மாற்கு 9 : 1 (RCTA)
மேலும் அவர்களை நோக்கி, "உறுதியாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: கடவுளின் அரசு வல்லமையோடு வந்திருப்பதைக் காணும்வரை இங்கிருப்பவர்களுள் சிலர் சாவுக்குள்ளாக மாட்டார்கள்" என்றார்.
மாற்கு 9 : 2 (RCTA)
ஆறு நாட்களுக்குப் பின் இயேசு இராயப்பரையும் யாகப்பரையும் அருளப்பரையும் அழைத்து ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையில் ஒதுக்கமாய்க் கூட்டிக்கொண்டுபோய் அவர்களுக்குமுன் உருமாறினார்.
மாற்கு 9 : 3 (RCTA)
அவர் ஆடைகள் வெள்ளைவெளேரென ஒளிவீசின. இவ்வுலகில் எந்தச் சலவைக்காரனும் அதுபோல வெளுக்க முடியாது.
மாற்கு 9 : 4 (RCTA)
எலியாசும் மோயீசனும் அவர்களுக்குத் தோன்றி, இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தனர்.
மாற்கு 9 : 5 (RCTA)
இராயப்பர் இயேசுவை நோக்கி, "ராபி, நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று! உமக்கு ஒன்றும் மோயீசனுக்கு ஒன்றும் எலியாசுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரம் அமைப்போம்" என்றார்.
மாற்கு 9 : 6 (RCTA)
தாம் சொல்வது இன்னதென அறியாமலே சொன்னார். ஏனெனில், அவர்கள் பேரச்சம் கொண்டிருந்தனர்.
மாற்கு 9 : 7 (RCTA)
அப்போது மேகம், ஒன்று வந்து அவர்கள்மேல் நிழலிட, "இவரே என் அன்பார்ந்த மகன், இவருக்குச் செவிசாயுங்கள்" என்ற குரலொலி மேகத்திலிருந்து கேட்டது.
மாற்கு 9 : 8 (RCTA)
அவர்கள் உடனே சுற்றிலும் பார்த்தபோது, தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.
மாற்கு 9 : 9 (RCTA)
மலையினின்று அவர்கள் இறங்கும்பொழுது, மனுமகன் இறந்தோரிடமிருந்து உயிர்க்கும்போதன்றி, அவர்கள் கண்டவற்றை ஒருவருக்கும் வெளிப்படுத்தக்கூடாது என்று அவர்அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
மாற்கு 9 : 10 (RCTA)
அவர்கள் அவ்வார்த்தையை மனத்தில் இருத்தி, ' இறந்தோரிடமிருந்து உயிர்க்கும்போது' என்பதன் பொருள் என்ன என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர்.
மாற்கு 9 : 11 (RCTA)
முதலில் எலியாஸ் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர் கூறுவதேன்?" என அவர்கள் அவரைக் கேட்டனர்.
மாற்கு 9 : 12 (RCTA)
அவர், "எலியாஸ் முதலில் வந்து எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்தத்தான் போகிறார். ஆனால் மனுமகன் பாடுகள் பல படவும், புறக்கணிக்கப்படவும் வேண்டுமென எழுதப்பட்டுள்ளதே, அது எப்படி?
மாற்கு 9 : 13 (RCTA)
ஆகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எலியாஸ் வந்தாயிற்று. அவரைக் குறித்து எழுதப்பட்டுள்ளபடி அவர்கள் தாங்கள் விரும்பியதெல்லாம் அவருக்குச் செய்தார்கள்" என்றார்.
மாற்கு 9 : 14 (RCTA)
அவர்கள் சீடரிடம் திரும்பி வந்தபோது பெருங்கூட்டம் ஒன்று அவர்களைச் சூழ்ந்து இருப்பதையும், மறைநூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர்.
மாற்கு 9 : 15 (RCTA)
மக்கள் அனைவரும் அவரைக் கண்டவுடனே திடுக்கிட்டு ஓடிவந்து வணக்கம் செய்தனர்.
மாற்கு 9 : 16 (RCTA)
அவர், "எதைப்பற்றி வாதாடுகிறீர்கள்?" என்று அவர்களைக்கேட்டார்.
மாற்கு 9 : 17 (RCTA)
கூட்டத்திலிருந்த ஒருவன் மறுமொழியாகக் கூறியது: "போதகரே, ஊமைப் போய்பிடித்த என் மகனை உம்மிடம் கொண்டுவந்தேன்.
மாற்கு 9 : 18 (RCTA)
அது எங்கே அவனை ஆட்கொள்கிறதோ அங்கே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் நுரைத்தள்ளிப் பல்லைக்கடித்து விறைத்துப்போகிறான். அதை ஓட்டும்படி உம் சீடரைக் கேட்டேன். அவர்களால் முடியவில்லை."
மாற்கு 9 : 19 (RCTA)
அதற்கு அவர், "விசுவாசமில்லாத தலைமுறையே, எதுவரை உங்களோடு இருப்பேன் ? எதுவரை உங்களைப் பொறுத்துக் கொண்டிருப்பேன்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள்" என்றார்.
மாற்கு 9 : 20 (RCTA)
அவனை அவரிடம் கொண்டுவந்தனர். அவரைக் கண்டவுடன் பேய் அவனை அலைக்கழிக்க, அவன் தரையில் விழுந்து நுரைத்தள்ளிக்கொண்டு புரண்டான்.
மாற்கு 9 : 21 (RCTA)
அவர், "இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாகிறது?" என்று அவனுடைய தகப்பனைக் கேட்க, அவன், "சிறுவயதிலிருந்தே இப்படித்தான்
மாற்கு 9 : 22 (RCTA)
இவனைத் தொலைக்க அந்தப் பேய் அடிக்கடி நீரிலும் நெருப்பிலும் தள்ளியிருக்கிறது. உம்மால் ஏதாவது செய்யக்கூடுமானால் எங்கள்மேல் மனமிரங்கி உதவிபுரியும்" என்றான்.
மாற்கு 9 : 23 (RCTA)
இயேசு அவனை நோக்கி, "கூடுமானாலா? விசுவாசிப்பவனுக்கு எல்லாம் கூடும்" என்றார்.
மாற்கு 9 : 24 (RCTA)
உடனே சிறுவனுடைய தகப்பன், "விசுவசிக்கிறேன். என் விசுவாசமின்மையை நீக்க உதவிசெய்யும்" என்று கத்தினான்.
மாற்கு 9 : 25 (RCTA)
கூட்டம் தம்மிடம் ஓடி வருவதைக் கண்டு, இயேசு அசுத்த ஆவியைக் கடிந்து, "ஊமைச் செவிட்டுப் போயே, உனக்குக் கட்டைளையிடுகிறேன்: இவனை விட்டுப் போ, மீண்டும் இவனுள் நுழையாதே" என்றார்.
மாற்கு 9 : 26 (RCTA)
அது கத்திக்கொண்டு அவனை மிகவும் அலைக்கழித்தபின் வெளியேறிற்று. பையன் பிணம் போலானான். அதைப் பார்த்த மக்கள் கூட்டம், "இறந்துவிட்டான்" என்றது.
மாற்கு 9 : 27 (RCTA)
இயேசுவோ அவன் கையைப் பிடித்துத் தூக்கினார். அவன் எழுந்தான்.
மாற்கு 9 : 28 (RCTA)
அவர் வீட்டிற்குள் போன பின்பு, சீடர்கள், "அதை ஓட்ட எங்களால் ஏன் முடியவில்லை?" என்று அவரைத் தனிமையாகக் கேட்டார்கள்.
மாற்கு 9 : 29 (RCTA)
அதற்கு அவர், "இவ்வகைப் பேய் செபத்தினாலன்றி வேறு எதனாலும் வெளியேறாது" என்றார்.
மாற்கு 9 : 30 (RCTA)
அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுக் கலிலேயாவினூடே சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பினார்.
மாற்கு 9 : 31 (RCTA)
ஏனெனில், "மனுமகன் மனிதர்களிடம் கையளிக்கப்படுவார். அவர்கள் அவரைக் கொல்லுவார்கள். கொல்லப்பட்டு மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழுவார்" என்று தம் சீடருக்குப் போதிக்கலானார்.
மாற்கு 9 : 32 (RCTA)
அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரைக் கேட்கவும் அஞ்சினர்.
மாற்கு 9 : 33 (RCTA)
கப்பர்நகூமுக்கு வந்தனர். வீட்டிலிருக்கும்போது அவர் அவர்களை நோக்கி, "வழியில் என்ன வாதாடிக்கொண்டு வந்தீர்கள்?" என்று கேட்டார். அவர்களோ பேசாதிருந்தனர்.
மாற்கு 9 : 34 (RCTA)
ஏனெனில், "பெரியவன் யார்?" என்பதைப்பற்றி வழியில் தங்களுக்குள் விவாதித்திருந்தார்கள்.
மாற்கு 9 : 35 (RCTA)
அப்போது அவர் அமர்ந்து பன்னிருவரையும் அழைத்து, "ஒருவன் முதல்வனாய் இருக்க விரும்பினால் அவன் அனைவரிலும் கடையனாய் இருக்கட்டும், அனைவருக்கும் பணியாளன் ஆகட்டும்" என்றார்.
மாற்கு 9 : 36 (RCTA)
பின்னர் ஒரு குழந்தையை எடுத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, அதை அரவணைத்து,
மாற்கு 9 : 37 (RCTA)
"இத்தகைய குழந்தைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுகிற எவனும் என்னையே ஏற்றுக்கொள்ளுகிறான். என்னை ஏற்றுக்கொள்ளும் எவனும் என்னையன்று, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்ளுகிறான்" என்றார்.
மாற்கு 9 : 38 (RCTA)
அருளப்பர் அவரிடம், "போதகரே, நம்மைச் சாராத ஒருவன் உம் பெயரால் பேயோட்டுவதைக் கண்டு, அவனைத் தடுக்கப்பார்த்தோம். ஏனெனில், அவன் நம்மைச் சாராதவன்" என்றார்.
மாற்கு 9 : 39 (RCTA)
இயேசு கூறியதாவது: "அவனைத் தடுக்காதீர்கள்; ஏனெனில், என் பெயரால் புதுமை செய்தபின் உடனே என்னைப் பழித்துப்பேசக் கூடியவன் எவனுமில்லை.
மாற்கு 9 : 40 (RCTA)
நமக்கு எதிராக இல்லாதவன் நம் சார்பாக இருக்கிறான்.
மாற்கு 9 : 41 (RCTA)
நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதற்காக உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன், கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்."
மாற்கு 9 : 42 (RCTA)
"என்னை விசுவசிக்கும் இச்சிறுவருள் ஒருவனுக்கு இடறலாய் இருப்பவன் எவனோ, அவனுடைய கழுத்தில் பெரிய எந்திரக்கல்லைக் கட்டிக் கடலில் தள்ளுவது அவனுக்கு நலம்.
மாற்கு 9 : 43 (RCTA)
உன் கை உனக்கு இடறலாய் இருந்தால் அதை வெட்டிவிடு. இரண்டு கைகளோடு நரகத்திற்கு, அணையாத நெருப்பிற்குப் போவதைவிடக் கை ஊனாய் வாழ்வில் நுழைவது உனக்கு நலம்.
மாற்கு 9 : 44 (RCTA)
உன் கால் உனக்கு இடறலாயிருந்தால் அதை வெட்டிவிடு.
மாற்கு 9 : 45 (RCTA)
(44b) இரண்டு கால்களோடு நரகத்தில் தள்ளப்படுவதைவிட முடவனாய் முடிவில்லா வாழ்வில் நுழைவது உனக்கு நலம்.
மாற்கு 9 : 46 (RCTA)
(45) உன் கண் உனக்கு இடறலாயிருந்தால் அதை எறிந்துவிடு.
மாற்கு 9 : 47 (RCTA)
(46) இரண்டு கண்களோடு நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணனாய்க் கடவுளின் அரசிற்குள் நுழைவது உனக்கு நலம்.
மாற்கு 9 : 48 (RCTA)
(47) அந்நரகத்திலோ அவர்களை அரிக்கும் புழு இறவாது; நெருப்பும் அணையாது.
மாற்கு 9 : 49 (RCTA)
(48) ஏனெனில், ஒவ்வொருவனும் நெருப்பினால் உப்பிடப்படுவான்.
மாற்கு 9 : 50 (RCTA)
(49) "உப்பு நல்லதுதான். ஆனால் உப்பு உவர்ப்பு அற்றுப்போனால் எதைக்கொண்டு அதற்குச் சாரம் ஏற்றுவீர்கள்? உங்களுக்குள் உப்பு இருக்கட்டும். ஒருவர் ஒருவரோடு சமாதானமாயிருங்கள்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50

BG:

Opacity:

Color:


Size:


Font: