மாற்கு 1 : 1 (RCTA)
கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியின் தொடக்கம்.
மாற்கு 1 : 2 (RCTA)
இதோ, என் தூதரை உமக்கு முன்பாக அனுப்புகிறேன். அவர் உம் வழியைச் சீர்ப்படுத்துவார்.
மாற்கு 1 : 3 (RCTA)
'ஆண்டவர் வழியை ஆயத்தப்படுத்துங்கள். அவர்தம் பாதைகளைச் செம்மைப்படுத்துங்கள்' எனப் பாலைவனத்தில் ஒருவன் கூக்குரல் ஒலிக்கிறது" என்று இசையாஸ் இறைவாக்கினர் எழுதியபடி,
மாற்கு 1 : 4 (RCTA)
ஸ்நாபக அருளப்பர் பாலைவனத்தில் தோன்றி, பாவமன்னிப்படைய மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று அறிவித்துக் கொண்டிருந்தார்.
மாற்கு 1 : 5 (RCTA)
யூதேயா, நாடு முழுவதும், யெருசலேம் நகரின் அனைவரும் அவரிடம் போய்த் தங்கள் பாவங்களை வெளியிட்டு, யோர்தான் ஆற்றில் அவரிடம் ஞானஸ்நானம் பெற்று வந்தனர்.
மாற்கு 1 : 6 (RCTA)
அருளப்பர் ஒட்டக மயிராடையும், இடையில் வார்க்கச்சையும் அணிந்திருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.
மாற்கு 1 : 7 (RCTA)
அவர் அறிவித்ததாவது: "என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வரகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்க நான் தகுதியற்றவன்.
மாற்கு 1 : 8 (RCTA)
நான் உங்களுக்கு நீரால் ஞானஸ்நானம் கொடுத்தேன். அவரோ உங்களுக்குப் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் கொடுப்பார்."
மாற்கு 1 : 9 (RCTA)
அந்நாட்களில் இயேசு, கலிலேயாவிலுள்ள நாசேரத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெற்றார்.
மாற்கு 1 : 10 (RCTA)
உடனே அவர் ஆற்றிலிருந்து கரையேறுகையில், வானம் பிளவுபடுவதையும், ஆவியானவர் புறாவைப் போலத் தம்மீது இறங்கி வருவதையும் கண்டார்.
மாற்கு 1 : 11 (RCTA)
அப்பொழுது, "நீரே என் அன்பார்ந்த மகன்; உம்மிடம் நான் பூரிப்படைகிறேன்" என்று வானிலிருந்து ஒரு குரலொலி கேட்டது.
மாற்கு 1 : 12 (RCTA)
உடனே ஆவியானவர் அவரைப் பாலைவனத்திற்குப் போகச்செய்தார்.
மாற்கு 1 : 13 (RCTA)
பாலைவனத்தில் அவர் சாத்தானால் சோதிக்கப்பட்டு நாற்பது நாள் இருந்தார். அங்குக் காட்டு விலங்குகளோடு இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை புரிந்தனர்.
மாற்கு 1 : 14 (RCTA)
அருளப்பர் சிறைப்பட்டபின் இயேசு கலிலேயாவிற்கு வந்து, கடவுள் அருளிய நற்செய்தியை அறிவிக்கலானார்.
மாற்கு 1 : 15 (RCTA)
"காலம் நிறைவேறிற்று; கடவுளரசு நெருங்கிவிட்டது. மனந்திரும்பி, இந்நற்செய்தியை நம்புங்கள்" என்றார்.
மாற்கு 1 : 16 (RCTA)
அவர் கலிலேயாக் கடலோரமாய்ப் போகையில் சீமோனும், இவருடைய சகோதரர் பெலவேந்திரரும் கடலில் வலை வீசிக்கொண்டிருப்பதைக் கண்டார்.
மாற்கு 1 : 17 (RCTA)
ஏனெனில், அவர்கள் மீன்பிடிப்போர் இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள். நீங்கள் மனிதரைப் பிடிப்பவராய் இருக்கச் செய்வேன்" என்றார்.
மாற்கு 1 : 18 (RCTA)
உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்சென்றனர்.
மாற்கு 1 : 19 (RCTA)
அங்கிருந்து சற்று அப்பால் சென்று செபெதேயுவின் மகன் யாகப்பரும், இவருடைய சகோதரர் அருளப்பரும் படகில் வலைகளைப் பழுதுபார்த்துக் கொண்டிருக்கக் கண்டார்.
மாற்கு 1 : 20 (RCTA)
கண்டதும் அவர்களை அழைத்தார். அவர்கள் தம் தந்தை செபெதேயுவைக் கூலியாட்களுடன் படகில் விட்டுவிட்டு அவரைப் பின்சென்றனர்.
மாற்கு 1 : 21 (RCTA)
அவர்கள் கப்பர் நகூம் ஊருக்கு வந்தார்கள். ஓய்வுநாளில் அவர் செபக்கூடத்திற்குச் சென்று போதிக்கலானார்.
மாற்கு 1 : 22 (RCTA)
அவருடைய போதனையைக் கேட்டு மக்கள் மலைத்துப்போயினர். ஏனெனில், அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரமுள்ளவராகப் போதித்து வந்தார்.
மாற்கு 1 : 23 (RCTA)
அச்செபக்கூடத்தில் அசுத்த ஆவியேறிய ஒருவன் இருந்தான்.
மாற்கு 1 : 24 (RCTA)
அவன் "நாசரேத்தூர் இயேசுவே, எங்கள் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர்? எங்களைத் தொலைக்க வந்தீரோ? நீர் யாரென்று எனக்குத் தெரியும். நீர் கடவுளின் பரிசுத்தர்" என்று கத்தினான்.
மாற்கு 1 : 25 (RCTA)
இயேசுவோ, "பேசாதே, இவனை விட்டுப் போ" என்று அதட்டினார்.
மாற்கு 1 : 26 (RCTA)
அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, பெருங்கூச்சலிட்டு அகன்றது.
மாற்கு 1 : 27 (RCTA)
மக்கள் அனைவரும் எவ்வளவு திகிலுற்றனர் என்றால், "இது என்ன, அதிகாரம் கொண்ட புதிய போதனை! அசுத்த ஆவிகளுக்கும் இவர் கட்டளையிடுகிறார், அவை கீழ்ப்படிகின்றனவே! " என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர்.
மாற்கு 1 : 28 (RCTA)
உடனே அவரைப்பற்றிய பேச்சு கலிலேயா நாடெங்கும் பரவிற்று.
மாற்கு 1 : 29 (RCTA)
பின்னர், அவர்கள் செபக்கூடத்தை விட்டு சீமோன், பெலவேந்திரர் இவர்களுடைய வீட்டுக்கு வந்தார்கள். யாகப்பரும் அருளப்பரும் அவர்களோடு சென்றனர்.
மாற்கு 1 : 30 (RCTA)
சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தாள். உடனே அவளைப்பற்றி அவரிடம் சொன்னார்கள்.
மாற்கு 1 : 31 (RCTA)
அவர் அருகில் சென்று கையைப் பிடித்து அவளை எழுப்பினார். காய்ச்சல் அவளை விட்டுவிட்டது. அவள் அவர்களுக்குப் பணிவிடை புரிந்தாள்.
மாற்கு 1 : 32 (RCTA)
பொழுது போய் இரவானது, நோயாளிகள், பேய்பிடித்தவர்கள் எல்லாரையும் அவரிடம் கொண்டுவந்தனர்.
மாற்கு 1 : 33 (RCTA)
ஊர் முழுவதும் வாயிலருகே ஒன்றாகத் திரண்டிருந்தது. பல்வேறு நோய்களால் வருந்திய பலரைக் குணப்படுத்தினார்.
மாற்கு 1 : 34 (RCTA)
பல பேய்களையும் ஓட்டினார். பேய்களை அவர் சே விடவில்லை. ஏனெனில், அவை அவரை அறிந்திருந்தன.
மாற்கு 1 : 35 (RCTA)
அதிகாலையில் கருக்கலோடு எழுந்து புறப்பட்டுத் தனிமையானதோர் இடத்திற்குச் சென்றார். அங்கே செபம் செய்துகொண்டிருந்தார்.
மாற்கு 1 : 36 (RCTA)
சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிப்போயினர்.
மாற்கு 1 : 37 (RCTA)
அவரைக்கண்டு, "எல்லாரும் உம்மைத் தேடுகிறார்கள்" என்றனர்.
மாற்கு 1 : 38 (RCTA)
அதற்கு அவர், "அடுத்த ஊர்களுக்குப் போவோம். அங்கும் நான் தூது அறிவிக்க வேண்டும். இதற்காகவே வந்திருக்கிறேன்" என்றார்.
மாற்கு 1 : 39 (RCTA)
அவ்வாறே கலிலேயா எங்கும் அவர்களுடைய செபக்கூடங்களில் தூது அறிவித்தும், பேய்களை ஓட்டியும் வந்தார்.
மாற்கு 1 : 40 (RCTA)
தொழுநோயாளி ஒருவன் அவரிடம் வந்து முழந்தாளிட்டு, "நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" என்று வேண்டினான்.
மாற்கு 1 : 41 (RCTA)
இயேசு அவன்மீது மனமிரங்கி கையை நீட்டி, அவனைத் தொட்டு, "விரும்புகிறேன், குணமாகு" என்றார்.
மாற்கு 1 : 42 (RCTA)
உடனே தொழுநோய் அவனைவிட்டு நீங்க, அவன் குணமானான்.
மாற்கு 1 : 43 (RCTA)
அவனை நோக்கி, "பார், யாருக்கும் ஒன்றும் சொல்லாதே. போய் உன்னைக் குருவிடம் காட்டி, நீ குணமானதற்காக, மோயீசன் கட்டளையிட்டதைக் காணிக்கையாகச் செலுத்து.
மாற்கு 1 : 44 (RCTA)
அது அவர்களுக்கு அத்தாட்சியாகும்" என்று கண்டிப்பாய்ச் சொல்லி அவனை அனுப்பிவிட்டார்.
மாற்கு 1 : 45 (RCTA)
அவனோ சென்று நடந்ததைச் சொல்லி எங்கும் விளம்பரப்படுத்தினான். அதனால் அவர் எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ப் போக முடியாமல் வெளியே தனிமையான இடங்களில் இருந்தார். எனினும் மக்கள் எங்குமிருந்து அவரிடம் வந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45

BG:

Opacity:

Color:


Size:


Font: