மத்தேயு 2 : 1 (RCTA)
ஏரோது அரசன்காலத்தில், யூதேயாவிலுள்ள பெத்லெகேமில் இயேசு பிறந்திருக்க, இதோ! ஞானிகள் கீழ்த்திசையிலிருந்து யெருசலேமுக்கு வந்து,
மத்தேயு 2 : 2 (RCTA)
"யூதர்களின் அரசர் பிறந்திருக்கின்றாரே, அவர் எங்கே ? அவருடைய விண்மீன் எழுதலைக் கண்டு, அவரை வணங்க வந்தோம்" என்றார்கள்.
மத்தேயு 2 : 3 (RCTA)
இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவ்வாறே யெருசலேம் முழுவதும் கலங்கிற்று.
மத்தேயு 2 : 4 (RCTA)
அப்பொழுது அவன், தலைமைக் குருக்கள், மக்களுள் மறைநூல் அறிஞர் அனைவரையும் கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று விசாரித்தான்.
மத்தேயு 2 : 5 (RCTA)
அவர்கள் அவனிடம், "யூதேயாவிலுள்ள பெத்லெகேமிலே பிறப்பார்;
மத்தேயு 2 : 6 (RCTA)
ஏனெனில், 'யூதா நாட்டுப் பெத்லெகேமே, யூதாவின் நகரங்களிலே நீ சிறியதே அல்லை. ஏனெனில், என் மக்கள் இஸ்ராயேலை மேய்க்கவேண்டிய தலைவர் உன்னிடமிருந்தே தோன்றுவார் ' என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்" என்றார்கள்.
மத்தேயு 2 : 7 (RCTA)
அப்போது, ஏரோது அந்த ஞானிகளை மறைவாக அழைத்து, அவர்களுக்கு விண்மீன் தோன்றியது எப்பொழுது என்று அவர்களிடம் கருத்தாய்க் கேட்டு அறிந்துகொண்டான்.
மத்தேயு 2 : 8 (RCTA)
பின்பு அவர்களைப் பெத்லெகேமுக்குப் போகச் சொல்லி, "நீங்கள் சென்று குழந்தையைப்பற்றிக் கருத்தாய் ஆராய்ந்து பாருங்கள்; அவரைக் கண்டபின் எனக்குத் தெரிவியுங்கள். நானும் போய் அவரை வணங்கவேண்டும்" என்றான்.
மத்தேயு 2 : 9 (RCTA)
அவர்கள் அரசன் கூறியதைக் கேட்டுப் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழக்கண்ட அந்த விண்மீன், குழந்தை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரை, அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.
மத்தேயு 2 : 10 (RCTA)
விண்மீனைக் கண்டதும் அவர்கள் அளவில்லா மகிழ்ச்சியுற்றனர்.
மத்தேயு 2 : 11 (RCTA)
வீட்டிற்குள் போய், பிள்ளையை அதன் தாய் மரியாளுடன் கண்டு, தெண்டனிட்டு வணங்கினர். தம் பேழைகளைத் திறந்து பொன்னும் தூபமும் வெள்ளைப்போளமும் அவருக்குக் காணிக்கையாகச் செலுத்தினர்.
மத்தேயு 2 : 12 (RCTA)
' ஏரோதிடம் மீண்டும் செல்லவேண்டாம் ' என்று கனவில் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினர்.
மத்தேயு 2 : 13 (RCTA)
அவர்கள் சென்றபின், இதோ! ஆண்டவரின் தூதர் சூசைக்குக் கனவில் தோன்றி, "எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம். நான் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையைத் தொலைக்க ஏரோது தேடப்போகிறான்" என்றார்.
மத்தேயு 2 : 14 (RCTA)
அவர் எழுந்து பிள்ளையையும் தாயையும் இரவிலேயே கூட்டிக்கொண்டு, எகிப்துக்குச் சென்றார்.
மத்தேயு 2 : 15 (RCTA)
ஏரோது இறக்கும் வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, ' எகிப்திலிருந்து என் மகனை அழைத்தேன் ' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் கூறியது நிறைவேற வேண்டியிருந்தது.
மத்தேயு 2 : 16 (RCTA)
பின்னர் ஏரோது, ஞானிகள் தன்னை ஏமாற்றியதைக் கண்டு, கடுங்கோபமுற்று, ஆட்களை அனுப்பி, ஞானிகளிடம் கருத்தாய்க் கேட்டறிந்த காலத்தின்படி பெத்லெகேமிலும், அதன் சுற்றுப்புறமெங்கும் இரண்டு வயதும் அதற்கு உட்பட்டதுமான ஆண்குழந்தைகளையெல்லாம் கொன்றான்.
மத்தேயு 2 : 17 (RCTA)
' ராமாவிலே கூக்குரல் கேட்டது. பேரழுகையும் ஒப்பாரியுமாக இருந்தது.
மத்தேயு 2 : 18 (RCTA)
ராக்கேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டு, அவை இல்லாமையால் ஆறுதல் பெறவிரும்பவில்லை ' என்று எரேமியாஸ் இறைவாக்கினர் கூறியது அப்பொழுது நிறைவேறிற்று.
மத்தேயு 2 : 19 (RCTA)
ஏரோது இறந்ததும், இதோ! ஆண்டவரின் தூதர் எகிப்தில் சூசைக்குக் கனவில் தோன்றி,
மத்தேயு 2 : 20 (RCTA)
"எழுந்து, பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ராயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில், குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடினவர்கள் இறந்துவிட்டனர்" என்றார்.
மத்தேயு 2 : 21 (RCTA)
அவர் எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ராயேல் நாட்டுக்கு வந்தார்.
மத்தேயு 2 : 22 (RCTA)
ஆனால் யூதேயாவிலே, அர்கெலாவு தன் தந்தை ஏரோதிற்குப் பதிலாக அரசாள்வதாகக் கேள்வியுற்று அங்குச் செல்ல அஞ்சினார். கனவில் எச்சரிக்கப்பட்டு கலிலேயா நாட்டுக்குச் சென்றார்.
மத்தேயு 2 : 23 (RCTA)
சென்று, நாசரேத்து என்னும் ஊரில் குடியிருந்தார். இவ்வாறு, ' நாசரேயன் எனப்படுவார் ' என்று இறைவாக்கினர்கள் கூறியது நிறைவேற வேண்டியிருந்தது.
❮
❯