஓசான்னா" என்று செய்த ஆரவாரத்தையும் கண்டுச் சினங்கொண்டனர்.
மத்தேயு 21 : 16 (RCTA)
அவர்கள் அவரிடம், "இவர்கள் சொல்லுவது கேட்கிறதா ?" என, இயேசு, "ஆம், " ' சிறுவர்கள், குழந்தைகளின் வாயும் உம்மைப் புகழ்ந்தேத்தச் செய்தீர் ' என்று நீங்கள் படித்ததே இல்லையா ?" என்றார்.
மத்தேயு 21 : 17 (RCTA)
பின், அவர்களை விட்டு நகருக்கு வெளியே பெத்தானியாவுக்குச் சென்று அங்கே தங்கினார்.
மத்தேயு 21 : 18 (RCTA)
அவர் காலையில் நகருக்குத் திரும்புகையில் பசியுற்றார்.
மத்தேயு 21 : 19 (RCTA)
வழியோரத்தில் ஓர் அத்திமரத்தைக் கண்டு அதை அணுகி, அதில் இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல், "இனி ஒருகாலும் காய்க்கவேமாட்டாய்" என்று கூறினார். உடனே அத்திமரம் பட்டுப் போயிற்று.
மத்தேயு 21 : 20 (RCTA)
இதைக் கண்ட சீடர் வியந்து, "இவ்வளவு விரைவில் பட்டுப்போயிற்றே, எப்படி?" என்றனர்.
மத்தேயு 21 : 21 (RCTA)
அதற்கு இயேசு, "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: தயங்கா விசுவாசம் உங்களிடம் இருந்தால், அத்திமரத்திற்கு நேர்ந்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இம்மலையைப் பார்த்து, ' நீ பெயர்ந்து கடலில் விழு ' என்று கூறினாலும் அது நடைபெறும்.
மத்தேயு 21 : 22 (RCTA)
செபத்தில் நீங்கள் விசுவாசத்துடன் கேட்பதையெல்லாம் பெற்றுக்கொள்வீர்கள்" என்றார்.
மத்தேயு 21 : 23 (RCTA)
அவர் கோயிலுக்கு வந்து போதித்துக்கொண்டிருக்கையில் தலைமைக்குருக்களும் மக்களின் மூப்பரும் அவரிடம் வந்து, "எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறீர் ? உமக்கு இந்த அதிகாரம் கொடுத்தவர் யார் ? என்றார்கள்.
மத்தேயு 21 : 24 (RCTA)
அதற்கு இயேசு, "நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன்; அதற்கு நீங்கள் பதில் சொன்னால், நானும் எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று உங்களுக்குக் கூறுவேன்.
மத்தேயு 21 : 25 (RCTA)
அருளப்பருடைய ஞானஸ்நானம் எங்கிருந்து வந்தது ? வானகத்திலிருந்தா ? மனிதரிடமிருந்தா ?" என்று கேட்டார். அவர்கள் தங்களுக்குள் ஆலோசித்ததாவது: " ' வானகத்திலிருந்து வந்தது ' என்போமாயின், ' பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை ? ' என்று நம்மைக் கேட்பார்.
மத்தேயு 21 : 26 (RCTA)
' மனிதரிடமிருந்து வந்தது ' என்போமாயின், பொது மக்களுக்கு அஞ்ச வேண்டியிருக்கிறது. ஏனெனில், எல்லாரும் அருளப்பரை இறைவாக்கினர் என்று கருதுகின்றனர்."
மத்தேயு 21 : 27 (RCTA)
எனவே, அவர்கள் இயேசுவுக்கு மறுமொழியாக: "எங்களுக்குத் தெரியாது" என்றார்கள். அதற்கு அவர், "நானும் எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறேன் என உங்களுக்குச் சொல்லேன்" என்றார்.
மத்தேயு 21 : 28 (RCTA)
"இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன ? ஒருவனுக்கு மக்கள் இருவர் இருந்தனர். அவன் ஒருவனிடம் போய், ' மகனே, இன்று என் திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலைசெய் ' என்றான்.
மத்தேயு 21 : 29 (RCTA)
அதற்கு அவன், ' போகமாட்டேன் ' என்றான். பின்னர் வருந்தி மனமாறிச் சென்றான்.
மத்தேயு 21 : 30 (RCTA)
மற்றவனிடமும் வந்து அவ்வாறே சொன்னான். அதற்கு அவன், ' இதோ! போகிறேன், ஐயா ' என்றான். ஆனால் போகவில்லை.
மத்தேயு 21 : 31 (RCTA)
இருவருள் எவன் தந்தையின் விருப்பப்படி நடந்தவன் ?" என்று கேட்டார். அவர்கள், "முந்தியவனே" என்றனர். இயேசு அவர்களை நோக்கி, "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆயக்காரரும் விலைமாதரும் உங்களுக்குமுன் கடவுள் அரசில் செல்வார்கள்.
மத்தேயு 21 : 32 (RCTA)
ஏனெனில், அருளப்பர் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார்; நீங்களோ அவரை நம்பவில்லை. ஆனால், ஆயக்காரரும் விலைமாதரும் அவரை நம்பினர்; நீங்களோ அதைப் பார்த்த பின்னும் வருந்தி மனமாறி அவரை நம்பவில்லை.
மத்தேயு 21 : 33 (RCTA)
"மற்றும் ஓர் உவமையைக் கேளுங்கள்: வீட்டுத்தலைவன் ஒருவன் இருந்தான். அவன் திராட்சைத் தோட்டம் வைத்துச் சுற்றிலும் வேலி அடைத்து, அதில் ஆலைக்குழி தோண்டி, கோபுரமும் கட்டி, அதைக் குடியானவர்களுக்குக் குத்தகைக்கு விட்டு வெளியூர் சென்றான்.
மத்தேயு 21 : 34 (RCTA)
காய்க்குங் காலம் நெருங்கியபொழுது தனக்கு வரவேண்டிய பலனை வாங்கிவரும்படி தன் ஊழியரைக் குடியானவர்களிடம் அனுப்பினான்.
மத்தேயு 21 : 35 (RCTA)
குடியானவர்களோ அவனுடைய ஊழியரைப் பிடித்து, ஒருவனை அடித்தனர், ஒருவனைக் கொன்றனர், வேறொருவனைக் கல்லால் எறிந்தனர்.
மத்தேயு 21 : 36 (RCTA)
முந்தினோரைவிட மிகுதியான ஊழியரை மீண்டும் அனுப்பினான். அவர்களுக்கும் அவ்வாறே செய்தனர்.
மத்தேயு 21 : 37 (RCTA)
இறுதியாக, ' என் மகனை மதிப்பர் ' என்று, தன் மகனை அவர்களிடம் அனுப்பினான்.
மத்தேயு 21 : 38 (RCTA)
குடியானவர்களோ மகனைக் கண்டு, ' இவனே சொத்துக்குரியவன், வாருங்கள் இவனைக் கொன்றுபோடுவோம்; இவன் சொத்து நமக்குக் கிடைக்கும் ' என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டனர்.
மத்தேயு 21 : 39 (RCTA)
அவ்வாறே அவனைப் பிடித்துத் திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றனர்.
மத்தேயு 21 : 40 (RCTA)
எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளன் வரும்பொழுது அக்குடியானவரை என்ன செய்வான் ?" என்று கேட்டார்.
மத்தேயு 21 : 41 (RCTA)
அவர்களோ, "கொடியோரைக் கொடுமையாய்த் தண்டித்து ஒழித்துவிடுவான்; உரிய காலத்தில் பலனைக் கொடுக்கும் வேறு குடியானவரிடம் திராட்சைத் தோட்டத்தை விடுவான்" என்றனர்.
மத்தேயு 21 : 42 (RCTA)
இயேசுவோ அவர்களுக்குக் கூறியது: " ' கட்டுவோர் விலக்கிய கல்லே மூலைக் கல்லாய் அமைந்தது; ஆண்டவர் செயல் இது, நம் கண்ணுக்கு வியப்பே ? ' என்று நீங்கள் மறைநூலில் படித்ததே இல்லையா ?
மத்தேயு 21 : 43 (RCTA)
எனவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: கடவுளின் அரசு உங்களிடமிருந்து எடுபட்டு ஏற்ற பலனைத்தரும் இனத்தாருக்கு அளிக்கப்படும்.
மத்தேயு 21 : 44 (RCTA)
அக்கல்லின் மேல் விழுகிறவன் நொறுங்கிப் போவான். எவன் மேல் அது விழுமோ அவன் தவிடுபொடியாவான்."
மத்தேயு 21 : 45 (RCTA)
அவர் உரைத்த உவமைகளைக் கேட்ட தலைமைக்குருக்களும் பரிசேயரும் தங்களைப்பற்றியே கூறினார் என்று உணர்ந்து,
மத்தேயு 21 : 46 (RCTA)
அவரைப் பிடிக்க வழிதேடினர். ஆனால், கூட்டத்திற்கு அஞ்சினர். ஏனெனில், மக்கள் அவரை இறைவாக்கினராகக் கருதினர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46