லூக்கா 4 : 1 (RCTA)
இயேசு பரிசுத்த ஆவியால் நிறைந்தவராய் யோர்தான் ஆற்றங்கரையினின்று திரும்பியபின், பாலைவனத்தில் தங்குமாறு ஆவியானவரால் நடத்தப்பெற்றார்.
லூக்கா 4 : 2 (RCTA)
அங்கு நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் உண்ணவில்லை. அந்த நாட்கள் கழிந்ததும், அவருக்குப் பசியெடுத்தது.
லூக்கா 4 : 3 (RCTA)
அப்பொழுது அலகை அவரை நோக்கி, "நீர் கடவுளின் மகனானால் அப்பமாக மாறும்படி இந்தக் கல்லுக்குச் சொல்லும்" என்றது.
லூக்கா 4 : 4 (RCTA)
அதற்கு இயேசு, "மனிதன் உயிர் வாழ்வது அப்பத்தினால் மட்டுமன்று' என எழுதி இருக்கின்றதே" என்றார்.
லூக்கா 4 : 5 (RCTA)
பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலக அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி,
லூக்கா 4 : 6 (RCTA)
"இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும், இவற்றின் மகிமையையும் உமக்குக் கொடுப்பேன். ஏனெனில், இவை யாவும் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 'என் விருப்பம்போல் எவருக்கும் இவற்றைக் கொடுக்கமுடியும்.
லூக்கா 4 : 7 (RCTA)
எனவே நீர் தெண்டனிட்டு என்னை வணங்கினால் இவையாவும் உம்முடையவை ஆகும்" என்றது.
லூக்கா 4 : 8 (RCTA)
அதற்கு இயேசு, " உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவரைமட்டுமே ஆராதிப்பாயாக ' என எழுதியிருக்கின்றதே " என்றார்.
லூக்கா 4 : 9 (RCTA)
பின்னர் அலகை அவரை யெருசலேமுக்குக் கூட்டிச் சென்று, கோயிலில் முகட்டில் நிறுத்தி, " நீர் கடவுளின் மகனனானால் இங்கிருந்து கீழேகுதியும்.
லூக்கா 4 : 10 (RCTA)
ஏனெனில், ' உம்மைக் காக்கும்படி தம் தூதர்களுக்குக் கட்டளையிடுவார் ' என்றும்,
லூக்கா 4 : 11 (RCTA)
'உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்' என்று எழுதியுள்ளது" என்றது.
லூக்கா 4 : 12 (RCTA)
அதற்கு இயேசு, "உன் கடவுளாகிய ஆண்டவரை நீ சோதியாதே' என்றும் சொல்லியிருக்கிறது " என்றார்.
லூக்கா 4 : 13 (RCTA)
இவ்வாறு, அலகை எல்லா விதத்திலும் இயேசுவைச் சோதித்தபின், குறித்த காலம் வரும்வரைக்கும் அவரை விட்டுச் சென்றது.
லூக்கா 4 : 14 (RCTA)
பின்னர், ஆவியானவரின் வல்லமை பூண்டவராய் இயேசு கலிலேயாவுக்குத் திரும்பினார். அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.
லூக்கா 4 : 15 (RCTA)
யூதர்களுடைய செபக்கூடங்களில் அவர் போதித்துவந்தார். யாவரும் அவரை மகிமைப்படுத்தினர்.
லூக்கா 4 : 16 (RCTA)
அவர் தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்திற்கு வந்தார். வழக்கப்படி ஓய்வுநாளன்று செபக்கூடத்திற்கு வந்து வாசிக்க எழுந்தார்.
லூக்கா 4 : 17 (RCTA)
இசையாஸ் எழுதிய இறைவாக்குகளின் ஏட்டுச் சுருளை அவரிடம் கொடுத்தனர். அதை விரித்ததும் பின்வரும் பகுதியைக் கண்டார்.
லூக்கா 4 : 18 (RCTA)
'ஆண்டவருடைய ஆவி என்மேலே, ஏனெனில், என்னை அபிஷுகம் செய்துள்ளார். 'எளியோர்க்கு நற்செய்தி சொல்லவும், சிறைப்பட்டோர் விடுதலையடைவர், குருடர் பார்வை பெறுவர் என அறிவிக்கவும், ஒடுக்கப்பட்டோர்க்கு உரிமை வாழ்வு வழங்கவும்,
லூக்கா 4 : 19 (RCTA)
ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பினார் '.
லூக்கா 4 : 20 (RCTA)
பின்னர் ஏட்டைச் சுருட்டிப் பணிவிடைக் காரனிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். செபக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே நோக்கியவண்ணமாயிருந்தன.
லூக்கா 4 : 21 (RCTA)
அப்போது அவர், " நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று " என்று கூறலானார்.
லூக்கா 4 : 22 (RCTA)
யாவரும் அவரைப் பாராட்டி, அவர் வாயினின்று எழுந்த அருள்மொழிகளை வியந்து, " இவர் சூசையின் மகனன்றோ ?" என்றனர்.
லூக்கா 4 : 23 (RCTA)
பின் அவர் அவர்களை நோக்கி, "' மருத்துவனே, உன்னையே குணமாக்கிக்கொள் ' என்ற பழமொழியை எனக்கே சொல்லிக்காட்டி, ' கப்பர்நகூம் ஊரில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டதெல்லாம், உம் சொந்த ஊராகிய இங்கேயும் செய்யும் ' எனக் கண்டிப்பாக நீங்கள் கூறுவீர்கள் " என்றார்.
லூக்கா 4 : 24 (RCTA)
மேலும், அவர், " உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்கப்படுவதில்லை.
லூக்கா 4 : 25 (RCTA)
உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: எலியாசின் காலத்தில் மூன்று ஆண்டுகள் ஆறு மாதங்களாக வானம் வறண்டு நாடெங்கும் பஞ்சம் உண்டானபோது, இஸ்ராயேல் நாட்டில் கைம்பெண்கள் பலர் இருந்தனர்.
லூக்கா 4 : 26 (RCTA)
ஆயினும் சீதோன் நாட்டின் சரெப்தா ஊர்க் கைம்பெண் ஒருத்தியிடமின்றி வேறு எவரிடமும் எலியாஸ் அனுப்பப்படவில்லை.
லூக்கா 4 : 27 (RCTA)
இறைவாக்கினரான எலிசேயுவின் காலத்திலும் இஸ்ராயேல் நாட்டில் தொழுநோயாளர் பலர் இருந்தனர். ஆயினும் சீரியா நாட்டு நாமானைத் தவிர வேறு எவரும் குணமாக்கப்படவில்லை " என்றார்.
லூக்கா 4 : 28 (RCTA)
இவற்றைக் கேட்டுச் செபக்கூடத்தில் இருந்த அனைவரும் வெகுண்டெழுந்து,
லூக்கா 4 : 29 (RCTA)
அவரை ஊருக்கு வெளியே தள்ளி, அவ்வூர் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிடக் கொண்டுசென்றனர்.
லூக்கா 4 : 30 (RCTA)
அவரோ அவர்களிடையே நடந்து தம் வழியே போனார்.
லூக்கா 4 : 31 (RCTA)
பின் கலிலேயா நாட்டுக் கப்பர்நகூம் ஊருக்கு வந்து, அங்கே மக்களுக்கு ஓய்வு நாளில் போதித்து வந்தார்.
லூக்கா 4 : 32 (RCTA)
அவர் அதிகாரத்தொனியோடே பேசினதால் அவருடைய போதனையைக் குறித்து மலைத்துப் போயினர்.
லூக்கா 4 : 33 (RCTA)
அப்போது, செபக்கூடத்தில் அசுத்தப்போய் பிடித்த ஒருவன் இருந்தான்.
லூக்கா 4 : 34 (RCTA)
அவன், " ஐயோ! நாசரேத்தூர் இயேசுவே, எங்கள் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர் ? எங்களைத் தொலைக்க வந்தீரோ ? நீர் யாரென்று எனக்குத் தெரியும். நீர் கடவுளின் பரிசுத்தர் " என்று உரக்கக் கத்தினான்.
லூக்கா 4 : 35 (RCTA)
அப்போது இயேசுவா, " பேசாதே, இவனை விட்டுப் போ " என்று அதட்டினார். அப்பொழுது, அப்பேய் அவனை அவர்கள்நடுவே வீழ்த்தி, அவனுக்கு ஒரு தீங்குமிழைக்காமல் அவனை விட்டு அகன்றது.
லூக்கா 4 : 36 (RCTA)
அதனால் திகில் எல்லாரையும் ஆட்கொள்ள, " இவர் வார்த்தை எத்தகையதோ ? அதிகாரத்தோடும் வல்லமையோடும் இவர் அசுத்தப் பேய்களுக்கும் கட்டளையிடுகிறார், அவை போய்விடுகின்றனவே! " என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.
லூக்கா 4 : 37 (RCTA)
அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறமெல்லாம் பரவியது.
லூக்கா 4 : 38 (RCTA)
பின்னர், அவர் செபக்கூடத்தை விட்டு, சீமோன் வீட்டிற்கு வந்தார். சீமோனுடைய மாமியார் கடுஙகாய்ச்சலால் துன்பப்பட்டுக் கொண்டிருந்ததால் அவளுக்காக அவரிடம் வேண்டினர்.
லூக்கா 4 : 39 (RCTA)
அவர் அவளருகில் நின்று காய்ச்சலைக் கடிந்துகொண்டார். காய்ச்சல் அவளை விட்டு அகல, அவள் உடனே எழுந்து அவர்களுக்குப் பணிவிடை புரிந்தாள்.
லூக்கா 4 : 40 (RCTA)
பொழுது சாயும்வேளையில் யாவரும் தங்களிடையே இருந்த பற்பல பிணியாளரை அவரிடம் கொண்டுவந்தனர். ஒவ்வொருவர்மேலும் தம் கைகளை வைத்துக் குணமாக்கினார்.
லூக்கா 4 : 41 (RCTA)
பேய்கள், "நீரே கடவுளின் மகன்" என்று கூவிக்கொண்டு பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று அவை அறிந்திருந்ததால், இயேசு அவற்றை அதட்டிப் பேச விடவில்லை.
லூக்கா 4 : 42 (RCTA)
பொழுது புலரவே, அவர் புறப்பட்டுத் தனிமையானதோர் இடத்திற்குச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடினர். அவரிடம் வந்ததும் தங்களை விட்டு அகலாதபடி அவரை நிறுத்தப்பார்த்தனர்.
லூக்கா 4 : 43 (RCTA)
அவரோ, " நான் மற்ற ஊர்களுக்கும் கடவுளுடைய அரசைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும். இதற்காகவே அனுப்பப்பட்டேன் " என்று அவர்களிடம் கூறினார்.
லூக்கா 4 : 44 (RCTA)
அதன்படியே, கலிலேயாவின் செபக்கூடங்களில் தூது உரைத்துவந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44

BG:

Opacity:

Color:


Size:


Font: