மத்தேயு 1 : 1 (RCTA)
தாவீதின் மகனும், ஆபிரகாமின் மகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணையாவது:
மத்தேயு 1 : 2 (RCTA)
ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தார். ஈசாக்குக்கு யாக்கோபு பிறந்தார். யாக்கோபுக்கு யூதாவும் அவருடைய சகோதரர்களும் பிறந்தார்கள்.
மத்தேயு 1 : 3 (RCTA)
யூதாவுக்குப் பாரேசும் சாராவும் தாமாரிடம் பிறந்தார்கள். பாரேசுக்கு எஸ்ரோம் பிறந்தார். எஸ்ரோமுக்கு ஆராம் பிறந்தார்.
மத்தேயு 1 : 4 (RCTA)
ஆராமுக்கு அம்மினதாப் பிறந்தார். அம்மினதாபுக்கு நசசோன் பிறந்தார். நகசோனுக்குச் சல்மோன் பிறந்தார்.
மத்தேயு 1 : 5 (RCTA)
சல்மோனுக்கு ராகாபிடம் போவாஸ் பிறந்தார். போவாசுக்கு ரூத்திடம் ஓபேத் பிறந்தார். ஓபேதுக்கு ஈசாய் பிறந்தார்.
மத்தேயு 1 : 6 (RCTA)
ஈசாயுக்குத் தாவீது அரசர் பிறந்தார். தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் சாலொமோன் பிறந்தார்.
மத்தேயு 1 : 7 (RCTA)
சாலொமோனுக்கு ரெகொபெயாம் பிறந்தார். ரெகொபெயாமுக்கு அபியா பிறந்தார் அபியாவுக்கு ஆசா பிறந்தார்.
மத்தேயு 1 : 8 (RCTA)
ஆசாவுக்கு யோசபாத் பிறந்தார். யோசபாத்துக்கு யோராம் பிறந்தார். யோராமுக்கு உசியா பிறந்தார்.
மத்தேயு 1 : 9 (RCTA)
உசியாவுக்கு யோதாம் பிறந்தார். யோதாமுக்கு ஆகாஸ் பிறந்தார். ஆகாசுக்கு எசேக்கியா பிறந்தார்.
மத்தேயு 1 : 10 (RCTA)
எசேக்கியாவுக்கு மனாசே பிறந்தார். மனாசேயுக்கு ஆமோன் பிறந்தார். ஆமோனுக்கு யோசியா பிறந்தார்.
மத்தேயு 1 : 11 (RCTA)
யோசியாவுக்கு எகொனியாவும் அவருடைய சகோதரர்களும் பிறந்தார்கள். பாபிலோனுக்கு யூதர்கள் நாடுகடத்தப்பட்டது இக்காலத்தில்தான்.
மத்தேயு 1 : 12 (RCTA)
பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டபின் எகொனியாவுக்கு சலாத்தியேல் பிறந்தார். சலாத்தியேலுக்கு சொரொபாபேல் பிறந்தார்.
மத்தேயு 1 : 13 (RCTA)
சொரொபாபேலுக்கு அபியூத் பிறந்தார். அபியூத்துக்கு எலியாக்கீம் பிறந்தார். எலியாக்கீமுக்கு ஆசோர் பிறந்தார்.
மத்தேயு 1 : 14 (RCTA)
ஆசோருக்கு சாதோக்கு பிறந்தார். சாதோக்குக்கு ஆகீம் பிறந்தார். ஆகீமுக்கு எலியூத் பிறந்தார்.
மத்தேயு 1 : 15 (RCTA)
எலியூதுக்கு எலெயாசார் பிறந்தார். எலெயாசாருக்கு மாத்தான் பிறந்தார். மாத்தானுக்கு யாக்கோபு பிறந்தார்.
மத்தேயு 1 : 16 (RCTA)
யாக்கோபுக்கு மரியாளின் கணவரான சூசை பிறந்தார். இவளிடம் கிறிஸ்து என்னும் இயேசு பிறந்தார்.
மத்தேயு 1 : 17 (RCTA)
ஆகமொத்தம்: ஆபிரகாம்முதல் தாவீதுவரை தலைமுறை பதினான்கு; தாவீதுமுதல் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதுவரை தலைமுறை பதினான்கு; பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதுமுதல் கிறிஸ்துவரை தலைமுறை பதினான்கு.
மத்தேயு 1 : 18 (RCTA)
இயேசு கிறிஸ்து தோன்றியது பின்வருமாறு: அவருடைய தாய் மரியாளுக்கும் சூசைக்கும் மண ஒப்பந்தம் ஆயிருக்க, அவர்கள் கூடிவாழுமுன் பரிசுத்த ஆவியினால் அவள் கருத்தாங்கியிருப்பதாகத் தெரிந்தது.
மத்தேயு 1 : 19 (RCTA)
அவள் கணவர் சூசை நீதிமானாயும், அவளைக் காட்டிக் கொடுக்க மனமில்லாதவராயும், இருந்ததால் அவளை மறைவாக விலக்கிவிட வேண்டும் என்றிருந்தார்.
மத்தேயு 1 : 20 (RCTA)
இதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், இதோ! ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "சூசையே, தாவீதின் மகனே, உம்முடைய மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில், அவள் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால்தான். அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்.
மத்தேயு 1 : 21 (RCTA)
அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.
மத்தேயு 1 : 22 (RCTA)
' இதோ! கன்னி கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவர் ' என்று ஆண்டவர் இறைவாக்கினர் வாயிலாகக் கூறியது நிறைவேறும்படியே இவையனைத்தும் நிகழ்ந்தன.
மத்தேயு 1 : 23 (RCTA)
இம்மானுவேல் என்றால், ' நம்மோடு கடவுள் ' என்பது பொருள்.
மத்தேயு 1 : 24 (RCTA)
சூசை விழித்தெழுந்து, ஆண்டவரின் தூதர் தமக்குக் கட்டளையிட்டவாறு தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.
மத்தேயு 1 : 25 (RCTA)
அவள் தன் தலைப்பேறான மகனைப் பெற்றெடுக்கும்வரை அவர் அவளை அறியாதிருந்தார். அவருக்கு இயேசு என்று பெயரிட்டார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25

BG:

Opacity:

Color:


Size:


Font: