லூக்கா 7 : 1 (RCTA)
இவை எல்லாம் மக்களுக்குச் சொல்லி முடித்தபின் இயேசு கப்பர்நகூம் ஊருக்கு வந்தார்.
லூக்கா 7 : 2 (RCTA)
நூற்றுவர்தலைவன் ஒருவனுடைய ஊழியன் நோயுற்றுச் சாகக்கிடந்தான். தலைவன் அவன்மீது மிகுந்த பற்றுக்கொணடிருந்தான்.
லூக்கா 7 : 3 (RCTA)
இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு, யூதரின் மூப்பரை அவரிடம் அனுப்பித் தன் ஊழியனைக் காப்பாற்ற வருமாறு வேண்டினான்.
லூக்கா 7 : 4 (RCTA)
அவர்களும் இயேசுவிடம் வந்து, வருந்திக் கேட்டதாவது: " உம்மிடம் இவ்வரம் பெறுவதற்கு அவர் தகுதியுள்ளவரே.
லூக்கா 7 : 5 (RCTA)
ஏனெனில், நம் மக்கள்மீது அவருக்கு அன்பு மிகுதி. நமக்கெனச் செபக்கூடம் கட்டியிருக்கிறார்."
லூக்கா 7 : 6 (RCTA)
இயேசு அவர்கள்கூடப் போனார். வீட்டுக்குச் சற்றுத் தொலைவிலிருந்தபொழுதே அவரிடம் நூற்றுவர் தலைவன் நண்பர்களை அனுப்பி," ஆண்டவரே, இவ்வளவு தொந்தரை வேண்டாம்; நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன்.
லூக்கா 7 : 7 (RCTA)
அதனால்தான் நானும் உம்மிடம் வரத் தகுதியற்றவன் எனக் கருதினேன். ஒரு வார்த்தை சொல்லும். என் ஊழியன் குணமாகட்டும்.
லூக்கா 7 : 8 (RCTA)
ஏனெனில், நான் அதிகாரத்திற்கு உட்பட்டவனாயினும் எனக்கு அடியிலும் படைவீரர் உள்ளனர். ஒருவனை நோக்கி, ' போ ' என்றால், போகிறான்; வேறொருவனை நோக்கி, ' வா ' என்றால், வருகிறான். என் ஊழியனைப் பார்த்து, ' இதைச் செய் ' என்றால், செய்கிறான் " என்றான்.
லூக்கா 7 : 9 (RCTA)
அதைக் கேட்ட இயேசு அவனை வியந்து தம்மைப் பின்தொடரும் மக்கட் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, "இஸ்ராயேல் மக்களிடையிலும் இத்துணை விசுவாசத்தை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்லுகிறேன் " என்றார்.
லூக்கா 7 : 10 (RCTA)
அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்து ஊழியன் உடல்நலத்தோடு இருப்பதைக் கண்டார்கள்.
லூக்கா 7 : 11 (RCTA)
அதன்பின் நயீன் என்ற ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் திரளான மக்களும் அவரோடு சென்றுகொண்டிருந்தனர்.
லூக்கா 7 : 12 (RCTA)
இயேசு ஊர்வாயிலை நெருங்கியபொழுது, இறந்த ஒருவனைத் தூக்கிவந்தனர். தாய்க்கு அவன் ஒரே பிள்ளை. அவளோ கைம்பெண். ஊராரும் அவளோடு பெருங்கூட்டமாக இருந்தனர்.
லூக்கா 7 : 13 (RCTA)
அவளைக் கண்டு ஆண்டவர் அவள்மீது மனமிரங்கி, "அழாதே." என்றார்.
லூக்கா 7 : 14 (RCTA)
பின்பு முன்னால் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிவந்தவர்கள் நின்றார்கள். நின்றதும், "இளைஞனே, உனக்கு நான் சொல்லுகிறேன், எழுந்திரு" என்றார்.
லூக்கா 7 : 15 (RCTA)
இறந்தவன் எழுந்து உட்கார்ந்து பேசத்தொடங்கினான். தாயிடம் அவனை ஒப்படைத்தார்.
லூக்கா 7 : 16 (RCTA)
அனைவரையும் அச்சம் ஆட்கொள்ள, "நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியுள்ளார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்" என்று அவர்கள் கடவுளை மகிமைப்படுத்தினார்கள்.
லூக்கா 7 : 17 (RCTA)
அவரைப்பற்றிய பேச்சு யூதேயா முழுவதிலும் சுற்றுப்புறமெங்கும் பரவியது.
லூக்கா 7 : 18 (RCTA)
அருளப்பனின் சீடர் இவற்றையெல்லாம் அவருக்குத் தெரிவித்தனர்.
லூக்கா 7 : 19 (RCTA)
அருளப்பர் தம் சீடருள் இருவரை அழைத்து, "வரப்போகிறவர் நீர்தாமோ ? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமோ?" என்று கேட்டுவர ஆண்டவரிடம் அனுப்பினார்.
லூக்கா 7 : 20 (RCTA)
அவர்கள் அவரிடம் வந்து, "' வரப்போகிறவர் நீர்தாமோ? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமோ? என்று கேட்குமாறு ஸ்நாபக அருளப்பர் எங்களை உம்மிடம் அனுப்பினார்" என்று சொன்னார்கள்.
லூக்கா 7 : 21 (RCTA)
அந்நேரத்தில் நோய் நோக்காடுகளாலும், பொல்லாத ஆவிகளாலும் வருந்தியவர்களைக் குணமாக்கி, குருடர் பலருக்குப் பார்வை அளித்துக்கொண்டிருந்தார்.
லூக்கா 7 : 22 (RCTA)
அவர் அவர்களுக்கு மறுமொழியாக, "நீங்கள் போய்க் கண்டதையும் கேட்டதையும் அருளப்பருக்கு அறிவியுங்கள்: குருடர் பார்க்கின்றனர், முடவர் நடக்கின்றனர், தொழுநோயாளர் குணமடைகின்றனர், செவிடர் கேட்கின்றனர், இறந்தவர் உயிர்க்கின்றனர், எளியவருக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.
லூக்கா 7 : 23 (RCTA)
என்னைப்பற்றி இடறல்படாதவன் பேறுபெற்றவன்" என்றார்.
லூக்கா 7 : 24 (RCTA)
அருளப்பருடைய தூதர்கள் சென்ற பின்பு அவரைப்பற்றி மக்கட்கூட்டத்திற்கு இயேசு சொன்னதாவது: "எதைப் பார்க்கப் பாலைவனத்திற்குப் போனீர்கள்? காற்றில் அசையும் நாணலையோ?
லூக்கா 7 : 25 (RCTA)
பின் எதைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடை அணிந்த மனிதனையோ? இதோ! அலங்கார ஆடை அணிந்து இன்பமாய் வாழ்வோர் அரச மாளிகையில் உள்ளனர்.
லூக்கா 7 : 26 (RCTA)
பின் எதைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினருக்கும் மேலானவரைத்தான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
லூக்கா 7 : 27 (RCTA)
இவரைப்பற்றித்தான், 'இதோ! என் தூதரை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்' என்று எழுதியுள்ளது.
லூக்கா 7 : 28 (RCTA)
"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பெண்களிடம் பிறந்தவர்களுள் அருளப்பருக்கு மேலானவர் யாருமில்லை. ஆயினும் கடவுளுடைய அரசில் மிகச் சிறியவன் அவரினும் பெரியவன்.
லூக்கா 7 : 29 (RCTA)
அருளப்பர் சொன்னதை மக்கள் எல்லாரும் கேட்டு, அவர் கொடுத்த ஞானஸ்நானத்தைப் பெற்று, கடவுளின் திட்டம் ஏற்றத்தக்கது என்று காட்டினார்கள். ஆயக்காரரும்கூட ஞானஸ்நானம் பெற்றனர்.
லூக்கா 7 : 30 (RCTA)
ஆனால் பரிசேயரும் சட்டவல்லுநரும் அவர் கொடுத்த ஞானஸ்நானத்தைப் பெறாமல் கடவுளுடைய திட்டத்தை, தங்களைப் பொறுத்தமட்டில், வீணாக்கினார்கள்.
லூக்கா 7 : 31 (RCTA)
" இத்தலைமுறையின் மக்களை யாருக்கு ஒப்பிடுவேன் ? இவர்கள் யாருக்கு ஒப்பானவர்கள்?
லூக்கா 7 : 32 (RCTA)
பொது இடத்தில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் அழைத்து, ' நாங்கள் குழல் ஊதினோம், நீங்கள் ஆடவில்லை; நாங்கள் புலம்பினோம், நீங்கள் அழவில்லை ' என்று கூறும் சிறுவரைப் போன்றவர்கள் இவர்கள்.
லூக்கா 7 : 33 (RCTA)
ஏனெனில், ஸ்நாபக அருளப்பர் வந்தபோது அப்பம் உண்ணவில்லை, திராட்சை இரசம் குடிக்கவுமில்லை. ' அவரைப்பேய்பிடித்தவன்' என்று சொல்லுகிறீர்கள்.
லூக்கா 7 : 34 (RCTA)
மனுமகன் வந்தபோதோ உண்டார்; குடித்தார். 'அவரை இதோ! போசனப் பிரியன், குடிகாரன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் நண்பன் ' என்று சொல்லுகிறீர்கள்.
லூக்கா 7 : 35 (RCTA)
ஆனால் தேவஞானம் சரி என்று அதை ஏற்றுக்கொண்ட மக்கள் அனைவராலும் விளங்கிற்று."
லூக்கா 7 : 36 (RCTA)
பரிசேயன் ஒருவன் அவரைத் தன்னுடன் உண்பதற்கு அழைத்தான். அவரும் பரிசேயனுடைய வீட்டுக்கு வந்து உணவருந்த அமர்ந்தார்.
லூக்கா 7 : 37 (RCTA)
இதோ! பாவி ஒருத்தி அந்நகரிலே இருந்தாள். பரிசேயனுடைய வீட்டில் அவர் உணவருந்தப்போகிறார் என்று அறிந்து பரிமளத்தைலம் நிறைந்த படிகச்சிமிழ் ஒன்றை எடுத்து வந்தாள்.
லூக்கா 7 : 38 (RCTA)
அவருடைய கால்மாட்டில் பின்புறமாக இருந்து, அழுதுகொண்டே அவர் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து அவற்றைக் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு அப்பாதங்களில் தைலம் பூசினாள்.
லூக்கா 7 : 39 (RCTA)
அவரை அழைத்த பரிசேயன் இதைக் கண்டு, "இவர் இறைவாக்கினராய் இருந்தால் தம்மைத்தொடும் இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார். இவளோ பாவி" என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.
லூக்கா 7 : 40 (RCTA)
இயேசு அவனை நோக்கி, " சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும் " என்றான்.
லூக்கா 7 : 41 (RCTA)
"கடன் கொடுப்பவன் ஒருவனுக்கு கடன்காரர் இருவர் இருந்தனர். ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கடன்பட்டிருந்தனர்.
லூக்கா 7 : 42 (RCTA)
கடனைத் திருப்பிக்கொடுக்க அவர்களால் முடியாமற்போகவே இருவர்கடனையும் மன்னித்துவிட்டான். அவர்களுள் யார் அவனுக்கு அதிகமாக அன்புசெய்வான்?"
லூக்கா 7 : 43 (RCTA)
யாருக்கு அதிகக் கடனை மன்னித்தானோ அவன்தான் என்று நினைக்கிறேன்" என்றான் சீமோன். " நீர் சொன்னது சரி என்றார் அவர்.
லூக்கா 7 : 44 (RCTA)
பின்பு அப்பெண்ணின் பக்கம் திரும்பி, சீமோனிடம், " இவளைப் பார்த்தீரா? நான் உம் வீட்டுக்குள் வந்தபொழுது, நீர் என் பாதங்களைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவளோ என் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து அவற்றைக் கூந்தலால் துடைத்தாள்.
லூக்கா 7 : 45 (RCTA)
நீர் எனக்கு முத்தமளிக்கவில்லை; இவளோ, நான் உள்ளே வந்ததுமுதல் என் பாதங்களை முத்தம் செய்து ஓயவில்லை.
லூக்கா 7 : 46 (RCTA)
நீர் என் தலையில் எண்ணெய் பூசவில்லை; இவளோ என் பாதங்களுக்குப் பரிமளத்தைலம் பூசினாள்.
லூக்கா 7 : 47 (RCTA)
அதனால் நான் உமக்குச் சொல்வதாவது: அவள் செய்த பாவங்கள் பல மன்னிக்கப்பட்டன. அவள் காட்டிய பேரன்பே அதற்குச் சான்று. குறைவாக மன்னிப்புப் பெறுபவனோ குறைவாக அன்புசெய்கிறான் " என்றார்.
லூக்கா 7 : 48 (RCTA)
பின் அவளை நோக்கி, " உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.
லூக்கா 7 : 49 (RCTA)
" பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?" என்று அவரோடு பந்தி அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
லூக்கா 7 : 50 (RCTA)
அவரோ அப்பெண்ணை நோக்கி, "உன் விசுவாசம் உன்னை மீட்டது, சமாதானமாய்ப் போ" என்றார்.
❮
❯