மத்தேயு 15 : 1 (RCTA)
அப்பொழுது பரிசேயரும் மறைநூல் அறிஞரும் யெருசலேமிலிருந்து அவரிடம் வந்து,
மத்தேயு 15 : 2 (RCTA)
"உம் சீடர், முன்னோர் பரம்பரையை மீறுவது ஏன் ? அவர்கள் உண்ணும்பொழுது கை கழுவுவதில்லையே" என்றனர்.
மத்தேயு 15 : 3 (RCTA)
அவர் மறுமொழியாக அவர்களுக்குக் கூறியது: "நீங்களும் உங்கள் பரம்பரையின் பொருட்டுக் கடவுள் கட்டளையை மீறுவது ஏன் ?
மத்தேயு 15 : 4 (RCTA)
' உன் தாய் தந்தையரைப் போற்று ' என்றும், ' தாய் தந்தையரைத் தூற்றுகிறவன் செத்தொழியட்டும் ' என்றும் கடவுள் கூறியுள்ளார்.
மத்தேயு 15 : 5 (RCTA)
நீங்களோ, ' ஒருவன் தன் தந்தையையோ தாயையோ நோக்கி, நான் உமக்கு உதவியாகக் கொடுக்கக்கூடியதெல்லாம் நேர்த்திக்கடனாயிற்று ' என்பானாகில்,
மத்தேயு 15 : 6 (RCTA)
தன் தாய் தந்தையரைப் போற்றவேண்டியதில்லை என்று கூறிகிறீர்கள். இவ்வாறு உங்கள் பரம்பரையின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையை வீணாக்கிவிட்டீர்கள்.
மத்தேயு 15 : 7 (RCTA)
வெளிவேடக்காரரே, உங்களைப்பற்றி இசையாஸ் சரியாய் இறைவாக்கு உரைத்திருக்கிறார்:
மத்தேயு 15 : 8 (RCTA)
' இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கின்றது.
மத்தேயு 15 : 9 (RCTA)
அவர்கள் என்னை வழிபடுவது வீண், ஏனெனில், அவர்கள் போதிப்பது மனிதர் கற்பனை. ' "
மத்தேயு 15 : 10 (RCTA)
பின்பு கூட்டத்தைத் தம்மிடம் அழைத்து, "நான் சொல்லுவதைக் கேட்டு உணர்ந்து கொள்ளுங்கள்.
மத்தேயு 15 : 11 (RCTA)
வாய்க்குள் நுழைவது மனிதனை மாசுபடுத்துவதில்லை. வாயிலிருந்து வெளிவருவதே மனிதனை மாசுபடுத்தும்" என்றார்.
மத்தேயு 15 : 12 (RCTA)
அப்போது, சீடர் அவரை அணுகி, "பரிசேயர் இவ்வார்த்தையைக் கேட்டு இடறல்பட்டது உமக்குத் தெரியுமா ?" என்றனர்.
மத்தேயு 15 : 13 (RCTA)
அவரோ மறுமொழியாக, "என் வானகத்தந்தை நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்.
மத்தேயு 15 : 14 (RCTA)
அவர்கள் இருக்கட்டும்; அவர்கள் குருடருக்கு வழிகாட்டும் குருடர். குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால், இருவரும் குழியில் வீழ்வர்" என்றார்.
மத்தேயு 15 : 15 (RCTA)
அதற்கு இராயப்பர், "இந்த உவமையை எங்களுக்கு விளக்கும்" என்றார்.
மத்தேயு 15 : 16 (RCTA)
அவர் கூறியது: "உங்களுக்கு இன்னுமா உணர்வில்லை ?
மத்தேயு 15 : 17 (RCTA)
வாயினுள் செல்வது எதுவும் வயிற்றிலே போய் ஒதுக்கிடமாய்க் கழிக்கப்படுகின்றது என்று நீங்கள் உணரவில்லையா ?
மத்தேயு 15 : 18 (RCTA)
வாயினின்று வருபவை உள்ளத்தினின்று வருகின்றன, அவையே மனிதனை மாசுபடுத்துகின்றன.
மத்தேயு 15 : 19 (RCTA)
ஏனெனில், உள்ளத்தினின்றே தீய எண்ணங்கள், கொலை, விபசாரம், மோகம், களவு, பொய்ச்சான்று, பழிச்சொல் ஆகியவை வெளிவரும்.
மத்தேயு 15 : 20 (RCTA)
இவையே மனிதனை மாசுபடுத்துகின்றன. கை கழுவாது உண்ணுவதோ மனிதனை மாசுபடுத்துவதில்லை."
மத்தேயு 15 : 21 (RCTA)
இயேசு அங்கிருந்து விலகி, தீர், சீதோன் நகரங்களின் பக்கம் சென்றார்.
மத்தேயு 15 : 22 (RCTA)
இதோ! அங்கே வாழ்ந்த கனானேயப் பெண் ஒருத்தி அவரிடம் வந்து, "ஆண்டவரே, தாவீதின் மகனே! என்மேல் இரக்கம்வையும். என் மகள் பேய்பிடித்துப் பெரிதும் துன்புறுகிறாள்" என்று கூவினாள்.
மத்தேயு 15 : 23 (RCTA)
அவர் ஒரு வார்த்தைகூடப் பதில்சொல்லவில்லை. சீடர் அவரை அணுகி, "இவள் நமக்குப்பின் கத்திக் கொண்டு வருகிறாளே, இவளை அனுப்பிவிடும்" என்று வேண்டினர்.
மத்தேயு 15 : 24 (RCTA)
அதற்கு அவர், "இஸ்ராயேல் குலத்தில் சிதறிப்போன ஆடுகளிடம் மட்டுமே நான் அனுப்பப்பட்டேன்" என்றார்.
மத்தேயு 15 : 25 (RCTA)
அவளோ வந்து அவரைப் பணிந்து, "ஆண்டவரே, எனக்கு உதவிபுரியும்" என்றாள்.
மத்தேயு 15 : 26 (RCTA)
அவர் மறுமொழியாக, "பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்க்குப் போடுதல் நல்லதன்று" என்றார்.
மத்தேயு 15 : 27 (RCTA)
அவளோ, "ஆமாம், ஆண்டவரே, நாய்க்குட்டிகளும் உரிமையாளரின் மேசையினின்று கீழே விழும் சிறு துண்டுகளைத் தின்கின்றனவே" என்றாள்.
மத்தேயு 15 : 28 (RCTA)
அப்போது இயேசு அவளுக்கு மறுமொழியாக, "அம்மா, உன் விசுவாசம் பெரிது. உன் விருப்பப்படியே ஆகட்டும்" என்றார். அந்நேரமுதல் அவள்மகள் குணமாயிருந்தாள்.
மத்தேயு 15 : 29 (RCTA)
இயேசு அங்கிருந்து சென்று, கலிலேயாக் கடற்கரைக்கு வந்து மலையில் ஏறி அங்கு அமர்ந்தார்.
மத்தேயு 15 : 30 (RCTA)
மக்கள் திரள்திரளாக அணுகி, ஊமை, குருடர், முடவர், ஊனர் இன்னும் பலரையும் கொண்டுவந்து, அவரது காலடியில் வைக்க, அவர் அவர்களைக் குணமாக்கினார்.
மத்தேயு 15 : 31 (RCTA)
எனவே, ஊமைகள் பேசுவதையும், ஊனமுடையோர் குணமடைவதையும், முடவர் நடப்பதையும், குருடர் பார்ப்பதையும் மக்கள் கண்டு வியந்து இஸ்ராயேலின் கடவுளை மகிமைப்படுத்தினர்.
மத்தேயு 15 : 32 (RCTA)
இயேசு தம் சீடரை அழைத்து, "இக்கூட்டத்தின்மீது நான் மனமிரங்குகிறேன். இவர்கள் விடாமல் இம்மூன்று நாட்களாக என்னுடன் இருக்கிறார்கள். இவர்களுக்கு உணவு ஒன்றுமில்லையே. இவர்களைப் பட்டினியாக அனுப்பிவிட எனக்கு விருப்பமில்லை. அனுப்பினால், வழியில் சோர்ந்து விழக்கூடும்" என்றார்.
மத்தேயு 15 : 33 (RCTA)
சீடரோ, "இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு வயிறார உணவளிக்க இப்பாழ்வெளியில் அப்பங்கள் நமக்கு எங்கிருந்து கிடைக்கும் ?" என்றனர்.
மத்தேயு 15 : 34 (RCTA)
இயேசு, "உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன ?" என்று அவர்களைக் கேட்க, அவர்கள், "ஏழு இருக்கின்றன. சில சிறு மீன்களும் உள்ளன" என்றனர்.
மத்தேயு 15 : 35 (RCTA)
அப்போது அவர் தரையில் பந்தியமரக் கூட்டத்துக்குக் கட்டளையிட்டு,
மத்தேயு 15 : 36 (RCTA)
ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து நன்றிகூறி, பிட்டுத் தம் சீடரிடம் கொடுத்தார்; அவர்கள் மக்களுக்குக் கொடுத்தனர்.
மத்தேயு 15 : 37 (RCTA)
எல்லாரும் வயிறார உண்டனர். மீதியான துண்டுகளை ஏழு கூடை நிறைய எடுத்தனர்.
மத்தேயு 15 : 38 (RCTA)
பெண்களும் சிறுவர்களும் நீங்கலாக, உணவு அருந்திய ஆண்கள் தொகை நாலாயிரம்.
மத்தேயு 15 : 39 (RCTA)
அவர் கூட்டத்தை அனுப்பிவிட்டுப் படகேறி மகதா நாட்டுக்கு வந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39

BG:

Opacity:

Color:


Size:


Font: