மாற்கு 13 : 1 (RCTA)
அவர் கோயிலை விட்டுப் போகும்பொழுது, அவருடைய சீடருள் ஒருவர் அவரிடம், "போதகரே, இதோ பாரும், எத்தகைய கற்கள்! எத்தகைய கட்டடங்கள்" என,
மாற்கு 13 : 2 (RCTA)
இயேசு அவரிடம், "இப்பெரிய கட்டடங்களைப் பார்க்கிறாயே, கல்லின்மேல் கல் நிற்காதபடி எல்லாம் இடிக்கப்படும்" என்றார்.
மாற்கு 13 : 3 (RCTA)
அவர் கோயிலுக்கு எதிரே, ஒலிவ மலைமீது அமர்ந்தபின், இராயப்பர், யாகப்பர், அருளப்பர், பெலவேந்திரர் ஆகியோர் அவரிடம்,
மாற்கு 13 : 4 (RCTA)
"இவை எப்பொழுது நடக்கும்? இவை அனைத்தும் நிறைவேற இருக்கும்பொழுது தோன்றும் அறிகுறி என்ன? எங்களுக்குச் சொல்லும்" என்று தனியாகக் கேட்டனர்.
மாற்கு 13 : 5 (RCTA)
இயேசு கூறலானார்: "யாரும் உங்களை ஏமாற்றாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
மாற்கு 13 : 6 (RCTA)
பலர் வந்து என் பெயரை வைத்துக்கொண்டு, 'நானே அவர்' என்று சொல்லிப் பலரை ஏமாற்றுவர்.
மாற்கு 13 : 7 (RCTA)
போர் முழக்கங்களையும் போர்ப் பேச்சுக்களையும் கேட்கும்போது கலங்கவேண்டாம். இவை நிகழத்தான் வேண்டும். ஆனால் இன்னும் இது முடிவன்று.
மாற்கு 13 : 8 (RCTA)
நாடு நாட்டையும், அரசு அரசையும் எதிர்த்து எழும். பற்பல இடங்களில் நிலநடுக்கமும் பஞ்சமும் உண்டாகும். இவை வேதனைகளின் தொடக்கமே.
மாற்கு 13 : 9 (RCTA)
"நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள். உங்களை நீதிமன்றங்களுக்குக் கையளிப்பார்கள், செபக்கூடங்களில் அடிப்பார்கள். என்பொருட்டு ஆளுநர்களுக்கும் அரசர்களுக்கும் முன்பாக நீங்கள் நிறுத்தப்படுவீர்கள். அவர்கள் முன் சாட்சியாய் இருப்பீர்கள்.
மாற்கு 13 : 10 (RCTA)
முதலில் நற்செய்தி எல்லா இனத்தாருக்கும் அறிவிக்கப்படவேண்டும்.
மாற்கு 13 : 11 (RCTA)
உங்களைக் கையளிக்கக் கொண்டுபோகும்போது என்ன சொல்வது என்று முன்னதாகவே கவலைப்படவேண்டாம். அவ்வேளையில் உங்களுக்கு அருளப்படுவதையே சொல்லுங்கள். ஏனெனில், பேசுவது நீங்கள் அல்ல, பரிசுத்த ஆவியே பேசுவார்.
மாற்கு 13 : 12 (RCTA)
சகோதரன் சகோதரனையும், தந்தை மகனையும் சாவுக்குக் கையளிப்பர். மக்கள் பெற்றோருக்கு எதிராக எழுந்து அவர்களைச் சாவுக்கு உட்படுத்துவார்கள்.
மாற்கு 13 : 13 (RCTA)
என் பெயரைக்குறித்து உங்களை எல்லாரும் வெறுப்பார்கள். இறுதிவரை நிலைநிற்கிறவன் மீட்புப் பெறுவான்.
மாற்கு 13 : 14 (RCTA)
"ஆனால், 'பாழாக்கும் அருவருப்பு' நிற்கக் கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் காணும்போது -- இதைப் படிப்பவன் உணர்ந்துகொள்ளட்டும் -- அப்போது யூதேயாவில் இருப்பவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகட்டும்.
மாற்கு 13 : 15 (RCTA)
கூரைமேல் இருப்பவன் இறங்கி வீட்டில் நுழைந்து எதையும் எடுக்காமலே ஓடட்டும்.
மாற்கு 13 : 16 (RCTA)
வயலிலிருப்பவன் தன் போர்வையை எடுக்கவும் திரும்பி வரவேண்டாம்.
மாற்கு 13 : 17 (RCTA)
அந்நாட்களில் கருப்பவதிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் ஐயோ பரிதாபம்!
மாற்கு 13 : 18 (RCTA)
இவை குளிர்காலத்தில் நிகழாதபடி மன்றாடுங்கள்.
மாற்கு 13 : 19 (RCTA)
ஏனெனில், அவை வேதனையின் நாட்களாயிருக்கும். கடவுள் படைப்பைப் படைத்த தொடக்கத்திலிருந்து இதுவரை இத்தகைய வேதனை இருந்ததுமில்லை, இனி இருக்கப்போவதுமில்லை.
மாற்கு 13 : 20 (RCTA)
ஆண்டவர் அந்நாட்களைக் குறைக்காவிடில் எவ்வுயிரும் தப்பித்துக் கொள்ளாது. ஆனால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் பொருட்டு அந்நாட்களைக் குறைத்திருக்கிறார்.
மாற்கு 13 : 21 (RCTA)
அப்பொழுது எவனாவது உங்களிடம், 'இதோ! மெசியா இங்கே இருக்கிறார், அதோ! அங்கே இருக்கிறார்' என்றால் நம்பாதீர்கள்.
மாற்கு 13 : 22 (RCTA)
போலி மெசியாக்களும் போலித்தீர்க்கதரிசிகளும் தோன்றி, கூடுமானால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களையும் ஏமாற்றக் கூடிய அருங்குறிகளும் அற்புதங்களும் செய்துகாட்டுவார்கள்.
மாற்கு 13 : 23 (RCTA)
உங்களுக்கு எல்லாவற்றையும் முன்னதாகவே கூறிவிட்டேன்; எச்சரிக்கையாயிருங்கள்.
மாற்கு 13 : 24 (RCTA)
"ஆனால் அந்நாட்களில் இவ்வேதனைகளுக்குப்பின்னர் கதிரவன் இருண்டு விடுவான்; நிலா ஒளி கெடாது,
மாற்கு 13 : 25 (RCTA)
விண்மீன்கள் வானிலிருந்து விழுந்துகொண்டிருக்கும்; வானத்தின் படைகள் அசைக்கப்படும்.
மாற்கு 13 : 26 (RCTA)
அப்பொழுது மனுமகன் மிகுந்த வல்லமையோடும் மாட்சிமையோடும் மேகங்களின் மீது வருவதைக் காண்பார்கள்.
மாற்கு 13 : 27 (RCTA)
அப்பொழுது அவர் தம் தூதர்களை அனுப்பி, மண்ணுலகின் கடைமுனை முதல் விண்ணுலகின் கடைமுனைவரை நாற்றிசையிலுமிருந்து தாம் தேர்ந்துகொண்டவர்களைத் திரட்டுவார்.
மாற்கு 13 : 28 (RCTA)
"அத்திமரத்திலிருந்து இந்த உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் மென்மையாகித் தளிர்விடும்போது கோடைக்காலம் அண்மையிலுள்ளது என்று உங்களுக்குத் தெரியும்.
மாற்கு 13 : 29 (RCTA)
அவ்வாறே நீங்களும் இவையெல்லாம் நடைபெறுவதைக் காணும்பொழுது, அவர் அண்மையிலிருக்கிறார். வாசலிலேயே இருக்கிறார் என்று அறிந்துகொள்ளுங்கள்.
மாற்கு 13 : 30 (RCTA)
இவை யாவும் நடைபெறும்வரை இத்தலைமுறை ஒழியாது என்று உங்களுக்கு உறுதியாகச் சொல்லுகிறேன்.
மாற்கு 13 : 31 (RCTA)
விண்ணும் மண்ணும் ஒழிந்துபோம்; என் வார்த்தைகளோ ஒழிந்து போகா.
மாற்கு 13 : 32 (RCTA)
அந்நாளோ நாழிகையோ ஒருவனுக்கும் தெரியாது; தந்தைக்குத் தெரியுமேயன்றி, வானதூதருக்கும் மகனுக்கும்கூடத் தெரியாது.
மாற்கு 13 : 33 (RCTA)
"எச்சரிக்கையாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில், அந்நேரம் எப்பொழுது என்று உங்களுக்குத் தெரியாது.
மாற்கு 13 : 34 (RCTA)
இது எப்படியெனில், வெளியூர் செல்லும் ஒருவன் செய்வது போலாகும். அவன் தன் வீட்டை விட்டுப் புறப்படும்போது, ஊழியர்களிடம் எல்லாம் ஒப்படைத்து, அவனவன் வேலையையும் குறிப்பிட்டு விழிப்பாயிருக்கும்படி காவலாளுக்குக் கட்டளையிடுகிறான்.
மாற்கு 13 : 35 (RCTA)
அதுபோல நீங்களும் விழிப்பாயிருங்கள். -- ஏனெனில், வீட்டுத்தலைவர் மாலையிலோ நள்ளிரவிலோ கோழி கூவும் பொழுதோ காலையிலோ எப்பொழுது வருவார் என்று உங்களுக்குத் தெரியாது.
மாற்கு 13 : 36 (RCTA)
அவர் திடீரென்று வரும்பொழுது நீங்கள் உறங்கிக் கொண்டு இருப்பதைக் காணலாகாது.
மாற்கு 13 : 37 (RCTA)
உங்களுக்குக் கூறுவதை நான் எல்லாருக்குமே கூறுகிறேன்; விழிப்பாயிருங்கள்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37

BG:

Opacity:

Color:


Size:


Font: