மாற்கு 12 : 1 (RCTA)
பின்னும் அவர் உவமைகளில் அவர்களிடம் பேசத் தொடங்கினார். "ஒருவன் ஒரு திராட்சைத் தோட்டம் வைத்து, சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஆலைக்குழி தோண்டி, கோபுரமும் கட்டி, அதைக் குடியானவர்களுக்குக் குத்தகைக்கு விட்டு வெளியூர் சென்றான்.
மாற்கு 12 : 2 (RCTA)
பருவக்காலத்தில் அக்குடியவானவர்களிடமிருந்து தோட்டத்துப் பலனில் தன் பங்கை வாங்கி வரும்படி ஊழியன் ஒருவனை அனுப்பினான்.
மாற்கு 12 : 3 (RCTA)
அவர்களோ அவனைப் பிடித்து அடித்து வெறுங்கையாய் அனுப்பிவிட்டார்கள்.
மாற்கு 12 : 4 (RCTA)
மீண்டும் மற்றோர் ஊழியனை அவர்களிடம் அனுப்பினான். அவனையும் அவர்கள் தலையில் அடித்து இழிவபுடுத்தினார்கள்.
மாற்கு 12 : 5 (RCTA)
வேறொருவனையும் அனுப்பினான். அவனைக் கொன்றனர். வேறு பலரை அனுப்பினான். அவர்களுள் சிலரை அடித்தும் சிலரைக் கொன்றும் போட்டனர்.
மாற்கு 12 : 6 (RCTA)
அனுப்புவதற்கு இன்னும் ஒருவனே இருந்தான். அவன் அவனுடைய அன்பார்ந்த மகன். 'என் மகனை மதிப்பார்கள்' என்று, இறுதியாக அவனை அவர்களிடம் அனுப்பினான்.
மாற்கு 12 : 7 (RCTA)
குடியானவர்களோ, 'இவனே சொத்துக்குரியவன்; வாருங்கள், இவனைக் கொன்றுபோடுவோம், சொத்து நம்முடையதாகும்' என்று தங்களுக்குள்ளே சொல்லிக் கொண்டு,
மாற்கு 12 : 8 (RCTA)
அவனைப் பிடித்துக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.
மாற்கு 12 : 9 (RCTA)
இனி, தோட்டத்துக்கு உரியவன் என்ன செய்வான் ? வந்து அக்குடியானவர்களை ஒழித்துத் தோட்டத்தை வேறு ஆட்களுக்கு விடுவான்.
மாற்கு 12 : 10 (RCTA)
'கட்டுவோர் விலக்கிய கல்லே மூலைக்கல்லாய் அமைந்தது.
மாற்கு 12 : 11 (RCTA)
ஆண்டவர் செயல் இது, நம் கண்ணுக்கு வியப்பே' என்று மறைநூலில் நீங்கள் படித்ததில்லையா?" என்றார்.
மாற்கு 12 : 12 (RCTA)
தங்களைக் குறித்தே இவ்வவுமையைக் கூறினார் என்று அவர்கள் உணர்ந்து, அவரைப் பிடிக்க வழிதேடினார்கள். ஆனால் பொதுமக்களுக்கு அஞ்சி அவரை விட்டுப் போனார்கள்.
மாற்கு 12 : 13 (RCTA)
பின்னும் அவர்கள் அவரைப் பேச்சில் சிக்கவைக்கும்படி, பரிசேயர், ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பினார்கள்.
மாற்கு 12 : 14 (RCTA)
அவர்கள் அவரிடம் வந்து, "போதகரே நீர் உண்மையுள்ளவர். எவர் தயவும் உமக்கு வேண்டியதில்லை. ஏனெனில், முகத்தாட்சணியம் பாராமல் கடவுளின் வழியை உண்மைக்கேற்பப் போதிக்கின்றீர் என்று எங்களுக்குத் தெரியும். செசாருக்கு வரி கொடுப்பது முறையா? இல்லையா? கொடுக்க வேண்டுமா? வேண்டாமா?" என்று கேட்டார்கள்.
மாற்கு 12 : 15 (RCTA)
அவர்களுடைய கபடத்தை அறிந்து, "ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? ஒரு வெள்ளிக்காசை என்னிடம் கொண்டு வாருங்கள், நான் பார்க்கவேண்டும்" என்றார்.
மாற்கு 12 : 16 (RCTA)
அவர்கள் கொண்டுவந்தார்கள். "இவ்வுருவமும் எழுத்தும் யாருடையவை?" என்றார். "செசாருடையவை" என்றனர்.
மாற்கு 12 : 17 (RCTA)
இயேசு, "செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்" என்று அவர்களுக்குச் சொன்னார். அவர்கள் அவரைக்குறித்து வியப்படைந்தார்கள்.
மாற்கு 12 : 18 (RCTA)
பின்னர், 'உயிர்த்தெழுதல் இல்லை' என்று கூறும் சதுசேயர் அவரிடம் வந்து,
மாற்கு 12 : 19 (RCTA)
"போதகரே, ஒருவனுடைய சகோதரன் இறந்து, பிள்ளையில்லாமல் மனைவியை விட்டுச் சென்றால், அவனுடைய சகோதரன் அவளை மணந்து தன் சகோதரனுக்கு மகப்பேறு அளிக்கட்டும் என்று மோயீசன் எழுதிவைத்துள்ளார்.
மாற்கு 12 : 20 (RCTA)
சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவன் ஒருத்தியை மணந்து மகப்பேறு இன்றி இறந்தான்.
மாற்கு 12 : 21 (RCTA)
இரண்டாம் சகோதரனும் அவளை மணந்து மகப்பேறு இன்றி இறந்தான்.
மாற்கு 12 : 22 (RCTA)
மூன்றாம் சகோதரனும் அப்படியே. இவ்வாறு எழுவருக்கும் மகப்பேறு இல்லாமல் போயிற்று. எல்லாருக்கும் கடைசியில் அப்பெண்ணும் இறந்தாள்.
மாற்கு 12 : 23 (RCTA)
உயிர்ப்பு நாளில் அவர்கள் உயிர்த்தெழும்போது அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? எழுவரும் அவளை மனைவியாகக் கொண்டிருந்தனரே" என்று வினவினர்.
மாற்கு 12 : 24 (RCTA)
இயேசு அவர்களிடம், "மறைநூலையும் கடவுளுடைய வல்லமையையும் நீங்கள் அறியாததால் அன்றோ, இவ்வாறு தவறாக நினைக்கிறீர்கள்?
மாற்கு 12 : 25 (RCTA)
ஏனெனில், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழும்போது பெண் கொள்வதுமில்லை, கொடுப்பதுமில்லை. ஆனால் வானகத்தில் தேவதூதர்களைப் போல் இருப்பார்கள்.
மாற்கு 12 : 26 (RCTA)
இறந்தோர் உயிர்த்தெழுவது குறித்து மோயீசன் ஆகமத்தில் முட்செடியைப் பற்றிய பகுதியில், 'நாம் ஆபிரகாமின் கடவுள் ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று கடவுள் அவருக்குக் கூறியதை நீங்கள் படித்ததில்லையா?
மாற்கு 12 : 27 (RCTA)
அவர் வாழ்வோரின் கடவுளே அன்றி, இறந்தோரின் கடவுள் அல்லர். நீங்கள் பெரிதும் தவறிவிட்டீர்கள்" என்றார்.
மாற்கு 12 : 28 (RCTA)
அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்ட மறைநூல் அறிஞருள் ஒருவன் முன்வந்து, அவர் நன்றாக விடையளித்ததைக் கண்டு, "எல்லாவற்றிலும் முதல் கட்டளை எது?" என்று அவரைக் கேட்டான்.
மாற்கு 12 : 29 (RCTA)
இயேசு மறுமொழியாக: "'இஸ்ராயேலே கேள்: நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்.
மாற்கு 12 : 30 (RCTA)
ஆகவே, உன் கடவுளாகிய ஆண்டவருக்கு உன் முழு உள்ளத்தோடும் உன் முழு ஆன்மாவோடும் உன் முழு மனத்தோடும் உன் முழு வலிமையோடும் அன்பு செய்வாயாக' என்பது முதல் கட்டளை.
மாற்கு 12 : 31 (RCTA)
'உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக' என்பது இரண்டாம் கட்டளை. இவற்றைவிடப் பெரிய கட்டளை வேறில்லை" என்றார்.
மாற்கு 12 : 32 (RCTA)
அதற்கு மறைநூல் அறிஞன், "சரிதான், போதகரே, நீர் சொன்னது உண்மையே. கடவுள் ஒருவரே. அவரைத் தவிர வேறொருவரில்லை.
மாற்கு 12 : 33 (RCTA)
அவருக்கு முழு உள்ளத்தோடும் முழு அறிவோடும் மழு ஆன்மாவோடும் முழு வலிமையோடும் அன்பு செய்வதும், தன்மீது அன்புகாட்டுவது போல் அயலான்மீது அன்புகாட்டுவதும், தகனப்பலிகள், மற்றப் பலிகள் எல்லாவற்றையும்விட மேலானது" என்றான்.
மாற்கு 12 : 34 (RCTA)
அவன் அறிவோடு விடை அளித்ததைக் கண்ட இயேசு, "நீ கடவுளுடைய அரசிற்குத் தொலைவில் இல்லை" என்றார். அதுமுதல் ஒருவனும் அவரைக் கேள்விகேட்கத் துணியவில்லை.
மாற்கு 12 : 35 (RCTA)
மேலும், இயேசு கோயிலில் போதித்துக் கொண்டிருந்தபோது, "மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் எப்படிக் கூறலாம்? ஏனெனில்,
மாற்கு 12 : 36 (RCTA)
'ஆண்டவர் என் ஆண்டவரிடம் சொன்னது: நான் உம் பகைவரை உமக்குக் கால்மணை யாக்கும்வரை, நீர் என் வலப்பக்கத்தில் அமரும்' எனத் தாவீதே பரிசுத்த ஆவியின் ஏவுதலால் கூறியிருக்கிறார்.
மாற்கு 12 : 37 (RCTA)
தாவீதே அவரை ஆண்டவரென்று சொல்ல, அவர் எப்படி அவருடைய மகனாக மட்டும் இருத்தல் கூடும்?" என்றார். திரளான மக்கள் அவர் சொல்வதை மனமுவந்து கேட்டு வந்தார்கள்.
மாற்கு 12 : 38 (RCTA)
மீளவும் அவர் போதிக்கையில், "மறைநூல் அறிஞர் மட்டில் எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் நீண்ட அங்கி தரித்து நடமாடவும், பொது இடங்களில் வணக்கம் பெறவும் விரும்புகிறார்கள்.
மாற்கு 12 : 39 (RCTA)
செபக்கூடங்களில் முதலிருக்கைகளும், விருந்துகளில் முதலிடங்களும் தேடுகிறார்கள்.
மாற்கு 12 : 40 (RCTA)
கைம்பெண்களின் உடைமைகளை விழுங்குகிறார்கள். பார்வைக்கோ நீண்ட செபம் செய்கிறார்கள். இவர்கள் அதிக தண்டனைக்கு ஆளாவார்கள்" என்றார்.
மாற்கு 12 : 41 (RCTA)
இயேசு காணிக்கைப் பெட்டிகளுக்கு எதிரே அமர்ந்து, மக்கள் அவற்றினுள் காசு போடுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார். பணக்காரார் பலர் அதிகம் போட்டார்கள்.
மாற்கு 12 : 42 (RCTA)
ஏழைக் கைம்பெண் ஒருத்தி வந்து ஓர் அணா பெறுமானமுள்ள இரண்டு செப்புக் காசுகள் போட்டாள்.
மாற்கு 12 : 43 (RCTA)
இயேசு சீடர்களைத் தம்மிடம் அழைத்து, "காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட எல்லாரிலும் இந்த ஏழைக் கைம்பெண்ணே அதிகம் போட்டாள் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மாற்கு 12 : 44 (RCTA)
ஏனேனில், மற்ற எல்லாரும் தங்களிடம் மிகுதியாயிருந்த பணத்திலிருந்து போட்டனர். இவளோ தன் வறுமையிலும் தான் வைத்திருந்த யாவும், தன் பிழைப்புக்கானது முழுவதுமே போட்டுவிட்டாள்" என்றார்.
❮
❯