மாற்கு 4 : 1 (RCTA)
மீண்டும் அவர் கடலோரத்தில் போதிக்கத் தொடங்கினார். மாபெரும் கூட்டமொன்று அவரை நெருக்கவே, அவர் படகிலேறிக் கடலிலிருக்க, கூட்டமனைத்தும் கடலோரமாய்க் கரையிலிருந்தது.
மாற்கு 4 : 2 (RCTA)
அவர் அவர்களுக்கு உவமைகளால் பற்பல போதிக்கலானார். போதிக்கையில் சொன்னதாவது:
மாற்கு 4 : 3 (RCTA)
"கேளுங்கள்: இதோ, விதைப்பவன் விதைக்கச் சென்றான்.
மாற்கு 4 : 4 (RCTA)
விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரமாய் விழவே, பறவைகள் வந்து அவற்றைத் தின்று விட்டன.
மாற்கு 4 : 5 (RCTA)
சில அதிக மண்ணில்லாத பாறை நிலத்தில் விழுந்தன. அடி மண்ணில்லாததால் உடனே முளைத்தன.
மாற்கு 4 : 6 (RCTA)
வெயில் ஏறியதும் தீய்ந்து, வேரில்லாமையால் காய்ந்து போயின.
மாற்கு 4 : 7 (RCTA)
சில முட்செடிகன் நடுவில் விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெரித்துவிடவே அவை பலன் கொடுக்கவில்லை.
மாற்கு 4 : 8 (RCTA)
சில நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து ஓங்கி வளர்ந்து ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன்கொடுத்தன."
மாற்கு 4 : 9 (RCTA)
மேலும், "கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.
மாற்கு 4 : 10 (RCTA)
அவர் தனித்திருக்கையில் பன்னிருவரும், அவரைச் சூழ இருந்தவர்களும் உவமைகளைப் பற்றி வினவினர்.
மாற்கு 4 : 11 (RCTA)
அவர் அவர்களை நோக்கி: " கடவுளது அரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. புறத்தே இருப்பவர்களுக்கோ எல்லாம் உவமைகளாயிருக்கின்றன.
மாற்கு 4 : 12 (RCTA)
எதெற்கெனில், ஒருவேளை அவர்கள் மனந்திரும்பி மன்னிப்புப் பெறாதபடி, ' பார்த்துப் பார்த்தும் காணாமலும், கேட்டுக் கேட்டும் உணராமலும் இருக்கவே ' " என்றார்.
மாற்கு 4 : 13 (RCTA)
மேலும், அவர்களை நோக்கி, "இவ்வுவமை உங்களுக்கு விளங்கவில்லையா? பின் எப்படி எல்லா உவமைகளையும் புரிந்துகொள்வீர்கள்?
மாற்கு 4 : 14 (RCTA)
விதைப்பவன் விதைப்பது தேவ வார்த்தை.
மாற்கு 4 : 15 (RCTA)
வழியோரமாய் விழுந்த வார்த்தை என்னும் விதைப்போலச் சிலர் உள்ளனர். அவர்கள் அதைக் கேட்டவுடனே அவர்களுடைய உள்ளத்தில் விதைக்கப்பட்ட வார்த்தையைச் சாத்தான் வந்து எடுத்துவிடுகிறான்.
மாற்கு 4 : 16 (RCTA)
அவ்வாறே பாறைநிலத்தில் விழுந்த விதை போன்றவர்கள் ஒருசிலர் உள்ளனர். இவர்கள் வார்த்தையைக் கேட்டவுடன் மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளுகின்றனர்.
மாற்கு 4 : 17 (RCTA)
ஆனால், இவர்கள் வேரற்றவர்கள், நிலையற்றவர்கள். பின்பு, வார்த்தையின் பொருட்டு வேதனையுற்றாலோ துன்புறுத்தப்பட்டாலோ உடனே இடறல்படுவர்.
மாற்கு 4 : 18 (RCTA)
முட்செடிகள் நடுவில் விழுந்த விதை போன்றவர்கள் வேறு சிலர். இவர்கள் வார்த்தையைக் கேட்கின்றனர்.
மாற்கு 4 : 19 (RCTA)
ஆனால், உலகக் கவலையும் செல்வ மாயையும் மற்ற இச்சைகளும் நுழைந்து வார்த்தையை நெரிக்க அது பயனற்றுப் போகின்றது.
மாற்கு 4 : 20 (RCTA)
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைபோன்றவர்கள் சிலர். இவர்கள் வார்த்தையைக் கேட்டு ஏற்றுக்கொண்டு முப்பதும் அறுப்பதும் நூறுமாகப் பலன்கொடுக்கின்றனர்" என்றார்.
மாற்கு 4 : 21 (RCTA)
மேலும் அவர்களை நோக்கி, "விளக்கைக் கொண்டுவருவது எதற்கு? மரக்காலின் கீழோ கட்டிலின் கீழோ வைப்பதற்கா? விளக்குத் தண்டின்மேல் வைப்பதற்கு அன்றோ?
மாற்கு 4 : 22 (RCTA)
"வெளிப்படாதபடி ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாதபடி மறைந்திருப்பதும் ஒன்றுமில்லை.
மாற்கு 4 : 23 (RCTA)
கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.
மாற்கு 4 : 24 (RCTA)
பின்னும் அவர் சொன்னதாவது: "நீங்கள் கேட்கும் வார்த்தைகளைக் கவனியுங்கள். எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும், கூடவும் கொடுக்கப்படும்.
மாற்கு 4 : 25 (RCTA)
ஏனெனில் உள்ளவனுக்குக் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.
மாற்கு 4 : 26 (RCTA)
"கடவுளரசு நிலத்தில் விதையைப் போட்ட ஒருவனுக்கு ஒப்பாயிருக்கிறது.
மாற்கு 4 : 27 (RCTA)
அவன் இரவில் தூங்கினாலோ பகலில் விழித்திருந்தாலோ, எவ்வாறென்று அவனுக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது.
மாற்கு 4 : 28 (RCTA)
நிலம் தானாகவே பலன் அளிக்கிறது: முதலில் பயிர், பின், கதிர், அதன்பின் கதிர்நிறைய மணி.
மாற்கு 4 : 29 (RCTA)
பயிர் விளைந்ததும் அவன் அரிவாளை எடுக்கிறான். ஏனெனில், அறுவடை வந்துவிட்டது" என்றார்.
மாற்கு 4 : 30 (RCTA)
பின்னும், "கடவுளரசை எதற்கு ஒப்பிடுவோம்? எந்த உவமையால் எடுத்துக்காட்டுவோம்? அது கடுகுமணியைப் போன்றது.
மாற்கு 4 : 31 (RCTA)
இது நிலத்தில் விதைக்கப்படும்பொழுது உலகிலுள்ள விதைகளிலெல்லாம் மிகச் சிறியது.
மாற்கு 4 : 32 (RCTA)
விதைத்தபின்போ, முளைத்தெழுந்து செடிகளிலெல்லாம் மிகப் பெரியதாகித் தன் நிழலில் வானத்துப் பறவைகள் வந்து தங்கக்கூடிய பெருங்கிளைகள் விடும்" எனறார்
மாற்கு 4 : 33 (RCTA)
அவர்கள் கேட்டறியும் திறனுக்கேற்ப இத்தகைய பல உவமைகளால் அவர்களுக்குத் தேவ வார்த்தையைச் சொல்லுவார்.
மாற்கு 4 : 34 (RCTA)
உவமைகளால் அன்றி அவர் அவர்களிடம் பேசியதில்லை. தம் சீடருக்கோ தனியாக அனைத்தையும் விளக்குவார்.
மாற்கு 4 : 35 (RCTA)
அன்று மாலை அவர்களிடம், "அக்கரைக்குச் செல்வோம்" என்றார்.
மாற்கு 4 : 36 (RCTA)
அவர்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு அவரை அப்படியே படகில் அழைத்துச் சென்றனர். அவருடன் வேறு படகுகளும் சென்றன.
மாற்கு 4 : 37 (RCTA)
அப்போது பெரிய பயுல் காற்று உண்டாயிற்று. அலைகள் படகின்மேல் மோத, படகு நீரால் நிரம்பும் தறுவாயிலிருந்தது.
மாற்கு 4 : 38 (RCTA)
அவர் பின்னணியத்தில் தலையணை மீது தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி, "போதகரே, மடிந்து போகிறோமே; உமக்கு அக்கறை இல்லையா?" என்றனர்.
மாற்கு 4 : 39 (RCTA)
அவர் எழுந்து, காற்றைக் கடிந்து கடலை நோக்கி, "இசையாதே, சும்மாயிரு" என்றனர். காற்று நின்றது, பேரமைதி உண்டாயிற்று.
மாற்கு 4 : 40 (RCTA)
பின், அவர் அவர்களை நோக்கி, "ஏன் இவ்வளவு பயம்? இன்னும் உங்களுக்கு விசுவாசமில்லையா?" என்றார்.
மாற்கு 4 : 41 (RCTA)
அவர்கள் பெரிதும் அச்சமுற்று, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே, இவர் யாராயிருக்கலாம்?" என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.
❮
❯