லூக்கா 3 : 1 (RCTA)
திபேரியு செசார் ஆட்சியேற்ற பதினைந்தாம் ஆண்டில், போன்சியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராகவும், கலிலேயா நாட்டுக்கு ஏரோதும், இத்துரேயா -- திராக்கோனித்து நாட்டுக்கு அவன் சகோதரன் பிலிப்பும், அபிலேனே நாட்டுக்கு லிசானியாவும் சிற்றரசர்களாகவும்,
லூக்கா 3 : 2 (RCTA)
அன்னாஸ், கைப்பாஸ் தலைமைக்குருக்களாகவும் இருக்க,சக்கரியாசின் மகனான அருளப்பருக்குப் பாலைவனத்தில் கடவுளின் வாக்கு அருளப்பட்து.
லூக்கா 3 : 3 (RCTA)
பாவமன்னிப்படைய, மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று அவர் யோர்தான் ஆற்றை அடுத்த நாடெல்லாம் சுற்றி அறிவித்தார்.
லூக்கா 3 : 4 (RCTA)
இதைப்பற்றி இசையாஸ் இறைவாக்கினரின் திருச்சொல் ஆகமத்தில், " பாலைவனத்தில் ஒருவன் கூக்குரல் ஒலிக்கிறது: ஆண்டவர்வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவர்தம் பாதைகளைச் செம்மைப்படுத்துங்கள்;
லூக்கா 3 : 5 (RCTA)
பள்ளத்தாக்குகளெல்லாம் நிரவப்படுக, மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படுக, கோணலானவை நேராகவும், கரடுமுரடானவை சமமான வழிகளாகவும் ஆக்கப்படுக.
லூக்கா 3 : 6 (RCTA)
மனிதரெல்லாரும் கடவுளின் மீட்பைக் காண்பர் " என்று எழுதியிருந்தது.
லூக்கா 3 : 7 (RCTA)
தம்மிடம் ஞானஸ்நானம் பெறப் புறப்பட்டு வந்த மக்கட்கூட்டத்தை அவர் நோக்கி, " விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்குச் சொல்லிக்கொடுத்தவர் யார்?
லூக்கா 3 : 8 (RCTA)
எனவே, மனந்திரும்பியவருக்கேற்ற செயல்களைச் செய்துகாட்டுங்கள். 'ஆபிரகாமே எங்களுக்குத் தந்தை' என்று சொல்லிக் கொள்ளத் துணியவேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்கு மக்களை எழுப்பக் கடவுள் வல்லவர் என்று உங்களுக்குக் கூறுகிறேன்.
லூக்கா 3 : 9 (RCTA)
ஏற்கனவே, அடிமரத்தில் கோடரி வைத்தாயிற்று; நற்கனி கெடாத மரமெல்லாம் வெட்டுண்டு தீயில் போடப்படும்" என்றார்.
லூக்கா 3 : 10 (RCTA)
அப்போது, "நாங்கள் செய்யவேண்டியதென்ன?" என்று மக்கள்கூட்டம் அவரைக் கேட்டது.
லூக்கா 3 : 11 (RCTA)
அதற்கு அவர், "இரண்டு அங்கி வைத்திருப்பவன் இல்லாதவனோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவு உடையவனும் அவ்வாறே செய்யட்டும்" என்றார்.
லூக்கா 3 : 12 (RCTA)
ஆயக்காரர் ஞானஸ்நானம் பெற வந்து, "போதகரே, நாங்கள் செய்யவேண்டியதென்ன?" என்று அவரைக் கேட்க,
லூக்கா 3 : 13 (RCTA)
அவர், "உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்குமேல் கேட்கவேண்டாம்" என்று பதிலளித்தார்,
லூக்கா 3 : 14 (RCTA)
"நாங்கள் செய்யவேண்டியதென்ன?" 'என்று படை வீரரும் கேட்டனர். அவரோ, "ஒருவரையும் பயமுறுத்திப் பணம் பறிக்கவேண்டாம். பொய்க் குற்றம் சாட்ட வேண்டாம். கிடைக்கும் சம்பளமே போதுமென்றிருங்கள்" என்றார்.
லூக்கா 3 : 15 (RCTA)
அந்நாட்களில் மக்கள் எதிர்ப்பார்த்த நிலையில் இருக்கவே, ஒருவேளை அருளப்பரே மெசியாவாக இருக்கலாம் என்று எல்லாரும் உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.
லூக்கா 3 : 16 (RCTA)
அப்போது அருளப்பர் அவர்களிடம், " நானோ உங்களுக்கு நீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். ஆனால், என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்க நான் தகுதியற்றவன். அவர் பரிசுத்த ஆவியாலும் நெருப்பாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
லூக்கா 3 : 17 (RCTA)
அவர் தம் களத்தைத் துப்புரவாக்கிக் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்க்க, சுளகைக் கையில் கொண்டுள்ளார். பதரையோ அவியா நெருப்பில் சுட்டெரிப்பார் " என்றார்.
லூக்கா 3 : 18 (RCTA)
மேலும், பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.
லூக்கா 3 : 19 (RCTA)
சிற்றரசனான ஏரோதை, அவன் சகோதரனின் மனைவியான ஏரோதியாள்பற்றியும், இன்னும் அவன் இழைத்த எல்லாத் தீச்செயல்கள் பற்றியும் அருளப்பர் கண்டிக்கவே,
லூக்கா 3 : 20 (RCTA)
தான் செய்த கொடுமை எல்லாம் போதாதென்று அவரைச் சிறையிலடைக்கவும் செய்தான்.
லூக்கா 3 : 21 (RCTA)
மக்களெல்லாம் ஞானஸ்நானம் பெறும்வேளையில் இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, செபித்துக்கொண்டிருக்க, வானம் திறந்தது.
லூக்கா 3 : 22 (RCTA)
பரிசுத்த ஆவி புலப்படும் வடிவெடுத்து, புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து குரலொலி உண்டாகி, " நீரே என் அன்பார்ந்த மகன். உம்மிடம் நான் பூரிப்படைகிறேன் " என்றது.
லூக்கா 3 : 23 (RCTA)
இயேசு போதிக்கத் தொடங்கும்பொழுது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது. அவரை மக்கள் சூசையின் மகன் என்று கருதினர்.
லூக்கா 3 : 24 (RCTA)
சூசை ஏலியின் மகன்; ஏலி மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்; லேவி மெல்கியின் மகன்; மெல்கி யன்னாயின் மகன்; யன்னாய் யோசேப்பின் மகன்;
லூக்கா 3 : 25 (RCTA)
யோசேப்பு மத்தத்தியாவின் மகன்; மத்தத்தியா ஆமோசின் மகன்; ஆமோஸ் நாகூமின் மகன்; நாகூம் ஏஸ்லியின் மகன்; ஏஸ்லி நாகாயின் மகன்;
லூக்கா 3 : 26 (RCTA)
நாகாய் மாகாத்தின் மகன்; மாகாத்து மத்தத்தியாவின் மகன்; மத்தத்தியா சேமேயின் மகன்; சேமேய் யோசேக்கின் மகன்; யோசேக்கு யோதாவின் மகன்;
லூக்கா 3 : 27 (RCTA)
யோதா யோவனாவின் மகன்; யோவானா ரேசாவின் மகன்; ரேசா சொரொ பாபேலின் மகன்; சொரொபாபேல் சலாத்தியேலின் மகன்; சலாத்தியேல் நேரியின் மகன்;
லூக்கா 3 : 28 (RCTA)
நேரி மெல்கியின் மகன்; மெல்கி அத்தியின் மகன்; அத்தி கோசாமின் மகன்; கோசாம் எல்மதாமின் மகன்; எல்மதாம் ஏரின் மகன்;
லூக்கா 3 : 29 (RCTA)
ஏர் ஏசுவின் மகன்; ஏசு எலியேசரின் மகன்; எலியேசர் யோரீமின் மகன்; யோரீம் மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்;
லூக்கா 3 : 30 (RCTA)
லேவி சிமியோனின் மகன்; சிமியோன் யூதாவின் மகன்; யூதா யோசேப்பின் மகன்; யோசேப்பு யோனாமின் மகன்; யோனாம் எலியாக்கீமின் மகன்;
லூக்கா 3 : 31 (RCTA)
எலியாக்கீம் மெலெயாவின் மகன்; மெலெயா மென்னாவின் மகன்; மென்னா மாத்தாத்தாவின் மகன்; மாத்தாத்தா நாத்தாமின் மகன்; நாத்தாம் தாவீதின் மகன்.
லூக்கா 3 : 32 (RCTA)
தாவீது யெஸ்ஸேயின் மகன்; யெஸ்ஸேய் ஓபேதின் மகன்; ஓபேது போவாசின் மகன்; போவாஸ் சாலாவின் மகன்; சாலா நகசோனின் மகன்;
லூக்கா 3 : 33 (RCTA)
நகசோன் அமினதாபின் மகன்; அமினதாபு அத்மீனின் மகன்; அத்மீன் ஆர்னியின் மகன்; ஆர்னி எஸ்ரோமின் மகன்; எஸ்ரோம் பேரேசின் மகன்; பேரேஸ் யூதாவின் மகன்;
லூக்கா 3 : 34 (RCTA)
யூதா யாக்கோபின் மகன்; யாக்கோபு ஈசாக்கின் மகன்; ஈசாக்கு ஆபிரகாமின் மகன். ஆபிரகாம் தேராகின் மகன்; தேராகு நாகோரின் மகன்;
லூக்கா 3 : 35 (RCTA)
நாகோர் செரூகின் மகன்; செரூகு ரெகூவின் மகன்; ரெகூ பேலேகின் மகன்; பேலேகு ஏபேரின் மகன்; ஏபேர் சாலாவின் மகன்;
லூக்கா 3 : 36 (RCTA)
சாலா காயினானின் மகன்; காயினான் அர்ப்பகசாத்தின் மகன்; அர்ப்பகசாத்து சேமின் மகன்; சேம் நோவாவின் மகன்; நோவா லாமேக்கின் மகன்; லாமேக்கு மெத்துசலாவின் மகன்;
லூக்கா 3 : 37 (RCTA)
மத்துசலா ஏனோக்கின் மகன்; ஏனோக்கு யாரேதின் மகன்; யாரேது மகலாலெயேலின் மகன்; மகலாலெயேல் காயினானின் மகன்;
லூக்கா 3 : 38 (RCTA)
காயினான் ஏனோசின் மகன்; ஏனோஸ் சேத்தின் மகன்; சேத் ஆதாமின் மகன்; ஆதாமோ கடவுளின் மகன்.
❮
❯