மல்கியா 4 : 1 (RCTA)
இதோ அந்த நாள் சூளைபோல் எரிந்துகொண்டு வரும்; அப்போது ஆணவங்கொண்டவர், கொடியவர் அனைவரும் அதில் போடப்பட்ட வைக்கோலாவர். அப்படி வருகின்ற அந்த நாள், அவர்களுடைய வேரோ கிளையோ இல்லாதபடி அவர்களை முற்றிலும் சுட்டெரித்துவிடும், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
மல்கியா 4 : 2 (RCTA)
ஆனால் நமது திருப்பெயருக்கு அஞ்சி நடக்கும் உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான்; தன் இறக்கைகளில் நலத்தைத் தாங்கி வருவான். நீங்களும் தொழுவத்திலிருந்து துள்ளியோடும் கன்றைப்போலத் துள்ளியோடுவீர்கள்.
மல்கியா 4 : 3 (RCTA)
நாம் செயலாற்றப்போகும் அந்த நாளில், கொடியவர்களை நீங்கள் கால்களால் மிதித்துத் தள்ளுவீர்கள்; அவர்கள் உங்கள் உள்ளங்காலடிகளில் சாம்பல் போலக் கிடப்பார்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
மல்கியா 4 : 4 (RCTA)
ஓரேப் மலையில் இஸ்ராயேல் மக்கள் அனைவருக்கும் நம் ஊழியனாகிய மோயீசன் வாயிலாய்க் கட்டளையிட்ட திருச்சட்டத்தையும் கட்டளைகளையும் முறைமைகளையும் நினைவுகூருங்கள்
மல்கியா 4 : 5 (RCTA)
இதோ, பெரியதும் நடுக்கத்துக்குரியதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாசை உங்களிடம் அனுப்புவோம்.
மல்கியா 4 : 6 (RCTA)
நாம் வந்து உலகத்தைச் சாபனையால் தண்டிக்காதபடி, தந்தையரின் உள்ளங்களை அவர்கள் பிள்ளைகளிடமும், பிள்ளைகளின் உள்ளங்களை அவர்கள் தந்தையரிடமும் அவர் திருப்பிவிடுவார்."

1 2 3 4 5 6