லூக்கா 23 : 1 (RCTA)
அவர்கள் எல்லாரும் கூட்டமாக எழுந்து, பிலாத்திடம் அவரைக் கூட்டிச்சென்றனர்.
லூக்கா 23 : 2 (RCTA)
இவன் நம் மக்களிடையே குழப்பம் உண்டாக்குகிறன். செசாருக்கு வரிசெலுத்தக் கூடாதென்கிறான். 'தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக்கொள்ளுகிறான். இப்படியெல்லாம் இவன் செய்யக்கண்டோம்" என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினர்.
லூக்கா 23 : 3 (RCTA)
நீ, யூதரின் அரசனோ?" என்று பிலாத்து வினவ, அவர் மறுமொழியாக, "நீர்தாம் சொல்லுகிறீர்" என்றார்.
லூக்கா 23 : 4 (RCTA)
அப்போது, பிலாத்து தலைமைக்குருக்களையும் மக்களையும் நோக்கி, "இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்" என்றார்.
லூக்கா 23 : 5 (RCTA)
அவர்கள், " கலிலேயா தொடங்கி இவ்விடம்வரை, யூதேயா எங்கும் இவ்ன போதித்து மக்கிளிடையே கிளர்ச்சிசெய்கிறான் " என்று வற்புறுத்திக்கூறினார்கள்.
லூக்கா 23 : 6 (RCTA)
இதைக் கேட்டதும், பிலாத்து, " இவன் கலிலேயனா ? " என்று வினவினார்.
லூக்கா 23 : 7 (RCTA)
அவர் ஏரோதின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அறிந்ததும், அந்நாட்களிலே யெருசலேமில் தங்கியிருந்த எரோதிடம் அவரை அனுப்பினார்.
லூக்கா 23 : 8 (RCTA)
ஏரோது இயேசுவைக் கண்டபொழுது மிக்க மகிழ்ச்சியுற்றான். ஏனெனில், அவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். ஆகவே, அவர் அருஞ்செயல் எதாவது செய்யக் காணலாம் என்று நம்பி அவரைப் பார்க்க நெடுநாளாக ஆவலாயிருந்தான்.
லூக்கா 23 : 9 (RCTA)
பற்பல கேள்விகளை அவரிடம் கேட்டான். அவரோ அவனுக்கு மறுமொழியே கூறவில்லை.
லூக்கா 23 : 10 (RCTA)
தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞரும் அவர்மீது மும்முரமாகக் குற்றஞ்சாட்டியவண்ணம் நின்றனர்.
லூக்கா 23 : 11 (RCTA)
ஏரோது தன் படையோடு சோர்ந்து அவரை அவமானப்படுத்தி, எள்ளி நகையாடி, அவருக்குப் பகட்டான உடை அணிவித்துப்பிலாத்திடம் திருப்பியனுப்பினான்.
லூக்கா 23 : 12 (RCTA)
அதுவரை ஒருவரோடொருவர் பகைமைகொண்டிருந்த ஏரோதும் பிலாத்தும் அன்றே நண்பராயினர்.
லூக்கா 23 : 13 (RCTA)
பிலாத்து தலைமைக்குருக்களையும் தலைவர்களையும் மக்களையும் ஒன்று கூட்டி,
லூக்கா 23 : 14 (RCTA)
அவர்களை நோக்கி, "மக்களிடையே குழப்பம் உண்டாக்குபவன் என்று இவனை என்னிடம் கொண்டுவந்தீர்களே. இதோ! உங்கள் முன்னிலையில் ஓன்றும் இவனிடம் நான் காணவில்லை.
லூக்கா 23 : 15 (RCTA)
ஏரோதும் காணவில்லை. அவர் இவனை என்னிடம் திருப்பி அனுப்பிவிட்டார்.
லூக்கா 23 : 16 (RCTA)
சாவுக்குரியதொன்றும் இவன் செய்யவில்லை.
லூக்கா 23 : 17 (RCTA)
ஆகவே, இவனைத் தண்டித்து விடுதலைசெய்வேன்" என்றார்.
லூக்கா 23 : 18 (RCTA)
மக்களோ ஒருவாய்ப்பட, "இவனை ஒழித்துவிடும்; பரபாசை எங்களுக்கு விடுதலை செய்யும்" என்று உரக்கக் கத்தினர்-
லூக்கா 23 : 19 (RCTA)
பரபாசோ நகரிலே நடந்த ஒரு குழப்பத்தில் கலந்து கொலைசெய்ததாகச் சிறைப்பட்டவன்.
லூக்கா 23 : 20 (RCTA)
பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களிடம் பேசினார்.
லூக்கா 23 : 21 (RCTA)
அவர்களோ, "அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்" என்று கத்தினர்.
லூக்கா 23 : 22 (RCTA)
மூன்றாம் முறையாக அவர்களை நோக்கி, " இவன் செய்த தீங்கு என்ன? சாவுக்குரிய குற்றமொன்றும் இவனிடம் காணோம். ஆகவே, இவனைத் தண்டித்து விடுதலைசெய்வேன் " என்றார்.
லூக்கா 23 : 23 (RCTA)
அவர்களோ அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டனர். அவர்கள் கூச்சலே வெற்றிகண்டது.
லூக்கா 23 : 24 (RCTA)
அவர்கள் கேட்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்பளித்தார்.
லூக்கா 23 : 25 (RCTA)
குழப்பத்தில் கலந்து கொலைசெய்ததற்காகச் சிறைப்பட்டவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலைசெய்தார். இயேசுவையோ அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டார்.
லூக்கா 23 : 26 (RCTA)
அவரைக் கூட்டிச்செல்லும்போது வயலிலிருந்து வந்து கொண்டிருந்த சீரேனே ஊரானாகிய சீமோன் என்பவனைப் பிடித்து, அவன்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின்னால் அதைச் சுமந்துபோகச் செய்தனர்.
லூக்கா 23 : 27 (RCTA)
திரளான மக்களும், அவருக்காக மாரடித்துக்கொண்டு புலம்பும் பெண்களும் கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்தனர்.
லூக்கா 23 : 28 (RCTA)
இயேசு அப்பெண்கள்பக்கம் திரும்பி, "யெருசலேம் மகளிரே, எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவுமே அழுங்கள்.
லூக்கா 23 : 29 (RCTA)
ஒருநாள் வரும்: அன்று, 'மலடிகள் பேறுபெற்றவர்கள்; பிள்ளைப்பேறற்ற வயிறுகளும் பாலூட்டாத கொங்கைகளும் பேறுபெற்றவை' என்பார்கள்.
லூக்கா 23 : 30 (RCTA)
அபபொழுது மலைகளைப் பார்த்து, 'எங்கள்மேல் விழுங்கள்; 'குன்றுகளைப் பார்த்து, 'எங்களை மூடிவிடுங்கள். என்று சொல்லத் தொடங்குவார்கள்.
லூக்கா 23 : 31 (RCTA)
பச்சைமரத்திற்கே இப்படிச் செய்கிறார்கள் என்றால், பட்டமரத்திற்கு என்ன நேருமோ?" என்றார்.
லூக்கா 23 : 32 (RCTA)
மரணதண்டனைக்காக இரு குற்றவாளிகளையும் அவரோடே கூட்டிச்சென்றனர்.
லூக்கா 23 : 33 (RCTA)
மண்டை ஒடு' எனப்படும் இடத்திற்கு வந்தபின் அவரையும், அவரது வலப்பக்கத்தில் ஒருவனும், இடப்பக்கத்தில் மற்றவனுமாக அக்குற்றவாளிகளையும் சிலுவையில் அறைந்தனர்.
லூக்கா 23 : 34 (RCTA)
இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும்; ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார். அவர்கள் அவருடைய ஆடைகளைப் பகிர்ந்துகொள்ளச் சீட்டுப்போட்டனர்.
லூக்கா 23 : 35 (RCTA)
மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். தலைவர்களும், "மற்றவர்களைக் காப்பாற்றினான். இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பெற்றவருமானால் தன்னையே காப்பாற்றிக்கொள்ளட்டும்!" என்று அவரை ஏளனம்செய்தனர்.
லூக்கா 23 : 36 (RCTA)
படைவீரர்களும் அணுகி அவருக்குக் காடியைக் கொடுத்து,
லூக்கா 23 : 37 (RCTA)
நீ யூதரின் அரசனானால் உன்னையே காப்பாற்றிக் கொள்" என்று எள்ளி நகையாடினர்.
லூக்கா 23 : 38 (RCTA)
'இவன் யூதரின் அரசன்' என்று எழுதியிருந்த பலகையை அவர் தலைக்கு மேல் வைத்திருந்தனர்.
லூக்கா 23 : 39 (RCTA)
சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், "நீ மெசியா அல்லவா? உன்னையும் எங்களையும் காப்பாற்று!" என்று அவரைப் பழித்தான்.
லூக்கா 23 : 40 (RCTA)
மற்றவனோ, "கடவுள்மட்டில் உனக்கு அச்சமே இல்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாயிருக்கிறாய்.
லூக்கா 23 : 41 (RCTA)
நாம் தண்டிக்கப்படுவது முறையே. ஏனெனில், நம் செயல்களுக்குத்தக்க பலனைப் பெறுகிறோம். இவரோ ஒரு குற்றமும் செய்யவில்லை" என்று அவனைக் கடிந்துகொண்டான்.
லூக்கா 23 : 42 (RCTA)
பின்பு அவன், "இயேசுவே, நீர் அரசுரிமையோடு வரும்போது, என்னை நினைவுகூரும்" என்றான்.
லூக்கா 23 : 43 (RCTA)
அவனுக்கு இயேசு, "இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக் உனக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
லூக்கா 23 : 44 (RCTA)
அப்போது ஏறக்குறைய நண்பகல் வேளை. மூன்று மணிவரை கதிரோன் மறைந்திருக்க, நாடெங்கும் இருள் உண்டாயிற்று.
லூக்கா 23 : 45 (RCTA)
ஆலயத்தின் திரை நடுவில் கிழிந்தது.
லூக்கா 23 : 46 (RCTA)
தந்தையே, உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்" என்று இயேசு உரக்கக் கூவினார். இதைச் சொன்னதும் உயிர்நீத்தார்.
லூக்கா 23 : 47 (RCTA)
நிகழ்ததைக் கண்ட நூற்றுவர்தலைவன் "உள்ளபடியே, இவர் நீதிமான்தான்" என்று சொல்லி, கடவுளை மகிமைப்படுத்தினான்.
லூக்கா 23 : 48 (RCTA)
வேடிக்கை பார்க்கவந்த மக்கட்கூட்டம் நிகழ்ந்ததைக் கண்டு மார்பில் அறைந்துகொண்டு திரும்பியது.
லூக்கா 23 : 49 (RCTA)
அவருக்கு அறிமுனமானவர்களும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்தொடர்ந்த பெண்களும் தொலைவில் நின்று இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தனர்.
லூக்கா 23 : 50 (RCTA)
சூசை என்ற ஒருவர் இருந்தார். அவர் தலைமைச் சங்கத்தின் உறுப்பினர். நல்லவர், நீதிமான்.
லூக்கா 23 : 51 (RCTA)
அவர்களுடைய திட்டத்திற்கும் செயலுக்கும் அவர் இணங்கவில்லை. யூதர்களுடைய ஊராகிய அரிமத்தியாவைச் சார்ந்தவர்; கடவுளுடைய அரசை எதிர்ப்பார்த்திருந்தவர்.
லூக்கா 23 : 52 (RCTA)
அவர் பிலாத்துவை அணுகி இயேசுவின் உடலைக் கேட்டார்.
லூக்கா 23 : 53 (RCTA)
அதைச் சிலுவையிலிருந்து இறக்கி, கோடித் துணியில் சுற்றி, பாறையில் குடைந்திருந்த கல்லறையில் அடக்கம் செய்தார். அதுவரை யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை.
லூக்கா 23 : 54 (RCTA)
அன்று ஆயத்த நாள். ஓய்வுநாள் தொடங்கும் வேளை.
லூக்கா 23 : 55 (RCTA)
கலிலேயாவிலிருந்து இயேசுவோடு வந்திருந்த பெண்களும் சூசையுடன் கூடவேயிருந்து கல்லறையையும் உடலை அங்கு வைத்த வகையையும் கவனித்தனர்.
லூக்கா 23 : 56 (RCTA)
திரும்பிச் சென்று வாசனைப்பொருளையும் பரிமளத் தைலங்களையும் ஆயத்தப்படுத்தினர். கட்டளைப்படி ஓய்வுநாள் அனுசரித்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56

BG:

Opacity:

Color:


Size:


Font: