லூக்கா 22 : 1 (RCTA)
பாஸ்கா எனப்படும் புளியாத அப்பத் திருவிழா அடுத்திருந்தது.
லூக்கா 22 : 2 (RCTA)
தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எப்படித் தொலைக்கலாமென்று வழிதேடிக்கொண்டிருந்தனர். ஆனால், பொதுமக்களுக்கு அஞ்சினர்.
லூக்கா 22 : 3 (RCTA)
பன்னிருவருள் ஒருவனான இஸ்காரியோத்து எனப்படும் யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.
லூக்கா 22 : 4 (RCTA)
தலைமக்குருக்களிடமும் காவல்தலைவர்களிடமும் சென்று, தான் இயேசுவை அவர்களுக்கு எப்படிக் காட்டிக்கொடுக்கலாம் என்பதைப்பற்றிக் கலந்துபேசினான்.
லூக்கா 22 : 5 (RCTA)
அவர்கள் மகிழ்ச்சியுற்று, அவனுக்குப் பணம் கொடுக்க உடன்பட்டார்கள்.
லூக்கா 22 : 6 (RCTA)
அவனும் ஒப்புக்கொண்டு கூட்டம் இல்லாதபோது அவரைக் காட்டிக்கொடுக்க வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.
லூக்கா 22 : 7 (RCTA)
அப்போது பாஸ்காச் செம்மறியைப் பலியிட வேண்டிய புளியாத அப்பத் திருவிழா வந்தது.
லூக்கா 22 : 8 (RCTA)
"நாம் பாஸ்காப் பலியுணவை உண்பதற்கு நீங்கள் போய் ஏற்பாடுசெய்யுங்கள்" என்று இயேசு இராய்பபரையும் அருளப் பரையும் அனுப்பினார்.
லூக்கா 22 : 9 (RCTA)
எங்கே ஏற்பாடுசெய்ய வேண்டும் என்கிறீர்?" என்று அவர்கள் அவரிடம் கேட்டனர்.
லூக்கா 22 : 10 (RCTA)
"நீங்கள் நகருக்குள் போகும்போது, ஒருவன் தண்ணீர்க்குடம் சுமந்துகொண்டு உங்களுக்கு எதிரே வருவான். அவன் நுழையும் வீட்டிற்கு அவன்பின்னே சென்று,
லூக்கா 22 : 11 (RCTA)
அந்த வீட்டுத் தலைவனிடம், ' நான் என் சீடருடன் பாஸ்கா உணவை உண்பதற்கான அறை எங்கே என்று போதகர் உம்மைக் கேட்கிறார் ' எனச் சொல்லுங்கள்.
லூக்கா 22 : 12 (RCTA)
இருக்கை முதலியன அமைந்துள்ள ஒரு பெரிய மாடி அறையை அவன் உங்களுக்குக் காட்டுவான். அங்கே ஏற்பாடுசெய்யுங்கள் " என்றார்.
லூக்கா 22 : 13 (RCTA)
அவர்கள் போய், தங்களிடம் அவர் சொல்லியவாறே நிகழ்ந்ததைக் கண்டு, பாஸ்கா உணவுக்கு ஏற்பாடுசெய்தார்கள்.
லூக்கா 22 : 14 (RCTA)
நேரம் வந்ததும், அவர் பந்தியமர்ந்தார்; அப்போஸ்தலரும் அவருடன் அமர்ந்தனர்.
லூக்கா 22 : 15 (RCTA)
"நான் பாடுபடுவதற்கு முன் உங்களோடு இந்தப் பாஸ்கா உணவை உண்ண ஆசைமேல் ஆசையாய் இருந்தேன்.
லூக்கா 22 : 16 (RCTA)
ஏனெனில், கடவுளுடைய அரசில் இது நிறைவேறுமளவும், இதை இனி உண்ணமாட்டேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் " என்றார்.
லூக்கா 22 : 17 (RCTA)
பின்பு கிண்ணத்தை எடுத்து, நன்றிகூறி, " இதை வாங்கி உங்களுக்குள் பகிர்ந்துகொள்ளுங்கள்.
லூக்கா 22 : 18 (RCTA)
ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: கடவுளின் அரசு வரும்வரை திராட்சைப்பழ இரசத்தைக் குடிக்கமாட்டேன் " என்றார்.
லூக்கா 22 : 19 (RCTA)
மேலும் அப்பத்தை எடுத்து, நன்றிகூறி, பிட்டு, அவர்களுக்கு அளித்து, " இது உங்களுக்காக அளிக்கப்படும் என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள் " என்றார்.
லூக்கா 22 : 20 (RCTA)
அவ்வாறே, உணவு அருந்தியபின் கிண்ணத்தை எடுத்து, "இக்கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படும் என் இரத்தத்தினாலாகும் புதிய உடன்படிக்கை.
லூக்கா 22 : 21 (RCTA)
"என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ! என்னோடு பந்தியில் அமர்ந்து உண்ணுகிறான்.
லூக்கா 22 : 22 (RCTA)
மனுமகன் தேவ ஏற்பாட்டின்படி போகத்தான் போகிறார். ஆனால் அவரைக் காட்டிக்கொடுப்பவனுக்கு ஜயோ கேடு! " என்றார்.
லூக்கா 22 : 23 (RCTA)
"அப்படியானால் நம்முள் யார் இதைச் செய்யப்போகிறவன்?" என்று அவர்கள் தஙகளுக்குள்ளே வினவத்தொடங்கினர்.
லூக்கா 22 : 24 (RCTA)
மேலும் தங்களுள் யாரைப் பெரியவனாகக் கருதவேண்டும் என்ற வாக்குவாதம் அவர்களிடையே உண்டாயிற்று.
லூக்கா 22 : 25 (RCTA)
அதற்கு அவர், "புறவினத்தாரின் அரசர்கள் அவர்கள்மீது அதிகாரம் செலுத்துகின்றார்கள். அப்படி அதிகாரம் செலுத்துவோர் 'நன்மை புரிவோர்' எனப்படுகின்றனர்.
லூக்கா 22 : 26 (RCTA)
நீங்களோ அப்படி இருத்தல் ஆகாது. ஆனால், உங்களுள் பெரியவன் சிறியவன்போலவும், தலைவன் பணிவிடை புரிபவன்போலவும் இருக்கட்டும்.
லூக்கா 22 : 27 (RCTA)
யார் பெரியவன்? பந்தியில் அமர்பவனா, பணிவிடை செய்பவனா? பந்தியில் அமர்பவன் அன்றோ? நானோ உங்கள் நடுவே பணிவிடை புரிபவனைப் போல் இருக்கிறேன்.
லூக்கா 22 : 28 (RCTA)
"என் துன்ப சோதனைகளில் என்னுடன் நிலைத்துநின்றவர்கள் நீங்களே.
லூக்கா 22 : 29 (RCTA)
என் தந்தை எனக்கு அரசுரிமை வழங்கியதுபோல நானும் உங்களுக்கு அதை வழங்கப்போகிறேன்.
லூக்கா 22 : 30 (RCTA)
எனவே, என் அரசில் என்னுடன் பந்தியில் உண்பீர்கள், குடிப்பீர்கள். இஸ்ராயேலின் பன்னிரு கோத்திரங்களுக்கும் நடுவராக அரியணையில் வீற்றிருப்பீர்கள்.
லூக்கா 22 : 31 (RCTA)
"சீமோனே, சீமோனே, இதோ! சாத்தான் உங்களைக் கோதுமைப்போலப் புடைக்க உத்தரவு பெற்றுகொண்டான்.
லூக்கா 22 : 32 (RCTA)
ஆனால் உன் விசுவாசம் தவறாதபடி உனக்காக மன்றாடினேன். நீ திருந்தியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து" என்றார்.
லூக்கா 22 : 33 (RCTA)
அதற்கு இராயப்பர், "ஆண்டவரே, உம்மோடு சிறைக்கும் சாவுக்கும் உள்ளாக ஆயத்தமாய் இருக்கிறேன்" என்றார்.
லூக்கா 22 : 34 (RCTA)
இயேசுவோ, "இராயப்பா, 'நான் அவரை அறியேன்' என்று நீ மும்முறை மறுதலிக்குமுன், இன்று கோழி கூவாது என் உனக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
லூக்கா 22 : 35 (RCTA)
பின்பு அவர்களை நோக்கி, "பணப்பை, கைப்பை, மிதியடி எதுவுமில்லாமல் உங்களை நான் அனுப்பியபோது உங்களுக்கு ஏதாவது குறைவாய் இருந்ததா?" என்று வினவினார்.
லூக்கா 22 : 36 (RCTA)
இல்லை" என்றனர்.'"இப்பொழுதோ பணப்பை உள்ளவன் அதை எடுத்துக்கொள்ளட்டும். கைப்பை உள்ளவனும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவன், தன் மேலாடையை விற்றுவிட்டு வாள் ஒன்று வாங்கிக் கொள்ளட்டும்.
லூக்கா 22 : 37 (RCTA)
ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: 'நெறிகெட்டவர்களோடு ஒன்றாக எண்ணப்பட்டார்' என்று எழுதியுள்ளது என்மட்டில் நிறைவேறவேண்டும். என்னைப் பற்றியதெல்லாம் நிறைவுபெறுகின்றது" என்றார்.
லூக்கா 22 : 38 (RCTA)
அவர்கள், "ஆண்டவரே, இதோ! இரண்டு வாள் இங்கு உள்ளன என்றனர். அவரோ, "போதும்" என்றார்.
லூக்கா 22 : 39 (RCTA)
அங்கிருந்து வெளியே புறப்பட்டுச் சென்று வழக்கப்படி ஒலிவமலைக்கு வந்தார். அவருடைய சீடர் அவரைப் பின்தொடர்ந்தனர்.
லூக்கா 22 : 40 (RCTA)
அவ்விடத்தை அடைந்ததும் அவர்களை நோக்கி, "சோதனைக்கு உட்படாதபடி செபியுங்கள்" என்றார்.
லூக்கா 22 : 41 (RCTA)
பின்னர், அவர்களை விட்டுக் கல்லெறி தொலைவு சென்று முழங்காலிலிருந்து,
லூக்கா 22 : 42 (RCTA)
"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்; எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்று செபித்தார்.
லூக்கா 22 : 43 (RCTA)
அப்போது வானதூதர் ஒருவர் அவருக்குத் தோன்றி, அவரைத் திடப்படுத்தினார்.
லூக்கா 22 : 44 (RCTA)
கொடிய வேதனைக்குள்ளாகவே, மேலும் உருக்கமாய்ச் செபித்தார். அவருடைய வியர்வை பெரும் இரத்தத் துளிகளாக நிலத்தில் விழுந்தது.
லூக்கா 22 : 45 (RCTA)
செபத்தை விட்டெழுந்து, தம் சீடரிடம் வந்தார். அவர்கள் துயரத்தால் உறங்குவதைக் கண்டு,
லூக்கா 22 : 46 (RCTA)
அவர்களை நேக்கி, "ஏன் உறங்குகிறீர்கள்? எழுந்திருங்கள், சோதனைக்கு உட்படாதபடி செபியுங்கள்" என்றார்.
லூக்கா 22 : 47 (RCTA)
அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே, இதோ! ஒரு கூட்டம் வந்தது. பன்னிருவருள் ஒருவனாகிய யூதாஸ் என்பவன் அவர்களுக்கு முன்சென்று இயேசுவை முத்தமிட அணுகினான்.
லூக்கா 22 : 48 (RCTA)
இயேசு அவனை நோக்கி, "யூதாசே, முத்தமிட்டோ மனுமகளைக் காட்டிக்கொடுக்கிறாய்?" என்றார்.
லூக்கா 22 : 49 (RCTA)
சூழநின்றவர்கள் நடக்கப்போவதை உணர்ந்து, அவரிடம், "ஆண்டவரே, வாளால் வெட்டுவோமா?" என்று கேட்டனர்.
லூக்கா 22 : 50 (RCTA)
அவர்களுள் ஒருவன் தலைமைக்குருவின் ஊழியனைத் தாக்கி அவனுடைய வலக்காதைத் துண்டித்தான்.
லூக்கா 22 : 51 (RCTA)
போதும், விடுங்கள்" என்று இயேசு சொல்லி, அவன் காதைத் தொட்டுக் குணப்படுத்தினார்.
லூக்கா 22 : 52 (RCTA)
இயேசு தம்மைப் பிடிக்க வந்திருந்த தலைமைக்குருக்களையும், கோயிலின் காவல் தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி, "நீங்கள் கள்வனிடம் வருவதுபோல வாளோடும் தடியோடும் வந்தீர்களோ?
லூக்கா 22 : 53 (RCTA)
நாள்தோறும் கோயிலில் நான் உங்களோடு இருந்தும் நீங்கள் என்மேல் கைவைக்கவில்லை. ஆனால் இது உங்கள் நேரம்; இருள் ஆட்சிபுரியும் நேரம்" என்றார்.
லூக்கா 22 : 54 (RCTA)
பின்னர், அவர்கள் அவரைப் பிடித்து, தலைமைக்குருவின் இல்லத்திற்குக் கூட்டிச்சென்றனர். இராயப்பரோ தொலைவிலே பின்தொடர்ந்தார்.
லூக்கா 22 : 55 (RCTA)
முற்றத்தின் நடுவில் அவர்கள் நெருப்பு மூட்டி அதைச் சுற்றி உட்கார்ந்தனர். இராயப்பரும் அவர்களோடு போய் உட்கார்ந்துகொண்டார்.
லூக்கா 22 : 56 (RCTA)
ஊழியக்காரி ஒருத்தி, அவர் அனல் அருகே உட்கார்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப்பார்த்து, "இவனும் அவனுடன் இருந்தான்" என்றாள்.
லூக்கா 22 : 57 (RCTA)
அவரோ, "எனக்கு அவரைத் தெரியாதம்மா" என்று மறுத்தார்.
லூக்கா 22 : 58 (RCTA)
சற்று நேரத்திற்குப்பின் மற்றொருவன் அவரைக் கண்டு, "நீயும் அவர்களுள் ஒருவன்தான்" என, இராயப்பரோ, 'இல்லையப்பா" என்றார்.
லூக்கா 22 : 59 (RCTA)
ஏறக்குறைய ஒருமணிநேரம் கழித்து இன்னொருவன், "உண்மையாகவே, இவனும் அவனோடு இருந்தான்; ஏனெனில் இவன் கலிலேயன்தான்" என்று அழுத்தமாய்க் கூறினான்.
லூக்கா 22 : 60 (RCTA)
இராயப்பரோ, "நீ சொல்வது எனக்குத் தெரியதப்பா" என்றார். உடனே, அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே கோழி கூவிற்று.
லூக்கா 22 : 61 (RCTA)
ஆண்டவர் திரும்பி இராயப்பரை உற்றுநோக்கவே, "இன்று கோழி கூவுமுன்னர் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று ஆண்டவர் கூறிய வார்த்தையை அவர் நினைவுகூர்ந்து,
லூக்கா 22 : 62 (RCTA)
வெளியே போய் மனம் வெதும்பி அழுதார்.
லூக்கா 22 : 63 (RCTA)
இயேசுவைக் காவல் செய்துகொண்டிருந்தவர்கள் அவரை அடித்து ஏளனம் செய்தனர்.
லூக்கா 22 : 64 (RCTA)
அவருடைய முகத்தை மூடி, "உன்னை அடித்தவன் யாரென்று தீர்க்கதரிசனமாகச் சொல்" என்றனர்.
லூக்கா 22 : 65 (RCTA)
இன்னும் அவரைப் பலவாறு பழித்துப்பேசலாயினர்.
லூக்கா 22 : 66 (RCTA)
பொழுது விடிந்ததும் மூப்பர் சபையினரும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் ஒன்றுகூடித் தங்கள் நீதிமன்றத்திற்கு அவரைக் கூட்டிப்போய், "நீ மெசியாவானால், எங்களுக்குச் சொல்" என்றனர்.
லூக்கா 22 : 67 (RCTA)
அவர் அவர்களை நோக்கி, "நான் உங்களுக்குச் சொன்னால் நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள்.
லூக்கா 22 : 68 (RCTA)
நான் உங்களை வினவினாலோ, நீங்கள் விடையளிக்கவும் மாட்டீர்கள்.
லூக்கா 22 : 69 (RCTA)
இனிமேல் மனுமகன் வல்லமையுள்ள கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருப்பார்" என்றார்.
லூக்கா 22 : 70 (RCTA)
அதற்கு அனைவரும், "அப்படியானால் நீ கடவுளின் மகனா?" என, அதற்கு அவர், "நான் கடவுளின் மகன் என்று நீங்களே சொல்லுகிறீர்கள்" என்றார்.
லூக்கா 22 : 71 (RCTA)
அவர்களோ, " நமக்கு இன்னும் சாட்சியம் எதற்கு? இவன் வாயிலிருந்தே இதைக் கேட்டோமே" என்றனர்.
❮
❯