மாற்கு 2 : 1 (RCTA)
சில நாட்களுக்குப்பின் அவர் கப்பர் நகூம் ஊருக்கு மீண்டும் வந்தார். வீட்டில் அவர் இருக்கிறார் என்ற செய்தி பரவிற்று.
மாற்கு 2 : 2 (RCTA)
பலர் வந்து கூடவே, வாசலுக்கு வெளியே முதலாய் இடமில்லை. அவர் அவர்களுக்குத் தேவ வார்த்தையை எடுத்துச் சொன்னார்.
மாற்கு 2 : 3 (RCTA)
அப்பொழுது திமிர்வாதக்காரன் ஒருவனை நால்வர் சுமந்து கொண்டு அவரிடம் வந்தனர்.
மாற்கு 2 : 4 (RCTA)
கூட்ட மிகுதியால் அவர்முன் அவனைக் கிடத்த முடியாமல் அவர் இருந்த வீட்டின் மேல்தட்டைப் பிரித்து, திறப்பு உண்டாக்கி, திமிர்வாதக் காரன் படுத்திருந்த படுக்கையை இறக்கினர்.
மாற்கு 2 : 5 (RCTA)
இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.
மாற்கு 2 : 6 (RCTA)
அங்கிருந்த மறைநூல் அறிஞருள் சிலர். "என்ன, இவர் இப்படிப் பேசுகிறார்? கடவுளைத் தூஷிக்கிறார்.
மாற்கு 2 : 7 (RCTA)
கடவுள் ஒருவரே யன்றிப் பாவத்தை மன்னிக்கவல்லவர் வேறு யார்?" என்று உள்ளத்தில் எண்ணினர்.
மாற்கு 2 : 8 (RCTA)
இவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு உடனே மனத்தில் அறிந்து, அவர்களை நோக்கி, "உங்கள் உள்ளத்தில் இப்படி நினைப்பதேன்?
மாற்கு 2 : 9 (RCTA)
எது எளிது ? இந்தத் திமிர்வாதக்காரனை நோக்கி, 'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்பதா? 'எழுந்து உன் படுக்கையை எடுத்துகொண்டு நட' என்பதா?
மாற்கு 2 : 10 (RCTA)
மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு"
மாற்கு 2 : 11 (RCTA)
திமிர்வாதக்காரனை நோக்கி -- "நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப்போ" என்றார்.
மாற்கு 2 : 12 (RCTA)
என்றதும், அவன் எழுந்து தன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு எல்லாருக்கும் முன்பாக வெளியேறி சென்றான். இதனால் அனைவரும் திகைப்புற்று, "இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதேயில்லை" என்று கடவுளை மகிமைப்படுத்தினர்.
மாற்கு 2 : 13 (RCTA)
அவர் மீண்டும் கடலோரம் சென்றார். கூட்டம் எல்லாம் அவரிடம் வரவே அவர்களுக்குப் போதிக்கலானார்.
மாற்கு 2 : 14 (RCTA)
அவர் வழியே போகையில் அல்பேயுவின் மகன் லேவி, சுங்கத்துறையில் அமர்ந்திருக்கக் கண்டு அவரை நோக்கி. "என்னைப் பின்செல்" என்றார். அவர் எழுந்து அவரைப் பின்சென்றார்.
மாற்கு 2 : 15 (RCTA)
அவருடைய வீட்டில் இயேசு பந்தி அமர்ந்திருக்கையில் ஆயக்காரர், பாவிகள் பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் ஒருங்கே அமர்ந்திருந்தனர். ஏனெனில், அவரைப் பின்தொடர்ந்தவர் பலர்.
மாற்கு 2 : 16 (RCTA)
பரிசேயரைச் சேர்ந்த மறைநூல் அறிஞர், அவர் பாவிகளோடும் ஆயக்காரரோடும் உண்பதைக் கண்டு அவருடைய சீடரை நோக்கி, "உங்கள் போதகர் பாவிகளோடும் ஆயக்காரரோடும் உண்பதேன்?" என்றனர்.
மாற்கு 2 : 17 (RCTA)
இதைக் கேட்ட இயேசு, "மருத்துவன் நோயற்றவர்க்கன்று, நோயுற்றவர்க்கே தேவை. நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்று அவர்களிடம் கூறினார்.
மாற்கு 2 : 18 (RCTA)
ஒருநாள் அருளப்பருடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்தனர். அப்பொழுது சிலர் அவரிடம் வந்து, "அருளப்பருடைய சீடரும் பரிசேயருடைய சீடரும் நோன்பு இருக்க, உம்முடைய சிடர் ஏன் நோன்பு இருப்பதில்லை?" என்றனர்.
மாற்கு 2 : 19 (RCTA)
இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்குமளவும் அவன் தோழர்கள் நோன்பு இருக்கலாமா? மணமகனுடன் இருக்குந்தனையும் அவர்கள் நோன்பு இருக்க முடியாது.
மாற்கு 2 : 20 (RCTA)
மணமகன் அவர்களை விட்டுப் பிரியும் நாள் வரும். அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்.
மாற்கு 2 : 21 (RCTA)
பழைய ஆடையில் கோடித்துணியை எவனும் ஒட்டுப்போடுவதில்லை. அப்படிப் போட்டால் அந்த ஒட்டு பழையதைக் கிழிக்கும்,
மாற்கு 2 : 22 (RCTA)
கிழியலும் பெரிதாகும். புதுத் திராட்சை இரசத்தைப் பழஞ் சித்தைகளில் ஊற்றி வைப்பர் எவரும் இல்லை. வைத்தால் இரசம் சித்தைகளைக் கிழிப்பதுமல்லாமல் இரசமும் சித்தைகளும் பாழாகும். ஆனால், புது இரசத்தைப் புதுச் சித்தைகளில் ஊற்றி வைக்கவேண்டும்" என்றார்.
மாற்கு 2 : 23 (RCTA)
ஓய்வுநாளில் விளைச்சல்வழியே அவர் செல்லும்பொழுது சீடர் நடந்துகொண்டே கதிர்களைக் கொய்யத் தொடங்கினர்.
மாற்கு 2 : 24 (RCTA)
பரிசேயரோ அவரை நோக்கி, "பாரும், ஓய்வுநாளில் செய்யத்தகாததை ஏன் செய்கிறார்கள்?" என்றனர்.
மாற்கு 2 : 25 (RCTA)
அதற்கு அவர், "தாவீதும் அவரோடு இருந்தவர்களும் உணவின்றிப் பசியாயிருந்தபொழுது, அவர் என்ன செய்தார் என்று நீங்கள் ஒருபோதும் வாசித்ததில்லையோ?
மாற்கு 2 : 26 (RCTA)
அபியத்தார் தலைமைக்குருவாய் இருந்தபொழுது அவர் கடவுளின் இல்லத்தில் நுழைந்து, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத காணிக்கை அப்பங்களைத் தாம் உண்டதுமன்றி, கூட இருந்தவர்களுக்கும் கொடுத்தாரே" என்றார்.
மாற்கு 2 : 27 (RCTA)
அவர் அவர்களை நோக்கி, "ஓய்வுநாள் இருப்பது மனிதனுக்காக: மனிதன் இருப்பது ஓய்வுநாளுக்காக அன்று.
மாற்கு 2 : 28 (RCTA)
ஆதலால் மனுமகன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவர்" என்றார்.
❮
❯