மாற்கு 3 : 1 (RCTA)
மீண்டும் செபக்கூடத்திற்கு வந்தார். அங்கே சூம்பிய கையன் ஒருவனிருந்தான்.
மாற்கு 3 : 2 (RCTA)
அவர்மேல் குற்றஞ்சாட்டும்படி, ஓய்வுநாளில் குணமாக்குவாராவென்று பார்த்துக் கொண்டே இருந்தனர்.
மாற்கு 3 : 3 (RCTA)
அவரோ சூம்பியகையனை நோக்கி, "வந்து நடுவிலே நில்" என்றார்.
மாற்கு 3 : 4 (RCTA)
பின் அவர்களிடம் "ஓய்வுநாளில் எது செய்வது முறை? நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா?" என்று கேட்டார்.
மாற்கு 3 : 5 (RCTA)
அவர்களோ பேசாதிருந்தனர். அவர் சினத்தோடு அவர்களைச் சுற்றிப் பார்த்து, அவர்களது மனக் கடினத்தைக் கண்டு வருந்தி, அவனை நோக்கி, "கையை நீட்டு" என்றார். நீட்டினான்; கை குணமாயிற்று.
மாற்கு 3 : 6 (RCTA)
பரிசேயரோ வெளியே போய், ஏரோதியரோடு சேர்ந்து அவரை எப்படித் தொலைக்கலாமென்று அவருக்கெதிராக உடனே ஆலோசனை செய்தனர்.
மாற்கு 3 : 7 (RCTA)
இயேசு தம் சீடருடன் அங்கிருந்து விலகிக் கடலோரம் சென்றார்.
மாற்கு 3 : 8 (RCTA)
கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் செய்ததெல்லாம் கேள்வியுற்று யூதேயா, யெருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் வட்டாரம் ஆகிய இடங்களிலிருந்தும் திரளான மக்கள் அவரிடம் வந்தனர்.
மாற்கு 3 : 9 (RCTA)
கூட்டமாயிருக்கவே, அவர்கள் தம்மை நெருக்காதபடி தமக்குப் படகு ஒன்றைத் தயாராக வைத்திருக்குமாறு சீடருக்குச் சொன்னார்.
மாற்கு 3 : 10 (RCTA)
ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால் நோயாளிகளெல்லாரும் அவரைத் தொடவேண்டுமென்று அவர்மேல் வந்து விழுந்தனர்.
மாற்கு 3 : 11 (RCTA)
அசுத்த அவிகள் அவரைக் காணும்போது, "நீர் கடவுளின் மகன்" என்று கத்திக்கொண்டு அவர் காலில் விழுந்தன.
மாற்கு 3 : 12 (RCTA)
ஆனால் அவர், தம்மை வெளிப்படுத்த வேண்டாமென மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.
மாற்கு 3 : 13 (RCTA)
மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களை அழைத்தார். அவர்கள் அவரிடம் வந்தனர்.
மாற்கு 3 : 14 (RCTA)
தம்மோடு இருப்பதற்கும்,
மாற்கு 3 : 15 (RCTA)
பேய்களை ஓட்டும் அதிகாரத்தோடு தூது அறிவிக்கத் தாம் அனுப்புவதற்குமெனப் பன்னிருவரை ஏற்படுத்தினார். இவ்வாறு பன்னிருவரை ஏற்படுத்தினார்.
மாற்கு 3 : 16 (RCTA)
அவர்கள் யாரெனில்: சீமோன் -- இவருக்கு இராயப்பர் என்று பெயரிட்டார். --
மாற்கு 3 : 17 (RCTA)
செபெதேயுவின் மகன் யாகப்பர், யாகப்பருடைய சகோதரர் அருளப்பர் - இவர்களுக்கு இடியின் மக்கள் எனப் பொருள்படும் போவனேர்கெஸ் எனப் பெயரிட்டார்.
மாற்கு 3 : 18 (RCTA)
பெலவேந்திரர், பிலிப்பு, பாத்தொலொமேயு, மத்தேயு, தோமையார், அல்பேயுவின் மகன் யாகப்பர், ததேயு, கனானேய சீமோன்,
மாற்கு 3 : 19 (RCTA)
அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்து.
மாற்கு 3 : 20 (RCTA)
வீட்டிற்கு அவர் வரவே, மீண்டும் கூட்டம் கூடியது. ஆதலால் அவர்கள் சாப்பிடவும் முடியவில்லை.
மாற்கு 3 : 21 (RCTA)
அவருடைய உறவினர் இதைக் கேட்டு அவரைப் பிடித்துக்கொண்டுவரப் புறப்பட்டார்கள். ஏனெனில், அவர் மதிமயங்கிவிட்டார். என்று மக்கள் சொல்லிக்கொண்டிருந்தனர்.
மாற்கு 3 : 22 (RCTA)
யெருசலேமிலிருந்து வந்த மறைநூல் அறிஞர், இவரைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறதென்றும், பேய்த்தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்றும் சொல்லி வந்தனர்.
மாற்கு 3 : 23 (RCTA)
ஆதலால் அவர் அவர்களை அழைத்து அவர்களுக்கு உவமையாகச் சொன்னதாவது: "சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்?
மாற்கு 3 : 24 (RCTA)
ஓர் அரசு தனக்கு எதிராகத் தானே பிரிந்தால் அவ்வரசு நிலைக்க முடியாது.
மாற்கு 3 : 25 (RCTA)
ஒரு வீடு தனக்கு எதிராகத் தானே பிரிந்தால், அவ்வீடு நிலைக்க முடியாது.
மாற்கு 3 : 26 (RCTA)
சாத்தான் தனக்கு எதிராகத் தானே எழுந்தால் பிரிவபுட்டு நிற்கமுடியாமல் தொலைவான்.
மாற்கு 3 : 27 (RCTA)
முதலில் வலியவனைக் கட்டினாலன்றி அவ்வலியவனுடைய வீட்டினுள் நுழைந்து அவனுடைய பொருள்களைக் கொள்ளையிட எவனாலும் முடியாது. கட்டின பின்புதான் அவனுடைய வீட்டைக் கொள்ளையிடுவான்.
மாற்கு 3 : 28 (RCTA)
"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: மக்களுக்கு எல்லாம் மன்னிக்கப்படும். பாவங்களும் அவர்கள் சொல்லும் தேவ தூஷணங்களும் மன்னிக்கப்படும்.
மாற்கு 3 : 29 (RCTA)
ஆனால், பரிசுத்த ஆவியைத் தூஷிப்பவன் எவனும் ஒருபோதும் மன்னிப்புப் பெறான், என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவான்."
மாற்கு 3 : 30 (RCTA)
"அசுத்த ஆவி அவரைப் பிடித்திருக்கிறது" என்று அவர்கள் சொல்லிவந்தால் இயேசு இவ்வாறு கூறினார்.
மாற்கு 3 : 31 (RCTA)
அவருடைய தாயும் சகோதரரும் வந்து வெளியே நின்றுகொண்டு, அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினர்.
மாற்கு 3 : 32 (RCTA)
அவரைச் சுற்றி மக்கள் கூட்டமாய் உட்கார்ந்திருந்தனர். 'இதோ! உம் தாயும் சகோதரரும் உம்மைத் தேடிக்கொண்டுவந்து வெளியே இருக்கின்றனர்" என்று அவரிடம் சொன்னார்கள்.
மாற்கு 3 : 33 (RCTA)
அதற்கு அவர், 'என் தாயும் என் சகோதரரும் யார்?" என்று கேட்டு,
மாற்கு 3 : 34 (RCTA)
தம்மைச் சூழ்ந்து இருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து, "இதோ! என் தாயும் என் சகோதரரும்,
மாற்கு 3 : 35 (RCTA)
கடவுளின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயுமாவான்" என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35