லூக்கா 9 : 1 (RCTA)
பன்னிருவரையும் அழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் நோய்களைக் குணமாக்கவும், வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்கு அளித்தார்.
லூக்கா 9 : 2 (RCTA)
இறையரசைப்பற்றிச் செய்தியை அறிவிக்கவும் நோயாளிகளைக் குணமாக்கவும் அவர்களை அனுப்பினார்.
லூக்கா 9 : 3 (RCTA)
அப்போது அவர்களைப் பார்த்து, "வழிப்பயணத்திற்குக் கோலோ பையோ, உணவோ பணமோ, ஒன்றும் எடுத்துச் சொல்லாதீர்கள். இரண்டு உள்ளாடைகளை யாரும் வைத்திருக்க வேண்டாம்.
லூக்கா 9 : 4 (RCTA)
எந்த வீட்டுக்குப் போனாலும், அங்கே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள்.
லூக்கா 9 : 5 (RCTA)
யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாவிடின் அவர்களுடைய ஊருக்கு வெளியே போய் அவர்களுக்கு எதிர்சாட்சியாக உங்கள் கால்களிலிருக்கும் தூசியைத் தட்டிவிடுங்கள்" என்றார்.
லூக்கா 9 : 6 (RCTA)
அவர்கள் புறப்பட்டு ஊர் ஊராகச் சென்று, எங்கும் நற்செய்தியைப் பரப்பி நோயாளிகளைக் குணமாக்கினர்.
லூக்கா 9 : 7 (RCTA)
நிகழ்ந்ததெல்லாம் கேள்வியுற்ற சிற்றரசன் ஏரோது மனம் கலங்கினான். ஏனெனில், சிலர், "அருளப்பர் இறந்தோரிடமிருந்து உயிர்த்திருக்கிறார்" என்றனர்.
லூக்கா 9 : 8 (RCTA)
வேறு சிலர், "எலியாஸ் மறுபடியும் தோன்றியிருக்கிறார்" என்றனர். மற்றும் சிலர், "முற்காலத்து இறைவாக்கினர்களுள் ஒருவர் உயிர்த்தெழுந்திருக்கிறார்" என்றனர்.
லூக்கா 9 : 9 (RCTA)
ஏரோதோ, "அருளப்பரா? அவர் தலையை நான்தான் வெட்டினேனே. இவர் யாரோ? இவரைப்பற்றி இப்படியெல்லாம் கேள்விப்படுகிறேனே" என்று சொல்லி, அவரைக் காண வாய்ப்புத் தேடினான்.
லூக்கா 9 : 10 (RCTA)
அப்போஸ்தலர் திரும்பி வந்து தாங்கள் செய்ததெல்லாம் அவருக்குத் தெரிவித்தனர். அவர் அவர்களை அழைத்துக் கொண்டு தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் ஊருக்குச் சென்றார்.
லூக்கா 9 : 11 (RCTA)
அதை அறிந்த மக்கள் கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் அவர்களை வரவேற்றுக் கடவுளின் அரசைப்பற்றி அவர்களுக்குப் போதித்து, குணமாக வேண்டியவர்களைக் குணமாக்கினார்.
லூக்கா 9 : 12 (RCTA)
பொழுது சாயத்தெடங்கவே, பன்னிருவர் அவரிடத்தில் வந்து, "சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் போய், விடுதியும் உணவும் பார்த்துக்கொள்ளும்படி மக்களை அனுப்பிவிடும். நாமுள்ள இடமோ பாழ்வெளி" என்றனர்.
லூக்கா 9 : 13 (RCTA)
அதற்கு அவர், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார். அவர்களோ, "எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தான் உண்டு. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால் தான் முடியும்" என்றனர்.
லூக்கா 9 : 14 (RCTA)
ஏனெனில், ஆண்களே, ஏறக்குறைய ஐயாயிரம் பேர் இருந்தனர். அவர் சீடர்களை நோக்கி, "இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தி அமரச் செய்யுங்கள்" என்றார்.
லூக்கா 9 : 15 (RCTA)
அவர்கள், அவர் சொன்னபடியே, அனைவரையும் பந்தி அமரச் செய்தார்கள்.
லூக்கா 9 : 16 (RCTA)
அதன்பின், ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, இறைபுகழ் கூறி, பிட்டு, சீடருக்கு அளித்து மக்கட்கூட்டத்திற்குப் பரிமாறச் சொன்னார்.
லூக்கா 9 : 17 (RCTA)
அனைவரும் வயிறார உண்டனர். மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
லூக்கா 9 : 18 (RCTA)
ஒருநாள் இயேசு தனியே செபித்துக்கொண்டிருக்கும்பொழுது, அவருடைய சீடரும் அவருடன் இருந்தனர். அவர் அவர்களை நோக்கி, "மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்?" எனக்கேட்டார்.
லூக்கா 9 : 19 (RCTA)
அவர்கள், "சிலர் ஸ்நாபக அருளப்பர் என்றும், சிலர் எலியாஸ் என்றும், சிலர் முற்காலத்து இறைவாக்கினர்களுள் ஒருவர் உயிர்த்தார் என்றும் சொல்லுகின்றனர்" என்றார்கள்.
லூக்கா 9 : 20 (RCTA)
"நீங்களோ என்னை யார் என்று அவர்களைக் கேட்டார். இராயப்பர் மறுமொழியாக, "நீர் கடவுளின் மெசியா" என்றார்.
லூக்கா 9 : 21 (RCTA)
இதை ஒருவருக்கும் சொல்லக்கூடாது என்று கண்டிப்பான கட்டளை இட்டார்.
லூக்கா 9 : 22 (RCTA)
மேலும், "மனுமகன் பாடுகள் பல படவும். மூப்பராலும் தலைமைக்குருக்களாலும் மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டு, கொலையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும்" என்று சொன்னார்.
லூக்கா 9 : 23 (RCTA)
அவர்கள் எல்லாரையும் பார்த்து, "என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.
லூக்கா 9 : 24 (RCTA)
ஏனெனில், தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான். என்பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதைக் காத்துக் கொள்வான்.
லூக்கா 9 : 25 (RCTA)
ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன்னையே பாழாக்கினால் பயன் என்ன? தனக்கே கேடு வருவித்தால் பயன் என்ன?
லூக்கா 9 : 26 (RCTA)
என்னைப் பற்றியும் என் வார்த்தைகளைப் பற்றியும் வெட்கப்படுகிறவன் எவனோ, அவனைப் பற்றி மனுமகன் தமக்கும் தந்தைக்கும் பரிசுத்த வானதூதருக்கும் உரிய மாட்சிமையில் வரும்பொழுது வெட்கப்படுவார்.
லூக்கா 9 : 27 (RCTA)
"நான் உங்களுக்கு உண்மையாகச் சொல்லுவதாவது: கடவுளின் அரசைக் காணும்வரை இங்கிருப்பவர்களுள் சிலர் சாவுக்குள்ளாக மாட்டார்கள்" என்றார்.
லூக்கா 9 : 28 (RCTA)
இதெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டு நாள் ஆனபின்பு, இராயப்பரையும் யாகப்பரையும் அருளப்பரையும் அழைத்துக் கொண்டு செபம் செய்ய மலை மீது ஏறினார்.
லூக்கா 9 : 29 (RCTA)
அவர் செபித்துக்கொண்டிருக்கும்பொழுது அவரது முகத்தோற்றம் மாறியது. அவரது ஆடையும் வெண்மையாய் ஒளிவீசியது.
லூக்கா 9 : 30 (RCTA)
இதோ! அவருடன் இருவர் உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் மோயீசனும் எலியாசும்.
லூக்கா 9 : 31 (RCTA)
அவர்கள் விண்ணொளியிடையே தோன்றி, யெருசலேமில் நிறைவேறப் போகின்ற அவருடைய இறுதிப் பயணம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.
லூக்கா 9 : 32 (RCTA)
இராயப்பரும் அவரோடு இருந்தவர்களும் தூக்க மயக்கமாயிருந்தனர். விழித்தெழுந்து, அவருடைய மாட்சிமையையும், அவரோடு நின்ற இருவரையும் கண்டனர்.
லூக்கா 9 : 33 (RCTA)
அவ்விருவரும் அவரை விட்டுப் பிரியும்பொழுது இராயப்பர் இயேசுவிடம், "குருவே, நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று! உமக்கொன்றும், மோயீசனுக்கொன்றும், எலியாசுக்கொன்றுமாகக் கூடாரம் மூன்று அமைப்போம்" என்று- தாம் சொல்லுவது இன்னதென்று அறியாமல்- கூறினார்.
லூக்கா 9 : 34 (RCTA)
அவர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்பொழுது, மேகம் ஒன்று வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அவர்கள் அம்மேகத்தினுள் நுழையும்போது, சீடர்கள் அச்சம் கொண்டனர்.
லூக்கா 9 : 35 (RCTA)
அப்பொழுது, "இவரே என் மகன், நான் தேர்ந்துகொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்" என்ற குரலொலி மேகத்திலிருந்து கேட்டது.
லூக்கா 9 : 36 (RCTA)
அக்குரலொலி கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். அவர்களோ தாம் கண்டவற்றை அந்நாட்களில் ஒருவரிடமும் சொல்லாமல் மௌனங்காத்தனர்.
லூக்கா 9 : 37 (RCTA)
மறுநாள் அவர்கள் மலையிலிருந்து இறங்கி வரும்பொழுது பெருங்கூட்டம் ஒன்று அவர்களை எதிர்கொண்டது.
லூக்கா 9 : 38 (RCTA)
கூட்டத்திலிருந்த ஒருவன், "போதகரே, என் மகனைக் கடைக்கண் நோக்குமாறு உம்மை மன்றாடுகிறேன். 'அவன் எனக்கு ஒரே மகன்.
லூக்கா 9 : 39 (RCTA)
இதோ! ஆவி அவனை ஆட்கொள்ளுகிறது, திடீரென்று கத்துகிறான். அவன் நுரைதள்ளுகிறான். அவனை அலைக்கிழிக்கின்றது. அவனை நொறுக்கி விடுகிறது. எளிதில் அவனை விட்டுப்போவதில்லை.
லூக்கா 9 : 40 (RCTA)
அதை ஓட்டும்படி உம் சீடரை மன்றாடினேன். அவர்களால் முடியவில்லை" என்று கத்தினான்.
லூக்கா 9 : 41 (RCTA)
அதற்கு இயேசு, "விசுவாசமில்லாத சீர்கெட்ட தலைமுறையே, எதுவரை உங்களுடன் இருந்து உங்களைப் பொறுத்துக் கொண்டிருப்பேன்? உன் மகனை இங்குக் கெண்டுவா" என்றார்.
லூக்கா 9 : 42 (RCTA)
அச்சிறுவன் வந்து கொண்டிருக்கையிலேயே பேய் அவனைக் கீழே தள்ளி அலைக்கழித்தது. இயேசு அசுத்த ஆவியைக் கடிந்து, சிறுவனைக் குணமாக்கி, அவனுடைய தந்தையிடம் ஒப்படைத்தார்.
லூக்கா 9 : 43 (RCTA)
அனைவரும் கடவுளின் மாண்பைக் கண்டு மலைத்துப்போயினர். 'அவர் செய்ததெல்லாம் பார்த்து எல்லாரும் வியந்து கொண்டிருக்க,
லூக்கா 9 : 44 (RCTA)
இயேசு சீடரிடம், "நான் சொல்லுவதை மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்: மனுமகன் மனிதரிடம் கையளிக்கப்படப் போகிறார்" என்றார்.
லூக்கா 9 : 45 (RCTA)
அவர்களோ அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் உணர்ந்து கொள்ளாதவாறு அது மறைபொருளாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதைப்பற்றி அவரைக் கேட்க அஞ்சினர்.
லூக்கா 9 : 46 (RCTA)
தங்களுள் பெரியவன் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது.
லூக்கா 9 : 47 (RCTA)
இயேசு, அவர்கள் உள்ளக்கருத்தை அறிந்து, ஒரு குழந்தையின் கையைப் பிடித்துத் தம் அருகே நிறுத்தி,
லூக்கா 9 : 48 (RCTA)
அவர்களை நோக்கி, "என் பெயரால் இக்குழந்தையை ஏற்றுக்கொள்பவன் எவனும் என்னையே ஏற்றுக்கொள்ளுகிறான். என்னை ஏற்றுக்கொள்பவன் எவனும் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்ளுகிறான். உங்கள் அனைவருள் சிறியவன் எவனோ, அவனே பெரியவன்" என்றார்.
லூக்கா 9 : 49 (RCTA)
குருவே, ஒருவன் உம் பெயரால் பேயோட்டுவதைக் கண்டு அவனைத் தடுக்கப்பார்த்தோம். ஏனெனில், அவன் நம்மைச் சாராதவன்" என்று அருளப்பர் கூறினார்.
லூக்கா 9 : 50 (RCTA)
இயேசு அவரை நோக்கி, "அவனைத் தடுக்காதீர்கள்; ஏனெனில், உங்களுக்கு எதிராக இல்லாதவன் உங்கள் சார்பாக இருக்கிறான்" என்றார்.
லூக்கா 9 : 51 (RCTA)
இயேசு விண்ணேற்படையும் நாட்கள் நெருங்கிவரவே, யெருசலேமுக்குச் செல்ல முனைந்து நின்றவராய்,
லூக்கா 9 : 52 (RCTA)
தமக்கு முன்பாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் சென்று முன்னேற்பாடு செய்யும்படி சமாரியருடைய ஊர் ஒன்றுக்கு வந்தார்கள்.
லூக்கா 9 : 53 (RCTA)
அவர் யெருசலேமுக்குச் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
லூக்கா 9 : 54 (RCTA)
அவருடைய சீடர் யாகப்பரும் அருளப்பரும் இதைக் கண்டு, "ஆண்டவரே, இவர்களை அழிக்க வானத்திலிருந்து நெருப்பு விழும்படி நாங்கள் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறீரோ?" என்றனர்.
லூக்கா 9 : 55 (RCTA)
அவர் அவர்கள் பக்கம் திரும்பி அவர்களைக் கடிந்துகொண்டார்.
லூக்கா 9 : 56 (RCTA)
பின்பு, வேறு ஓர் ஊருக்குச் சென்றனர்.
லூக்கா 9 : 57 (RCTA)
அவர்கள் வழியேபோகையில் ஒருவன் அவரிடம், "நீர் எங்குச் சென்றாலும் நானும் உம்மைப் பின்செல்வேன்" என்றான்.
லூக்கா 9 : 58 (RCTA)
இயேசு அவனை நோக்கி, "நரிகளுக்கு வளைகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" என்றார்.
லூக்கா 9 : 59 (RCTA)
அவர் வேறொருவனை நோக்கி, "என்னைப் பின்செல்" என, அவன், "ஆண்டவரே, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர விடைகொடும்" என்றான்.
லூக்கா 9 : 60 (RCTA)
இயேசு அவனைப் பார்த்து, "இறந்தோர் தங்கள் இறந்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும். நீ போய் கடவுளுடைய அரசை அறிவி" என்றார்.
லூக்கா 9 : 61 (RCTA)
இன்னொருவன், "ஆண்டவரே, உம்மைப் பின்செல்வேன்; ஆனால் முதலில் வீட்டில் சொல்லிவிட்டுவர விடைதாரும்" என்றான்.
லூக்கா 9 : 62 (RCTA)
இயேசுவோ அவனை நோக்கி, "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவன் எவனும் கடவுளின் அரசிற்குத் தகுதியற்றவன்" என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62

BG:

Opacity:

Color:


Size:


Font: